Jan 31, 2015

Jan 27, 2015

சற்குருமார்களும், கடலாமைகளும்

கடலாமை முட்டை கரை தனிலிட்டபின்
கடலில்  இறங்கி  தியானம்  செய்து
உடனே  தன்  முட்டை பொரிக்கும் உவமை போல்
உள்ளமையாகுமாம்  என் பிறவி

கடலில் வாழும் கடலாமை என்ற பெரிய ஆமை முட்டையிடுவதற்கு கரைக்கு வந்து மண்ணைக் கிளறிக் குழி தோண்டி அதில் முட்டையிட்ட பின் கடலுக்கு சென்று விடும். நீருள் இருந்து கொண்டே கரையிலிட்ட முட்டையை கண் இமைக்காமல் தொடர்ந்து பல மணி நேரம் உற்று நோக்கி குஞ்சுகள் பொரித்து அவற்றை வெளிப்படுத்தும்.

Jan 23, 2015

பெருமானாரை இகழ்பவன் கொல்லப்படுவான்!!!

ஆக்கம் - மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ 
றப்பானீ அவர்கள்

இறைநபீ நேசர்கள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

          அகிலத்தின் அத்திவாரமும், இறை ஞானப் பொக்கிஷங்களின் திறவுகோலும், நற்குணமும், அர்ப்பணமும் எக்கணமும் குறையாத எங்கள் சற்குண நபீ முஹம்மத் முஸ்தபா றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தி கொச்சைப்படுத்த வேண்டும் என எண்ணும் கூட்டத்தினர் இன்று மட்டுமல்ல நபீ  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலம் தொட்டே இருந்து வருகிறார்கள்.

Jan 21, 2015

திருக்குா்ஆனைக் கொண்டு வைத்தியம் செய்தல்

திருக்குர்ஆன் என்பது மனிதனின் உள நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இருப்பது போல் அவனின் உடல் நோய்களைச் சுகமாக்கும் மருந்தாகவும் உள்ளது. அது எந்த நோய்க்கு மருந்தென்றாலும் அதைக் கொண்டு மருந்து செய்தால் மட்டுமே நோய் சுகமாகும். அதை உறையிலிட்டு காலையும் மாலையும் அதை முத்தமிட்டு வருவதால் எந்த நோயும் குணமாகி விடாது. அல்லது தினமும் திருக்குர்ஆனை ஓதி வருவதாலும் குணமாகி விடாது.

Jan 19, 2015

குறவனைக் கண்டு எழுந்து நின்ற இமாம் கஸ்ஸாலி

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மத் கஸாலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவா்கள்ஈரான்நாட்டின்குறாஸான்மாநிலத்தில் (ஹிஜ்ரி 505 – ஈஸவீ 1111) “தூஸ்எனும் நகரில் பிறந்தார்கள். “ஸூபிஸம்பேசிய தத்துவஞானி

Jan 17, 2015

உறக்கம் “வுழூ”வை முறிக்குமா?

வுழூஎன்றால் ஒருவன்ஷரீஆவில் கூறப்பட்ட முறைப்படி விதிப்படி - தனது உறுப்புகளில் குறிப்பிட்ட சில உறுப்புகளை கழுவுவதை குறிக்கும்.

உதாரணமாக முதலில்வுழூவின்பா்ழைஇறுக்குகின்றேன் என்று நிய்யத்வைத்தல். அதாவது இவ்வாறு மனதில் நினைத்தல். இரண்டாவது இந்த எண்ணத்தோடு முகம் கழுவுதல். மூன்றாவது இரு கைகளையும் முழங்கை உட்பட கழுவுதல். நாலாவது தலையை நீரால்மஸ்ஹ்தடவுதல். இரு கால்களையும் கரண்டை உட்பட கழுவுதல். சொன்ன முறைப்படி செய்தல்.

Jan 16, 2015

உள்ளம் தெளிவானால் உலகத்தையே பார்க்கலாம்

ஒரு மனிதனின் வெளிக்கண்கள் இரண்டும் தெளிவாக இருந்தால்-ஆரோக்கியமாக இருந்தால் இவன் தன்னை விட்டு மறையாத எதையும் பார்க்க முடியும். ஆனால் மனக்கண்-கல்புக்கண்-தெளிவானவன் தன்னை விட்டும் மறைந்தவற்றையும் அது கொண்டு பார்ப்பான். மனக்கண் தெளிவானவனுக்கு வெளிக்கண் தேவையில்லை.

Jan 13, 2015

பருந்து

இப்பறவை பறவைகளின் தலைவன் என்று சொல்லப்படும். பறவைகளில் அதி வேகமாக பறப்பது பருந்துதான். இது ஒரே நாளில் கிழக்கில் இருந்து மேற்கிற்கு செல்லும் வல்லமை உள்ளது. காட்டில் வாழும் யானைக் குட்டிகளைக் கூட இறாஞ்சிக் கொண்டு பறந்து செல்லும். அதன் காலின் சக்தி மிக அபாரமானது. 

Jan 6, 2015

மீலாத்துன் நபீ (கொண்டாட்டம்) நிகழ்வுகள்

சற்குண சீலர், சாந்த வடிவர், ஸபீஉல் முத்னிபீன் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த தினத்தையும் பிறந்த நேரத்தையும் சங்கையும் செய்யும் முகமாக வருடா வருடம் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 04.01.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 02.30 மணிக்கு ஆரம்பமாகி மிக விசேடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Jan 2, 2015

கஸ்தூரி நபீயின் மீது ஸலவாத் ஓதும் புனித ஸலவாத் மஜ்லிஸ் - 2015


அகிலத்தின் அருட்கொடை, இறையொளியின் முதலொளி, நம்பெருமானார் றஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்  புகழ் பாடும் புனித ஸலவாத் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இவ்வருடமும் எதிர்வரும் 04-01-2015 ஞாயிறு அதிகாலை 02:30 மணிமுதல் ஆரம்பமாகவுள்ளது