Dec 24, 2012

இஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) 
(Justice of The Peace Whole Island)

“கத்தம்” என்ற சொல் “கத்ம்” அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.  இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்”  என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்” நிகழ்வு என்றும், திருக்குர்ஆன் “தமாம் நிகழ்வு என்றும் சொல்லப்படுகிறது.

கத்ம் ஓதுதல் பித்அத்த அல்ல
இறந்தவர்களுக்கு கத்ம் ஓதும் வழக்கம் நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட காரியம் அல்ல. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் ஸஹாபாக்கள்,தாபியீன்கள் காலத்திலும் நடைபெற்றுவந்த ஸுன்னத்தான விடயமாகும்.இந்தவிடயம் தற்காலத்தில் “பித்அத் என சிலரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.ஆனால் இறந்தவர்களுக்கு கத்ம் ஓதுவதற்கு தெளிவான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் சிலதைமட்டும் இங்கு தருகின்றேன்.
"إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره، وليقرأ عند رأسه بفاتحة الكتاب وعند رجليه بخاتمة البقرة في قبره
والطبراني (12/444 رقم 13613) والبيهقي في الشعب (7/16 رقم9294)

Dec 11, 2012

வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

தொடர்- 04 ...

சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்- 

வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபை அவரது சகோதரர் சுலைமானே நிராகரித்தார்! 

வேசத்தைப் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை வழிகேடர்கள் வலை விரித்துக் கொண்டேயிருப்பர். 

இன்னொரு தடவை அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடந்தது. 

சுலைமான் தனது சகோதரான வழிகேடன் முஹம்மதிடம் “றமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவும் எத்தனை பேர்களை நரகில் இருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான் என்று கேட்டார். அதற்கும் வழிகேடன் முஹம்மத் “இறுதி இரவுக்கு முந்திய இரவுகளிலெல்லாம் அவன் விடுதலை செய்த மொத்த தொகைக்கு சமனான தொகையினரை விடுதலை செய்கின்றான் என சரியான பதிலையே கூறினான். 

Nov 28, 2012

நினைவுதின நிகழ்வு


இந்தியாவின் தமிழ் நாட்டின் பாசிப்பட்டணம் எனும் ஊரில் கொழுவீற்றிருந்து பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் செய்யிதினா பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் அன்னாரின் அருமைத் தகப்பனார் ஷெய்ஹு முஹம்மத் (றாவுத்தர் ஸாஹிப் மௌலானா) அன்னவர்களினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் 28.11.2012 அன்று நடைபெற்ற அவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளைம், இப்புனித மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்டு ஆத்மீக உரை நிகழ்த்திய சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களையும், தபர்றுக் விநியோகத்திற்காக தயாராகும் சோறு சமையல் பகுதியையும், சங்கை மிகு வலீமார்களின் அருள் வேண்டி இம்மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்ட முஹிப்பீன்களையும் படத்தில் காணலாம்.

Nov 26, 2012

முஹர்றம் நிகழ்வுகள் - ஹிஜ்ரி 1434

பெருமானார் பேரர் செய்யிதுனா ஹுஸைன் ஸஹீதே கர்பலா அவர்களின் மௌலிது ஹஸனைன் மௌலித் நிகழ்வுகள் எமது காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 15.11.2012 அன்று ஆரம்பமாகி இஷாத் தொழுகையின் பின்னர் புனித மௌலித் ஷரீப் ஓதப்பட்டு 24.11.2012 அன்று நிறைவுபெற்றது.



Nov 24, 2012

நிதி கையளிக்கும் நிகழ்வு

சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் HMM. மஸ்ஹுர் என்பவருக்காக அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட நிதி 2012.11.19 அன்று கையளிக்கப்பட்டது. இக்கையளிக்கும் நிகழ்வு தொடர்பான படங்கள் உள்ளே.... 

Nov 17, 2012

உதவித்தொகை வழங்கும் நிகழ்வு - 2012


வீட்டுத்திருத்தவேலை, மலசலகூடம் அமைத்தல், குடிநீர் பெறுதல் போன்ற தேவையுடைய 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் அதன் தவிசாளர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

Nov 8, 2012

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்


நமது சகோதரர் ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் என்பவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளது எனகொழும்பு Nawaloka வைத்தியசாலையில் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இரண்டு மாதகாலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சுமார் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவரது சிறுநீரகத்தை மாற்றுவதற்கும் அல்லாஹ்வின் உதவியால் இவர் உயிர்வாழ்வதற்கும் தங்களால் முடியுமான உதவிகள் செய்யுமாறு Shums media Unit சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக 



Oct 24, 2012

இறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!

-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி. 
HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)- 

இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம். நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும். 

அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை. 

Oct 12, 2012

வஸீலாத் தேடலாமா? --

(தொடர் 08......)

உலகில் யாரால் அல்லது எந்த வஸ்துவால் என்ன செயல் வெளியானாலும் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.

கத்தி வெட்டியது. நெருப்பு சுட்டது என்பதெல்லாம் மஜாஸ் அக்லீ என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.ஏனெனில் சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் நெருப்புக்கும், கத்திக்கும் உரியதல்ல. நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமதுமில்லை.

நெருப்புச் சுயமாகச் சுடும் என்று சொல்வதும் கத்தி சுயமாக வெட்டும் என்று சொல்வதும் அறியாமையாகும். நெருப்பு சுயமாக சுடுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களைச் சுட்டிருக்க வேண்டும்.

Aug 29, 2012

இஸ்லாத்தின் பார்வையில்ஓதிப்பார்த்தலும் தாயத்துகட்டுதலும்

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)-

யாருக்காவது நோய்ஏற்பட்டால், அல்லது கண்திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கரசத்தங்களைக் கேட்டோ பயந்தால் அதற்காக அல்குர்ஆனைக் கொண்டும் அல்லாஹ்வின் திரு நாமங்கள் கொண்டும்ஓதி ஊதிப்பார்த்தல், தண்ணீர் ஓதிக்கொடுத்தல், தாயத் – இஸ்ம் கட்டுதல் போன்றவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும்.

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில்

{وننزلمنالقرآنماهوشفاءورحمةللمؤمنين}
(الإسراء-82)

Aug 24, 2012

ஸுன்னத்தானதொழுகைகள்


தொடர் - 02
-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-
ஸலாத்துல்வுழூ:

வுழூச்செய்தபின் தொழும் தொழுகை' என்று இதற்குப் பெயர். வுழூ செய்தபின் வுழூவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப்பின்,

ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لوجدوا الله توّابا رحيما

என்ற ஆயத்தை ஓதி'அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று முறை கூறி 'குல்யாஅய்யுஹல்காபிரூன்' சூராவைஓதுவதும்

Aug 23, 2012

அறிவித்தல்

அல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள் பின்வரும் விபரப்படி நடைபெறும். இன்ஷா அல்லாஹ்...

23.08.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு -- கொடியேற்ற நிகழ்வு  

பி.ப 5.15 மணிக்கு -- கத்முல்குர்ஆன்

மஃரிப் தொழுகையின்பின் -- மௌலித் மஜ்லிஸ்

இஷாத்தொழுகையின்பின் -- பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை,
                                                              தபர்றுக்விநியோகம், ஸலவாத்   

மேற்படி நிகழ்வுகளில் கலந்து பெரிய ஆலிம் வலீ அவர்களின் பேரருளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய்வேண்டுகிறோம்.




Aug 17, 2012

கொடியேற்றுவது பற்றி இஸ்லாம்சொல்வதென்ன?

தொடர் .. 02
-மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP)
(சாமஸ்ரீ, தேசகீர்த்தி)

ஆன்மீகக் கொடிகள்:

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் கொடிக்குக் கொடுத்த முக்கியத்துவங்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன.

யுத்த வேளைகளில் கொடிகளை ஏந்தி தலைமை தாங்கிச் செல்வதிலும் அது கீழே விழுந்து விடக்கூடாது என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் மிகக் கரிசனையுடையவர்களாக இருந்துள்ளார்கள்.

Aug 14, 2012

முப்பெரு நாதாக்கள்

இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் பஹ்றுல் ஹகாஇகி வத்தகாஇக் . அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள்
அஷ்ஷெய்க் அகமது மீரான்“வெள்ளி ஆலிம்” (வலீ)அவர்கள் 
ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள்.

இலங்கையில் இஸ்லாமியப் பணிபுரிந்த பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணத்தின் கம்பெனியார் குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ.ஏ.கே. அகமது முஹ்யித்தீன், முகம்மது இப்றாஹீம் நாச்சி தம்பதியினருக்கு கடைசிக் குழந்தையாய் பிறந்தார்கள். 

Jul 31, 2012

கத்தார் நாட்டில் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு

அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பானது இலங்கை நாட்டில் கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக அறப் பணிகளிலும், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் முனைப்போடு செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

இவ் அமைப்பானது DSK/SS/42 இலக்கத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமாக இலங்கை அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒர் அங்கமாக எமது அங்கத்தவர்களால் எமது நாட்டு படைவீரர்களுக்காகவும் அரச வைத்தியசாலைகளுக்காகவும் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது.

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் 3,4ம் நாட்கள்

இதில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. சிறப்பாக எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பில் இணைந்த குர்ஆன் மத்ரஸாக்களில் அல்குர்ஆனைக் கற்றுமுடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும், 1979 ஆண்டிலிருந்து எம்முடன் இணைந்திருக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் விஷேட சிறப்புரையும் இடம்பெற்றது.
இவை தொடர்பான படங்கள் உள்ளே...

Jul 30, 2012

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி கொடியேற்ற நிகழ்வு

அஜ்மீர் அரசர் ஹஸ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அவர்களினதும் அவர்களின் புதல்வர் ஹஸ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழீ) 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.07.2012 புதன் கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது அல்ஹம்துலில்லாஹ்... இந்நிகழ்வுகளில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களும் பல்வேறு பிரமுகர்களும் பல்லாயிரம் முஹிப்பீன்களும் கலந்துகொண்டனர். 
இந்நிகழ்வுகள் தொடர்பான படங்கள் உள்ளே ....

Jul 1, 2012

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி

..கரீபே நவாஸ், அதாயே றஸுல், குத்புல் ஹிந்து ஹழுறத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும், அவர்களின் அருந்தவப்புதல்வர் ஸாஹிபுல் ஜலால் ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும் 26வது வருட உர்ஸே முபாறக் ஹாஜாஜீ மாகந்தூரியும் 12வது மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழாவும்..
மேலதிக விபரம் உள்ளே **

Jun 18, 2012

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம்

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்கான அலுவலகம் 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை புனித புர்தஹ் ஷரீப் மஜ்லிஸ் நிகழ்வின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் நிகழ்வுகளும் நடைபெற்றது.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11.07.2012 அன்று 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் நடைபெறும். 15.07.2012 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும்.

Jun 9, 2012

அற்புத வரலாறு

-மௌலவீ MTM. நஸ்றுத்தீன் றப்பானீ-

முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன். என்று கூறினான்.

Jun 7, 2012

கல்முனைக்குடி கந்தூரி நிகழ்வு....

கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், மற்றும் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகத்தினர் இணைந்து கரீபே நவாஸ், அதாயே றஸுல்,குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அன்னவர்கள் பெயரிலான பாரிய கந்தூரி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

11தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் தினம் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மஃரிப் தொழுகையின் பின் முஹிப்பீன்களால் மவ்லிது அதாஇர் றஸுல் ஓதப்பட்டது. இஷாத் தொழுகையின் பின் உலமாஉகளினால் பயான் நிகழ்த்தப்பட்டு, தபர்றுக் வழங்கப்பட்டது.

Jun 4, 2012

கவிதை....

அவ்லியாக்கள் என்றால் ........
-அபூ பஜ்ரி ஜலா-
வெற்றுக் கூட்டம்
ஒன்று
போடுது
பெரும் கோஷம்
அல்லாஹ்வின்
வலியென்றால்
யாரென்று
தெரியாமல்
அவர்களின்
அகமிய - நிலைதான்
புரியாமல்
* * * * * * *
அல்லாஹ்வை
அறிந்து
இறை நேசம் கொண்டு
பயம்
கவலை
அற்று
வாழும்
கலங்கரைவிளக்கங்கள்
அல்லாஹ்வின்
வலிமார்கள்

May 31, 2012

இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

மௌலவீKRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA(​Hons)

நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர்ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் உம்முபர்வா . அவர்கள் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸிமின் மகளாவார். காஸிம் என்பவர் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் மற்றொருமகன் அப்துர்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே உம்முபர்வாவை பெற்றெடுத்தார்கள். தமது குழந்தைக்கு பெயர்சூட்டுமாறு தம்தந்தை இமாம் ஜைனுல்ஆபிதீன் அவர்களை வேண்டினார்கள் இமாம் முஹம்மது பாகர் அவர்கள். அக்குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத்திருப் பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப்பெயரோடு சாதிக் என்னும் (உண்மையாளர்) என்றபெயரும் ஒருங்கிணைந்து உலகம்முழுவதும் பெயர்பெற்றது.

May 22, 2012

அல்-குர்ஆனின் நற்போதனைகள்

அபூ ஸுப்தீ
நல்லுபதேசம் செய்யுங்கள்
நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும் (51:55)


உண்மை பேசுங்கள்

அல்லாஹ்தலா சொன்னான், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழேசதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில்அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119)

அழகானதைப் பேசுங்கள்
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். (2:83)

May 20, 2012

35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்புனித ஸஹீஹுல் புஹாரீ ஷரீப் 18.05.2012 வௌ்ளிக்கிழமைஅஸ்ர் தொழு​​கையின் பின் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

May 16, 2012

கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின்
64வது வருட மா கந்தூரி


காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது.
3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை ஒதிமுடித்த 9 மாணவ மாணவிகக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

May 14, 2012

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஸலாத்துல்முஸாபிர்
(கஸ்ரு, ஜம்உ தொழுகை)
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ

ளுஹர்,அஸர், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர்.

'ளுஹர்- அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன.

May 6, 2012

ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click)
என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை
- ஏறும் கொடியும் ஈமான் பலமும் -

ஆழமறியாமல் காலை விட்டதேன்?
மதியன்பன் மதியிழந்ததேன்?
கவித்திலகம்
இவரது கவிதைக் கிறுக்கு
கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று
“ஜாஹில் மார்க்கம் பேசுவான்“
என்ற நபீ மொழி
இதற்குச் சான்று!

தம்புள்ள சாத்தான்
இவரது இதயத்துள்
புகுந்து கொண்டானோ.....?
அதனாற்றான் –
தர்காக்களை உடைக்க
உலமாக்களை அழைக்கிறார்.

Apr 26, 2012

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

ஜும்ஆ
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ
ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்றுபொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமைகள், நோயாளிகள், குழந்தைகள் பெண்கள் ஆகியோர் தவிர பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும்.

ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விஷேடமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத்தொழுகைக்கு உள்ளன.

கொடியேற்ற நிகழ்வு

கஜ்ஜேசவா ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்களின் பெயரிலான கொடியேற்ற நிகழ்வு 23.04.2012 திங்கட்கிழமை இஷாத் தொழுயைின் பின் காத்தான்குடி 06 அஸ்ஸெய்யிது முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் நடைபெற்றது. இதில் சங்கைக்குரிய ஷெய்கினா மிஸ்பாஹீ அவர்களும் ஏனைய உலமாக்களும் பொதுமக்களும் கந்துகொண்டனர்.

Apr 25, 2012

ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி நிகழ்வுகள்....









வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 21வது வருட மகா கந்தூரி 20.04.2012 வௌ்ளிக்கிமை பி.ப 5.00மணிக்கு கொடி யோற்றத்துடன் ஆரம்பமாகி 22.04.2012 ஞாயிற்றுக்கிமை இரவு 9.00 மணிக்கு தபர்றுக்விநியோகத்துடன் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

Mar 26, 2012

100வது மாணவர் மன்றம்

அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் 100வது மாணவர் மன்ற சிறப்பு நிகழ்வுகள்

காத்தான்குடி – 05 B.J.M அமைந்துள்ள றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் 100வது மாணவர் மன்ற நிகழ்வுகள் 24-03–2012 சனிக்கிழமை றப்பானிய்யஹ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா- அல் ஆலிமுல் பாழில் அஸ்-ஸெய்யித் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (அதாலல்லாகஹு பகாஅகஹூ) அன்னவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

Mar 18, 2012

அல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்

- மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ)-

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், ஏகன், எவ்விதத்தேவையும் அற்றவன், அவன் எவரையும் பெறாதவன், எவராலும்பெறப்படாதவன், அவனுக்கு நிகர் எவரும் இல்லாதவன், அவனே அல்லாஹ்.

அவன் எதையும் செய்யும் சக்தியுள்ளவன், என்றும் நிலைத்திருக்கும் ஹய்யானவன் (உயிருள்ளவன்). அவனுக்கு சிறு தூக்கமோ அல்லது உறக்கமோ எப்பொழுதும் ஏற்படாதவன். அவனுக்கே நான்கு வகைப்புகழும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்!

Mar 14, 2012

நபீ யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்..

-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)-

இவர்கள் தந்தையின் பெயர் மத்தா. இவர்கள் தாயின் பெயர் பதூரா என்பதாகும். இவர்கள் நபீ ஹாறூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்கள் நீனவா நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் அனுப்பப்பட்டார்கள். அங்கு செல்லும் பொழுது வழியில் ஒரு ஆறு குறுக்கிடவே தங்கள் ஒரு மகனை ஆற்றின் நடுவில் கொண்டு வரும் பொழுது ஆற்றின் மறு கரையில் இருந்த மகனை ஓநாய் கொண்டு செல்ல அந்த பதற்றத்தில் இவர்கள் கையில் இருந்த குழந்தை கீழே நழுவி விழ அதனை ஆற்று வெள்ளம் அடித்துச்சென்றது. இவர்கள் உயிர் தப்பி அக்கரை வந்து சேர்ந்தார்கள்.

Mar 9, 2012

குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 27வது வருட மாகந்தூரி


அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணை நிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கந்தூரி நிகழ்வுகள் இம்முறையும் 02.03.2012 ஆரம்பமாகி 04.03.2012 அன்று கந்தூரி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்... 

(இந்நிழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடியாக ஔிபரப்புச் செய்யப்பட்டது.)
3 தினங்கள் நடைபெற்ற கந்தூரி நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் .... 

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்கள்



பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்.

மௌலவீ  MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் 
தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை, 
விரிவுரையாளர் - றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். 


றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள். 

இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அலீ என்பதாகும். பின்வருவன அவர்களின் பட்டப் பெயர்களாகும். 

Mar 2, 2012

வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாவூத் (வலீ) அவர்களின் 22வது வருட மகா கந்தூரி ....


கொடி யோற்ற ஆரம்பம் -- 22.03.2013 பி.ப 5.00 மணி
கந்தூரி நிகழ்வு -- 24.03.2013 இரவு 9.00 மணி

நிகழ்வுகள்
1ம் நாள் -- 22.03.2013 வௌ்ளிக் கிழமை
பி.ப 5.00 மணி -- திருக்கொடியேற்றம்
மஃரிப் தொழுகையின் பின் -- மௌலித் மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு

2ம் நாள் -- 23.03.2013 சனிக்கிழமை
பி.ப 5.00 மணி -- மௌலித் மஜ்லிஸ்
மஃரிப் தொழுகையின் பின் -- தலைபாத்திஹா மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு

3ம் நாள் -- 24.03.2013 ஞாயிற்றுக்கிழமை
பி.ப 5.00 மணி -- மௌலித் மஜ்லிஸ்
மஃரிப் தொழுகையின் பின் -- புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ்
இஷாத் தொழுகையின் பின் -- பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை, தபர்றுக் விநியோகம்.

கந்தூரி நடவடிக்கைக்கான அலுவலகம் திறத்தல் -
17.03.2013 ஞாயிற்றுக்கிழமை புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் நிகழ்வின் பின்

இந்நிகழ்வுகளில் தாங்கள் அனைவரும் கலந்து காணிக்கை நேர்ச்சைகளை வழங்கி வைத்தியக் கலாநிதி ஷெய்தாவூத் (வலீ) அவர்களின் அருளைக் பெற்றுக் கொள்ளுமாறு பணிவாய் வேண்டுகின்றோம்.

நிகழ்வுகள் யாவும் எமது சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தியக்குரல் www.shumsme.comல் நேரடியாக LIVE செய்யப்படும்

நிர்வாகம் - BJM

Feb 29, 2012

துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள்

-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)-

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறும் பொழுது ‘நீங்கள் என்னை அழைத்துப் பிரார்த்திய்யுங்கள் நான் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்​பேன்” என்று கூறுகின்றான் (40:60). பெருமானார் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்விடம் துஆ கேட்காமலிருந்து விடும் போது அல்லாஹ் கோபிக்கின்றான் என்று சொன்னார்கள் (திர்மிதீ 5/126, -3433-மிஷ்காத்2238) மேற்சொல்லப்பட்ட திருமறை வசனத்திலிருந்தும் திரு நபீமொழியிலிருந்தும் அல்லாஹ்விடம் துஆ கேட்கும்போது அந்த துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள் பின்வருமாறு.​

Feb 22, 2012

சியாரதுல் குபூர் -- மண்ணறைகளைத் தரிசித்தல்.


தொடர்-05 
சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ 

முதலாவது நபீமொழி பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த நபீமொழியில் எனது “கப்று” அடக்கவிடத்தை தரிசித்தவன் என்று கூறப்பட்டிருந்தாலும் அதன் சரியான அர்த்தம் என்னைத் தரிசித்தவன் என்பதேயாகும். 

சரியான அர்த்தம் அதுவாக இருந்தாலும் நபீ(ஸல்) அவர்கள் சரியான அர்த்தம் தரும் வசனமான مَنْ زَارَنِيْ என்ற வசனத்தைக் கூறாமல் விட்டிருப்பதில் மிக ஆழமான தத்துவமொன்று மறைந்திருப்பதை மிக நுட்பமாக ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். 

Feb 16, 2012

கத்தார் மஜ்லிஸ் நிகழ்வுகள்...

கடந்த 10/02/2012 வெள்ளி நள்ளிரவு 12:30 மணிக்கு கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித சலவாத் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அகமியம் பற்றி சங்கைக்குரிய மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து முஹம்மது பிஹாம் அவர்களின் நபி நாயகத்தின் புகழ் பாடவந்த இனிய பாடலும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பூமான் நபி மீது புனித சலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டது. இதில் கடந்த 05/02/2012 அன்று 68 வது வயதையடைந்த சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களுக்காக விசேட துஆ பிரார்தனையும் செய்யப்பட்டது.

Feb 12, 2012

மாபெரும் இரத்ததான நிகழ்வு - 2012


கண்மனி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக றப்பானிய்யஹ் இளைஞர் கழகமான மாபெரும் இரத்தனான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வானது 11/02/2012 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

கப்றுகளும் ஸியாறத்தும்

Moulavi MJM. Jahaany Rabbani 

“ஹழ்றத் புரைதஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபீ (ஸல்) அவர்கள் நவின்றார்கள். கப்றுகளை ஸியாறத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது கப்றுகளை ஸியாறத் செய்யுங்கள் ஏனெனில் அதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” 
நூல்: அபூதாவூத் 
பாகம் – 02, பக்கம் – 105 

Feb 7, 2012

சிறப்பு காதிரிய்யஹ் மஜ்லிஸ் நிகழ்வு....

بسم ا لله ا لر حمن الر يم 
அல் மதத் யாரஸூலல்லாஹ் 
அல் மதத் யாஹபீபல்லாஹ் 
அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஆத்மீகத் தந்தை, ஜவ்ஹறுல் அமல், சாமஷீ, கலாநிதி, காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ், தரீக்கஹ்களின் ஷெய்ஹ் நாயகம், அல்ஆலிமுல் பாழில் அஸ்ஷெய்யிதுஷ் ஷெய்ஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஷ்பாஹி பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹு) அன்னவர்களின் 68வது பிறந்த தினத்தை கண்ணியப்படுத்தும் முகமாக “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிராத்தனை” * 5 - 2 – 2012 ஞாயிறு பி.ப திங்களிரவு நிகழ்வு ஒன்றை காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் வீதியில் இயங்கும் “காதிரிய்யஹ் திருச்சபை” ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிகழ்வில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவர்களின் முரீதீன்கள், முஹிப்பீன்கள் கண்ணியமிக்க உலமாக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Feb 6, 2012

புனித ஸலவாத் மஜ்லிஸ்

பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த சிறப்புமிகு தினத்தை முன்னிட்டு பெருமானார் பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான முஹிப்பீன்கள் கலந்து கொண்டனர்.

பூமான் நபீ புகழ் கூறும் புனித மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள்....

உலகுக்கோர் அருட்கொடையாய் வந்துதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வந்துதித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக 24.01.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆரம்பமான பெருமானார் பெயரிலான மௌலித் ஷரீப் தொடர்ந்து 12 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 04.02.2012 அன்று தபர்றுக் விநியோகத்துடன் நிறைவுபெற்றது.

Feb 4, 2012

புதிய கட்டிட நிர்மான வேலைகள்

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிட நிர்மான வேலைகள் எமது மக்களின் நிதிப் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்த வகையில் 4ம் மாடிக்கான வேலைகள் நடைபெற்று  அதற்கான கொங்கிரீட் இடும் வேலைகள் 30.06.2012 சனிக்கிழமை பி.ப 4.30 மணிக்கு சங்கைக்குரிய ஷெய்குனா அவர்களின் பாத்திஹாவுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...