Mar 27, 2016

அல்லாஹ் எம்முடனும், ஏனைய சிருஷ்டிகளுடனும் தனது “தாத்” உள்ளமையோடு இருக்கின்றான் என்று நம்புதல் கடமையாகும்.

அஷ்ஷெய்கு இப்றாஹீம் மவாஹீபீ அஷ்ஷாதுலீ அவர்கள், அல்லாஹ் நம்மோடு தனது “தாத்” உள்ளமையோடும், “ஸிபாத்” என்ற தன்மைகளோடுமே உள்ளான் என்றும், இதற்கு ஆதாரம் “அல்லாஹ் உங்களோடு உள்ளான்” என்ற வசனமேயாகும் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ் என்ற பெயர்ச் சொல் அவனின் “தாத்” உள்ளமையின் பெயர் என்பது அறியப்பட்ட விடயமாகையால் அல்லாஹ் தனது உள்ளமையான “தாத்” உடனேயே உள்ளான் என்று நம்புதல் - விசுவாசம் கொள்ளுதல் - அவசியமாகும். இந்த உண்மை சுருதிப் பிரமாணங்கள் கொண்டும், யுக்திப் பிரமாணங்கள் கொண்டும் நிறுவப்பட்ட விடயாமதலால் புத்தி அடிப்படையிலும், அனுபவ அடிப்படையிலும் இவ்வாறே நம்புதல் வேண்டும்.

Mar 24, 2016

“பனா” அழிதலின் நிலை

يقول الامام النّووي رحمه الله : روينا في صحيحي البخاري ومسلم ، عن ابي قتادة رضي الله عنه في حديثه الطّويل العظيم المشتمل على معجزات متعدّدات لرسول الله صلّى الله عليه وسلّم قال : فبينا رسول الله صلّى الله عليه وسلّم يسير حتّى ابهارَّ اللّيلُ  وأنا إلى جنبه، فَنَعَسَ رسول الله صلّى الله عليه وسلّم فمال عن راحلته، فأتيتُه فدَعَّمتُه من غير أن أوقظه حتّى اعتدل على راحلته، ثمّ سار حتّى تهوَّر اللّيلُ مال عن راحلته، فدعَّمتُه من غير ان أوقظه حتّى اعتدل على راحلته،ثمّ سار حتّى إذا كان آخر السّحر مال ميلة هي أشدّ من المَيْلَتَيْنِ الأولتين حتّى كاد ينفجل، فأتيته فدعَّمتُه، فرفع رأسه فقال : من هذا ؟ قلت أبو قتادة، قال 'متى كان هذا مسيرك منّي؟ قلت ما زال هذا مسيري منذ الليلة، قال حفظك الله بما حفظت به نبيّه '

)اِبْهَارَّ  بوصل الهمزة وإسكان الباء الموحّدة وتشديد الرّاء ومعناه إنتصف، وقوله تهوَّرَ أي ذهب معظمه، وانفجل بالجيم: سقط، ودعّمتُه أسندته (

அபூ கதாதஹ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ள நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பல அற்புதங்களை உள்ளடக்கிய நீண்ட ஹதீதில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் செய்தார்கள். நான் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தேன். நள்ளிரவு வரை பயணம் தொடர்ந்தது. நபீ அவர்கள் சிறிது தூங்கி ஒட்டகத்திலிருந்து சாய்ந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் சென்று அவர்களின் தூக்கம் கலைந்து விடாமல் அவர்களை ஒட்டகத்தில் நிமிர்த்தி சாய்த்து வைத்தேன். இரவின் பெரும் பகுதி செல்லும் வரை பயணித்தார்கள். அப்போதும் ஒட்டகத்திலிருந்து சாய்ந்தார்கள். அவர்களின் தூக்கம் கலைந்து விடாத வகையில் அவர்களை நிமிர்த்தி வைத்தேன்.  அவர்கள் இரவின் கடைசி (விடியும்) வரை பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போதும் முதல் இரு தரம் சாய்ந்ததை விட அதிகமாகச் சாய்ந்தார்கள். அதாவது தரையில் விழுமளவு சாய்ந்தார்கள். முன்னர் செய்தது போல் நான் அவர்களை நிமிர்த்தி வைத்தேன். அப்போது தலையை உயர்த்திய நபீ அவர்கள், இது யார்? (நீ யார்?) என்று கேட்டார்கள். நான் அபூ கதாதஹ் என்றேன். நீ எப்போதிருந்து என்னுடன் பயணிக்கின்றாய்? என்று கேட்டார்கள். நான் இரவெல்லாம் உங்களுடனேயே இருக்கின்றேன் என்றேன். எது கொண்டு அல்லாஹ்வின் நபீயை நீ பாதுகாத்தாயோ அது கொண்டு உன்னையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! என்று கூறினார்கள்.)

(புகாரீ, முஸ்லிம், அத்காருன் நவவீ பக்கம்- 252)

Mar 21, 2016

68வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரியும், மிஸ்பாஹீ கௌரவிப்பு நிகழ்வும்

இந்தியா - தமிழ் நாடு நாஹூர் ஷரீபில் ஆட்சி செய்யும் எஜமான், பாதுஷா, குத்புல் மஜீத், ஷாஹே மீரான், ஷாஹுல் ஹமீத், பர்துல் வஹீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 68வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரியும், கம்பம் நகரில் பள்ளிகொண்டுள்ள அஸ்ஸெய்யித் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களினதும், அன்னாரின் அருட் தந்தை றாவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 18,19,20.03.2016 ஆகிய தினங்களில்  (மூன்று நாட்கள்) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மூன்று நாள் நிகழ்வுகளி்ல் ஆரம்பமாக முப்பெரு வலீமார்கள் பெயரிலான திருக்கொடியேற்றமும்,  கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும், மீரான் ஸாஹிப் மௌலித், முறாதிய்யஹ் பைத், அம்பா நாயகம் மௌலித், கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன. மூன்று தினங்களும் இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய உலமாஉகளால் சன்மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்றது.
























இறுதித்தினமான கந்தூரி தினமன்று இஷா தொழுகையின் பின் விஷேட நிகழ்வாக, இந்தியா வடநாட்டில் முபாறக்பூரில் அமைந்திருக்கும் அல் ஜாமிஅதுல் அஷ்றபிய்யஹ் மிஸ்பாஹுல் உலூம் கலாபீடத்தில் ஹதீஸ் துறையில் மிஸ்பாஹீ பட்டம் பெற்று ஆலிமாக நாடு திரும்பிய சங்கைக்குரிய மௌலவீ MT.பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ, மிஸ்பாஹீ அன்னவர்களை கௌரவி்க்கும் நி்கழ்வு அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு அன்னாருக்கு பொன்னாடைகளும், கௌரவ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.














இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் நிறைவினைத் தொடர்ந்து இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்

Mar 19, 2016

30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம்

கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம் 16.03.2016ம் திகதி அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Mar 16, 2016

ஊடக அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் 

காத்தான்குடி - 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த  யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம்.

Mar 10, 2016

மாணிக்கப்பூர் தந்த மாபெரும் மார்க்க ஞானி சங்கைமிகு ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள்

ஆக்கம- MIM. அன்ஸார் ஆசிரியர்


இறை அதிகாரிகள்

உமது இறைவன் புவியில்நிழலை எவ்வாறு பரப்பியிருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (20:45)

பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? (78:06:7)

மேற்படி இரு திருமறை வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளநிழல்”, “மலைகள்என்பவை இறைவனால் நிறைவேற்று அதிகாரமளிக்கப்பட்ட அவ்லியாக்களையே குறிக்கும் என்பது மெய்ஞ்ஞானிகளின் கூற்றாகும் எமது பூமியெங்கும்நிழல் எவ்வாறு பரம்பி இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ்வுடைய அவ்லியாக்களும் இப்பூமியெங்கும் பரந்து நிரம்பி இருக்கின்றார்கள் .

Mar 6, 2016

ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா

- ஷெய்குனா மிஸ்பாஹீ -

1964ம் ஆண்டு நானும், அட்டாளைச்சேனை அஸ்ஸெய்யித் மௌலவீ  அஸ்ஸெய்யித் மௌலானா அவர்களும் பாணந்துறை தீனிய்யா அறபுக்கல்லூரியில் சங்கைக்குரிய மர்ஹும் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் முப்தி பலகீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்கொண்டிருந்தோம்.

ஒரு நாள் நாங்கள் இருவரும் வெளிகாமம் அல்லாமா ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்திப்பதற்காக வெளிகாமம் சென்றோம்.

ஞான ஜோதி அவர்கள் எங்களை விசாரித்த பின் இருவரையும் அமரச்செய்து தேனீர் தந்து உபசரித்து விட்டு எதற்காக என்னைச் சந்திக்க வந்தீர்கள் என்று வினவினார்கள்.

Mar 2, 2016

أيّ فرق بين القائل بكفر وحدة الوجود وبقتل القائلين بها وبين رجل موصوف بالأوصاف الآتية؟


وأمّا القول بقتل القائلين بوحدة الوجود فهو كقول رجل يدور الشّوارع والطّرق وعلى عاتقه ورأسه أثواب وسخة خَلِقَة، وبيده خشبة طويلة، ويتكلّم بكلمات لا تناسب ما قبلها ما بعدها، ويرفع صوته بكلمات لا معنى لها في أيّة لغة من اللّغات، ويشتم المارّين في الطّريق، وورائه صبيان يرمونه بالأحجار والبيضات،


وأمّا هذا القائل فلا يلتفت إليه ولا يعتدّبه ولا بكلامه، ولوكان القائل هكذا سيّدا أو شيخا هرما أو شيخا يبايع النّاس أو أستاذا صوفيّا أو مدرّسا مرجوما أو جنديّا أو هنديّا، لأنّ قوله ”بقتل القائلين بوحدة الوجود “ قول ضائع مخالف للكتاب والسنّة، ولأقوال الأولياء العارفين بالله والفانين في الله، كالشّيخ الأكبر محي الدّين ابن عربي والشّيخ عبد الكريم الجيلي والشّيخ عبد القادر الجيلاني والشّيخ تاج الدّين عطاء الله الإسكندري والسيّد الشّيخ زين العابدين من أهل بيت رسول الله صلّى الله عليه وسلّم والشّيخ حجّة الإسلام محمّد الغزّالي والشّيخ عبد الوهّاب الشّعراني وأمثالهم ، رضي الله عنهم،