Jun 28, 2014

பூத்துக் குலுங்கும் புனித றமழான்

சங்கைக்குரிய ஷெய்குனா 
அல்ஹாஜ் மௌலவி A.அப்துர் றஊப் 
மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள்
நோன்பு என்றால் என்ன?

அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்தில் இருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால் தான் உனக்கு பூரண பயன் கிடைக்கும். இல்லாது போனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்கு கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை இது ஒரு பொது விதி இந்தப் பொது விதி நோன்பு என்ற வணக்கத்துக்கு மட்டுமென்று நினைத்துக் கொள்ளாதே!

ஷரீஅத்தில் விதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு அமலும் இந்த விதிக்குட்பட்டதேதான்! நீ எந்த அமலை செய்வதானாலும் அந்த அமலைப் பற்றியும் அதைச் செய்யும் முறை பற்றியும் அந்த அமலின் நோக்கம் பற்றியும் முதலில் தெரிந்திருக்க வேண்டும்.

ஓர் அமலின் (வே​லையின்) நோக்கத்தை தெரிந்து கொள்ளாமல் அவ் வே​லையிலீடுபடுவது அறிவுடமையாகுமா? நீ நன்றாக சிந்தித்துப் பார்! நீ நோன்பு நோற்றாலும் வேறெந்த வணக்கத்தைச் செய்தாலும் அவ் வணக்கத்தின் நோக்கத்தை அறிந்து செயல்படு!

Jun 27, 2014

28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு.


வருடா வருடம் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்ற அஜ்மீர் அரசர் அதாயே றஸூல் குத்புல் ஹிந்த் கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும், அன்னவர்களது அருமை மைந்தர் ஸர்தாரே ஸர்வார் ஸாஹிபே ஜலால் ஹழ்ரத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அன்னவர்களினதும் ஹாஜாஜீ உர்ஸே முபாறக் மாகந்தூரி 28வது வருடமாக இவ்வருடமும் அல் ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரணையுடன் கரீப் நவாஸ் பெளண்டேஷன் நிறுவனத்தால் மிக விமர்சையாக கடந்த 18.06.2014 புதன்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணி வரை நடாத்தப்பட்டது 


இவ்வாண்டு 28வது வருடமாக நடைபெற்று முடிந்த இந்நிகழ்வுக்காக முஹிப்பீன்கள், முரீதீன்கள் சுமார் 1 மாத காலத்திற்கு முன்பிருந்தே அலங்கார வேலைகள் தொடக்கம் அலுவலக வேலைகள் வரை இரவு பகல் பாராது மிக சிறப்பாக செயற்பட்டு இம்மாவிழாவை சிறப்பாக்க எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் அவர்களுக்கு ஈருலக ஈடேற்றத்தை கொடுப்பானாக.

இப்பணிகள் தொடர்பான சில காட்சிகள்.


Jun 23, 2014

ஜனாஸா பற்றிய அறிவித்தல்.


காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளி வீதியைச்சேர்ந்த மெளலவீ அல்ஹாஜ், அல்ஹாபிழ் MCK. முஹம்மது பஹ்ஜி அவர்கள் இன்று  (23.06.2014) திங்கட்கிழமை காலை 6.00 மணி அளவில் தாறுல் பனாவைவிட்டும், தாறுல் பகாவிற்கு இறையடி சேர்ந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இலங்கை நேரப்படி 5.00 மணி அளவில்

Jun 16, 2014

Jun 4, 2014

28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி 2014


Jun 2, 2014

வஹ்ஹாபிசம்

(سيماهم التحليق)

وكثير من أحاديث النبي صلّى الله عليه وسلّم فيها التّصريح بهذه الفتنة. (فتنة الوهّابية) كقوله صلى الله عليه وسلّم "يخرج اُناس من قبل المشرق يقرئون القرآن لايجاوز تراقيهم يمرقون من الدّين كما يمرق السّهم من الرّميّة سيماهم التّحليق" وهذا الحديث جاء بروايات كثيرة. بعضها في صحيح البخاري وبعضها في غيره. لاحاجة لنا إلى الإطالة بنقل تلك الرّوايات ولالذكر من خرّجها. لأنّها صحيحة مشهورة. ففي قوله سيماهم التّحليق تصريح بهذه الطائفة. لأنّهم كانو يأمرون كلّ من اتّبعهم أن يحلق رأسه. ولم يكن هذا الوصف لأحد من طوائف الخوارج والمبتدعة الذين كانوا قبل زمن هؤلاء. 

(சிரைத்தல் அவர்களின் சின்னம்)

பெருமானார் (ஸல்) அவர்களின் அருள் மொழிகளிற்பல வஹ்ஹாபிஸக் குழப்பத்தை தெளிவாக கூறுகின்றன.