Feb 29, 2016

25வது வருட அருள் மிகு கந்தூரி, நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு

முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடையில் வாழும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் 25வது வருட அருள்மிகு கந்தூரியும், றிபாயிய்யஹ் தரீகாவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸும் 26.02.2016 (வெள்ளிக்கிழமை) - 28.02.2106 (ஞாயிற்றுக்கிழமை) வரை காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று இரு நாதாக்கள் பெயரி்ல் திருக்கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன், ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மௌலித், தலைபாதிஹா, றிபாயீ நாயகம் மௌலித், கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடர்ந்து மூன்று தினங்களும் சங்கைக்குரிய உலமாஉகளால் சன்மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்றதுடன் இறுதித்தினமான ஞாயிற்றுக்கிழமை அன்றிரவு பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு ஸலவாத்துடன் இனிதே நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

Feb 28, 2016

ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அபுல் அப்பாஸ் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸத் அஸ்றாறுஹு

எழுதியவர் மெளலவீ MM. அப்துல் மஜீத் (றப்பானீ)
சிரேஷ்ட விரிவுரையாளர்
றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.
காத்தான்குடி - 05
*********************************************************************************

இறைநேசர்களான வலீமார்களின் வரிசையில் ஜுமாதல் ஊலா மாதம் உலகெங்கிலும் வாழும் ஸுன்னத் வல் ஜமாஅத் மக்களினால் நினைவு கூரப்படுபவர்கள்தான் ரிபாயிய்யஹ் தரீகஹ்வின் ஸ்தாபகர் ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள்.

இவர்கள் அலமுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சின்னம்), ஷெய்ஹுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் ஷெய்ஹ்), ஸெய்யிதுல் அக்தாப் (குத்புகளின் தலைவர்), தாஜுல் ஆரிபீன் (ஞானிகளின் கிரீடம்), உஸ்தாதுல் உலமா (ஆலிம்களின் உஸ்தாத்), இமாமுல் அவ்லியா (வலீமார்களின் தலைவர்) போன்ற பல பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.

அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸ ஸிர்றுஹு அன்னவர்கள் இறாக்கிலுள்ள உம்மு அபீதா என்ற கிராமத்திலுள்ள அல்பதாயிஹ் என்ற இடத்தில் ஹிஜ்ரீ 512ம் ஆண்டு றஜப் மாதம் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் அஸ்ஸெய்யித் அலீ. தாயின் பெயர் உம்முல் பழ்ல் பாதிமா அந்நஜ்ஜாரிய்யஹ் றழியல்லாஹு அன்ஹுமா.

ரிபாயீ நாயகம் அன்னவர்கள் தந்தை வழியில் அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும், தாய் வழியில் நபீத் தோழர் அஸ்ஸெய்யித் அபூ ஐயூப் அல்அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றார்கள்.

Feb 24, 2016

வைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.

-சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

இறை நேசர்களான வலீமார் வரிசையில் தமிழ்நாடு முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்போவா னோடையில் கொலுவீற்றிருந்து “கறாமத்” என்னும் அற்புதம் நிகழ்த்திவரும் “ஷெய்குத்தவா” ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.

இவர்கள் நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்தவர்கள் என்றும் அக்காலத்தில் தலைசிறந்த வைத்திய மேதையாக இருந்தவர்கள் என்றும் அவர்களைக் கனவில் கண்டுஇவ்விவரத்தை அவர்கள் மூலம் அறிந்தோர் கூறுகின்றனர்.

Feb 23, 2016

காத்தான்குடி கடற்கரை முன்றலில் கந்தூரி பெருவிழா

புதிய காத்தான்குடி - 6 ஸாஹிறா ஆழ்கடல் மீனவர் கிராமிய அமைப்பினர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரிலும், வலீமார்கள் பேரிலும் கந்தூரி ஒன்றை 21.02.2016 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் போது அருள்மிகு திருக்கொடியேற்றமும், தேசியக் கொடியும் ஏற்றப்பட்டு, மவ்லித் ஷரீப் ஓதப்பட்டு மீனவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டு, அருளன்னதானமும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், கண்ணியமிக்க உலமாஉகளும், றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களும், பொது மக்களும், கலந்து சிறப்பி்த்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Feb 17, 2016

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 13


அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருட்கரங்கள் கொண்டு அருள் பெறுதல்

அண்ணலெம் பெருமானின் உமிழ் நீர் கொண்டு மாத்திரமல்ல அவர்களின் கரங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் தலையில் தடவினார்கள். மேற்சொல்லப்பட்ட ஹதீஸ் அதற்கு சான்றாகும்.

عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا مَسَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسِيْ وَدَعَالِيْ بِالْحِكْمَةِ.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறியதாக இக்ரிமா றழியல்லாஹூ தஆலா அன்ஹூ அன்னவர்கள் கூறினார்கள்.

நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எனது தலையைத் தடவி, தத்துவம் கொண்டு எனக்குப் பிராத்தித்தார்கள்.

ஸியறு அஃலாமின் நுபலா
பக்கம் – 1083

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இவர்களின் தலையில் தடவினார்களெனில் அது ஒரு வீணான செயலல்ல. மாறாக தத்துவ மிக்க செயல். அவர்களின் கரங்கள் சாதாரணமானவையல்ல. ஆன்மீக மணம் கொண்டவை. தெய்வீக சக்தி வாய்ந்தவை. தனதருள் தனது தோழர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற அண்ணலின் பெருந்தன்மை. தனதருளை பல வழிகளிலும் தனது தோழர்களுக்கு அள்ளி வழங்கினார்கள். காருண்ய நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.

Feb 12, 2016

காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு

காத்தான்குடி மீடியா போரத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினரால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு 11.02.2016 (வியாழக்கிழமை) அன்று இரவு 07.00 மணியளவில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முன்னாள் நகரசபை உதவி தவிசாளர் அல்ஹாஜ்  MIM. ஜெஸீம் JP  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Feb 8, 2016

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு மஜ்லிஸின் தொகுப்பு

அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூருல் அப்ஹர், அல்கிப்ரீதுல் அஹ்மர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 07.02.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பி.ப 05:00 மணியளவில் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும்  இஷா தொழுகையின் பின் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ், தொடர்ந்து அன்னாரின் சிறப்புக்களை எடுத்துரைத்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் உரையாற்றினார்கள். இறுதியில் துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம் செய்யப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
- அல்ஹம்துலில்லாஹ் -

Feb 7, 2016

சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 72வது பிறந்த தினமன்று நடைபெற்ற காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், துஆப் பிரார்த்தனை நிகழ்வும்

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்

அதிசங்கைக்குரிய ஆன்மீகத் தந்தை அல் ஆரிப்பில்லாஹ் மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்கள் 05.02.2016 அன்று தங்களின் 72வது வயதினைப் பூர்த்தி செய்ததை முன்னிட்டு, அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றை எமது காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள், முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டு அன்னாரின் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்தனர். மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்களினால் அன்னார் பொன்னாடைகள் போர்த்தப்பட்டும், நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டும் வாழ்த்துக் கவிகள் பாடப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்கள்.

இறுதியாக அன்னாரின் நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை நடாத்தப்பட்டு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, இறுதியில் ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
- அல்ஹம்துலில்லாஹ் -

Feb 5, 2016

Feb 4, 2016

ஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பற்றிய சில துளிகள் !

05.02.1944இல் ஆன்மீகப் பேரொளியாய் காத்தான்குடியில் அவதரித்தார்கள்.

இவர்களது தந்தை அல்ஹாஜ் அபுல்இர்பான் அப்துல்ஜவாத் (றஹ்) அவர்கள்
ஒரு பிரபல மார்க்க ஞானியாகவும் அற்புதங்கள் நிகழ்த்திய ஒரு “வலிய்யுல்
-லாஹ்” இறைநேசராகவும் திகழ்ந்தார்கள். இன்னார் தனது தவமைந்தர் மிஸ்பாஹீ அவர்கள் உலகில் தோன்றிய 05.02.1908இல் அதே திகதி மாதத்திலேயே உலகில் மலர்ந்து, 18.09.1978இல் தனது 70வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹ்)

தங்களது தந்தை போல் தாமும் ஒரு மார்க்க அறிஞராக ஆகவேண்டுமென்ற
வேட்கையால் தன் தந்தையிடம் பயின்ற பின்னர் காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, பாணந்துறை அல்மத்ரஸதுத் தீனிய்யா அறபுக்கலாபீடங்களில் கற்று பின்னர் இந்தியா, சவுதிஅரேபியா சென்றும் கல்வி பயின்றார்கள்.

Feb 1, 2016

31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.01.2016 - 31.01.2016 வரை 3 தினங்கள் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 31வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அன்னார் பேரிலான திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸ், குத்பிய்யஹ் றாதிப் மஜ்லிஸ், சங்கைக்குரிய உலமாக்களால் சன்மார்க்க சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இறுதித் தினமான கந்தூரி தினத்தன்று பெரிய துஆ ஓதப்பட்டு அருளன்னதானம் வழங்கப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மூன்று நாள் நிகழ்வுகளின் தொகுப்பு....