Feb 28, 2015

சிவாக், மிஸ்வாக். (பற்சுத்தம்) தொடர் - 2

                                                                                                                                                        தொடர் - 02
ஆக்கம் - புஸ்தானுல் ஆஷிகீன்

نَعَمْ يُكْرَهُ بِمِبْرَدٍ وَعُودِ رَيْحَانٍ يُؤْذِي، وَيَحْرُمُ بِذِي سُمٍّ وَمَعَ ذَلِكَ يَحْصُلُ بِهِ أَصْلُ السُّنَّةِ. 
كتاب «تحفة المحتاج في شرح المنهاج» لابن حجر الهيتمي

மாதுளம் குச்சி, துளசி போன்ற வாசனைச் செடிகளின் குச்சி போன்ற வற்றாலும், அரத்தினாலும், மிஸ்வாக் செய்வது மக்ரூஹ். “நஜீஸ் உள்ள குச்சி, விஷத்தன்மையுள்ள குச்சி போன்றவற்றினால் மிஸ்வாக்குச் செய்வது ஹறாம் என்றிருந்தாலும், அவற்றினால் செய்தால் சுன்னத் உண்டாகிவிடும்.”.                                                   
துஹ்பதுல் முஹ்தாஜ் பீ ஷறஹில் மின்ஹாஜ்
(ஆசிரியர்: இப்னுஹஜர் ஹைதமீ)

Feb 27, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் - 02



அஸ்ஸெய்யித் அபூதல்ஹதல்அன்ஸாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள்

நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் பத்ர் போரில் கலந்து கொண்ட ஓர் ஸஹாபீஅம்பு எய்வதில் சிறந்த வீரர்உஹத் யுத்தத்தின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நோக்கி வந்த அம்புகளை தனது நெஞ்சைக் கொண்டு காத்தவர்கள்ஸெய்யிதுனா அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்னவர்களின் தாய் அஸ்ஸெய்யிதஹ் உம்மு ஸுலைம் றழியல்லாஹு அன்ஹா அன்னவர்களை திருமணம் செய்தவர்கள்அவர்களின் சாச்சா அண்ணல் எம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள்மிக்க புனித முடிகளை பாதுகாப்பதில் மிக ஆர்வமாக செயற்பட்டவர்கள்.

Feb 23, 2015

ஞானக் கடல் ஷெய்ஹுல் அக்பர் றழியல்லாஹு அன்ஹு கந்தூரி நிகழ்வுகள்

சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் அடக்கம் பெற்று, இறைஞான தத்துவங்களை மிகவும் தெட்டத்தெளிவாக எடுத்தியம்பிய ஞானக்கடல், ஷெய்ஹுல் அக்பர், மிஸ்குல் அத்பர், நூறுல் அப்ஹர், கிப்ரீதுல் அஹ்மர், அஷ்ஷெய்ஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 22.02.2015 (ஞாயிற்றுக் கிழமை) அன்று திருக் கொடியேற்றத்துடன் கந்தூரி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

Feb 19, 2015

அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு

ஆக்கம் - ஷெய்ஹுனா மிஸ்பாஹீ

اَلْـوَارِثُ الْمُحَمَّدِيُّ سُلْطَانُ الْعَارِفِـيْنْ اَلشَّـيْخُ الْأَكْبَرْ اَلْـمِسْكُ الْأَذْفَـرْ اَلْكِبْرِيْتُ الْأَحْمَرْ اَلنُّوْرُ الْأَبْهَرْ مُحَمَّدُبْنُ عَلِيْ اَبُوْ عَبْدِ اللهِ مُحْيِ الدِّيْنِ ابْنُ عَرَبِيْ رَضِيَ الله عَنْهُ.

அல்வாரிதுல் முஹம்மதிய்யு,  ஸுல்தானுல் ஆரிபீன், அஷ்ஷெய்ஹுல் அக்பர்,  அல்மிஸ்குல் அத்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அன்னூறுல் அப்ஹர்
முஹம்மத் இப்னு அலீ  அபூ அப்தில்லாஹ் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு



Feb 18, 2015

சிவாக், மிஸ்வாக். (பற்சுத்தம்)

ஆக்கம் - புஸ்தானுல் ஆஷிகீன் 
  
சுத்தம் ஈமானின் பாதியாகும் என அண்ணல் நபி ஸல் அவர்கள் நவின்றுள்ளார்கள்

சுத்தம் என்பது அகச்சுத்தம், புறச்சுத்தம் என்று இரண்டாகவும்  உடல், உடை, உள்ளம் என விரிவு படுத்தி மூன்றாகவும் சொல்லப்படுகின்றது. ஒருவர் இறைவனை வழி படுவதாக இருந்தால் அவரிடம் இம்மூன்றுடன் சேர்த்து இடச்சுத்தத்தையும் கவனிக்கப்படும் . தான்தொழுமிடம் “நஜாசத்” எனும் அசுத்தம்  உடையதாக இருப்பின் அவரின் தொழுகை பாதிலானதாக (வீணானதாக) ஆகிவிடும்.

Feb 12, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 01


அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் போன்ற ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றவுமில்லைதோன்றப் போவதுமில்லை.

சிருஷ்டிகளை வெளிப்படுத்த நாடிய அல்லாஹு தஆலா தனது புனிதமிகு தாத்திலிருந்து முதன் முதலில் வெளிப்படுத்தியது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒளியைத் தான் என்பது ஸுபீகளான இறைஞானிகளின் ஏகோபித்த முடிவாகும்வழிகேடர்கள் இதை மறுத்தாலும் எதார்த்தம் இதுவேயாகும்மறுப்பவன் நிச்சயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தம் புரியாதவனாகவே இருப்பான்.

Feb 9, 2015

திரு முடிகள் தரிசன நிகழ்வு

அகிலத்தின் அருள் வெளிப்பாடு அருள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், வலீகட்கரசர் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் அருள் நிறைந்த திரு முடிகளைப் பார்வைியிடும் நிகழ்வு 06.02.2015ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Feb 8, 2015

ஷம்ஸுல் உலமா தந்த ஷம்ஸே!

உலகில் ஆயிரம் இணையம்- அதில்
உன் பெயர் உரக்கச் சொல்கிறோம் ஷம்ஸ்.!

காத்த நகர் மண்ணில் பூத்த மா வலீ - அபுல் இர்பான்
காதிமுல் கவ்மி தந்த அறிவுப் பெட்டகம் ஷம்ஸ்!

ஆலமுல் அர்வாஹ் ஆன்ம உலகு முதல்   

ஆலமுல் அஜ்ஸாம்  சூக்கும உலகுத்தவராஜர் வரை-                             
நபிமார், வலீமார், நல்லடியார்களைச்  சுமக்கும் பேழை ஷம்ஸ்!                   

என்ன கோடி தவம் செய்தோம் நாம் ???                                       

பொய்யான உலகினில் மெய்யான மெஞ்ஞானம் மோதிடும்
அஞ்ஞான ஐயம் அறுத்திடும் அகமியப்போதினி ஷம்ஸ்!

வீடியோ ஓடியோ உலமாக்கல் குரல் கணீரென -  தொடர் 
ஆட்டிகல், பத்ரிய்யா வாசலில் மனந்து வரும் மஜ்லிஸ் நிகழ்வுகள்,                        

எழுதுகரம் கொண்டு எட்டிப்பிடிக்க முடியாத இதய வாசலை  இவைகொண்டு தட்டித்திறக்கிறாய்  ஷம்ஸ்!

நீ பெற்ற பெயர் குரு நாதரின் இரவல் அன்றோ?

முற்றத்து மல்லிகை மனப்பது போல் “ஷம்ஸுல் உலமா” வின்
கடைக்கண் பார்வை பட்டவன் நீயல்லோ ஷம்ஸ்!

உன் பிறப்பை நானறியேன்  - ஆயினும் இம்மாதம்        
என் குரு நாதர் பிறந்த நாள் நான் அறிவேன்.

தனிக்கொடி கொண்டு பறக்கிறாய் ! அது அபுல் இர்பான் ஆசியினால்                     தத்துவம் கூறி சிறகடிக்கிறாய்! அது ஷம்ஸுல் உலமா மிஸ்பாஹியினால்!


                                           புஸ்தானுல் ஆஷிகீன்

Feb 7, 2015

ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அனனவர்களின் 71வது பிறந்த தின நிகழ்வு

அல்ஆலிமுல் பாழில், ஈலத்தின் சொற்கொண்டல், ஷம்ஸுல் உலமா அஷ்ஷெய்ஹ், அல்லாமா, மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ நாயகம் அன்னவர்களின் 71வது வயது பூர்த்தி செய்வதை முன்னிட்டு காதிரிய்யஹ் திருச்சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு”ம் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும் கடந்த 05.02.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Feb 5, 2015

பிறந்த நாள் வாழ்த்து

இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடும் அல்ஆலிமுல்பாழில் ஞானத் திங்கள் அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடன் நீண்ட நாள் நலமாய் வாழ்ந்து ஆன்மீகப்  பணிகளிலும் தொடர்ந்தும் நிலைத்திருக்க வல்லோன் இறைவனை இருகரம் ஏந்துகிறோம்.

ஷம்ஸ் மீடியா யுனிட்

Feb 4, 2015

திருமுடிகள் தரிசனம்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

பெருமானாரின் புனித திரு முடியையும்
குத்பு நாயகத்தின் புனித திரு முடியையும்
பார்வையிட்டு அருள் கோடிபெறும் இனிய நிகழ்வு

பெருமானார் “மழ்ஹறுல் அதம்” முஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மிகு திரு முடியையும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்றுஹு)அவர்களின் திரு முடியையும் பார்வையிட்டு அருள் பெறும் புனித நிகழ்வு இன்ஷா அல்லாஹ் பின்வரும் விபரப்படி நடைபெற இருக்கி்ன்றது.

இடம் : 
சுன்னத் வல் ஜமாஅதின் ஸூபிஸ தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
காத்தான்குடி-05

காலம் : 
06.02.2015 வெள்ளிக்கிழமை

ஆண்கள் தரிசனம் : காலை 05:30 - காலை 07:00 வரை
                           பி.ப 01:00 - பி.ப 04.30 வரை

பெண்கள் தரிசனம் : காலை 07:00 - மு.ப 11:30 வரை

திருமுடிகளைப் பார்வையிட வருவோர் கடைப்பிடிக்க வேண்டியவை :

  • . வுழூவுடன் சமுகமளித்தல்
  • . மண்டபத்தில் நுழைகையில் அதிகமாக ஸலவாத் ஓதுதல்
  • . தலை மறைத்து நுழைதல்
  • . அனைவரும் அமைதியைப் பேணி நடத்தல்
  • . பணிகளில் ஈடுபடுவோர் சைக்கினை மூலம் செயற்படல்
  • . இந்நிகழ்வு ஜும்அஹ் தினத்தில் நிகழ்வதால் குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்திற்கு முடிவடையும்.

“சுப்ஹ்” தொழுகைக்கே இங்கு சமுகமளித்து வாழ்வில் காண்பதற்கரிய இச்சந்தர்ப்பத்தை தவறாது பயன்படுத்தி பேரருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வஸ்ஸலாம்
அனைவரும் அணி திரள்க!
அருள் கோடி பெறுக!

Feb 2, 2015

முக்கிய அறிவித்தல்

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காண்பிக்கப்பட இருந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடி இன்று காண்பிக்கப்படாது.
பிரிதொரு தினத்தில் காண்பிக்கப்படும். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

30வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

வலீகட்கரசர், கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 30.01.2015 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 01.02.2015 அன்று மாகந்தூரியுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.