Jan 28, 2016

குழப்பத்தை தூண்டுகிறது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா! காத்தான்குடி பொதுமக்களே விழிப்புடன் இருங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

இலங்கை முஸ்லிம் சமூகம் ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறை சார்ந்த சமூகமாகும். ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கையை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறையை பின்பற்றும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது.

ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கை, தரீக்கா வழி முறை தொடர்பான பிழையான விளக்கங்கள், அடையாளப்படுத்தல்கள் அண்மைக்காலமாக  சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஸூபிஸம் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகப் பகுதியாகும். இது உள்ளம் சம்பந்தப்பட்ட ஆன்மீக வழிமுறையாகும். உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனை அறிதல், அவனை வணங்குதல், அவற்றின் மூலம் அவனை அடைவதற்கான வழிகாட்டல்களை அது வழங்குகின்றது.

இஸ்லாமிய ஸூபித்துவ வழிமுறை மனிதனில் இயல்பாக அமைந்துள்ள தீய எண்ணங்களான  கோபம், பொறாமை, வஞ்சகம், வேற்றுமை, கொலை, கொள்ளை, இனவேறுபாடு போன்றவற்றைக் களைந்து, கறைபடிந்த உள்ளத்தை இறையறிவினால் பரிசுத்தப்படுத்தி இறைவனுடன் அவனைச் சேர்த்து வைப்பதற்கான போதனைகளை வழங்குகிறது.

தரீக்கா என்பது நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இன்றுவரை வழிவழியாக ஸூபிஸ அறிவு போதிக்கப்பட்டு வரும் வழி முறையாகும்.

உலகளாவிய ரீதியில் தரீக்காக்கள் இஸ்லாமிய ஆன்மீகக் கல்வியை போதிக்கின்றன. இன்று உலக முஸ்லிம்களுக்கு மிக அவசியமானது ஸூபிஸ அறிவும், தரீக்கா வழிமுறையுமாகும்.

Jan 23, 2016

றஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”, கௌதுல் அஃழம்” ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!

- மௌலவி – HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள்-
தொடர் -- 01

வலீ என்றால் யார்? 
“வலீ” என்றால் அதிகாரி என்று பொருளாகும். இதன் பன்மைச் சொல் “அவ்லியாஉ” (அதிகாரிகள்) என்பதாகும். இதன்படி ‘வலியுல்லாஹ்’ என்றால் அல்லாஹ்வின் அதிகாரி என்றும் “அவ்லியாஉல்லாஹ்” என்றால் அல்லாஹ்வின் அதிகாரிகள் என்றும் பொருள் வரும். 

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதாயின் அப்பெண்ணின் தந்தை / சிறிய – மூத்த தந்தையர் / சகோதரன் வலீகாரன் ஆகின்றான். இவனே அப்பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியாகின்றான். 

வலீ என்பவரின் அதிகாரம் எது? 
இதன்படி “வலியுல்லாஹ்” அல்லாஹ்வின் அதிகாரி என்பவர் எதற்கு அதிகாரம் வழங்கப்பட்டவர் என்ற கேள்வி எழுகின்றது. 

Jan 21, 2016

سطور عن الإمام منصور الحلاج

وفي تاريخ ابن خلكان إنّ بعض أصحاب الحلاّج إدّعوا أنّهم رأوه يوم قتله - بعد قتله - وهو راكب على حمار فى طريق النَّهْرُوَان، وأنّه قال لهم ”لعلّكم تظنّون أنّي المضـروب المقتول“، وكان سبب قتله أنّه جرى منه كلام فى مجلس حامد بن العبّاس وزير المقتدر بالله، فأفتى القُضاة والعلماء بإباحة دمه، فَرَسَم المقتدر بتسليمه إلى محمد بن عبد الصمد صاحب الشـرطة، فتسلّمه بعد العشاء خوفا من العامّة أن تنزعه من يده، ثمّ أخرجه يوم الثلاثاء لِسِتٍّ بَقِيْنَ من ذي القعدة سنة تسع وثلاثمأة عند باب الطّاق، واجتمع عليه خلق كثير وأمر به،  فضـربه الجلاّد ألف سَوط، فما استعفى ولاتأوّه، ثمّ قطع أطرافه الأربعة وهو ساكن لا يضطرب، ثمّ هُزّ رأسه وأحرقت جثّته وألقي رمادها فى دَجْلَةَ، ونصب الرأس ببغداد، ثم حُمِل وطيف به فى النّواحي والبلاد، وجعل أصحابه يعدّون أنفسهم برجوعه بعد أربعين يوما، واتّفق أن زادت دجلة تلك السّنة زيادة وافرة، فادّعى أصحابه أنّ ذلك بسبب إلقاء رماده فيها، وادّعى بعض أصحابه أنّه لم يقتل وإنّما ألقي شبهه عند قتله على عدوّ له، ولمّا أخرج ليقتل انشد قائلا،

       طَلَبْتُ الْمُـسْتَقَرَّ بِكُلِّ أَرْضٍ        ***         فَـلَمْ اَرَلِـيْ بِأَرْضٍ مُسْتَقَرًّا 
       أَطَعْتُ مَطَامِعِيْ فَاسْتَعْبَدَتْنِيْ       ***         وَلَوْ أَنّي قَـنَعْتُ لَكنت حُرًّا

ويحكى أنّ الحلّاج أنشد عنه قتله :   

        لَمْ أسلم النّفس للاسقام تتلفها        ***           إلّا لعلمي بأنّ الموت يشفيها 
        ونظرة منك يا سـؤلي ويا أملي       ***         اَشهى إليّ من الدنيا وما فيها 
        نفس المحبّ على الآلام صابرة       ***           لــعلّ متلـفها يوما يداويها

وكان الحلّاج قد صحب الجنيد ووقع بينه وبين الشبلي وغيره من مشائخ الصّوفيّة رحمة الله عليهم أجمعين،

Jan 18, 2016

وحدة الوجود هل هي عين التّوحيد أو هي غير التّوحيد ؟

يزعم بعض العلماء والمشائخ القاصرين فى العلوم والمعارف والعقيدة الإسلاميّة ”أنّ وحدة الوجود شيئ ، والتّوحيد شيئ آخر مخالف لها - لوحدة الوجود -، ويقول هؤلاء إنّ التّوحيد هو الإسلام، وإنّ وحدة الوجود مخالفة له - للتّوحيد - كفر صريح، وهؤلاء هم المخطئون فى العقيدة، لاالمصيبون فيها، ولو كانوا أساتيذ المدارس والكلّيّات ومشائخ الطرائق ورؤساء الجمعيات، وهم أطفال على مهد العقيدة الإسلامية، أو صبيان يلعبون بالكرة - كرة العقيدة فى ميدان العقيدة العرفانيّة،

وأمّا العلماء والمشائخ المحقّقون فى العلوم والمعارف والعقائد الإسلاميّة فهم أمناء وخلصاء، وهم المصيبون،  يقولون ”إنّ وحدة الوجود والتّوحيد شيئ واحد باعتبار الخلاصة والمعنى المقصود، لاباعتبار الأسماء والألفاظ، ولافرق بينهما إلاّ فى صورة الألفاظ وأشكالها، والعصارة المأخوذة منهما واحدة، (وهي أنّ الله هو الوجود الحقيقيّ  وأنّ ماسواه عدم محض،) فعلى العاقل ألاّ يغترّ باللّباس، وألاّ يغترّ بالأسماء والألفاظ،“

وأمّا وحدة الوجود فهي العلم بأنّ وجود الله تعالى واحد، لا كثيرة فيه ولاتعدّد، وأنّ ماسوى وجوده عدم محض، فلا وجود لخلق من مخلوقاته إلاّ من حيث الإعتبار والإضافة والوهم، فلذا قال الصوفيّون ”إنّ وجود الخلق اعتباريّ وإضافي ووهميّ، ولاوجود له حقيقي مستقلّ،

Jan 12, 2016

விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞ்ஞான மேதை முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்கள்

அவ்லியாக்களின் அகமியம் 
மக்களை நன்மையின் பக்கம் அழைத்து நன்மையை ஏவி தீயதை தவிர்த்து நடக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம் அவர்கள் தான் வெற்றி அடைந்தவர்கள். (அல்-குர்ஆன்) 

அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு பயமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன்) 

மேற்படி இரண்டு இறை வசனங்களும், இவ்வுலகத்தில் ஒரு கூட்டத்தினர் இருப்பதாகவும், அவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் எனவும், அவர்களுக்கு பயமோ, கவலையோ ஏற்படுவதில்லை. ஆனால் மேற்கூறிய இரண்டாவது திருமறை வசனத்தில் அவ்லியாக்களுக்கும் பயமும், கவலையும் இல்லை என இறைவனே கூறுகின்றான். எனவே அவ்லியாக்கள் எனப்படும் கூட்டத்தினர் அல்லாஹ்வை அறிந்து அவனில் அழிந்தவர்கள் என்பது ​​​தெளிவாகின்றது. 

Jan 7, 2016

முஹ்யித்தீன் முத்துமணி மாலை

Jan 6, 2016

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 12




அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு 
பறகத் பெறுதல்.

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த உமிழ் நீர் கொண்டும், அவர்களின் அருட் கரங்கள் கொண்டும், அவர்களின் பிரார்த்தனை கொண்டும் அருள் பெறுபவர்களில் மிக விஷேடமானவர்கள் ஸெய்யிதுல் முபஸ்ஸிரீன் அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.

இவர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் காலத்தில் பிறந்தவர்கள். அண்ணலின் அருளை பல வழிகளிலும் பெற்ற ஓர் ஸஹாபிதோழர். இதன் காரணத்தினால் அறிவுக்கடலாகத் திகழ்ந்தார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். ஸெய்யிதுல் முபஸ்ஸிரீன் என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்கள்.

அண்ணலெம் பெருமான் அன்னவர்கள் மக்கஹ் முகர்றமஹ்விலிருக்கும் போது இவர்கள் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றிலிருக்கும் போதே அண்ணலவர்கள் தங்களின் மறைவான ஞானத்தின் மூலம் அக்குழந்தை ஆண்குழந்தை என்பதை அறிந்து கொண்டார்கள்.

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “ஹிஜ்ர் இஸ்மாயீல்” என்ற இடத்தில் அமர்ந்திருக்கும் போது அவர்களருகில் சென்ற அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் தாய் உம்முல் பழ்ல் றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்களையழைத்து “உம்முல் பழ்லே! நீங்கள் ஓர் ஆண்குழந்தையை சுமந்திருக்கிறீர்கள். அக்குழந்தையை நீங்கள் பெற்றெடுத்தால் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்ற சுபச் செய்தியை கூறினார்கள்.

ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தங்களின் தாயின் வயிற்றிலிருக்கும் போதே அண்ணலெம் பெருமானின் அருட் பார்வையப் பெற்றுக் கொண்ட ஓர் ஸஹாபீ. அண்ணலெம் பெருமானின் நெருங்கிய குடும்ப உறவினராகவும் இவர்கள் திகழ்ந்தார்கள். காரணம் அண்ணலாரின் சாச்சா ஸெய்யிதுனா அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் புதல்வர் இவர்கள்.

Jan 5, 2016

கலிமஹ் கானம்