Feb 19, 2014

பித்அத்எல்லாம் வழிகேடாகுமா ?

தொடர்-04 
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA-Hon

وعن سيدنا رفاعة بن رافع رضي الله عنه قال: كنا نصلي وراء النبي صلى الله عليه وآله وسلم 

فلما رفع راسه من الركعة قال ( سمع الله لمن حمده) قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال (من المتكلم؟) قال: أنا قال: «رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها»([1][66]). 

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள். 

புஹாரீ-799,நஸாஈ-614,அபூதவூத்-770 
அறிவிப்பு- ரிபாஆ இப்னு ராபிஉ(றழி) 

நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறியபின் 'ரப்பனா வ லகல் ஹம்துஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி'என்று கூறுமாறுகற்றுக்கொடுக்கவில்லை. குறித்த மனிதர் அவ்வாறு கூறிபோது இது நான் காட்டித்தராத வழி முறை என நபி(ஸல்) அவர்கள் அவரை தடுக்கவில்லை. 


وعن سيدنا أنس بن مالك رضي الله عنه قال: كنت جالسا مع رسول الله صلى الله عليه وآله وسلم في الحلقة إذ جاء رجل فسلم على النبي صلى الله عليه وآله وسلم وعلى القوم فقال السلام عليكم، فقال رسول الله صلى الله عليه وآله وسلم « وعليكم السلام ورحمة الله وبركاته» فلما جلس قال الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى فقال النبي صلى الله عليه وآله وسلم « والذي نفسي بيده لقد ابتدرها عشرة أملاك كلهم حريصون على أن يكتبوها فما دروا كيف يكتبونها فرجعوا إلى ذي العزة جل ذكره فقال « اكتبوها كما قال عبدي»([2][68]). 

நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து நபி(ஸல்) அவர்களுக்கும் அங்கு அமர்ந்திருந்த கூட்டத்திற்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்றுசொன்னார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் வ அலைக்குமுஸ்ஸலாமு வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ என்றுசொன்னார்கள். அவர் அமர்ந்தபோது "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி கமா யுஹிப்பு றப்புனா வயற்ழா" என்றுசொன்னார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எனது ஆத்மா யார் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையாகபத்து வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டனர்"எவ்வாறு அதை பதிவுசெய்வது என அவர்களுக்கு புரியவில்லை. அல்லாஹ் தஆலாவிடம்சென்றுகேட்ட போது எனது அடியான் எவ்வாறு கூறினானோ அவ்வாறே பதிவு செய்யுங்கள் என்றுசொன்னான். 

அஹ்மத்-12320 
அறிவிப்பு – அனஸ் இப்னு மாலிக் (றழி)​ 


நபி ஸல் அவர்கள் ஒருவர் சபையில் வந்தமரும்போது "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி கமா யுஹிப்பு றப்புனா வயற்ழா" என்று சொல்லுமாறு கற்றுக்கொடுக்கவுமில்லை. அவர்கள்​ சொல்லிக்காட்டவுமில்லை. ஆயினும் அந்த மனிதர்சொன்னதை அவர்கள் தடுக்காமல் பாராட்டினார்கள்.அவர்சொன் வார்த்தையின் மகத்துவத்தை எடுத்துக்காட்டினார்கள்.​ 


وعنسيدنارفاعةبنرافعرضياللهعنهقال: صليتمعالنبيصلى الله عليه وآله وسلم فعطست فقلت الحمد لله حمدا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى فلما انصرف قال: (من المتكلم؟ ثلاثا) فقلت أنا فقال: والذي نفسي بيده لقد ابتدرها بضعة وثلاثون ملكا أيهم يصعد بها([3][69]). 

நான் நபி(ஸல்) அவர்களுடன்தொழுது கொண்டிருந்தபோது தும்மிவிட்டு அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் அலைஹி கமா யுஹிப்பு றப்புனா வயற்ழா" என்றுசொன்னேன்.தொழுது முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் யார் அவ்வாறுசொன்னது என மூன்று முறை கேட்டார்கள். நான் என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் எனது ஆத்மா யார் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையாக 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப்கொண்டுசெல்வதில் போட்டி போட்டனர்" என்று கூறினார்கள். 

துர்முதீ-404 
அறிவிப்பு- றிபாஅத் இப்னு றாபிஃ (றழி)​ 


وعن سيدنا أبي سعيد الخدري رضي الله عنه أن رهطا من اصحاب النبي صلى الله عليه وآله وسلم انطلقوا في سفرة سافروها حتى نزلوا على حي من أحياء العرب فاستضافوا فأبوا أن يضيفوهم فلدغ سيد ذلك الحي فسعوا له بكل شيء لا ينفعه شيء فقال بعضهم : لو أتيتم هؤلاء الرهط الذي نزل بكم لعله أن يكون عند بعضهم شيء فأتوهم فقالوا: يا أيها الرهط إن سيدنا لدغ فسعينا له بكل شيء لا ينفعه شيء فهل عند أحدكم شيء ؟ فقال بعضهم : نعمم والله إني لراق ولكن والله لقد استضفناكم فلم تضيفونا فما انا براق لكم حتى تجعلوا لنا جعلا فصالحوهم على قطيع من الغنم فانطلق يتفل ويقرأ ﴿ الحمد لله رب العالمين﴾ حتى كأنما نشط من عقال فانطلق يمشي ما به قلبة قال: فأوفوهم جعلهم الذي صالحوهم عليه فقال بعضهم اقسموا وقال الذي رقى : لا تفعلوا حتى نأتي رسول اله صلى الله عليه وآله وسلم فنذكر له الذي كان فننظر ما يأمرنا به فقدموا على الرسول صلى الله عليه وآله وسلم فذكروا له فقال: (وما يدريك أنها رقية ثم قال: قد أصبتم اقسموا واضربوا لي معكم بسهم)([4][71]). 


நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!" என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். 

புஹாரீ-2156,முஸ்லிம்-2201,அபூதாவூத்-3900,தர்முதீ-2064 
அறிவிப்பு- அபூ ஸயீத்(றழி) 


நபி(ஸல்) அவர்கள் யாருக்காவது தேள் கொட்டிவிட்டால் தேள் கொட்டப்பட்டவர் மீதுஇலேசாகத் துப்பி ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதினால் சுகம் கிடைக்கும் என்றோ அவ்வாறுசெய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்றோ முன்னர் கூறவில்லை. அதனால் தான் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். 

தான்சொல்லாத வழி முறையை ஸஹாபிசெய்ததை கண்டிக்காமல்.'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். என்று சரிகண்டார்கள். 


وعن السيدة عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم بعث رجلا على سرية وكان يقرأ لأصحابه في صلاته فيختم بـ ﴿ قل هو الله أحد﴾ فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وآله وسلم فقال «سلوه لأي شيء يصنع ذلك؟» فسألوه فقال: لأنها صفة الرحمن وأنا احب أن أقرأ بها فقال النبي صلى الله عليه وآله وسلم «أخبروه أن الله يحبه»([5][76]). 

ஆயிஷா (றழி) அவர்கள் கூறியனார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப் பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர் தமது தொழுகையில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து)வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது "குல் ஹுவல்லாஹு அஹத்" எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பிவந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதற்காக இப்படிச் செய்கிறார் என அவரிடமே கேளுங்கள்" என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், "ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்தியம்புகிறது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்"என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என அவருக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (றழி) அவர்களால் வளர்க்கப்பட்ட அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

முஸ்லிம்-1840 

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுகையில்(ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது "குல் ஹுவல்லாஹு அஹத்" எனும் அத்தியாயத்தை ஓதுவதை வழக்கமாக்கியிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் காட்டாத ஒரு வழி முறையை அந்த மனிதர் செய்தார். நபி அவர்கள் அவரை கண்டிக்காமல் பாராட்டினார்கள். 


மேலே குறிப்பிடப்பிடப்பட்ட பல ஹதீஸ்களில் நபி ஸல் அவர்கள் சொல்லாத,செய்து காட்டாத, முன்னர் அங்கீகரிக்காத பல விடயங்ளை ஸஹாபாக்கள் செய்துள்ளார்கள் அவற்றில் பல நபி ஸல் அவர்களின் முன்னிலையிலே நடைபெற்றுள்ளன. அவற்றை நபி அவர்கள் “நான் செய்தவற்றை மாத்திரமே நீங்கள்செய்வேண்டும் நான்செய்யாத எதையும் நீங்கள் செய்யக்கூடாது” என்று தடுக்கவில்லை.காரணம் ஸஹாபாக்கள் செய்த அந்த விடயங்கள் அல்குர்ஆனுக்கும்,நபி அவர்களின் வாழ்க்கை முறைக்கும் மாற்றமானதாக இருக்கவில்லை. ஒருவிடயத்தை நபி ஸல் அவர்கள்செய்யவில்லை என்பதால் அது தவறானது என்று நாம் கருத முடியாது. 

புதிதாக ஒருவிடயம்செய்யப்பட்டாலும் அது அல்குர்ஆனுக்கும்,நபி அவர்களின் வாழ்க்கை முறைக்கும் மாற்றமில்லாமல் இருந்தால் அது ஆகுமான விடயமே என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. 

நபி(ஸல்) அவர்கள்செய்யாமல்விட்டவிடயங்களைச்செய்வதுவழிகேடு என்று சிலர் கூச்சலிடுவது அவர்களின் மடமையும் அறியாமையுமாகும். 

(தொடரும்....) 

==***==***==***==***==




தொடர்-03 
-மௌலவீ  KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hon 


நபி(ஸல்) அவர்கள் செய்யாமல்
விட்டவிடயங்களைச்செய்வதுவழிகேடாகுமா

(3997) ـ حدّثني إِبراهيمُ بن موسى أخبرَنا هشامُ بن يوسف عن مُعمرٍ عن الزُّهريِّ عن عمرِو بن أبي سُفيانَ الثقَفيِّ عن أبي هريرةَ رضيَ اللّه عنه قال: «بَعثَ النبيُّ صلى اللـه عليه وسلّم سَرِيةً عَيناً، وأمَّرَ عليهم عاصمَ بن ثابت ـ وهو جدُّ عاصم بن عمرَ بن الخطاب ـ فانطلَقوا، حتى إِذا كان بينَ عُسفانَ ومكةَ ذُكِروا لحيٍّ من هُذَيل يقال لـهم بنو لِحيانَ فتَبِعوهم بقريبٍ من مائةِ رامٍ فاقتصُّوا آثارَهم، حتى أَتوا منزِلاً نزلوه، فوجَدوا فيه نَوَى تمرٍ تزَوَّدوهُ من المدينة، فقالوا: هذا تمرُ يَثربَ، فتبِعوا آثارَهم حتى لحقوهم، فلما انتهى عاصمٌ وأصحابه لجأُوا إلى فَدْفَدٍ، وجاءَ القومُ فأحاطوا بهم فقالوا: لكُم العَهْدُ والميثاقُ إن نزَلتُم إلينا أن لا نقتُلَ منكم رجُلاً. فقال عاصمٌ: أما أنا فلا أنزِلُ في ذمةِ كافر، اللـهمَّ أخبرْ عنّا نبيَّك. فقاتلوهم حتى قَتلوا عاصماً في سبعةِ نَفرٍ بالنَّبل، وبقي خُبَيبٌ وزيدٌ ورجلٌ آخر، فأعطَوهُم العهدَ والميثاقَ، فلما أعطَوهُم العهدَ والميثاق نزَلوا إليهم، فلما استمكَنوا منهم حلوا أوتارَ قِسِيِّهم فربطوهم بها، فقال الرجلُ الثالثُ الذي معهما: هذا أولُ الغَدر، فأبى أن يَصحَبَهم، فجرَّروهُ وعالجوهُ على أن يَصحبَهم فلم يَفعلْ، فقتَلوه، وانطلقوا بخُبَيب وزيد حتى باعوهما بمكة، فاشترى خبيباً بنو الحارثِ بن عامر بن نَوفل، وكان خبيبٌ هوَ قتلَ الحارث يومَ بدرٍ، فمكثَ عندَهم أسيراً، حتى إِذا أجمَعوا قتلـه استعارَ موسى من بعضِ بناتِ الحارثِ ليستحدَّ بها، فأعارتهُ، قالت: فغفَلت عن صبيٍّ لي، فدرجَ إِليه حتى أتاهُ فوَضعهُ على فَخذِه، فلما رأيته فزِعت فَزعةً عرفَ ذاك مني، وفي يدهِ الموسى، فقال: أتخشينَ أن أقتلـهُ؟ ما كنتُ لأفعل ذلِك إن شاء اللّه. وكانت تقولُ: ما رأيت أسيراً قطُّ خَيراً من خبيب، لقد رأيتهُ يأكل من قِطفِ عِنَبٍ وما بمكةَ يومئذٍ ثمرة، وإنه لموثقٌ في الحديد، وما كان إلا رزقٌ رَزَقهُ اللّه؛ فخرَجوا 
به منَ الحرَم ليقتلوه، فقال: دَعوني أصلِّي رَكعتَين. ثمَّ انصرَفَ إليهم فقال: لولا أن تروا أن ما بي جَزَعٌ من الموت لَزدت، فكان أولَ من سنَّ الرَّكعتَين عندَ القتل هو. ثمَّ قال: اللـهمَّ أحصِهمْ عَدَداً. ثم قال: 

وَلَسْتُ ما أبالي حينَ أُقَتلُ مسلما 

على أيّ شِقٍّ كان للّهِ مَصَرعيٍّ 

وذلكَ في ذاتِ الإِلـهِ وإن يشَأ 

يُباركْ على أوصالِ شِلوٍ مُمزَّع 

ثم قامَ إِليهِ عُقبة بن الحارث فقتلـه. وبعثَتْ قريشٌ إِلى عاصم ليُؤْتوا بشيء من جَسَدِه يعرفونه، وكان عاصم قَتلَ عظيماً من عظمائهم يومَ بَدر، فبعثَ اللّه عليهِ مثلَ الظُّلَّةِ من الدَّبْرِ فحمَتْهُ من رُسُلِهم، فلم يَقدِروا منه على شيء». 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்பத்துப்பேர்கள்கொண்டஒருகுழுவினரைஉளவுப்படையாகஅனுப்பிவைத்தார்கள். உமர்இப்னுகத்தாபுடையமகன்ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார்ஆஸிம்இப்னுஸாபித்அல்அன்சாரியைஉளவுப்படைக்குத்தலைவராக்கினார்கள். அவர்கள்புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும்மக்காவுக்கும்இடையிலுள்ள'ஹத்ஆ' என்னுமிடத்திற்குவந்தபோது ஹுதைல் குலத்தைச்சேர்ந்தபனூலிஹ்யான்என்றழைக்கப்படும்ஒருகிளையினருக்குஇந்தஉளவுப்படையினர்வரும்விவரம்தெரிவிக்கப்பட்டது. உடனேஅக்கிளையினர் (அவர்களைப்பிடிப்பதற்காக) அம்பெய்வதில்தேர்ச்சிபெற்றகிட்டத்தட்டஇருநூறுவீரர்களைதங்களுக்காகத்திரட்டிக்கொண்டுஇந்தஉளவுப்படையினரின்சுவடுகளைப்பின்பற்றி (அவர்களைத்தேடியபடி) சென்றனர். (வழியில்) உளவுப்படையினர்மதீனாவிலிருந்துபயணஉணவாகக்கொண்டுவந்திருந்தபேரீச்சம்பழங்களைத்தின்று (அவற்றின்கொட்டைகளைப்போட்டு)விட்டுச்சென்றஇடத்தைக்கண்டனர். உடனே, 'இதுயத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம்பழம்" என்றுகூறினர். எனவே, அவர்களின்கால்சுவடுகளைப்பின்பற்றிச்சென்றனர். அவர்களைஆஸிம்(ரலி) அவர்களும்அவர்களின்சகாக்களும்கண்டபோது, உயரமான (குன்றுபோன்ற) ஓரிடத்தில் (புகலிடம்தேடி) ஒதுங்கிநின்றனர். அவர்களைபனூலிஹ்யான்குலத்தினர்சூழ்ந்தனர். அவர்கள்அந்தஉளவுப்படையினரிடம், 'நீங்கள்இறங்கிவந்துஎங்களிடம்சரணடைந்துவிடுங்கள். உங்களுக்குநாங்கள்உறுதிமொழியும்வாக்கும்அளிக்கிறோம். உங்களில்எவரையும்நாங்கள்கொல்லமாட்டோம்" என்றுகூறினார்கள். உளவுப்படையின்தலைவரானஆஸிம்இப்னுஸாபித்(ரலி), 'அல்லாஹ்வின்மீதாணையாக! இன்றுநான்ஒருநிராகரிப்பாளனின்பொறுப்பில் (என்னைஒப்படைத்தவனாகஇந்தக்குன்றிலிருந்து) கீழேஇறங்கமாட்டேன்இறைவா! எங்கள்நிலைகுறித்துஉன்தூதருக்குத்தெரிவித்துவிடு" என்றுபிரார்த்தித்தார்கள். எதிரிகள்அவர்களின்மீதுஅம்பெய்துஆஸிம்உட்படஏழுபேரைக்கொன்றனர். உளவுப்படையினரில் (எஞ்சியிருந்த) மூன்றுபேர்எதிரிகளிடம்உறுதிமொழியும்வாக்கும்பெற்றுஇறங்கினார்கள். அவர்கள்அன்சாரித்தோழர்குபைப்அவர்களும், இப்னுதசினாஅவர்களுக்குமற்றுமொருவரும்ஆவர். இவர்கள்தங்கள்கையில்கிடைத்தவுடன்நிராகரிப்பாளர்கள்தம்விற்களின்நாண்களைஅவிழ்த்துஅவர்களைக்கட்டினார்கள். (உளவுப்படையில்எஞ்சியமூவரில்) மூன்றாவதுமனிதர், 'இதுமுதலாவதுநம்பிக்கைதுரோகம்அல்லாஹ்வின்மீதாணையாக! நான்உங்களுடன்வரமாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள்எனக்குஒரு (நல்லபாடமாகஅமைந்துள்ளனர்" என்றுகூறினார். உடனே, அவர்கள்அவரைஇழுத்துச்சென்றுதம்மோடுவரும்படிநிர்பந்தித்தார்கள். அதற்குஅவர்மறுத்துவிடவேஅவரைக்கொலைசெய்துவிட்டார்கள். பிறகுகுபைப்அவர்களையும்இப்னுதசினாஅவர்களையும்பிடித்துச்சென்றுமக்காவில்விற்றுவிட்டனர். இதுபத்ருப்போருக்குப்பிறகுநடந்தசம்பவமாகும். குபைப்அவர்களைபனூஹாரிஸ்என்னும்குலத்தார்வாங்கினர். அந்தக்குலத்தின்தலைவர்ஹாரிஸ்இப்னுஆமிர்என்பவரைகுபைப்அவர்கள்பத்ருப்போரில்கொன்றுவிட்டிருந்தார்கள். எனவே, (அதற்குப்பழிவாங்குவதற்காககுபைப்அவர்களைபனூஹாரிஸ்குலத்தார்வாங்கிக்கைதுசெய்துவைத்திருந்தனர்.) அவர்களிடம்குபைப்அவர்கள்கைதியாகஇருந்தார்கள். 
உபைதுல்லாஹ்இப்னுஇயாள்(ரஹ்) கூறினார்கள்எனஅறிவிப்பாளர்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார். 
ஹாரிஸின்மகள்என்னிடம்கூறினார்: 
குபைப்அவர்களைக்கொல்வதற்காக (எங்கள்குடும்பத்தார்) ஒன்றுகூடியபோது, குபைப்தேவையற்றமுடிகளைக்களைவதற்காகஒருசவரக்கத்தியைஎன்னிடமிருந்துஇரவல்வாங்கினார். அப்போதுஎன்னுடையகுழந்தைஒருவனைஅவர்கையிலிலெடுத்தார். அவன்அவரிடம்சென்றபோதுநான் (பார்க்காமல்) கவனக்குறைவாகஇருந்துவிட்டேன். அவர்கையில்சவரக்கத்திஇருக்க, தம்மடியின்மீதுஅவனைஉட்காரவைத்திருப்பதைகண்டேன். அதைக்கண்டுநான்கடும்பீதியடைந்தேன். என்முகத்தில்தெரிந்தபீதியைகுபைப்புரிந்துகொண்டார். உடனே, 'நான்இவனைக்கொன்றுவிடுவேன்என்றுநீபயப்படுகிறாயா? நான்அப்படிச்செய்யமாட்டேன்" என்றுகூறினார். அல்லாஹ்வின்மீதாணையாக! குபைப்அவர்களைவிடச்சிறந்தஒருகைதியைநான்ஒருபோதும்பார்த்ததில்லை. அல்லாஹ்வின்மீதாணையாக! அவர்ஒருநாள்தம்கையிலிருந்ததிராட்சைக்குலைஒன்றிலிருந்து (பழங்களைஎடுத்து) உண்டுகொண்டிருக்கக்கண்டேன். அப்போதுஅவரின்கைஇரும்புக்சங்கிலிகளால்கட்டப்பட்டுஇருந்தது. மேலும், அப்போதுமக்காநகரில்பழம் (விளையும்பருவம்) எதுவும்இருக்கவில்லை. 
...மேலும், ஹாரிஸின்மகள், 'அதுஅல்லாஹ்விடமிருந்துகிடைத்தஇரணமாகும்.அல்லாஹ்அதைகுபைப்அவர்களுக்குஅளித்திருந்தான்" என்றுகூறிவந்தார். (எனஅறிவிப்பாளர்இடையில்கூறுகிறார்.) 
(தொடர்ந்துஅறிவிப்பாளர்கூறுகிறார்:) 
அவர்கள்குபைப்அவர்களைக்கொல்வதற்காகஹரம் (எனும்இரத்தம்சிந்துவதுஅனுமதிக்கப்படாதபுனிதப்) பகுதியிலிருந்து'ஹில்' (எனும்புனிதஎல்லைக்குவெளியேஇருக்கும்பகுதிக்குப்புறப்பட்டுச்சென்றபோதுஅவர்களிடம்குபைப்அவர்கள், 'என்னைஇரண்டுரக்அத்துகள்தொழவிடுங்கள்" என்றுகூறினார்கள். (தொழுதுமுடித்து) பிறகு, 'நான்மரணத்தைக்கண்டுஅஞ்சுகிறேன்என்றுநீங்கள்எண்ணுவீர்கள்என்றஅச்சம்எனக்கில்லாமல்இருந்திருந்தால்நான்நீண்டநேரம்தொழுதிருப்பேன்" என்றுகூறிவிட்டு, 'இறைவா! இவர்களைஎண்ணிவைத்துக்கொண்டு (ஒருவர்விடாமல்) பழிவாங்குவாயாக!" என்றுபிரார்த்தித்தார்கள். மேலும், 'நான்முஸ்லிமாகக்கொல்லப்படுவதால்நான்எதைப்பற்றியும்பொருட்படுத்தப்போவதில்லை. எந்தஇடத்தில்நான்இறந்தாலும்நான்இறைவனுக்காகவேகொல்லப்படுகிறேன் (என்பதில்எனக்குமகிழ்ச்சியே). நான்கொலையுறுவதுஅல்லாஹ்வின்திருப்தியைப்பெறுவதற்காகத்தான்எனும்போது, அவன்நாடினால்என்னுடையதுண்டிக்கப்பட்டஉறுப்புகளின்இணைப்புகளின்மீதுகூட (தன்) அருள்வளத்தைப்பொழிவான்" என்றுகவிபாடினார்கள். பின்னர், குபைப்அவர்களைஹாரிஸின்மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்துஅடைத்துவைத்துஅல்லதுகட்டிவைத்துக்கொல்லப்பட்டஒவ்வொருமுஸ்லிமுக்கும்கொல்லப்படுவதற்குமுன்இரண்டுரக்அத்துகள்தொழுவதைமுன்மாதிரியாக்கியவர்குபைப்அவர்களேஎன்றாயிற்று. ஆஸிம்இப்னுஸாபித்அவர்கள்கொல்லப்பட்டபோது, அவர்கள்செய்தபிரார்த்தனையைஅல்லாஹ்ஏற்றுக்கொண்டு (அவர்களின்நிலைகுறித்துதன்தூதருக்குத்தெரிவித்து)விட்டான். நபி(ஸல்) அவர்கள்தங்களின்தோழர்களுக்குஉளவுப்படையினரின்செய்தியையும், அவர்களுக்குகுறைஷிக்குலநிராகரிப்பாளர்களில்சிலருக்குஆஸிம்அவர்கள்கொல்லப்பட்டதுகுறித்துத்தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டதுஅவர்தான்என்று) அவரைஅடையாளம்தெரிந்துகொள்ளஅவரின்அங்கம்எதையாவதுதமக்குக்கொடுத்தனுப்பும்படிகேட்டுஅவர்கள்ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம்அவர்கள்பத்ருப்போரின்போதுகுறைஷிகளின்தலைவர்களில்ஒருவரைக்கொன்றிருந்தார்கள். அப்போதுஆஸிம்அவர்களுக்காக (அவர்களின்உடலுக்குப்பாதுகாப்பாக) ஆண்தேனீக்களின்கூட்டம்ஒன்றுநிழல்தரும்மேகத்தைப்போன்று (அவரைச்சுற்றிலும்அரணாகப்படர்ந்திருக்கும்படி) அனுப்பப்பட்டது. அதுஅவர்களைகுறைஷிகளின்தூதுவரிடமிருந்துகாப்பாற்றியது. எனவே, அவர்களின்சதையிலிருந்துஅவர்களால்எதையும்துண்டித்துஎடுத்துச்செல்லமுடியவில்லை.
புஹாரீ-3997,அபூதாவூத்-3045, அஹ்மத்-8053 
அறிவிப்பு-அபூஹுரைரா(றழி). 

மேற்குறிப்பிடப்பட்டசம்பவத்தில் குபைப்(றழி) அவர்கள் கொல்லப்படு வதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழுதார்கள். இவ்வாறு ஒருவர் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.ஆயினும் குபைப்(றழி) அவர்கள் கொல்லப்படு வதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழுதார்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு றக்அத்கள் தொழுததை 

கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்கள் அதை கண்டிக்கவில்லை. 

سنن ابن ماجه(746) ـ حدّثنا عُمَرُ بْنُ رَافِعٍ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ بِلاَلٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ يُؤْذِنُهُ بِصَلاَةِ الْفَجْرِ. فَقِيلَ: هُوَ نَائِمٌ. فَقَالَ: الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. فَأُقِرَّتْ فِي تَأْذِينِ الْفَجْرِ. فَثَبَتَ الأَمْرُ عَلَى ذلِكَ[1][60]) 

பிலால்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அதிகாலைத் தொழுகைக்காக வந்தார்கள் அப்போது நபி(ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. அப்போது பிலால்(றழி) அவர்கள் 

الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ 

“தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது” “தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது” என்று சொன்னார்கள். அது அதிகாலைத்தொழுகைக்கான அதானில் தரிபாடானது. 

இப்னு மாஜஹ்-746 
அறிவிப்பு-பிலால்(றழி) 
மற்றொரு அறிவிப்பில் 

1081 - حدثنا محمد بن علي الصائغ المكي ثنا يعقوب بن حميد ثنا عبد الله بن وهب عن يونس بن يزيد عن الزهري عن حفص بن عمر عن بلال أنه : أتى النبي صلى الله عليه وسلم يؤذنه بالصبح فوجده راقدا فقال : الصلاة خير من النوم مرتين قال النبي صلى الله عليه وسلم : ( ما أحسن هذا يا بلال اجعله في أذانك ) عبد الله بن معقل بن مقرن المزني عن بلال ([2][61]) 

பிலால்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அதிகாலைத் தொழுகைக்காக வந்தார்கள் அப்போது நபி(ஸல்) அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பிலால்(றழி) அவர்கள் 

الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ 

“தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது” “என்று இரண்டு முறை சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “பிலாலே இது மிக அழகாக இருக்கிறது இதை உனது அதானில் ஆக்கிக் கொள் என்று சொன்னார்கள். 

தப்றானீ-1081 
அறிவிப்பு-பிலால்(றழி) 

நபி(ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு வசனத்தை பிலால்(றழி) அவர்கள் சொன்ன போது அதை அதானில் சேர்த்துக்கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரைப்பார்த்து 

الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ 

என்று சொல்லவேண்டும் என இதற்கு முன்னர் பிலால் (றழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. 

صحيح مسلم(1308) ـ وحدّثني زُهَيْرُ بْنُ حَرْبٍ. حَدَّثَنَا عَفَّانُ. حَدَّثَنَا حَمَّادٌ. أَخْبَرَنَا قَتَادَةَ وَ ثَابِتٌ وَحُمَيْدٌ عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ. فَقَالَ: الْحَمْدُ للّهِ حَمْداً كَثِيراً طَيِّباً مُبَارَكاً فِيهِ. فَلَمَّا قَضَى رَسُولُ اللّهِ صَلاَتَهُ قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟» فَأَرَمَّ الْقَوْمُ. فَقَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِهَا؟ فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْساً» فَقَالَ رَجُلٌ: جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا. فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكاً يَبْتَدِرُونَهَا. أَيُّهُمْ يَرْفَعُهَا 

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி" (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை" என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்" என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்" எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.
முஸ்லிம்-1308
அறிவிப்பு- அனஸ்(றழி) 

தொழுகைக்கு ஒருவர் மூச்சிறைக்க (விரைந்து) வந்தால் அவர், "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் பீஹி" என்றுசொல்லவேண்டும் என நபி ஸல் அவர்கள் கட்டளையிடவுமில்லை அவர்கள் செய்து காட்டவுமில்லை.அதே நேரம் அவ்வாறுசொன்ன மனிதரை பாராட்டினார்கள். 

صحيح مسلم (1309) ـ حدّثنا زُهَيْرُ بْنُ حَرْبٍ. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ. أَخْبَرَنِي الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللّهِ بْنِ عُتَبَةَ عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللّهِ . إِذْ قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: اللّهُ أَكْبَرُ كَبِيراً. وَالْحَمْدُ للّهِ كَثِيراً. وَسُبْحَانَ اللّهِ بُكْرَةً وَأَصِيلاً. فَقَالَ رَسُولُ اللّهِ صلى الله عليه وسلم: «مَنِ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا؟» قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَنَا. يَا رَسُولَ اللّهِ قَالَ: «عَجِبْتُ لَهَا. فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ». قَالَ ابْنُ عُمَرَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللّهِ يَقُولُ ذلِكَ 

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கதீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா" (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.

முஸ்லிம்-1309 
அறிவிப்பு- இப்னு உமர்(றழி) 

தொழுகையின்போது "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கதீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா"என்றுசொல்லவேண்டும் என நபி ஸல் அவர்கள் கட்டளையிடவுமில்லை அவர்கள் செய்து காட்டவுமில்லை.அதே நேரம் அவ்வாறுசொன்ன மனிதரை பாராட்டினார்கள். 

وعن سيدنا جابر بن عبدالله رضي الله عنه قال: ( أهلَّ رسول الله صلى الله عليه وآله وسلم فذكر التلبية مثل حديث ابن عمر قال : والناس يزيدون ذا المعارج ونحوه من الكلام والنبي صلى الله عليه وآله وسلم يسمع فلا يقول لهم شيئا)([3][64]). 

நபி(ஸல்) அவர்கள் வழமையான தல்பியா சொன்னார்கள் மனிதர்கள் “தல் மஆறிஜ்” என்பது போன்றதை மேலதிகமாகச் சொன்னார்கள்.அதை நபி(ஸல்) அவர்கள்கேட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு எதுவும்சொல்லவில்லை 

முஸ்லிம்-1813, அபூதாவூத் 1814 
அறிவிப்பு- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (றழி) 

இங்கு நபி(ஸல்) அவர்கள் பாவிக்காதசொற்களை ஸஹாபாக்கள் தல்பியாவில்சேர்த்துசொன்னது அவர்கள் காட்டாத வழிமுறையாகும். 

அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை ​ 

صحيح مسلم (2903) ـ حدّثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ. وَ إِسْحَـقُ بْنُ إِبْرَاهِيمَ. جَمِيعاً عَنْ حَاتِمٍ. قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِيُّ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْنَا عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللّهِ. فَسَأَلَ عَنِ الْقَوْمِ حَتَّى انْتَهَى إِلَيَّ. فَقُلْتُ: أَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ. فَأَهْوَى بِيَدِهِ إِلَى رَأْسِي فَنَزَعَ زِرِّي الأَعْلَى. ثُمَّ نَزَعَ زِرِّي الأَسْفَلَ. ثُمَّ وَضَعَ كَفَّهُ بَيْنَ ثَدْيَيَّ وَأَنَا يَوْمَئِذٍ غُلاَمٌ شَابٌّ.فَقَالَ: مَرْحَباً بِكَ. يَا ابْنَ أَخِي سَلْ عَمَّا شِئْتَ. فَسَأَلْتُهُ. وَهُوَ أَعْمَى. وَحَضَرَ وَقْتُ الصَّلاَةِ. فَقَامَ فِي نسَاجَةٍ مُلْتَحِفاً بِهَا. كُلَّما وَضَعَهَا عَلَى مَنْكِبِهِ رَجَعَ طَرَفَاهَا إِلَيْهِ مِنْ صِغَرِهَا. وَرِدَاؤُهُ إِلَى جَنْبِهِ، عَلَى الْمِشْجَبِ. فَصَلَّى بِنَا. فَقُلْتُ: أَخْبِرْنِي عَنْ حَجَّةِ رَسُولِ اللّهِ . فَقَالَ بِيَدِهِ. فَعَقَدَ تِسْعاً. فَقَالَ: إِنَّ رَسُولَ اللّهِ مَكَثَ تِسْعَ سِنِينَ لَمْ يَحُجَّ. ثُمَّ آذنَ فِي النَّاسِ فِي الْعَاشِرَةِ أَنَّ رَسُولَ اللّهِ حَاجٌّ. فَقَدِمَ الْمَدِينَةَ بَشَرٌ كَثِيرٌ. كُلُّهُمْ يَلْتَمِسُ أَنْ يَأْتَمَّ بِرَسُولِ اللّهِ . وَيَعْمَلُ مِثْلَ عَمَلِهِ. فَخَرَجْنَا مَعَهُ. حَتَّى أَتَيْنَا ذَا الْحُلَيْفَةِ. فَوَلَدَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ. فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللّهِ . كَيْفَ أَصْنَعُ؟ قَالَ: «اغْتَسِلِي. وَاسْتَثْفِرِي بِثَوْبٍ وَأَحْرِمِي» فَصَلَّى رَسُولُ اللّهِ فِي الْمَسْجِدِ. ثُمَّ رَكِبَ الْقَصْوَاءَ. حَتَّى إِذَا اسْتَوَتْ بِهِ نَاقَتُهُ عَلَى الْبَيْدَاءِ. نَظَرْتُ إِلَى مَدِّ بَصَرِي بَيْنَ يَدَيْهِ. مِنْ رَاكِبٍ وَمَاشٍ. وَعَنْ يَمِينِهِ مِثْلَ ذلِكَ. وَعَنْ يَسَارِهِ مِثْلَ ذَلِكَ. وَمِنْ خَلْفِهِ مِثْلَ ذَلِكَ. وَرَسُولُ اللّهِ بَيْنَ أَظْهُرِنَا. وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ. وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ. وَمَا عَمِلَ بِهِ مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ. فَأَهَلَّ بِالتَّوْحِيدِ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ. لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ. إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ. وَالْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ». وَأَهَلَّ النَّاسُ بِهَذَا الَّذِي يُهِلُّونَ بِهِ. فَلَمْ يَرُدَّ رَسُولُ اللّهِ عَلَيْهِمْ شَيْئاً مِنْهُ. وَلَزِمَ رَسُولُ اللّهِ تَلْبِيَتَهُ. الـــخ 

நாங்கள் (ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (றழி) அவர்களிடம் சென்றோம். ஜாபிர் (றழி) அவர்கள் (என்னுடன் வந்த) மக்களைப் பற்றி விசாரித்துவிட்டு இறுதியில் என்னைப் பற்றி விசாரித்தார்கள். "நான் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்களின் பேரன் முஹம்மத் பின் அலீ" என்று (என்னை) அறிமுகப்படுத்தினேன். உடனே ஜாபிர் (றழி) அவர்கள், (அன்பொழுகத்) தமது கையை எனது தலையை நோக்கி நீட்டி, (பிறகு கையைக் கீழே கொண்டு சென்று) எனது அங்கியின் மேல் பொத்தானையும்,அடுத்து கீழ்ப் பொத்தானையும் கழற்றி, எனது நெஞ்சில் கையை வைத்தார்கள். -அப்போது நான் இளவயதுச் சிறுவனாக இருந்தேன்- மேலும், "என் சகோதரர் மகனே, வருக. நீர் விரும்பியதைப் பற்றி என்னிடம் கேள்" என்றார்கள். அவர்களிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். -அப்போது ஜாபிர் (றழி) அவர்கள் கண்பார்வையற்றவராய் இருந்தார்கள்.- தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் தமது மேல் துண்டை போர்த்திக்கொண்டு எழுந்தார்கள். அவர்கள் அதைத் தமது தோள்மீது போடப் போட, அது சிறியதாக இருந்ததால் தோளில் உட்காராமல் அதன் இரு ஓரங்களும் கீழே விழுந்துகொண்டிருந்தன. அப்போது அவர்களது மேல்சட்டை அருகிலிருந்த ஒரு கொக்கியில் மாட்டப்பெற்றிருந்தது. பிறகு அவர்கள் (மேல்சட்டை அணியாமலேயே மேல்துண்டுடன்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்.
பிறகு அவர்களிடம் நான், "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒன்பது" எனத் தமது விரலால் சைகை செய்து காட்டிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச் சென்ற பின்) "ஒன்பது" ஆண்டுகள் ஹஜ் (கடமையாகததால் அதை) நிறைவேற்றாமலேயே தங்கியிருந்தார்கள். பத்தாவது ஆண்டில் மக்களிடையே "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஆண்டில்) ஹஜ் செய்யப்போகிறார்கள்" என அறிவிப்புச் செய்யவைத்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே தாமும் (ஹஜ்) கிரியைகளைச் செய்யும் நோக்கத்துடன் ஏராளமான மக்கள் மதீனாவிற்கு(த் திரண்டு) வந்தனர்.
பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். "துல்ஹுலைஃபா" எனும் இடத்திற்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, (அபூபக்ர் (றழி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (றழி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் (றழி) பிறந்தார். உடனே அஸ்மா (றழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ர் (றழி) அவர்களை) அனுப்பி "நான் எப்படி ("இஹ்ராம்") கட்ட வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, "இஹ்ராம்" கட்டிக்கொள்" என்று கூறியனுப்பினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் தொழுதுவிட்டு, "கஸ்வா" எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) "அல்பைதாஉ" எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானபோது நான் பார்த்தேன்; எனது பார்வையெட்டும் தூரத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னாலும், வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும், பின்னாலும் (ஏராளமான) மக்கள் வாகனத்திலும் கால்நடையாகவும் வந்து குழுமியிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.
அவர்கள் "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்துவிட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை)" என்று ஏகத்துவ உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறிவருகின்ற முறையில் (சற்று கூடுதல் குறைவு வாசகங்களுடன்) தல்பியா கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து தமது தல்பியாவையே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
முஸ்லிம்-2903

இங்கு நபி(ஸல்) அவர்களின் தல்பியாவை கவனித்து அதேபோல் ஸஹாபாக்கள் தல்பியாசொல்லாமல் கூடுதல் குறைவு வாசகங்களுடன் தல்பியா கூறியுள்ளனர். இது அவர்கள் காட்டாத வழிமுறையாகும்.ஆனால் அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை 

(தொடரும்.....)

**==***==***==***==**
..தொடர்- 02

மௌலவீ  KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hon) 

நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகுமா ? 

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்வில் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது கூடாது அது வழிகேடு என்ற கருத்து இன்று மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. 

நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த விடயங்களைச் செய்வது வழிகேடாகுமே தவிர அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களைச் செய்வது வழிகேடாகாது. 

அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் 
وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ﴾ [27] ) 

“றஸூல் (ஸல்) அவர்கள் கொண்டு வந்​ததை எடுத்து நடங்கள் அவர்கள் தடுத்ததை விட்டும் தவிர்ந்து நடங்கள்” என்றுகூறியுள்ளான். 
(அல்ஹஷர்-27) 
இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை தவிர்ந்து நடங்கள் என்று கூறப்படவில்லை என்பதை நாம் அவதானிக்க வேண்டும். எனவே நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை செய்வது கூடாது என்ற கருத்து தவறானதாகும். 

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் 

قال النبي صلى الله عليه وآله وسلم : «ما أمرتكم به فائتوا منه ما استطعتم وما نهيتكم عنه فاجتنبوه»([2][28]). 

“நான் ஏவியதை முடியுமான அளவு எடுத்து நடங்கள் நான் விலக்கியதை தவிர்ந்து நடங்கள்” 

(புஹாரீ-6068,முஸ்லிம்-7288,அஹ்மத்-18) 

இங்கு நபி (ஸல்) அவர்கள் “நான் செய்யாமல் விட்டதை தவிர்ந்து நடங்கள்” என்று கூறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்டதை செய்வது கூடாது என்ற கருத்து தவறானதாகும். 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, முன்னர் அங்கீகரிக்காத பல விடயங்களை செய்தமைக்கான சில சான்றுகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன். 

الطبراني271 - حدثنا أبو زرعة الدمشقي عبد الرحمن بن عمرو ثنا يحيى بن صالح الوحاطيثنا فليح بن سليمان عن زيد بن أبي أنيسة عن عمرو بن مرة الجملي عن عبد الرحمن بن أبي ليلى عن معاذ بن جبل قال : كنا نأتي الصلاة فاذا جاء رجل وقد سبق بشيء من الصلاة فأشار اليه الذي يليه وقد سبقت بكذا وكذا فيقضي قال : فكنا بين راكع وساجد وقائم وقاعد فجئت يوما وقد سبقت ببعض الصلاة وأشير الي بالذي سبقت به فقلت : لا أجده على حال الا كنت عليها فكنت بحالهم الذي وجدتهم عليها فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قمت فصليت واستقبل رسول الله صلى الله عليه وسلم الناس فقال : من القائل كذا وكذا ؟ قالوا : معاذ بن جبل فقال : قد سن لكم معاذ فاقتدوا به اذا جاء أحدكم وقد سبق بشيء من الصلاة فليصل مع الامام صلاته فاذا فرغ الامام فليقض ما سبقه به 

01. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஜமாஅத்) தொழுகையில் சிலது தப்பிய பின்னர் ஒருவர் வந்தால் அவருக்கு பக்கத்திலுள்ளவர் தப்பிய விபரத்தை சுட்டிக்காட்டுவார். அவர் அதை தொழுதபின் (ஜமாஅத்) தொழுகையில் சேந்து கொள்வார். ஒரு நாள் நான் (முஆத்இப்னுஜபல் (றழி) அவர்கள்) தொழுகையில் சிலது தப்பியபின்னர் வந்தேன். எனக்கு தப்பிய விபரத்தை சுட்டிக்காட்டப்பட்டது. நான் எந்த நிலையில் வந்து சேர்ந்தேனோ அந்த நிலையிலிருந்தே தொழுவேன் என்று கூறிவிட்டு தொழுதேன். நபி( ஸல்) அவர்கள் தொழுது முடிந்தபின் நான் எழுந்து தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் யார் இவ்வாறு சொன்னது என்று கேட்டபோது முஆத் இப்னுஜபல் என்று ஸஹாபாக்கள் சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களுக்கு முஆத் ஆரம்பித்து வைத்துள்ளார் அவரைபின் பற்றுங்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையில் சிலது தப்பிய பின்னர் வந்தால் இமாமுடன் அவர் தொழட்டும். இமாம் தொழுது முடிந்தபின் தப்பியதை தொழட்டும்” என்று சொன்னார்கள். 
(தப்றானீ-271) அறிவிப்பு -( முஆத்இப்னுஜபல் (றழி) 


وفي رواية سيدنا معاذ بن جبل: (إنه قد سن لكم معاذ فهكذا فاصنعوا)([3][38]). 

மற்றொரு அறிவிப்பில் “உங்களுக்கு முஆத் ஆரம்பித்து வைத்துள்ளார் அவ்வாறே செய்யுங்கள்” என்று சொன்னார்கள். 

(அஹ்மத்-22778, அபூதாவூத்-506, பைஹகீ-5352) 

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முன்னர் செய்து காட்டாத ஒரு செயலை முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்கள் செய்து காட்டுகின்றார்கள். இந்த செயல் தொழுகையின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அதை சரி கண்டார்கள். நான் செய்துகாட்டாத இந்த செயலை நீங்கள் செய்யக்கூடாது என்று முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்களையோ மற்ற ஸஹாபாக்களையோ நபி (ஸல்) அவர்கள் தடுக்கவுமில்லை எச்சரிக்கவுமில்லை. 

عن أبي هريرة رضي الله عنه أن نبي الله صلى الله عليه وآله وسلم قال لبلال عند صلاة الفجر: « يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دُف نعليك في الجنة» قال: ما عملت عملا أرجى عندي من أني لم أتطهر طهورا في ساعة من ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي([4][40]). 

(ஒருநாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (றழி) அவர்களிடம், "பிலாலே!இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச்செய்து வரும் நற்செயல் ஒன்றைப்பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
அதற்கு பிலால் (றழி) அவர்கள், "நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக அங்கத்தூய்மை (வுளூ) செய்தாலும், அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழவேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல்தொழுகையை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)" என்று கூறினார்கள் 
(புஹாரீ-1149, முஸ்லிம்-6274, அஹ்மத்-9533) 
அறிவிப்பு- அபூஹுரைரா (றழி) . 

وفي رواية : قال لبلال: «بم سبقتني إلى الجنة؟ قال: ما أذنت قط إلا صليت ركعتين وما أصابني حدث قط إلا توضأت ورأيت أن لله علي ركعتين فقال النبي صلى الله عليه وآله وسلم «بهما» أي نلت تلك المنزلة»([5][41]). 

மற்றொரு அறிவிப்பில் 
நபி (ஸல்) அவர்கள், பிலால் (றழி) அவர்களிடம் என்னை விட சொர்க்கத்திற்கு எதனால் முந்திச் சென்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (றழி) அவர்கள் நான் அதான் சொன்னால் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருப்பதில்லை. எனக்கு (சிறு) தொடக்கு ஏற்பட்டால் வுழூச் செய்து இரண்டு ரக்அத்துகள் தொழுவதை அல்லாஹ்வுக்காக நான் என் மீது கடமையாக்கிக்கொண்டேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் கொண்டுதான் இந்த படித்தரத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். என்று சொன்னார்கள். 
(அஹ்மத்-22658, இப்னுஹுஸைமா-1209, 
ஹாகிம்-1/313, துர்முதீ-3689, தப்றானீ-1/1012) 

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முன்னர் செய்து காட்டாத ஒரு செயலை பிலால் (றழி)அவர்கள் செய்துள்ளார்கள். இந்த செயல் ஒரு தொழுகையாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அதை சரி கண்டார்கள் நான் செய்துகாட்டாத இந்த தொழுகையை நீங்கள் தொழக்கூடாதுஎ ன்று பிலால்( றழி) அவர்களையோ மற்ற ஸஹாபாக்களையோ நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. மாறாக சொர்க்கத்தில் இந்த படித்தரத்தை அதைக் கொண்டுதான் நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்று வாழ்த்தினார்கள். 

صحيح مسلم (6807) ـ حدّثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ. حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ. عَنْ أَبِي عُثْمَانَ. عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ. فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللّهَ. قَالَ: آللّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ؟ قَالُوا: وَاللّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ: أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ. وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولِ اللّهِ أَقَلَّ عَنْهُ حَدِيثاً مِنِّي. وَإِنَّ رَسُولَ اللّهِ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ. فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلإِسْلاَمِ، وَمَنَّ بِهِ عَلَيْنَا. قَالَ: «آللّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ؟» قَالُوا: وَاللّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ: «أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ. وَلكِنَّهُ أَتَانِي جِبْرِيلُ فَأَخْبَرَنِي أَنَّ اللّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِي بِكُمُ الْمَلاَئِكَةَ». 

அபூசயீத் அல்குத்ரீ (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (றழி) அவர்கள் புறப்பட்டு வந்து, "நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அதற்கு முஆவியா (றழி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்றுகூறினர்.
முஆவியா (றழி) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) வட்டமாக அமர்ந்திருந்த தம்தோழர்களில் சிலரிடம் வந்து, "நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழிகாட்டிய தற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்" என்றுகூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதுசத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள்.

அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீது சந்தேகம் கொண்டுச்சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றிவானவர்களிடம் பெருமையுடன் பேசிக்கொள்கிறான்" என்று தெரிவித்தார் என்றார்கள். 
(முஸ்லிம் -6807) 
அறிவிப்பு- அபூசயீத் அல்குத்ரீ (றழி) 

நபி (ஸல்) அவர்கள்ஸஹாபாக்களைவட்டமாகஅமர்ந்திருந்துஅல்லாஹ்வைநினைவுகூர்ந்துபோற்றுமாறுகட்டளையிட்டிருக்கவுமில்லைஅவ்வாறுசெய்துகாட்டவுமில்லைஎன்பதுமேற்குறிப்பிடப்பட்டஹதீஸில்இருந்துதெளிவாகவிளங்குகின்றது. அவ்வாறுஅவர்கள்கட்ளையிட்டிருந்தால்"நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்குஎன்னகாரணம்?" என்றுகேட்டிருக்கமாட்டார்கள். எனவேநபி (ஸல்) அவர்கள்கட்டளையிடாத, முன்னர்செய்துகாட்டாதஒருசெயலைஸஹாபாக்கள்செய்தபோதுநபி (ஸல்) அவர்கள்அதைதடுக்கவில்லைமாறாக"வல்லமையும்மாண்பும்மிக்கஅல்லாஹ்உங்களைப்பற்றிவானவர்களிடம்பெருமையுடன்பேசிக்கொள்கிறான்" என்றுவாழ்த்தினார்கள் 

وعن سيدنا خالد بن الوليد رضي الله عنه قال: (اعتمرنا مع رسول الله صلى الله عليه وآله وسلم في عمرة اعتمرها فحلق شعره فاستبق الناس إلى شعره فاستبقت إلى الناصية فأخذتها فاتخذت منها قلنسوتي فجعلتها في مقدم القلنوسة فما وجهتها في وجه إلا فتح علي)([6][44]). 

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உம்றா செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் (தலை) முடியை சிரைத்தார்கள். ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களின் முடியை எடுப்பதற்கு முந்திக்கொண்டிருந்தனர். நான் முன்நெற்றிமுடியை எடுத்துக் கொண்டேன். அதை எனது தொப்பியின் முன்பகுதியில் வைத்துக் கொண்டேன். நான் அதை முன்வைத்துச் செல்லும் போதெல்லாம் எனக்கு வெற்றிகிடைத்தது. 
(தப்றானீ-3804,4044,ஹாகிம்-3/299) 
அறிவிப்பு-ஹாலித்இப்னுவலீத்(றழி) ​ 

​இந் தஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை தனது (தலை) முடியை எடுத்துக்கொள்ளுமாறு கூறவில்லை ஆயினும் ஸஹாபாக்கள் அதை முந்திக் கொண்டு எடுத்துள்ளனர். அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை, அத்துடன் ஹாலித் இப்னு வலீத் (றழி) அவர்களிடம் முன்நெற்றி முடியை எடுத்து அதை தொப்பியின் முன்பகுதியில் வைத்துக் கொள்ளுமாறு கூறவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்து காட்டாத இந்த செயலை ஸஹாபாக்கள் செய்துள்ளனர் என்பதை இங்கு நாம் கவனிக்கவேண்டும். 

وعن سيدنا أنس رضي الله عنه قال: لقد رأيت رسول الله صلى الله عليه وآله وسلم والحلاق يحلقه وأطاف به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل منهم([7][45]). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையை நாவிதர் ஒருவர் மழித்துக் கொண்டிருக்கும் போது நான் பார்த்துள்ளேன். அப்போது நபித் தோழர்கள், ஒரு முடியாயினும் (தங்களில்) ஒரு வரது கையில்தான் விழவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். 
(முஸ்லிம்-5996,
அறிவிப்பு-அனஸ் (றழி) 

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தலை முடியைகளையும் போது “எனது ஒரு முடியாயினும் (உங்களில்) ஒருவரது கையில்தான் விழவேண்டும்” என்று கூறவில்லை ஆயினும் தோழர்கள் அந்த நோக்கத்துடன் அவர்களைச் சுற்றிவந்து கொண்டிருந்தார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லை. 

(6009) ـ وحدّثني مُحَمَّدُ بْنُ رَافِعٍ. حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنّى. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ (وَهُوَ ابْنُ أَبِي سَلَمَةَ) عَنْ إِسْحَـقَ بْنِ عَبْدِ اللّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، . قَالَ: كَانَ النَّبِيُّ يَدْخُلُ بَيْتَ أُمِّ سُلَيْمٍ فَيَنَامُ عَلَى فِرَاشِهَا وَلَيْسَتْ فِيهِ. قَالَ: فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَنَامَ علَى فِرَاشِهَا. فَأُتِيتْ فَقِيلَ لَهَا: هذَا النَّبِيُّ نَامَ فِي بَيْتِكِ، عَلَى فِرَاشِكِ. قَالَ: فَجَاءَتْ وَقَدْ عَرِقَ، وَاسْتَنْقَعَ عَرَقُهُ علَى قِطْعَةِ أَدِيمٍ، عَلَى الْفِرَاشِ. فَفَتَحَتْ عَتِيدَتَهَا فَجَعَلَتْ تُنَشِّفُ ذلِكَ الْعَرَقَ فَتَعْصِرُهُ فِي قَوَارِيرِهَا. فَفَزِعَ النَّبِيُّ فَقَالَ: «مَا تصْنَعِينَ؟ يَا أُمَّ سُلَيْمٍ» فَقَالَتْ: يَا رَسُولَ اللّهِ نَرْجُو بَرَكَتَهُ لِصِبْيَانِنَا. قَالَ: «أَصَبْتِ». 

அனஸ்பின் மாலிக் (றழி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் (என்தாயார்) உம்முசுலைம் (றழி அவர்களின் இல்லத்துக்கு வந்து, அங்கு உம்முசுலைம் (படுத்து) இராத போது அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வந்து உம்முசுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்முசுலைம் (றழி) அவர்களிடம், "இதோ நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீட்டில் உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லப்பட்டது.
உடனே உம்முசுலைம் (றழி அவர்கள் வந்(துபார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்முசுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து, "உம்முசுலைமே! என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன்( பறகத்தை) வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்" என்று சொன்னார்கள். 
முஸ்லிம்-6009 
அறிவிப்பு-அனஸ்இப்னுமாலிக் (றழி) 

இங்கு நபி (ஸல்) அவர்கள் தனது வியர்வைத் துளிகளை குழந்தைகளுக்கு சேகரிக்கு மாறும் அதன் அருளை( பறகத்தை) எதிர்பார்க்குமாறும் கூறவில்லை .ஆயினும் உம்முசுலைம் (றழி) அவர்கள் அவ்வாறு செய்தபோது அதை தடுக்கவில்லை. மாறாக “நீ செய்தது சரிதான்” என பாராட்டினார்கள். இங்கு நபி (ஸல்) அவர்கள் சொல்லாத,செய்துகாட்டாத ஒரு செயல் நடைபெற்றுள்ளது அதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. 

وعن سيدنا أبي جحيفة رضي الله عنه قال : رأيت رسول الله صلى الله عليه وآله وسلم في قبة 
حمراء ورأيت بلالا أخرج وضوءا فرأيت الناس يبتدرون ذلك الوضوء فمن أصاب منه شيء 
مسح به ومن لم يصب منه أخذ من بلل صاحبه. 

நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக்கூடார மொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வுளூச்செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்து வருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம்மேனியில்) தடவிக் கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர்கிடைத்த) தம்தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு (த்தடவி)க்கொண்டார். 

புஹாரீ-374, முஸ்லிம்-1072, அஹமத்-19273,
இப்னுஹிப்பான்-1300, பைஹகீ-5707 
அறிவிப்பு- அபூஜுஹைஃபா (றழி) 

இங்கு நபி (ஸல்) அவர்கள் தான் வுளூச்செய்த தண்ணீரை போட்டி போட்டுக் கொண்டு எடுத்து உடம்பில் தடவிக்கொள்ளுமாறும் தண்ணீரைப் பெறாதவர் தண்ணீர் பெற்ற தம் நண்பரின்கையில் உள்ள ஈரத்தைத் தொட்டுத்( தடவி)க் கொள்ளுமாறும் கட்டளையிட வில்லை. நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்துகாட்டாத இந்த செயலைஸ ஹாபாக்கள் செய்தபோது அதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவுமில்லை கண்டிக்கவுமில்லை 

وعن سيدنا أنس رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا صلى الغداة جاء خدم المدينة بآنيتهم فيها الماء فما يؤتى بإناء إلا وغمس يده فيها فربما جاؤوا في الغداة الباردة فيغمس يده فيها([8][50]). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டு வருவார்கள். கொண்டு வரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மூழ்கச் செய்வார்கள். சில வேளைகளில் குளிரான காலை நேரங்களிலும் அதைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதனுள்ளே கையை மூழ்கச்செய்வார்கள். 

முஸ்லிம் -5996 
அறிவிப்பு - அனஸ்இப்னுமாலிக் (றழி) அவர்கள் 

இங்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டுவருமாறு மதீனாவின் பணியாளர்களுக்கு கூறவில்லை ஆயினும் கொண்டு வரப்பட்ட பாத்திரங்களில் தமது கையை மூழ்கச் செய்தார்கள். அந்த மக்களுக்கு தனது அருள்(பறகத்) கிடைக்கவேண்டும் என்பதற்காக. இந்த செயலை நபியவர்கள் தான் கட்டளையிடவில்லை என்பதற்காக தடைசெய்யவில்லை 

(தொடரும்.....) 


**==***==***==***==**

தொடர்-01
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons)

ஸுன்னத்

ஸுன்னத் என்பதற்கு ஹதீஸ் கலை மேதைகள், சட்டக்கலை வல்லுனர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அறிஞர்கள் மத்தியில் பல விரிவான வரைவிலக்கணங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதாயின் ஸுன்னத் என்பது

“நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் என்பனவாகும்.”

பித்அத்

பித்அத் என்பதற்கு பின்வரும் வரைவிலக்கணங்கள் அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

01.”இஸ்லாமிய ஷரீஅத்தின் எந்த அடிப்படையுமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது பித்அத்ஆகும். ஷரீஅத்தின் அடிப்படையில் புதிதாகஉ ருவாக்கப்பட்டது பித்அத்அல்ல”.

(ஜாமிஉல்உலூமிவல்ஹிகம்,பக்கம் 160-இப்னுறஜப்அல்ஹன்பலீ)
 பத்ஹுல்பாரீ,பாகம்5,பக்கம்156-இப்னுஹஜர்அஸ்கலானீ)


02. ஷரீஅத்திற்குமாற்றமான அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டது பித்அத் ஆகும்.
அத்தப்யீன்பிஷரஹில்அர்பஈன் ப
க்கம்221- இப்னுஹஜர் அல்ஹைதமீ

03. இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

பித்அத் இரு வகைப்படும்

01.புகழப்பட்ட பித்அத் அதாவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு அமைவானது.

02. இகழப்பட்ட பித்அத் அதாவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானது.

அல்குர்ஆனுக்கு அல்லது நபி( ஸல்) அவர்களின் வழிமுறைக்கு அல்லது இஜ்மாஉவிற்கு மாற்றமாக புதிதாக உருவாக்கப்பட்டது வழிகெட்ட பித்அத்ஆகும். மேற்கூறப்பட்டவைகளுக்கு மாற்றமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது புகழப்பட்டதாகும்.
பத்ஹுல்பாரீ, பாகம்13, பக்கம் 253
-இப்னுஹஜர்அஸ்கலானீ)

மேற்குறிப்பிடப்பட்ட வரைவிலக்கணங்களின் அடிப்டையிலும் பித்அத் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களின் விளக்கங்களின் அடிப்டையிலும் நோக்கும் போதுபுதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் பித்அத் என்று பெயர் பெற்றாலும் ஷரீஅத்தின் அடிப்டைகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டவைகள் வழிகெட்ட பித்அத் அல்ல.

ஷரீஅத்தின் அடிப்டைகளுக்கு மாற்றமாக உருவாக்கப்பட்டவைகள் மட்டுமே வழிகெட்ட பித்அத் ஆகும்.

பித்அத் பற்றிய ஹதீஸ்கள்

நபி(ஸல்) அவர்கள் பித்அத் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்

عن عائشةَ رضيَ اللهُ عنها قالت: قال رسولُ اللهِ صلى الله عليه وسلّم: «مَن أحدَثَ في أمرِنا هذا ما ليسَ فيهِ فهوَ رَدّ». رواهُ عبدُ اللهِ بن جَعفرٍ المَخْرَميُّ وعبدُ الواحدِ بنُ أبي عونٍ عن سعدِ بنِ إبراهيمَ.

எங்கள் மார்க்கத்தில் இல்லாததை யார் புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டதாகும்.
ஆதாரம்-புஹாரி-2641,முஸ்லிம்-4446,
அஹ்மத்-25633, இப்னுமாஜஹ் 14,
அபூதாவூத்-,4590, தாரகுத்னீ-4608)
அறிவிப்பு:- ஆயிஷா(றழி)

ஹதீஸின் விபரம்

மேற்கூறப்பட்ட ஹதீதுக்கு ஹதீஸ் விரிவுரையாளர்கள் பின்வருமாறுவிளக்கம் எழுதியுள்ளனர்.

யார்மார்க்கத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்குகின்றாரோ அதை கவனிக்கப்படமாட்டாது.
பத்ஹுல்பாரீ, பாகம்05, பக்கம்640
-இப்னுஹஜர் அஸ்கலானீ

அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் வெளிப்டையான அல்லது மறைமுகமான ஆதாரமின்றி யார் இஸ்லாத்தில் புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டதாகும்
(மிர்காத்-பக்கம் 155)

மேற்கூறப்பட்ட ஹதீஸில் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டவை என குறிப்பிடப்படவில்லை. மார்க்கத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் மறுக்கப்பட்டவை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கத்தின் அடிப்படை ஆதாரத்துடன் புதிதாக உருவாக்கப்பட்டவைகள் மறுக்கப்பட்டவை அல்ல என்பதும் இதிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.

عن جابر ابن عبد الله قال كان رسول الله صلى الله عليه وسلّم يقول في خطبته يحمد الله ويثني عليه بما هو له أهل ثم يقول: «من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، إن أصدق الحديث كتاب الله وأحسن الهدى هدى محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة، وكل ضلالة في النار الخ

யாரை அல்லாஹ் நேர்வழிகாட்டுகின்றானோ அவனை வழிகெடுக்க யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனை நேர்வழிகாட்ட யாருமில்லை. வேதங்களில் உண்மையானது இறைவேதம். வழிகாட்டல்களில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள். விடயங்களில் தீயது புதிதாக உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும்பித்அத்ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடு அனைத்தும் நரகை சென்றடையும்

இப்னுஹுஸைமா 1784, நஸாஈ 1579, அஹ்மத் 14689
அறிவிப்புஜாபிர்( றழி)


وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وأن كل بدعة ضلالة

புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்களை உங்களுக்கு எச்சரிக்கின்றேன். புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடாகும்.
அஹ்மத்-16817,அபூதாவூத்-4607,துர்முதீ -2676, 
இப்னுமாஜஹ் -43, தாரமீ-95
பகவீ-102, ஹாகிம் (95-96/1), இப்னுஹிப்பான்-05, தப்றானீ(617/18).

ஹதீஸின்விபரம்

மேற்கூறப்பட்ட ஹதீதுக்கு ஹதீஸ் விரிவுரையாளர்கள் பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளனர்

“ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்கப்பட்டவை வழிகேடாகும்”.

பத்ஹுல்பாரீ, பாகம்15, பக்கம்173- இப்னுஹஜர் அஸ்கலானீ)

மேற்கூறப்பட்ட ஹதீஸ்களையும் அவற்றின் விரிவுரைகளையும் நோக்கும்போது பித்அத்தில் பல வகை உண்டு என்பது தெளிவாகின்றது. ஆயினும் எல்லா பித்அத்தும் வழிகேடு என்ற கருத்து ஹதீஸின் நேரடியான வசனத்தில் வந்துள்ளது. அந்த வசனத்தை எவ்வாறு விளங்கிக் கொள்ளவேண்டும் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.


பித்அத்தில் பலவகையுண்டு ஆயினும் எல்லா பித்அத்தும் வழிகேடல்ல என்ற கருத்தை நான்கு மத்ஹபுகளைச் சேர்ந்த இமாம்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

ஹனபீ மத்ஹபின் இமாம்கள்

அஷ்ஷெய்கு இப்னு ஆபிதீன்அ ல்ஹனபீ (றஹ்) அவர்கள் தங்களின் ஹாஷியஹ் பாகம்01, பக்கம் 376 ல்பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.​

பித்அத் பின்வருமாறு வகைப்படும்

பித்அத்வாஜிபஹ் உதாரணம் - அல்குர்ஆனையும் அல்ஹதீஸயும் புரிந்துகொள்வதற்காக அறபுமொழி இலக்கணம் கற்றல், வழிகெட்டவர்களுக்கு மறுப்பாக ஆதாரம் திரட்டுதல் அதை நிலைநாட்டல்.

பித்அத் மன்தூபஹ் உதாரணம் – மத்றஸாக்களை உருவாக்குதல்

பித்அத் மக்றூஹஹ் உதாரணம் – பள்ளிவாயலை அலங்கரித்தல்

பித்அத்முபாஹஹ் உதாரணம்–இனிமையான உணவுசாப்பிடுதல், இனிமையான பானங்கள் அருந்துதல், அழகிய ஆடை அணிதல்”

அஷ்ஷெய்கு பத்றுத்தீன் அல்ஐனீ( றஹ்) அவர்கள் தமதுஸஹீஹுல் புஹாரீ விரிவுரை பாகம் 11, பக்கம் 126ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாததை புதிதாக உருவாக்குதல் “ பித்அத் ஆகும்.

பித்அத் இருவகைப்படும். ஷரீஅத்தின் நல்ல அம்சங்களின் அடிப்டையில் அது அமையுமாயின் அதுந ல்லபித்அத் ஆகும். ஷரீஅத்தின் இழிவான அம்சங்களின் அடிப்டையில் அது அமையுமாயின் அது இழிவானபித்அத் ஆகும்”.

.
மாலிக்மத் ஹபின் இமாம்கள்

அஷ்ஷெய்கு முஹம்மத் அல்ஸர்கானீ அல்மாலிகீ( றஹ்) அவர்கள் தங்களின் முவத்தா ஷர்ஹு பாகம் 01, பக்கம் 238ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

நிஃமதில்பித் அது ஹாதிஹீ”என்று உமர் (றழி) அவர்கள் சொன்னதன் மூலம் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை பித்அத் என்று குறிப்பிட்டுள்ளார்கள். காரணம்அ துநபி( ஸல்) அவர்களினதும் அபூபக்ர்(றழி) அவர்களினதும் காலத்தில் தறாவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நடைமுறையில் இருக்கவில்லை.

பித்அத் என்ற சொல்லின் பொருள் “முன்உதாரணமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது” என்பதாகும்.

ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் பித்அத் என்பதன் பொருள் “நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாததை புதிதாக ஆரம்பிப்பதாகும்” எனினும் பித்அத் 05 வகைப்படுகின்றது

அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னுயஹ்யா அல்மாலிகீ (றஹ்) அவர்கள் தங்களின் மிஃயாருல் முஃறப்பாகம் 01, பக்கம் 357,358ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

பொதுவாக பித்அத்தை எமது தோழர்கள் நிராகரித்தாலும். அவர்களிடத்தில்​யதார்த்தமான உண்மை பித்அத் 05 வகை என்பதாகும். (பின்னர் பித்அத்தின் 05 வகைகளையும் குறிப்பிட்டுள்ளார்கள்.)

“பித்அத்தின் விடயத்தில் உண்மை என்ன வெனில் ஷரீஅத்தின் அடிப்படைகளில் அந்த பித்அத் எதற்கு பொருந்துமோ அந்த அடிப்படையுடன் அதை சேர்க்கப்படும்.

இந்த அடிப்படையில் “குல்லு பித்அதின் ழலாலதுன்” என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் “ஆம்மக்ஸூஸ்” எனும் “பொதுவானதை கூறி குறிப்பானதை கருதுதல்” என்ற அடிப்படையை சார்ந்ததாகும். இவ்வாறுதான் இமாம்கள் சொல்லியுள்ளனர்.

ஷாபிஈ மத்ஹபின் இமாம்கள்

இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் “புதிதாக உருவாக்கப்பட்டவைகள் இரு வகைப்படும்.

01.அல்குர்ஆனுக்கு அல்லது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு அல்லது இஜ்மாஉவிற்கு மாற்றமாக புதிதாக உருவாக்கப்பட்டது வழிகெட்ட பித்அத் ஆகும்.

02.மேற்கூறப்பட்டவைகளுக்கு மாற்றமின்றி புதிதாக உருவாக்கப்பட்டது புகழப்பட்டதாகும்.
(பைஹகீ (பீமனாகிபிஷ்ஷாபிஈ) பாகம்ம் 01,பக்கம்469)

இமாம்ஷாபிஈ(றஹ்) அவர்கள் சொன்னதாக ஹர்மலதுப்னு யஹ்யா அவர்கள் அறிவிக்கின்றார்கள்

பித்அத் இரு வகைப்படும்

01.புகழப்பட்ட பித்அத் அதாவது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு அமைவானது.

02.இகழப்பட்ட பித்அத் அதாவதுநபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானது.

இதற்கு ஆதாரம் உமர் (றழி) அவர்களின் “நிஃமதில் பித்அது” “இது நல் லபித்அத்” ஆகும் என்ற சொல்ஆகும்.

(ஹில்யதுல்அவ்லியா,பாகம்-09,பக்கம்-76)


இமாம் அபூஹாமித் அல்கஸாலீ (றஹ்) அவர்கள் தங்களின் இஹ்யா உஉலூமித்தீன் பாகம் 02,பக்கம் 03ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள் “நபி ( ஸல்) அவர்களின் காலத்தின்பின் புதிதாக ஆரம்பிக்கப்பட்டவை அனைத்தும் தடுக்கப்பட்டதல்ல. ஆனால் தரிபாடான ஸுன்னத்திற்கு மாற்றமாக ஆரம்பிக்கப்பட்டது தடுக்கப்பட்டதாகும்.

அஷ்ஷெய்கு இஸ்ஸுப்னு அப்துஸ்ஸலாம் (றஹ்)அவர்கள் தங்களின் கவாஇதுல் அஹ்காம் பாகம்-02,பக்கம் 172-174ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

பித்அத் பின்வருமாறு 05 வகைப்படும் வாஜிபஹ், முஹற்றமஹ், மன்தூபஹ், மக்றூஹஹ், முபாஹஹ்.

ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும் போது அதுவாஜிபு (கடமையானது) டைய அடிப்படைக்கு ஒத்துப் போகுமாயின் அந்த பித்அத் வாஜிபஹ்( கடமையானது) ஆகும்.

ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப் பார்க்கும்போது அதுஹறாமானது (தடுக்கப்பட்டது) டைய அடிப்படைக்கு ஒத்துப் போகுமாயின் அந்தபித்அத் முஹற்றமஹ் (தடுக்கப்பட்டது) ஆகும்.

ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும்போது அது மன்தூப் (ஸுன்னத்து) டைய அடிப்படைக்கு ஒத்துப்போகுமாயின் அந்தபித்அத் மன்தூபஹ் (ஸுன்னத்து) ஆகும்.

ஷரீஅத்தின்அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும் போது அது மக்றூஹ் (வெறுக்கப்பட்டது) டைய அடிப்படைக்கு ஒத்துப்போகுமாயின் அந்த பித்அத் மக்றூஹஹ் (வெறுக்கப்பட்டது) ஆகும்.

ஷரீஅத்தின் அடிப்படைகளோடு பித்அத்தை ஒத்துப்பார்க்கும் போது அது முபாஹ் (ஆகுமானது) டைய அடிப்படைக்கு ஒத்துப் போகுமாயின் அந்த பித்அத் முபாஹஹ் (ஆகுமானது) ஆகும்.

இதேகருத்தை இமாம் நவவீ(றஹ்) அவர்கள் தங்களின் ஷரஹ்ஸஹீஹ் முஸ்லிம்பாகம்-06,பக்கம்-154,155 இலும் பாகம்-16,பக்கம்-226,227 இலும் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (றஹ்) அவர்கள் தங்களின் பத்ஹுல்பாரீ பாகம் -04, பக்கம்-298 இலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (றஹ்) அவர்கள் தங்களின் பத்ஹுல் பாரீ பாகம்-03,பக்கம் 53 ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாதவைகள் அனைத்திற்கும் பித்அத் என்று சொல்லப்பட்டாலும் அதில் நல்லதும் உண்டு அதற்குமாற்றமானதும் உண்டு”


ஹன்பலீ மத்ஹபின் இமாம்கள்

அஷ்ஷெய்கு ஷம்ஷுத்தீன் முஹம்ம்மத் இப்னு அபில்பத்ஹ்( அல்ஹன்பலீ) அவர்கள் தங்களின் அல்முத்லிஃ அலா அப்வாபில் முக்னி ஃ பக்கம்-334ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“முன் உதாரண மின்றி புதிதாக ஆரம்பிக்கப்படது பித்அத் ஆகும். பித்அத் இரு வகைப்படும்.

01.நேர்வழியுடைய பித்அத்

02.வழிகெட்ட பித்அத்

மேலும் ஷரீஅத்தின் 05 அடிப்படைகளின் வகையில் பித்அத் 05 வகையாக நோக்கப்படும்”

மேலே குறிப்பிடப்பட் டநான்கு மத்ஹபுகளைச் சேர்ந்த இமாம்களுடைய கருத்துக்களின் சாரம் என்னவெனில்

“பித்அத்தில் பலவகையுண்டு, நல்லபித்அத்தும் உண்டு கெட்ட பித்அத்தும் உண்டு.பித்அத் எல்லாம் வழிகேடல்ல. “பித்அத் எல்லாம் வழிகேடு” என்று நபி( ஸல்) அவர்கள் சொன்னதன் பொருள் (அல்குர்ஆனுக்கு ம்ஸுன்னஹ்வுக்கும் மாற்றமாக புதிதா கஉருவாக்கப்பட்ட) பித்அத் எல்லாம் வழிகேடு என்பதாகும் ”இவ்வாறுதான் ஸஹாபாக்களும் ஹதீஸ்கலை இமாம்களும் சட்டக்கலை இமாம்களும் இந்தஹதீதை புரிந்து வைத்திருந்தார்கள்.


குல்லு பித்அதின் ழலாலதுன் كل بدعة ضلالة

பித்அத் எல்லாம் வழிகேடு என்று இந்த வசனத்திற்கு நேரடிப் பொருள் கொள்ளாமல் வலிந்துரை கொண்டு பொருள் கொள்வதேசிறப்பானதாகும். ஏனெனில்வலிந்துரையின்றிநேரடிப்பொருள்கொண்டு பித்அத் எல்லாம் வழிகேடென்ற முடிவுக்கு வந்தால் நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். அதனால் பல விபரீதங்கள் உண்டாகும். விடை சொல்ல முடியாத பல கேள்விகளை எதிர்கொள்ளவும் நேரிடும். அவற்றின் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.

நபீ தோழர்களும், ஹதீதுக்கலை மேதைகளான ஆறு இமாம்கள், சட்டக்கலை மேதைகளாக நான்கு இமாம்களும், தரீகஹ்களை ஸ்தாபித்த ஷெய்குமர்களும், மற்றும் உலகில் தோன்றிய அறிஞர்களும், பித்அத் செய்த வழிகேடர்கள் என்று முடிவு செய்ய வேண்டிவரும். இது மேற்கண்ட வசனத்துக்கு பித்அத் எல்லாம் வழிகேடென்று நேரடிப் பொருள் கொள்வதால் ஏற்படுகின்ற தீய விளைவாகும். ஏனெனில் மேற்கொண்ட மஹான்கள் அனைவரும் பித்அத் செய்தவர்களேயாவர்.

நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகை ஜமாஅத் கூட்டடாக நடைபெறவில்லை. அபூபக்கர்சித்தீக் (றழி) அவர்களின் காலத்திலும் அவ்வாறுதான் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே தொழுது வந்தார்கள். உமர் (றழி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்தில்லும் அவ்வாறுதான் இருந்தது. பின்னர் ஒருநாள் றமழான் மாத இரவு உமர் (றழி) அவர்கள் அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில்காரீஎன்பவருடன் மதீனஹ்ப ள்ளிவாயலில் நுழைந்தார்கள். அங்கு மக்கள் தனித்தனியே தறாவீஹ் தொழுது கொண்டிருந்ததைக் கண்டு, இந்த மக்கள் அனைவரையும் ஒரே இமாம் தலைவரின்கீழ்ஒன்றுசேர்த்தால் சிறப்பாயிருக்குமென்றுகூறிவிட்டு தறாவீஹ் தொழுகையை உபையிப்னு கஃப் (றழி) அவர்களின் தலைமையில் கூட்டாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜமாஅத் கூட்டாகத்த றாவீஹ் தொழுது கொண்டிருந்ததை க்கண் டுநிஃமல்பித்அதுஹாதிஹீ இது நல்ல பித்அத் என்று கூறினார்கள்.

ஆதாரம் – புஹாரீ- 1986
அறிவிப்பு –அப்துர் றஹ்மான் இப்னு அப்தில் காரீ

ஹழ்றத் உமர் (றழி) அவர்கள்ந பி(ஸல்) அவர்களின் மிக நெருங்கிய தோழர். குலபாஉர்றாஷிதீன் நல்வழிபெற்ற நான்கு கலீபாக்களிலும் ஒருவர். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்படாத ஒன்றை அவர்களின் மறைவின்பின் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த இச்செயல் பித்அத்எ ன்பதில் சந்தேகமில்லை. நிஃமல் பித்அது ஹாதிஹீ என்று அவர்கள் சொன்ன வசனம் கொண்டு அவர்களேதான் செய்தது பித்அத்எ ன்பதைஏ ற்றுக்கொண்டார்கள். அத்தோடு நிஃம என்று அவர்கள் சொன்ன சொல் கொண்டு பித்அத்தில் நல்லதும் உண்டு என்ற கருத்தையும் அவர்களே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

பித்அத் எல்லாம் வழிகேடாகவும், பித்அத் செய்தவர்கள் வழிகேடர்களாயும் நரகவாதிகளாயுமிருந்தால் ஹழ்றத்உமர் (றழி) யார்? அவர்கள் வழிகேடரா? நரகவாதியா? இல்லை

ஹதீதுக்கலை மேதைகளான ஆறு இமாம்களும் நபி (ஸல்) அவர்களின் நிறை மொழிகளைத் தொகுத்து நூல்கள் எழுதினார்கள். நபிமொழிகளை ஆராய்ந்து ஸஹீஹ், ழயீப், ஹஸன், மவ்ழுஉ என்றெல்லாம் வகுத்தார்கள். இவர்கள் செய்த இந்த வேலையும் பித்அத்ஆகும்.

சட்டக்கலை மேதைகளான நான்கு இமாம்களும் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் ஆராய்ந்து சட்டக்கலையில் நூல்கள் எழுதினார்கள். ஹலால், ஹராம், ஸுன்னத், மக்றூஹ்எ ன்றெல்லாம் சட்டங்கள் வகுத்தார்கள். இவர்கள் செய்த இந்தவேலையும் பித்அத்ஆகும்.

மேற்கண்ட  இமாம்களும், மகான்களும் செய்தவை யாவும் பித்அத் என்பதில் சந்தேகமில்லை. நபீ மொழியில் வந்துள்ள குறித்த வசனத்துக்கு நேரடிப் பொருள் கொண்டு பித்அத் எல்லாம் வழிகேடென்று வைத்துக்கொண்டால் மேற்கொண்ட இமாம்களும், மகான்களும் வழிகேட்டைச் செய்த வழிகேடர்களென்றும் நரகவாதிகளென்றும் கொள்ளவேண்டிவரும்.

எனவே ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரமின்றி புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். ஷரீஅத்தின் அடிப்படையில் புதிதாகஉ ருவாக்கப்பட்டவை வழிகேடல்ல. என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அதன் பின்னரும் ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரத்துடன் பல விடயங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை பித்அத் என்று பெயர்பெற்றாலும் அவை வழிகேடல்ல. ஸஹாபாக்கள் அல்குர்ஆனை நூல்வடிவத்தில் அமைத்ததும்,உமர்(றழி) அவர்கள் தறாவீஹ்தொழு​கையை ஜமாஅத்தாக தொழ ஆரம்பித்துவைத்ததும் புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்கள் ஆயினும் ஷரீஅத்தின் அடிப்படை ஆதாரத்துடன் உருவாக்கப்பட்டதால் அவை பித்அத் என்று பெயர் பெற்றாலும் அவை வழிகேடல்ல.

.(தொடரும்...)