Jun 7, 2012

கல்முனைக்குடி கந்தூரி நிகழ்வு....

கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், மற்றும் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகத்தினர் இணைந்து கரீபே நவாஸ், அதாயே றஸுல்,குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அன்னவர்கள் பெயரிலான பாரிய கந்தூரி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

11தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் தினம் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மஃரிப் தொழுகையின் பின் முஹிப்பீன்களால் மவ்லிது அதாஇர் றஸுல் ஓதப்பட்டது. இஷாத் தொழுகையின் பின் உலமாஉகளினால் பயான் நிகழ்த்தப்பட்டு, தபர்றுக் வழங்கப்பட்டது.

இறுதித் தினமான 05.06.2012 செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணியளவில் மவ்லித் ஓதப்பட்டது.

மஃரிப் தொழுகையின் பின் காத்தான்குடி றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளரும், காதிரிய்யஹ் திருச்சபையின் தலைவருமான சங்கைக்குரிய மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்கள்.


சரியாக 08.30 மணியளவில் பெரிய துஆ ஓதப்பட்டு, பல்லாயிரம் மக்களுக்கு அருளன்னதானம் வழங்கப்பட்டு ஸலவாத்துடன் இம்மஜ்லிஸ் நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.









தகவல் MIM. பிலால்