Jun 28, 2015

மச்சான், மச்சினன் உரையாடல்

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ


மச்சான் என்னடா மச்சினன்! நீ முதலில்ஸுன்னத் வல் ஜமாஅத்” வாதியாகத்தானே இருந்தாய். அவர்களின் பள்ளிவாயலில்நீ தொழுததையும், அங்கு மௌலித் மஜ்லிஸில் நீ ஓதியதையும் நான் பலதரம் கண்டிருக்கிறேன். நீ எப்போதுகர்னீகளுடன் சேர்ந்தாய்? ஏன் சேர்ந்தாய்.

மச்சினன் என்ன மச்சான் இவ்வாறு கேட்டு விட்டாய்! நான் அவர்களுடன் இணைந்து நாலு மாதம் மட்டும்தான். எனக்கு எது சரி? எது பிழை? என்பது தெரியாது. ஆய்வு செய்து சரி பிழை கண்டறிய என்னிடம் திறமையும் இல்லை. நான் படிக்காதவன், அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்பவன் என்பது உனக்குத் தெரியும். எனக்குகர்னீகளின் வழிபோக்குதான் இலகுவானதாகஇலேசானதாகத் தெரிந்தது. அவர்களின் வழியில் கடினமோ, கஷ்டமோ இல்லை. இதனால்தான் அவர்களுடன் இணைந்தேன்.

Jun 27, 2015

நோன்பின் பர்ளுகள் எத்தனை?

நோன்பு நிறைவேற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இவ்விரு நிபந்தனைகள் இருந்தால் மட்டும்தான் நோன்பு நிறைவேறும். இரண்டும் இல்லையானாலும் அல்லது இரண்டில் ஒன்று மட்டும் இல்லையானாலும் நோன்பு நிறைவேறாது. இதுஷாபிஈ மத்ஹப்சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள சட்டமாகும்.

ஒன்று تبييت النّيّة இரவில்நிய்யத்வைக்க வேண்டும். இதுநிய்யத்சரி வருவதற்கான நிபந்தனையாகும். ஒருவன் பகலில் ஆயிரம் தரம்நிய்யத்வைத்தாலும் அது நிறைவேறாது.

Jun 25, 2015

ஷாதுலிய்யஹ் தரீக்கஹ்வும் வஹ்ததுல்வுஜுத் கோட்பாடும்.

- மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons) -
வஹ்ததுல் வுஜூத் என்றால் உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும். அதாவது அல்லாஹ் ஒருவன், அவன்தான் உள்ளமை (வாஜிபுல்வுஜூத்). படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் (மும்கினுல் வுஜூத்). படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்குவேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமையே அவ்வாறு தோன்றுகின்றது. படைப்புகள் மாயதோற்றத்தில் தென்படுகின்றவே தவிர யதார்த்தத்தில் படைப்புகள் என்பது இல்லை.

Jun 24, 2015

ஸம்ஹான், ஸக்றான் உரையாடல்

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

ஸம்ஹான் தம்பி ஸக்றான் நீ எங்கே செல்கிறாய்?

ஸக்றான் கொழும்பு சென்று தரமான மார்க்க அறிஞர் ஒருவரிடம் மார்க்க விளக்கம் கேட்டுவரச் செல்கிறேன்.

ஸம்ஹான்எது பற்றிய விளக்கம் என்று சொல்ல முடியுமா?

ஸக்றான்ஆம். சொல்லலாம். தற்போது றமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது. “தறாவீஹ்தொழ வேண்டும். சில பள்ளிவாயல்களில் இருபதுறக்அத்தொழுகின்றார்கள். இன்னும் சில இடங்களில் எட்டுறக்அத்தொழுகின்றார்கள். எது சரி என்பதை அறிந்து அதன் படி செயல் படுவதற்காகச் செல்கிறேன்.

Jun 23, 2015

ஷாதுலிய்யஹ் தரீக்காவின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

 رحمه الله(موسّس الطّريقة الشّاذليّة الشّيخ السيّد أبو الحسن عليّ الشاذلي )

قال الشّيح أبو الحسن علي الشّاذليّ رحمه الله ونقله الإمام عبد الوهّاب الشّعراني رحمه الله فى الصفحة الخامسة والسّتّين من اليواقيت والجواهر( قد محق الحقّ تعالى جميع الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلق؟ فقال موجودون، ولكن حُكمُهم مع الحقّ تعالى كالأنابيب الّتي فى كوّة الشّمس تراها صاعدة هابطة فاذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودة فى الوجود)

ஷாதுலிய்யாஹ் தரீகாவின் மூலவர் அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹ்மதுல்லாஹ்  அவர்கள் பின்வருமாறு சொன்னதை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ றஹ்மதுல்லாஹ் அவர்கள் தங்களின்அல் யவாகீத் வல் ஜவாஹிர்என்ற ஞான நூல் 65ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Jun 21, 2015

பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்

றமழான் மாத இரவுகளில்ஸுன்னத் வல் ஜமாஅத்கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில்தறாவீஹ்தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்குநோன்பின் நிய்யத்சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள்.

Jun 20, 2015

நின்று வணங்குதல் என்றால் என்ன?


قال النّبيّ صلّى الله عليه وسلّم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدّم من ذنبه.

றமழான் மாதம் பூரணஈமான்விசுவாசத்தோடும், நன்மையை நாடியும் ஒருவன் நின்று வணங்கினால் அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

இந்த நபீ மொழி பலமானதும், பலஹதீதுநூல்களில் இடம் பெற்றதுமாகும்.

இந்த நபீ மொழியில்றமழான்என்று மாதத்தின் பெயர் மட்டும்தான் கூறப்பட்டுள்ளதேயல்லாமல்ليالي رمضان  றமழான் மாத இரவுகள் என்றோ,  نهار رمضان  பகல் என்றோ கூறப்படவில்லை. பொதுவாக றமழான் என்று வந்துள்ளதால் இரவு பகல் இரண்டையும் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும். குறித்த மாதத்தில் இரவில் மட்டும்தான் வணங்க வேண்டும். பகலில் வணக்கம் தேவையில்லை என்று கருதக் கூடாது.

எனினும் பகல் நேரம் வணக்கம் செய்வதை விட இரவில் அதிகமாகச் செய்ய வேண்டும்.

Jun 19, 2015

“றமழான்” என்றால் பொருள் என்ன?

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

இது ஒரு மாதத்தின் பெயராகும். ஒன்றுக்கு முதலில் பெயர் வைப்பவன் எந்த மொழியுடையவனாயினும் அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெயரையே வைப்பான்.

ஷஃபான்மாதத்தை அடுத்து வருகின்ற, “ஷவ்வால்மாதத்திற்கு முன்னுள்ள மாதம் றமழான் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இம்மாதத்திற்கு பெயர் சூட்டினவன் அல்லாஹ்தான். இதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரம் உண்டு. விறிவையஞ்சி கூறவில்லை.

மூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)

ஆக்கம் - மௌலவீ  HMM. பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம் - மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் 



حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ

அல்லாஹ்வையன்றி வேறு இலாஹ் (வஸ்த்து) இல்லை என்றும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழான் (மாதத்தில்) நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.
நபி மொழி.

இஸ்லாம்  ஐம்பெரும் அம்சங்கள் கொண்டு இஸ்திரப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அவற்றில் ஒன்றையேனும் நிராகரிப்பதானது “குப்ரிய்யத்” தை “ரித்தத்தை மதமாற்றத்தை ஏற்படுத்தும். என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.

ஒருவர் திருக்கலிமா மொழிந்த பின்னர்  அதனை நிராகரித்தாராயின்  அவர்  இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்பட்டவராகவே  கருதப்படுவார். ஏனெனில்  திருக்கலிமா என்பது ஒவ்வொரு வஸ்துவிலும் இருக்கும் ‘உயிர்” போன்றதாகும். றூஹை கொண்டு  சம்பந்தப்பட்ட விடயமே திருக்கலிமா.

 தொழுகை, காத், நோன்பு, ஹஜ் ஆகியன “அப்ஆலே அஜ்ஸாமிய்யா” சடம் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள்- உள்ளடக்கப்பட்டவையாகவும், “நப்ஸ்” உடைய தீக்குணங்களைக் களைந்தெறிந்து, “றப்” அல்லாஹ் அளவில் பரிசுத்தமடைந்த நிலையில் முடுகுதல் பெறுவதுமே  அவற்றின் நோக்கமாகும்.

மேற்கூறப்பட்டவற்றை ஒருவர் நிராகரிக்காமல், மறுக்காமலும், அவற்றை தன் வாழ்வில் கொண்டுவர முயற்சி எடுக்காமலும் இருப்பாராயின் அவர் ஒரு போதும் தூய்மை பெறமாட்டார். அல்லாஹ்வின் கட்டளையை  செவி சாய்த்துச் செயற்படாத பாவியாகவும் ஆகிவிடுவார்.

“அப்ஆலே அஜ்ஸாமிய்யா” அல்லது  “அஃமாலுல் ஜவாரிஹி” எனப்படும் இன்னான்கு அம்சங்களில் (தொழுகை, காத், நோன்பு, ஹஜ்) மனிதனைப் புனிதனாக்கி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், அன்பையும், அவனது திருக்காட்சியையும் அதிகம் பெற்றுத்தருவதில் அதிக தொண்டாற்றுவது புனித மிக்க  நோன்பேயாகும்.

والصوم سبب للولوج في ملكوت السموات وواسطة الخروج عن رحم مضايق الجسمانيات المعبر عنه بالنشأة الثانية
மேலும் நோன்பாகிறது வானங்களின் அரசாட்சிகளை (கண்டு கொள்ள) நுழைவதற்கும், சடம் சார்ந்தவற்றின் ,     நெருக்கமான (رحم مضايق الجسمانيات) - இடங்களின் அல்லது விடயங்களின்- கருவறையை விட்டும் வெளிப் புறப்படுவதற்கு உதவியாகவும் இருக்கின்றது.

“இரண்டாவது துவக்கம்” ஆரம்பம் என்றும் ஆரிபீன்களால் வலிந்துரை தரப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அந்நோன்பு இருக்கின்றது.

كما أشير اليه بقول عيسى عليه السلام لن يلج ملكوت السموات من لم يولد مرتين

நபி ஈஸா அலை அவர்கள்  இவ்வாறு கூறுகின்றார்கள்,

இரண்டு முறை அவதரிக்காதவர், (பிறக்காதவர்) வானங்களின் அரசாட்ஷிகளுக்குள் நுழையமாட்டார் .

எனவே  நோன்பானது இறைவனின் அரசாட்ஷிகளை கண்டு கொள்வதிலும், அவனைக்கண்டு கொள்வதிலும் சிறப்பிற்குரியதாக அமைந்து விடுகின்றது. அதனால்தான் அல்லாஹ் ஹதீத் குத்ஸியில் “அஸ்ஸவ்மு லீ வஅன உஜ்ஸா” நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலியாவேன் என்று வள்ள அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.

இந்த நோன்பில் பிரதான தொலிற்பாடாக செயற்படுவதானது “பசி” ஆகும். மனிதனின் ஏழு  (“நப்ஸ்”) மன இச்சைகளுள் ஆரம்ப படித்தரத்தில் உள்ள “அன்னப்ஸுல் அம்மாரது பிஸ்ஸூஇ” தீமையை கொண்டு மனிதனை ஏவும்படியான நப்ஸ் என்று இறைவனால் வருணிக்கப்பட்ட  மிகக் கொடிய நப்ஸ்  “அன்னப்ஸுல் அம்மாரா” வை  அதிக பசியைக் கொண்டு  மாத்திரமே கொலை செய்யமுடியும்.

பசித்திருப்பது பல படித்தரங்களை அதிகப்படுத்தும். சுவனத்து வாயலை திறக்கும். காட்சிக்கு ஓர் வழி யாகவும் அது அமையும். ஈஸா நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடும் சந்தர்ப்பத்தில்,

ولهذا علق سبحانه نيل سعادة الرؤية بالجوع حيث قال في مخاطبة عيسى عليه السلام (تجوع ترانى)

(ஈஸாவே !)  பசித்திருப்பீராக! என்னைக் கண்டு கொள்வீர் என அல்லாஹ் கூறினான். என்று தப்ஸீர் றூஹுல் பயானில் வந்துள்ளது.

நோன்பை பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

இவ்வசனத்தில் நோன்பு கஷ்டமான, அல்லது சிரமமான விடயம் என்பதனை பாரமாக  எடுத்துக்காட்டாமல் ஆசையூட்டும் விதத்தில் “ஈமான் கொண்ட விசுவாசிகளே!” என விழித்து கூறுகின்றான்.
அல் இமாம் ஹஸன் றழியல்லாஹு  அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்... 

وقال الحسن إذا سمعت الله يقول يا ايها الذين آمنوا فارفع لها سمعك فانه لامر تؤمر به او لنهى تنهى عنه
“ஈமான் கொண்ட விசுவாசிகளே!” என அல்லாஹ் சொல்ல நீ கேட்டால் உனது கேள்வியை அதற்காக  சீர் தூக்கிவிடு! ஏனெனில் நிச்சயமாக ஒன்றோ அது கொண்டு ( இறைவனால்  நன்மையை புரிவது கொண்டு) நீ ஏவப்படலாம், அல்லது தவிர்ந்து நடக்கும் படியான விடயத்தை தொட்டும் தடுக்கப்படலாம். என்றும்,

وقال جعفر الصادق لذة في النداء أزال بها تعب العبادة والعناء يشير الى ان المحب يبادر الى امتثال امر محبوبه حتى لوامره بإلقاء نفسه في النار

“ஈமான் கொண்ட விசுவாசிகளே!” என அல்லாஹ் அழைக்கும்  இவ்வழைப்பில் ஒரு இன்பம் இருக்கின்றது. ( இன்பமான  அச்சொல் கொண்டு) வணக்கத்தின் கஷ்டத்தையும், (என்மீது பாரமாகும் விடயத்தின்) கஷ்டத்தையும் நான் நீக்கிக் கொள்கிறேன். ஒரு அன்பன் தன்னால் விரும்பப்பட்ட அன்பிற்குரியவனின் (மஹ்பூபின்) விடயத்தை எடுத்து செயற்பட வேண்டும். அது தன்னை தீக்கிடங்கில் தூக்கி அவன் போட  ஏவி இருந்தாலும் சரியே எனவும் இதனூடாக   அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.

என இமாம்  ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் கூறிக்காட்டுகின்றார்கள்.

كتب عليكم الصيام اى على كل عضو في الظاهر وعلى كل صفة في الباطن. فصوم اللسان عن الكذب والفحش والغيبة. وصوم العين عن النظر في الغفلة والريبة. وصوم السمع عن استماع المناهي والملاهي وعلى هذا فقس الباقي. وصوم النفس عن التمني والحرص والشهوات. وصوم القلب عن حب الدنيا وزخارفها. وصوم الروح عن نعيم الآخرة ولذاتها. وصوم السر عن رؤية وجود غير الله وإثباته

 “நோன்பு உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது”  كتب عليكم الصيام என்ற அருள் மறை வசனத்திற்கு விளக்கம் தரும் தப்ஸீர் றூஹுல் பயான் ஆசிரியர் பின்வரும் கருத்துக்களை சொல்லிக்காட்டுகின்றார்கள்.

நோன்பு வெளிரங்க ஒவ்வொரு உறுப்புக்கள் மீதும், உள்ரங்க ஒவ்வொரு  தன்மையின் மீதும், விதிக்கப்பட்டுள்ளது. - நாவு, கண், கேள்வி, நப்ஸ், கல்ப், றூஹ், சிர்ரு ஆகியன நோன்பு நோற்கின்றன. அவற்றில்

‘நாவுடைய” நோன்பாகிறது: பொய், கெடுதி, புறம் பேசுதல் (நாவினால் ஏற்படும் தீய சொற்கள்) போன்றவற்றை விட்டும் தற்காத்துக் கொள்வதாகும்.

“கண்கள்” நோற்கும் நோன்பாகிறத: மறதி, மற்றும் சந்தேக கண் கொண்டு பிறர் வெறுக்கும் படியான விடயத்தை உறுதியின்றி கெட்ட எண்ணம் கொள்ளல் (அல்லது தப்பாக உற்று நோக்குதல்.) போன்றவற்றை விட்டும் தடுத்திருத்தல்.

“கேள்வி”யுடை நோன்பாகிறது:  தடுக்கப்பட்ட வீணான விடயங்களை கேட்பதை விட்டும் தடுத்திருத்தல்.

“நப்ஸ்” உடைய நோன்பாகிறது: பேரெண்ணம், பேராசை, மனோ இச்சைகள் போன்றவற்றை விட்டும் தன்மனதைத் தடுத்தல்.

 கல்பு” டைய நோன்பாகிறது:  துன்யாவுடைய  ஆசை அதன் சுகபோக அழகிய அலங்கார வாழ்க்கை போன்றவற்றை தன் உள்ளம் விரும்பாமல் தடுத்திருத்தல்.

“றூஹு” டைய நோன்பாகிறது: மறுமையில் கிடைக்கப் பெறும் நிஃமத்தை விட்டும், அதன் ஏனைய இன்பங்களை விட்டும் தடுத்திருத்தல்.

(தன்  ஆத்மா எனப்படும் றூஹுடைய சூக்குமத்தின் உள்ளே இருக்கும்) “சிர்ரு” என்பது நோற்கும் நோன்பாகிறது:   அல்லாஹ் அல்லாத உள்ளமையை (வேறு எவருக்கும், எதற்கும்) தரிபடுத்தல், அல்லாஹ் அல்லாத உள்ளமையை காணுதல். ஆகியவற்றை விட்டும் தடுத்திருத்தல்.


நாம் உள்றங்க நோன்பு நோற்க முடியாமல் போனாலும் ஆரம்பமான படித்தரத்தில் உள்ள வெளிரங்க நோன்புகளை சரிவர நோற்கப் பழகிக் கொள்ள வேண்டும். சடங்காக அல்லது அவர் என்னை நோக்கி “இவன்  ஒரு நல்ல நோன்பாளி” என்று சொல்ல வேண்டும் என்பதற்காக நோன்பு நோற்க கூடாது. அது அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்ட நோன்பாக இருக்கமுடியாது. மாறாக  அப்படியான நோன்பை எம் “முகங்கள்” மீது நாளை கியாமத்தில் திருப்பியடித்து வீசப்படும்.  காரணம் அதில் “முகஸ்துதி” கலந்திருக்கின்றது என்று.

இமாம் கஸ்ஸாலி றஹ் அவர்கள் தங்களின் சூபிஸ கிரந்தமான “இஹ்யா உலூதித்தீனில்” நோன்பு பற்றி குறிப்பிடும் போது அதன் வகைகளை மூன்று பிரிவுகளாக ஆக்கி அதன் விளக்கங்களையும் கீழ் குறிப்பிடப்படும் விதத்தில் தெளிவூட்டுகின்றார்கள்.

اعْلَمْ أَنَّ الصَّوْمَ ثَلَاثُ دَرَجَاتٍ صَوْمُ الْعُمُومِ وصوم الخصوص وصوم خصوص الخصوص وأما صَوْمُ الْعُمُومِ فَهُوَ كَفُّ الْبَطْنِ وَالْفَرْجِ عَنْ قضاء الشهوة كما سبق تفصيله وَأَمَّا صَوْمُ الْخُصُوصِ فَهُوَ كَفُّ السَّمْعِ وَالْبَصَرِ وَاللِّسَانِ وَالْيَدِ وَالرِّجْلِ وَسَائِرِ الْجَوَارِحِ عَنِ الْآثَامِ واما صوم خصوص الخصوص فصوم القلب عن الهضم الدَّنِيَّةِ وَالْأَفْكَارِ الدُّنْيَوِيَّةِ وَكَفُّهُ عَمَّا سِوَى اللَّهِ عز وجل بالكلية ويحصل الفطر في هذا الصوم بالفكر فيما سوى الله عز وجل واليوم الآخر وبالفكر في الدنيا إلا دنيا تراد للدين فإن ذلك من زاد الآخرة وليس من الدنيا

அறிந்து கொள்! நோன்பு மூன்று படித்தரங்கள் உடையதாக இருக்கின்றது. “சௌமுல் உமூம், சௌமுல் குஸூஸ், சௌமு குஸூஸில் குஸூஸ்” “சௌமுல் உமூம், (பாமரர்கள் நோன்பு) என்றால் மானத்தையும் வயிற்றையும், இச்சையை தீர்ப்பதை விட்டும் தடுப்பதாகும்.

சௌமுல் குஸூஸ்,  (விஷேடமானவர்களின் நோன்பு) என்றால் கேள்வி, பார்வை, நாவு, கை, கால், ஏனைய உறுப்புக்கள் போன்றவற்றை குற்றங்களை விட்டும் தடுத்திருத்தல்.

சௌமு குஸூஸில் குஸூஸ்” (விஷேடமானவர்களிலும் விஷேடமானவர்கள் நோன்பு) கீழ்த்தரமான மோசமான விடயங்கள், துன்யாவுடன் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் போன்றவற்றை விட்டும் தடுத்தல், மேலும் அல்லாஹ் தவிரவுள்ளவற்றை விட்டும்  ஒட்டு மொத்தமாக தடுத்திருத்தல். இவ்வகை நோன்பானது அல்லாஹ் தவிரவுள்ள  சிந்தனை தவிர்த்து வேறு சிந்தனை வருவதுகொண்டும், மறுமையின் சிந்தனை, இம்மையை (ஞாபகமூட்டும்) சிந்தனை ஏற்படுவது கொண்டும் நோன்பு “திறத்தல்” முறிதல் உண்டாகிவிடும். மார்க்கத்திற்காக நாடப்பட்ட இம்மையைத் தவிர. ஏனெனில் அது மறுமையின் கட்டிச்சாதத்தில் நின்றுமுள்ளதாகும். மேலும் அது இம்மையில் நின்றும் உள்ளது அல்ல. என்று விதி விளக்களித்து  அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.         

மேலும் உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தின் மீது “கடமையாக்கப்பட்டது போல்” உங்கள் மீதும் விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒப்பீடு செய்து, கருத்துக் கூறியும்  அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் அறிவுரை பகர் கின்றான்.

பாவங்கள் மன்னிக்கப்படும் பரிசுத்த றமழான்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
'நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமழான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்'

புகாரீ ஷரீப்​

தொடரும்.........

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தொடர் -02


றமழான் மாதம்  அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு  ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களைதான் விரும்பினால் தன்  குத்றத்” பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ  அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.

றமழான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் அருள்” கொண்டு அடியார்களுக்கு றஹ்மத்” வழங்குதல் பிழை பொறுத்தல்நரகத்தில் இருந்து விடுதலை  அளித்து  சுவனத்தை பரிசாக வழங்குதல்  ஆகியவற்றை  அல்லாஹ் செய்கின்றான். இங்கு ஒரு விடயத்தை நாம் கவனிக்கலாம். நோன்பு  எனும் வணக்கத்தை புனித மிக்க இந்த றமழான் மாதத்தில் உள்ளடக்கி அடியார்களுக்கு மூன்று அன்பளிப்புக்களை வழங்குகின்றான்.  இம்மூன்றும் மனிதனை புனிதனாக்குவதில் முக்கியமானவை ஆகும்.

பிறக்கும் போது அடியான் சுத்தமாகப் பிறந்தாலும்நாளடைவில் நான்” எனும் உணர்வு  அனைத்துப்பாவங்களையும் செய்யத் தூண்டி விடுகின்றது. அப்படி தீய பண்புகளை கொண்டு பிண்ணப்பட்ட இவனை முதலில் அருள் கொண்டு பார்க்கவேண்டும். பின்னர் அவனின் பாவங்களை அகற்றவேண்டும்.,  அதன் பின்னர் நரகத்திலிருந்து  விடுதலை  அளித்து சுவனத்திற்குள் நுளைவிக்க வேண்டும். மேற் சொன்ன விடயங்களான அருள்  கொண்டு பார்த்தல் (அதாவது  அருள் செய்தல்), “பாவத்தை மன்னித்தல்” போன்ற இவ்விரண்டும் செய்யப்படாமல் சுவனத்தில் நுழைய முடியாது. காரணம் சுவனத்தில் அனுப்பிரமாணம் அழுக்குடையவரும் (பாவம் சூழ்ந்தவரும்) உட் பிரவேசிப்பது  தடை செய்யப்பட்டுள்ளது.

அருள் என்பதற்கு இரக்கம்அன்புகருணை என்று சொல்லப்படும். இறைவனின் கோபத்தை விட இரக்கம் முந்தியதாகும். அவனின் அருள்  இல்லையெனில் நாம் நஷ்டவாளர்களில் ஆகிவிடுவோம். ஆகையால்தான் முதலில் அருள் அவசியத் தேவைப்பாடாக ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் இருக்கின்றது. அதனால்தான் நபி பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்,

37 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، قثنا هِشَامُ بْنُ عَمَّارٍ،. قَالَ: ثنا سَلَامُ بْنُ سَوَّارٍ، قثنا مَسْلَمَةُ بْنُ الصَّلْتِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ شَهْرِ رَمَضَانَ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّار     ِ»
الكتاب: فضائل رمضان
المؤلف: أبو بكر عبد الله بن محمد  ـ

றமழான் மாதத்தின் ஆரம்பம் (ஆரம்ப பத்து தினங்களும்) றஹ்மத்தாகும்”. அதன் நடுப்பகுதி (நடுப்பத்து தினங்களும்) பாவமன்னிப்பாகும்”,. அதன் இறுதி  (இறுதிப்பத்து தினங்களும்) நரக விடுதலையாகும்”.  என நவின்றார்கள்.

                                                                                                                நூல்: பழாயிலு றமழான்
                                                நூலாசிரியர் அபூபக்ர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத்
ஹதீத் இலக்கம் :37

இரண்டாவது விடயம் பாவமன்னிப்பாகும். ஆரம்பத்தில்  பார்க்கப்பட்ட இந்த ஹதீத் ('நம்பிக்கை கொண்டுநன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்' )  றமழான் மாதம் நம்பிக்கை கொண்டுநன்மையை எதிர்பார்த்து நோன்பு பிடித்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது எனவும்,

இன்னுமோர் ஹதீத்

 حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது.
நூல்: புகாரீ

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட ஹதீதும்கீழ் கண்ட இந் நபீ மொழியும் முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதுடன்நம்பிக்கைகொள்ளல்நன்மையை எதிர்பார்த்தல் எனும் இரண்டு அம்சமும் அவ்விரண்டு பொன் மொழிகளிலும் கண்டிப்பான நிபந்தனையாக விளக்கப்பட்டுள்ளது.

பாவங்களைப் பொறுத்த மட்டில் சிறிய பாவம்பெரிய பாவம் என இரண்டு பாவம் உள்ளது. பெரிய பாவங்களில் (உதாரணமாக)  :- அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்மற்றும் தண்டணைக்குரியமார்க்க சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடிய களவுவிபச்சாரம்மது அருந்துதல்பத்தினித்தனமான கற்புள்ள பெண்னைவேண்டு மென கோபம்பொறாமையின் காரணமாக அவதூறு  கூறுதல் போன்றன உள்ளடங்கும். மற்றும் பெரிய பாவங்களுல் அண்ணல் நபி நாயகத்தால்  அழிவுப்பாதையின் பால் அழைத்துச் செல்லும் என அச்சமூட்டப்பட்ட பாவங்களும் சேரும்.

இவ்விரு வகையான பெரிய பாவங்களுல்  இணைவைத்தல் என்ற ஷிர்க்” ஆன பாவத்தை நான் மன்னிக்கவே  மாட்டேன் என வள்ள ஹக்” தஆலா நாயன் அருள் மறையில் வலியுறுத்திக்கூறுகின்றான். ஆயினும் மற்ற பெரிய பாவங்களை தான் நாடியோருக்கு மட்டும் மன்னிப்பதாக சலுகை வழங்கி கருணையுடன்  வாக்களித்துமிருக்கின்றான்.

மேலும் பெரிய பாவங்கள் என சுட்டிக்காட்டப்படாத பாவங்கள் தொழுகையைக் கொண்டும்இஸ்திக்பார், (பாவமன்னிப்புக் கேட்டல்)தௌபா  (பாவத்தைவிட்டும் நீங்கி  அப்பாவத்தை இனிமேல் செய்யாமல் அல்லாஹ்வின் பால்  மீளுதல்) துஆ கேட்டல் என்பன வற்றால்  அல்லாஹ்வின் அப்வ்’ எனப்படும் மன்னிப்பு கொண்டு  மன்னிக்கப்படுகின்றன.

பாவ மன்னிப்பின் அவசியம்.

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَىٰ بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்ஆகவேஉங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்அதுவே உங்களைப் படைத்தவனிடம்உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாகஅவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும்பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
அல் குர்ஆன்.

   فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ

2:59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
அல் குர்ஆன்

மேற்கண்ட வசனங்களில்  அல்லாஹ்வுக்கு காளை” மாட்டை இணையாக்கிய கூட்டத்தைப் பற்றியும்அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களின் பாவங்களின் காரணமாக  தண்டணை இறக்கப்பட்டது எனவும் அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.

ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِين-َ2:222

பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” 
அல் குர்ஆன்

الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ  ۖ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும்பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்யாவற்றையும் நன்கறிபவன்.
அல் குர்ஆன்

(ஆரம்பமாக வந்த) இரு வசனங்களைத் தொடர்ந்து வந்த மற்றய (இரு) வசனங்களில் முதலாவது வசனத்தில் தெளபா” செய்பவர்கள ( பாவத்தை விட்டும் மீளுபவர்களை)அல்லாஹ் விரும்புவதாகவும்பரிசுத்தமுடையவர்களை  விரும்புவதாகவும் கூறிக்காட்டுகின்றான். அல்லாஹ்வின் நேசம் கருணை அவனளவில் அடியார்  தன் பாவம் போக்க மனம் அழுதுசளித்துகண்ணீர் மல்க தௌபா” கேட்பது கொண்டும்மனச்சுத்தம்மனக்கறை அகற்றுவது கொண்டுமே நிகழ்கின்றது. என்பதை தெளிவாக அய்யமற படம்பிடித்துக்காட்டுகின்றது.

இரண்டாவது வசனம்  அடியாருக்கு பாவன்னிப்பு” எனும் நற்பேற்றை வழங்குவது கொண்டும்செல்வத்தை நல்குவதுகொண்டும் ஷைதானுக்கு சாட்டையடி விழுவதை போதிக்கின்றது. இரு வசனங்களும் பாவன்னிப்பை உணர்த்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا  ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

2:285. (இறை) தூதர்தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும்அவனுடைய மலக்குகளையும்அவனுடைய வேதங்களையும்அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ  ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லைஅது சம்பாதித்ததின் நன்மை அதற்கேஅது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!

மேற்கண்ட இறுதி இரு வசனங்களும் அர்ஷுக்கு கீழ் உள்ள பொக்கிஷம்” என  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொல்லப்பட்டவையாகும். அதை இரவில் ஓதுவதால் அதிக நன்மைகள் இருப்பதாகவும் வருகின்றது. இவ்விரு வசனங்களும் பாவமன்னிப்பை அடியார்கள் அல்லாஹ்விடம் முறையீடாக ஒப்பிப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

 தௌபா செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு  இருக்கின்றது.

إِلَّا الَّذِينَ تَابُوا مِن بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

3:89. எனினும்இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும்அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுவதால் பாவங்கள் அகன்றுவிடுகின்றன.

சான்று -01

அபூஸிர்மா மாலிக் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது, "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியை உங்களிடம் கூறாமல் மறைத்துவைத்திருந்தேன். (அதை இப்போது உங்களிடம் கூறுகிறேன்:)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் பாவம் செய்யாதவர்க ளாக இருந்து விட்டால்நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.

மேற்கண்ட ஹதீத் அபூ ஹுறைறா றழி அவர்களைத்தொட்டும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாகிறது...

11 - (2749) حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ جَعْفَرٍ الْجَزَرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ لَمْ تُذْنِبُوا لَذَهَبَ اللهُ بِكُمْ، وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ فَيَغْفِرُ لَهُمْ»

சான்று 02

5304. நபி பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால்அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டுபாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.
ஸஹீஹ் முஸ்லிம்.

இந்த ஹதீத் பாவம் எனும் செயலை வலியுறுத்துகின்றது. என்று தப்பாக நினைக்க  வேண்டாம். சஹாபாக்களின் செயல் முறைகளை அவதானித்த அண்ணல் நபீ ஸல் அவர்கள் சஹாபா தோளர்கள் உலகில் பற்றற்று வாழ்வது ஒட்டு மொத்தமா உலக ஆசாபாசங்களை ஒதுக்கி விடக்கூடும். அப்படியவர்கள் வாழ்ந்தால் நன்மையைத்தவிர தீமைகளைச் செய்யமாட்டார்கள். தீமை அவர்களில் இருந்து வெளியாகாமல்  இருந்தால் அல்லாஹ்விடம் அழுதுபுலம்பி தன் தவறுகளை முன்வைத்து சுட்டிக்காட்டி முடுகுதல் (நெருக்கம்) பெறமாட்டார்கள். அல்லாஹ் அளவில் நெருக்கம் பெறுவதானது அவன் அளவில் பிழை பொறுக்கத் தேடுவது கொண்டே அல்லாமல் நிகழ்ந்து விடாது.மேலும் தன் பாவத்தை வருந்தி  முனாஜாத் செய்து பிழை பொறுக்கத்தேடி தௌபாசெய்வது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமுடையதாகவும் இருக்கும் என்பதற்காகவே அல்லாமல் அப்படி அவர்கள் சொல்லவில்லை.

2186 - / 2752 - وَفِي الحَدِيث السَّابِع وَالسِّتِّينَ: ((لَو لم تذنبوا لذهب الله بكم ولجاء بِقوم يذنبون فيستغفرون فَيغْفر لَهُم)) .
هَذَا دَلِيل على أَن المُرَاد من العَبْد الذل؛ فَإِن المذنب منكسر لذنبه، منكس الرَّأْس لجرمه، وَبِهَذَا يبين ذل الْعُبُودِيَّة وَيظْهر عز الربوبية، وَفِيه تَقْوِيَة لرجاء المذنب فِي الْعَفو                                                                                                         
الكتاب: كشف المشكل من حديث الصحيحين
المؤلف: جمال الدين أبو الفرج عبد الرحمن بن علي بن محمد الجوزي (المتوفى: 597هـ)

               
(நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால்அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டுபாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான்) என்ற இந்த ஹதீதை கொண்டு நோக்கம்  அடியானிடத்திலிருந்து ஏற்படக்கூடிய (பாவத்தை வருந்திய) சடைதலாகும். நிச்சயமாக பாவியாகிறவன் தனது பாவத்தின் காரணமாக  மனம் உடைந்துபோய் இருக்கின்றான். தன்னில் நின்றும் உண்டான குற்றத்திற்காக தலையை தொங்கப் போட்டவனாகவும் இருக்கின்றான். இந்நிலையில் அடிமையை சார்ந்த சடைதல் தெளிவாக வெளியாகின்றது. மேலும் றப்பைச் சார்ந்த வலுப்பமும் வெளிப்புறப்படுகின்றது. மேலும் அதில் மன்னிப்பளவில் பாவியின் ஆதரவுக்கான பலமும் தங்கியிருக்கின்றது. 

என கஷ்புல் முஷ்கில் மின் ஹதீதிஸ்ஸஹீஹைன் எனும் நூலில்  அல் இமாம்  ஜமாலுத்தீன் அபுல் பறஜ் அப்துர்றஹ்மான் இப்னி அலிய்யிப்னி முஹம்மத் அல்ஜவ்ஸீ என்ற பெரியார் விரிவுரை செய்கின்றார்கள்.

கீழ்வரும் சம்பவமும் ஏற்கனவே நான் சொன்ன கூற்றுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றது. இந்த சம்பவம் பைஹகீ  இமாம் அவர்கள் தங்களின் கிரந்தமான ஷுஅபுல் ஈமான் எனும் ஹதீத் நூலில் எழுதிக்காட்டுகின்றார்கள்.

وأخرج البيهقي في شعب الايمان عن عبد الله بن عمرو قال: أنزلت (إذا زلزلت الأرض زلزالها) [سورة الزلزلة: 1] وأبو بكر قاعد فبكى أبو بكر، فقال له رسول الله صلى الله عليه وسلم: " ما يبكيك يا أبا بكر " قال: أبكاني هذه السورة.
فقال له رسول الله صلى الله عليه وسلم: " لو أنكم لا تخطئون، ولا تذنبون فيغفر لكم، لخلق الله أمة من بعدكم يخطئون ويذنبون فيغفر لهم ".

அப்துல்லாஹ் இப்னு அம்று றழி அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதா சுல்சிலா சூறா இறக்கப்பட்டது. அந்நேரம் ஹஸ்றத் அபூபக்ர் சித்தீக் றழி அவர்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அபூபக்ரே ! உங்களை அழவைத்தது எதுஎன கேட்டார்கள். அதற்கவர்கள் (நாயகமே) ! இந்த சூறத் என்னை அழச் செய்தது. என்றார்கள். உடனே நபிகள் நாயகம் ஸல் அவர்கள்  (அல்லாஹ்) உங்களுக்கு மன்னிப்பான் என்பதற்காக” தவறு செய்யாதவர்களாகவும்பாவம் செய்யாதவர்களாகவும் நீங்கள் இருந்தால் உங்களுக்குப் பின்னால் பாவம்தவறு செய்யக்கூடிய (அதன் பிறகு மன்னிப்புக் கேட்கக்கூடிய) ஒரு சமூகத்தை அல்லாஹ் படைத்து அவர்களுக்கு அவர்களின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.  என அபூபக் சித்தீக் நாயகத்திற்கு அண்ணலார் விளக்கிக் கூறினார்கள்.

சான்று - 03
          
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي اليَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً»

6307. அபூ ஹுரைரா(ரலி)  அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது முறை பாவமன்னிப்புத் தேடியதாக மேற் கண்ட ஹதீதில் அவதானிக்க முடிகின்றது. மேலும் இன்னும் சில ஹதீதுகளில் நூறு முறை பாவமன்னிப்புத் தேடியதாகவும் இடம் பெற்றிருக்கின்றது. அவ்விரு எண்ணிக்கையைக் கொண்ட ஹதீதுகளும் சமூகத்திற்கு படிப்பிணையூட்டுவதற்காகவும்தன்  பணிவை வெளிக் காட்டுவதற்காகவுமே  நபிகள் நாயகம் செய்தார்கள். அவர்கள் பாவம் செய்து பாவமன்னிப்புக் கோருமளவிற்கு பாவியல்லர். அவர்கள் முன் பின் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள். என இமாம்கள் கூறுகின்றார்கள். இன்னும் சில இமாம்கள்  அல்லாஹ்வுக்கும்அடியானுக்குமிடையில் நூறு ஒளித்திரையும்இருட் திரையும் இருக்கின்றன. ஆயிரம் மகாம் (அந்தஸ்த்படித்தரம்) களும் இருக்கின்றன. ஒவ்வொரு படித்தரங்களையும் கடந்து செல்லும் போதும் பாவமன்னிப்புத் தேடுகின்றார்கள். அப்போது சகல திரைகளையும்,  ஆயிரம் அந்தஸ்த்துக்களையும் கடந்து பூரணத்துவம் பெறுகின்றார்கள். எனவும்ஒரு அடியார் ஒரு நிலையிலிருந்து மற்ற நிலைக்கு உயர்ந்து செல்கின்றார் அப்போது ஆரம்ப படித்தரத்தில் தரிபட்டு அதை கடந்த பின் இரண்டாம் படித்தரத்தில் நின்று அந்த படித்தரத்தை முந்தியதைக் காண உயர்வாக (சிறப்பாக) கருதுகின்றார். அப்போது அதற்காக பாவமன்னிப்புத் தேடுகின்றார் என ஜுனைதுல் பக்தாதீ இமாம் அவர்கள் கூறிய கருத்தை ஆரிபீன்கள் எடுத்துக் கூறுகின்றார்கள்.

ஆதாரம் : றூஹுல் பயான்.

கூறப்பட்ட ஹதீதை இவ்விடத்தில் எங்களுக்கு படிப்பினையாக எடுத்து மாத்திரம் செயற்படுவது சிறந்ததாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பாவம் இளைத்தார்கள் அதனால் பாவமன்னிப்புத் தேடினார்கள் என்று ஒரு மண்ணளவும் எண்ணிவிட வேண்டாம். அவர்களின் அந்தஸ்த்திற்கு அநுவளவும் நாம் செல்லவில்லை இனி ஒருபோதும் எவரும் செல்லப் போவதுமில்லை என்பதே திண்ணம்.

சான்று- 04

7 - (2747) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ وَهُوَ عَمُّهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ، مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلَاةٍ، فَانْفَلَتَتْ مِنْهُ وَعَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ، فَأَيِسَ مِنْهَا، فَأَتَى شَجَرَةً، فَاضْطَجَعَ فِي ظِلِّهَا، قَدْ أَيِسَ مِنْ رَاحِلَتِهِ، فَبَيْنَا هُوَ كَذَلِكَ إِذَا هُوَ بِهَا، قَائِمَةً عِنْدَهُ، فَأَخَذَ بِخِطَامِهَا، ثُمَّ قَالَ مِنْ شِدَّةِ الْفَرَحِ: اللهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ، أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ "

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடி விட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்துஒரு மரத்திற்கு அருகில் வந்துஅதன் நிழலில் படுத்திருந்தார்.

தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோதுஅந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், ("இறைவா! நீ என் இறைவன்நான் உன் அடிமை" என்று சொல்வதற்குப் பதிலாக) "இறைவா! நீ என் அடிமைநான் உன் இறைவன்" என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

மேற்கண்ட நபி மொழியில். இறைவா! நீ என் இறைவன்நான் உன் அடிமை" என்று சொல்வதற்குப் பதிலாக)

"இறைவா! நீ என் அடிமைநான் உன் இறைவன்" என்று தவறுதலாக அந்த மனிதன் சொன்னான். இது உண்மையில் தவறிச் சொன்ன சொல்லாகும். குற்றம் பிடிக்க அல்லாஹ் நாடினால் காரணம் ஒன்றை ஏற்படுத்தி குற்றம் பிடித்திருக்கலாம். அப்படி றப்புல் ஆலமீன் செய்யவில்லை. மனிதன் மகிழ்ச்சியில் ஒன்றை தவறாகச் செய்வதை குற்றமாக எடுக்கமாட்டான் என்பதற்கு இது தகுந்த சான்றாகும்.மேலும் தவறாக நான் உனது இறைவன்” எனச்சொன்ன இந்த மனிதரைவிட தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என்பதும்தெளிவாகின்றது.

சான்று 05

1 - (2675) حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي، وَاللهِ لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ يَجِدُ ضَالَّتَهُ بِالْفَلَاةِ، وَمَنْ تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا، تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَمَنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا، تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِذَا أَقْبَلَ إِلَيَّ يَمْشِي، أَقْبَلْتُ إِلَيْهِ أُهَرْوِلُ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவு கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்" என்று கூறினான்.

அல்லாஹ்வின் மீதாணையாக! பாலைவனத்தில் தொலைத்துவிட்ட தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்கும்போதுஉங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடதன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்.

யார் என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்குகிறாரோநான் அவரிடம் ஒரு முழம் அளவு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் நெருங்குகிறாரோநான் அவரிடம் (வலம் இடமாக விரிந்த) இரு கை நீட்டளவு நெருங்குகிறேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால்நான் அவரை நோக்கி ஓடிச்செல்கிறேன் (என்று அல்லாஹ் கூறினான்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாவம் செய்தவர்கள் அல்லாஹ்வை பயந்து நடக்கவேண்டும்.

وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ

2:48. இன்னும்ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதுஅதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாதுஅன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன்
செய்யிதுல் இஸ்திஃபார்

6306 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا الحُسَيْنُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: حَدَّثَنِي بُشَيْرُ بْنُ كَعْبٍ العَدَوِيُّ، قَالَ: حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
سَيِّدُ الِاسْتِغْفَارِ
أَنْ تَقُولَ           : اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ "
قَالَ: «وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ»

6306. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்'
'அல்லாஹும்ம! அன்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த. கலக்தனீ. வ அன அப்துக. வ அன அலா அஹ்திகவ வஃதிக்க மஸ்த தஃத்து. அஊது பிக மின் ஷர்றி மா ஸனஅஃத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக அலய்யவ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்தஎன்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

 (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும்நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவேஎன்னை மன்னிப்பாயாக! ஏனெனில்பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்கள்

                                      ஆதாரம்  : ஸஹீஹுல் புஹாரீ.

றமழான் காலங்களில் மட்டும் பாவமன்னிப்புத் தேடி  மீட்சி பெற வேண்டுமென  விரும்பாமல், ஒவ்வொரு நாளும் எங்களின் ஒவ்வொரு செயலுக்காகவும்தீய சில எண்ணங்களுக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு  தேடப் பலகிக்கொள்ள  வேண்டும். இது புனிதம் நிறைந்த றமழானின் மக்பிறத்” பற்றிய சில சுருக்கமான விளக்கமாகும்.

               தொடரும்................................