Sep 28, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 09

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்.

அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடியில் மாத்திரமல்ல அவர்களுடன் தொடர்புடைய அனைத்திலும் பறகத்அருள் உண்டு என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் ஏகோபித்த கருத்தாகும். இதனாற்றான் கண்ணியமிக்க ஸஹாபஹ்தோழர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புடைய அனைத்தைக் கொண்டும் பறகத்அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அண்ணலின் தோழர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

Sep 26, 2015

ஏத்துக்கால் கடற்கரையில் கந்தூரி

புதிய காத்தான்குடி ஜெய்லானி ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்கள் பெயரிலான மௌலித் நிகழ்வு ஒன்றை 26.09.2015 சனிக்கிழமை பின்னேரம் ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பான இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட உஸ்தாத்மார்கள், மௌலவீமார்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் முஹ்யித்தீன் மௌலித் ஓதி, கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களின் பொருட்டு கொண்டு மீனவர்கள், அப்பிரதேச வாசிகள் வாழ்வில் செல்வமும், அருளும் வேண்டி  துஆப்பிரார்த்தனை செய்யப்பட்டது.

27.09.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கந்தூரி நார்ஷா வழங்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும்.

Sep 25, 2015

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்

இஸ்லாமிய வரலாற்றில் பல படிப்பினைகளை எடுத்துக் கூறும் ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் நிகழ்வுகள் 24.09.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அந்நிகழ்வுகளின் தொகுப்பு...

Sep 23, 2015

Sep 22, 2015

இலவச நூல்கள் வெளியீடு

2015 “ஈத் முபாறக்” நல்வாழத்துக்கள்

இலவச நூல்கள் வெளியீடு
-------------------------------------------

மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களால் எழுதப்பட்ட


# வஹ்ததுல் வுஜூத் பற்றிய சந்தேக நிவர்த்தி
( வினா - விடை விருந்து)


# தவ்ஹீத் வரலாற்றில் நிகழ்ந்த உண்மைக் கதைகள்

24.09.2015 அன்று பெருநாள் குத்பஹ்வின் பின் எதிர்பாருங்கள்


அஷ்ஷுப்பான் ஏற்பாட்டுக் குழு

புனித அறபா நாள் !

மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம் - மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்

சங்கையான மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும்.


அல்லாஹ் அல்குர்ஆனில் சங்கையான மாதங்கள் குறித்து குறிப்பிடும்போது..

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌  ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சங்கையான அந்நான்கு மாதங்களாவன, “துல் கஃதா, துல்ஹஜ், முஹர்றம், றஜப்,” ஆகியனவாகும்.

Sep 21, 2015

ஹஜ் வணக்கத்தின் அடிப்படை




“ஹஜ் வணக்கத்தின் சிறப்புக்களும் கடமைகளின் அர்த்தங்களும்”
மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர்  அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05
புனித இஸ்லாத்தின் கடமைகளில் ஐந்தாவதும் இறுதியுமான கடமையே ஹஜ் கடமையாகும்இக் கடமை உடற்பலம்பணப்பலம் உள்ளவர்களுக்கே கடமையாகும்இஸ்லாமிய ஏனைய கடமைகளான தொழுகைஸகாத்நோன்பு ஆகியவற்றை தான் வதியும் இடத்தில் இருந்தவாறே செய்துகொள்ள முடியும்ஆனால் ஹஜ் கடமை இதற்கு மாறானதாகும்ஹஜ் மையைச் செய்வதாயின் மக்கா சென்றே செய்ய முடியும்.

ஹஜ் கடமையின் சிறப்புக்கள் அனந்தம். அவற்றில் சிலதை இங்கு குறிப்பிடுகின்றேன்.

Sep 19, 2015

பெயர் எதுவாயிருந்தால் என்ன?


ஆக்கம் - மௌலவீ பிலால் றப்பானீ
தூய மனதோடும் பரவலான, பாரபட்சமற்ற கண்ணோட்டத்தோடும் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு வஹ்ததுல் வுஜூத்என்ற வசனம் உணர்த்துகின்ற தத்துவமும், “தவ்ஹீத்என்ற சொல் உணர்த்துகின்ற தத்துவமும் ஒன்றேதான்றி இரண்டும் வேறானதல்ல. என்ற உண்மை தெளிவாகும்.

வஹ்ததுல் என்ற வசனம் யாரால்? என்ன கருத்தைக் கருவாகக் கொண்டு? எப்போது சொல்லப்பட்டது? அறிமுகம் செய்யப்பட்டது என்ற விடயங்களில் வாதப் பிரதிவாதம் செய்பவர்கள் அதிலேயே காலம் கழிக்காமல் அந்த வசனம் உணர்த்துகின்ற தத்துவம் சரியானதா? பிழையானதா? அத்தத்துவத்திற்கும், “தவ்ஹீத்என்ற சொல் தருகின்ற தத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்? என்ற விபரங்களை தாமும் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை எட்டி வைக்க முன்வர வேண்டும்.

Sep 15, 2015

திக்ர் மஜ்லிஸ்களில் ஆடி, அசைவது கூடுமா?

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله عن رقص الصّوفيّة عند تواجدهم. هل له أصل؟
فأجاب بقوله: نعم له أصل، فقد روي فى الحديث أنّ جعفربن أبي طالب رضي الله عنه رقص بين يدي النّبيّ صلّى الله عليه وسلّم لمّا قال له أشبهتَ خلقي وخلُقي. وذلك من لذّة هذا الخطاب، ولم ينكر عليه صلّى الله عليه وسلّم، وقد صحّ القيام والرّقص فى مجالس الذّكر والسّماع عن جماعة من أكابر الأئمّة. منهم عزّ الدّين شيخ الإسلام ابن عبد السّلام. 
(الفتاوى الحد يثية صفحة 217)

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மாபெரும் அறிஞர் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களிடம் ஸூபிஸ ஞானிகளுக்கு இறை காதல் ஏற்படும் வேளையில் அவர்கள் நடனமாடுவது தொடர்பாக அதற்கு மார்க்கத்தில் இடமுண்டா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்கப்பட்டது. 

அவர்கள் சொன்ன பதில் –
ஆம். அதற்கு ஆதாரம் உண்டு. ஸெய்யிதுனா ஜஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்கள் தோற்றத்திலும், பண்பிலும் என் போன்று உள்ளீர் என்று சொன்ன போது அவர்களுக்கு முன்னாலேயே ஜஃபர் அவர்கள் நடனமாடினார்கள். அவர்கள் இவ்வாறு செய்தது நபீயவர்களின் மகிழ்ச்சியான செய்தி கேட்டதினாலாகும். நபீ பெருமான் அவர்களின் அச்செயலை – நடனத்தை – நேரில் கண்டும் கூட எந்த மறுப்பும் கூறவில்லை. 

Sep 13, 2015

“தரீகா”வின் “றூஹ்” உயிர் எது என்று தெரியாத “தரீகா”வாதிகள்

ஒருஷெய்குஞான குருவிடம்பைஅத்என்ற ஞானதீட்சை பெற்று அவரின்முரீத்ஆன்மீக மாணவனாக வாழ விரும்பும் ஒருவர் முதலில் தனக்கு விருப்பமான குருவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

குருவாக தெரிவு செய்யப்படுபவர் (ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத்) முதலான நான்கு வகை அறிவிலும்கமாலிய்யத்பெற்றவராக இருத்தல் வேண்டும்நிறைந்த அறிவுள்ளராக இருத்தல் வேண்டும்.

முரீத்சிஷ்யனின் ஆன்மீக நாடி பிடித்து அவனின் உள நோய்களுக்கான மருந்து வளங்குபவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

குருமாரில் இருவகையுண்டு. ஒருவர்விலாயத்என்ற ஒலித்தனம் பெற்றவராகவும், ஆன்மீகத்தை சீர் குலைக்கும் நோய்களுக்கேற்ற மருந்துகள் வழங்கி தனது சிஷ்யனை பக்குவப்படுத்துவராகவும் இருப்பார்.
இவர்ஷெய்குத் தர்பியத் شيخ التربية  சிஷ்யனை வளர்க்கும் குரு என்று அழைக்கப்படுவார்.

Sep 12, 2015

குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸ்

குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், ஸெய்யிதுஷ் ஷெய்கு அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக கடந்த 11.09.2015 வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது.
அன்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் மௌலித் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீக சொற்பொழிவும் நடைபெற்றது. 
இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Sep 11, 2015

அல் இல்ஹாமாதுஸ் ஸனிய்யா - பீ - ஷுறூஹில் வளீபதிஷ் ஷாதுலிய்யா

الإلـهامات السّنيّة فى شروح الوظيفة الشّاذليّة


இதன் கீழ் எழுதப்பட்டுள்ள “ஸலவாத்” “அஸ்ஸலவாதுல் மஷீஷிய்யா” அல்லது “அஸ்ஸலவாதுல் மிஷ்ஷீஷிய்யா” என்று சொல்லப்படும். “வளீபா” என்பது இதில் அடங்கும்.

இந்த  “ஸலவாத்” அல் ஆரிபுர் றப்பானீ, அல்குத்புல் பர்தானீ, அல் வாரிதுல் முஹம்மதிய்யு, அல் முர்ஷிதுல் காமில், அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்கு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் “றஹிமஹுல்லாஹ்” அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும்.

இவர்கள் ஹிஜ்ரீ 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த “குத்புஸ்ஸமான்” ஆவார்கள். ஹிஜ்ரீ 622ல் “ஷஹீத்” ஆக்கப்பட்டார்கள். 

ஷாதுலிய்யா “தரீகா”ஹ்வின்  மூலவர். அல்குத்புல் அக்பர் ஸெய்யிதுனா அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ “றஹிமஹுல்லாஹ்” அவர்களின் ஆன்மீகக் குரு - ஷெய்கு - இவர்கள்தான்.

Sep 7, 2015

“லெப்பை”யா? லெவ்வையா?

லெப்பைஎன்ற சொல்லை முன்னோர்கள்லெவ்வைஎன்றும் மொழிவதுண்டு. அஹ்மத் லெப்பைஅஹ்மத் லெவ்வை என்பன போன்று 

இச்சொல் இலங்கை நாட்டு மக்களின் வழக்கத்தில் மௌலவியல்லாத, ஆனால் திருக்குர்ஆன் ஓத, ஓதிக் கொடுக்கத் தெரிந்த, மௌலித், கத்ம், பாதிஹா போன்றவை ஓதத் தெரிந்த, ஊதிப் பார்க்க, தண்ணீர் ஓத, தாயத்துஇஸ்ம்கட்டத் தெரிந்த ஒருவர்லெப்பைஎன்று அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

கொள்கை விளக்கக் கருத்தரங்கு 2ம் கட்டம்

மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்ற கொள்கை விளக்கக் கருத்தரங்கு 02ம் கட்டமாக சுன்னத் வல் ஜமாஅத் சமூகத்தில் வாழ்கின்ற பெண்களுக்கான செயலமர்வாக 06.09.2015 (ஞாயிற்றுக்கிமை) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 02.00 மணி வரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Sep 5, 2015

வஹ்ஹாபிகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்!

ஆக்கம் : மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ

இஸ்லாத்தை அதன் தூயவடிவில் எடுத்துக் காட்டுகிறோம் என்று பாமர மக்கள் மத்தியில் தங்களை அலங்கரித்து, இஸ்லாமியன் என்று உடை அணிந்து, இஸ்லாமியர்கள் வாழும் இடங்களில் தங்களது குடியிருப்புக்களையும் அமைத்துக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேர் கொள்கைகளை சிதைக்க யூத, காபிர்களால் மறைமுகமாக நிறுவப்பட்ட கொள்கையேவஹ்ஹாபிஸம்என்ற ஓர் கொள்கையாகும். இதைப் பின்பற்றுவோரைவஹ்ஹாபியர்கள்என்று நாம் சொல்கின்றோம்.

இக்கொள்கை ஹிஜ்ரி 661ல் பிறந்த இப்னுதைமிய்யா என்பவனால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் ஹிஜ்ரி 1111ல் பிறந்து தன்னை இஸ்லாமியன் எனக் காட்டிக் கொண்ட முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவனால் வளர்க்கப்பட்டு பிரபல்யமாகத் தொடங்கியதனால் அந்த அயோக்கியனின் முழுப்பெயரில் உள்ளவஹ்ஹாப்என்ற பெயரை மையமாகக் வைத்துக் கொண்டு இக்கொள்கைவஹ்ஹாபிஸம்என்றும் இக் கொள்கையைப் பின்பற்றுவோர்வஹ்ஹாபியர்கள்என்றும் அழைக்கப்படுகின்றனர்.