Jul 29, 2015

நன்றி செலுத்துவோம்

من لم يشكر الله النّاس لم يشكرالله


மனிதனுக்கு நன்றியுள்ளவனாக இருக்காதவன் (மனிதனுக்கு நன்றி சொல்லாதவனும், செய்யாதவனும்) அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவனாக இருக்க மாட்டான். (அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னவனாகவும், செய்தவனாகவும் ஆகான்)

அல்லாஹ்மனிதனுக்கு செய்கின்ற அருள்கள், உதவி உபகாரங்களுக்கு அவனுக்கு மனிதன் நன்றியுள்ளவனாக இருப்பது அவனின் தலையாய கடமையாகும்.

ஷாகிர்நன்றியுள்ளவனாயிருப்பதை விட ஷகூர்அதிகம் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும். நன்றியுள்ளவனாக இருப்பதென்றால் இறைவா! உனக்கு எனது நன்றிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை மட்டும் குறிக்காது. “அல்ஹம்துலில்லாஹ்என்றும், “லகல்ஹம்து வலகஷ் ஷுக்ர்என்றும் சொல்வதுடன் அல்லாஹ் செய்த, செய்து கொண்டிருக்கின்ற உதவி உபகாரங்களை எண்ணி நினைத்துஅவன்மீது அன்பு கொள்ளவும் வேண்டும். அதோடு மட்டும் நின்று விடாமல் அவன் ஏவியதை எடுத்தும், விலக்கியதை விட்டும் நடக்க வேண்டும்.

மனிதனுக்கு நன்றி செய்யாதவன்அல்லாஹ்வுக்கு நன்றி செய்யாதவனாவான்என்ற மேற்கண்ட தத்துவம் மனிதனாய் தோற்றுபவனும் அவன்தான்என்ற தத்துவத்தை மறைமுகமாக உணர்த்துவதுஅக்ல்உள்ளவர்களுக்குமனிதர்களுக்குமறைவானதல்ல.

மனிதர்களில் ஒருவன் இன்னொருவனுக்கு எவ்வாறான உதவி செய்தாலும் அவனுக்குجزاك الله خيرا  அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்குவானாக என்று சொல்வதுபிராத்தனை செய்வதுஅவனுக்கு நன்றியுள்ளவனாக இருப்பதாக ஆகும்.

ஓர் ஆலிம்வஹ்ஹாபியாக இருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். – ஒரு பாமரனுக்கு உதவி செய்தவனுக்கு நன்றி சொல்வது இவ்வாறுதான் என்று ஒருதுஆவை கற்றுக் கொடுத்தான்.

جزاك الله خير الجزاء وطوّل الله ما بين فخذيك

அந்தப் பாமரனும் இதை மனனம் செய்து சொல்லி வந்தான். சில நாட்கள் கழிந்து விட்டன. ஒரு நாள் அவனைக் கண்ட தரமான, வயது முதிர்ந்தஹஸ்றத்அவனுக்கு ஐந்து ரூபாய் பணத்தை அவன் கைக்குள் வைத்தார். அவருக்கும் அவன் அவ்வாறே சொன்னான். ஆலிமுக்கு ஆத்திரம் பொங்கியது. அவன் கன்னத்தில் அடித்து விட்டார். அவன் காவல் துறையில் முறைப்பட்டான். காவல்துறை அதிகாரி வினவிய பிறகுதான் மொழி தெரியாததால் ஏற்பட்ட குழப்பம் என்பது தெரிய வந்தது. அதிகாரி இருவருக்கும் அறிவுறை கூறி அனுப்பி வைத்தார்.

Jul 17, 2015

மனம் நிறைந்த மணமான பெருநாள் வாழ்த்துக்கள்




கண்ணியத்திற்குரிய ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே!
தஸவ்வுப் ஸூபிஸ வழியில் வாழும் சங்கைக்குரிய உஸ்தாத்மார்களே!
அன்பிற்குரிய முரிதீன்களே! சகோதர சகோதரிகளே!

இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைக் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் அனைவரும் எல்லாம் வளங்களும் பெற்று நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ எல்லாமாயும் வெளியாகிக் காட்சி தரும் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்துகிறேன்.

காதிமுல் கவ்மி

+++++++++++++++++

التهاني المعطّرة

أيّها العلماء السنّيون ! 
والأساتيذ المتصوّفون! 
والمريدون المخلصون!
والأصدقاء المقرّبون!

أهنّيكم فى هذا اليوم المبارك بتهنئةٍ معطرة تطيب بها قلوبكم، وتنفرج بها كروبكم، وتزول بها هُمومُكم وغُمومُكم،

                 أسعدكم الله من هذا اليوم المبارك - يوم عيد الفطر - إلى أن تمشون بالعصا، وأطال بقائكم إلى أن تنالوا ما نال من سبقكم من الأولياء العارفين الكاملين الواصلين، وأغناكم عمّا فى أيدى النّاس، وعطّر قبوركم بعَنْبَر مغفرة ورضوان، ونوّر قلوبكم بالحكمة والعرفان، وجعلكم مئمنين بعقيدة وحدة الوجود، التي هي الإيمان الحقيقيّ، وحفظكم من الوقوع فى أحوال الغيريّة والأنّيّة والأنانيّة، ومن شرور الوهّابيّين الذين هم الأفاعي الغادرة والسُّموم القاتلة،

"قلوب الأحرار قبور الأسرار" 

خادم القوم
عبد الرؤوف عبد الجواد


மகிழ்ச்சி தரும் பெருநாட்கள்

உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும்  வருடத்தில் இரு “பெருநாள்” கொண்டாடுகின்றார்கள். இவ்விரு பெருநாட்களும் இஸ்லாத்தில் மார்க்கமாக்கப்பட்டவையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் முக்கிய அம்சங்களில் மூன்றாவதான “நோன்பு” எனும் கடமையை அல்லாஹ்வுக்காக நோற்று, தன் மனவெழுச்சியை அவனுக்காக அடக்கிப் பசித்திருந்து, தாகித்திருந்து, சிறிய, பெரிய பாவங்களை விட்டும் தவிர்ந்து, பகலில் நோன்பிருந்து, இரவில் நின்று வணங்கி , றஹ்மத், மஃபிறத், இத்கும் மினன்னார் போன்றவற்றை ஆதரவு தேடி அல்லாஹ்விடம் “துஆ” பிரார்த்தனை செய்து இறுதியில் மனம் மகிழ பிரியாவிடை கொடுத்து றமழானை வழியனுப்பி விட்டு அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி, துதித்து, தக்பீர் முழங்க இறை நினைவில் கொண்டாடும் பெருநாளை “நோன்புப் பெருநாள்” என்று சொல்கின்றோம். 

Jul 14, 2015

“நிய்யத்” வைத்தான் தொழவில்லை. தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை.

ஒருவன் ஒரு தொழுகைக்காகநிய்யத்வைத்தான். ஆனால் அவன் தொழவில்லை. அவன் ஒரு தொழுகையை தொழுதான். அதற்காக அவன்நிய்யத்வைக்கவில்லை. அத் தொழுகை எது? அதற்கான விபரம் என்ன?
ஒருவன் வெள்ளிக்கிழமைஜும்ஆதொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வந்த நேரம்இமாம்” – தொழுகை நடத்தியவர்இரண்டாவதுறக்அத்தில்அத்தஹிய்யாத்இருப்பில் இருந்தார். தொழ வந்தவன்ஷாபிஈமத்ஹப் சட்டப்படிஉஸல்லீ பர்ழல் ஜும்ஆ” “ஜும்ஆவின் பர்ழை தொழுகிறேன் என்று நிய்யத் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தியவருடன்அத்தஹிய்யாத்இருப்பில் சேர்ந்து அத்தஹிய்யாத்ஓதினான். “இமாம்தொழுகையை முடித்த பின்அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்என்றுஸலாம்சொன்ன பின்அவன் எழுந்து நான்குறக்அத்தொழ வேண்டுமேயன்றி இரண்டுறக்அத்தொழக் கூடாது என்ற ஷாபிஈ மத்ஹபின் சட்டப்படி அவன் நான்குறக்அத்தொழுது முடித்தான்.

Jul 12, 2015

மகத்தான இரவு புனித “லைலதுல் கத்ர்”

லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில்  ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான  சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும்  நாட்களில் உள்ள இரவுகளில்  ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின்  கடைசிப்பத்து நாட்களும்  இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும்.

கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள் ஊடாக இடம் பெற்ற ஹதீஸ்களாகும்....

2015 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ»

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள்.

நூல் : புகாரி ஷரீப் , 
அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) அவர்கள்.

முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி

சத்திய சன்மார்க்கத்தை நிலைநாட்ட இறையோனின் பாதையில் அயராது உழைத்த நிறைநேசச் செல்வர்களான அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரீ (குப்பிகாவத்ததை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (அட்டாளைச்சேனை) குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் நினைவாக றமழான் பிறை 24ம் இரவன்று (11.07.2015 சனிக்கிழமை) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முப்பெரும் நாதாக்களின் முபாறக்கான கந்தூரி நடைபெற்றது.

Jul 9, 2015

“அத்துஹ்பதுல் முர்ஸலா” தரும் “வஹ்தத்துல் வுஜூத்” தத்துவம்)

إعلمو إخواني أسعدكم الله وإيّانا أنّ الحقّ سبحانه وتعالى هو الوجود، وأنّ ذلك الوجود ليس له شكل ولا حصر، ومع هذا ظهر وتجلّى بالشّكل والحدّ، ولم يتغيّر عمّا كان من عدم الشّكل وعدم الحدّ، بل هو الآن كما كان عليه.


என்தருமைச் சோதரீர் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களையும், எம்மையும் நற்பாக்கியம் உள்ளவர்களாக ஆக்குவானாக!

அல்லாஹ்தான்வுஜூத்ஆவான். உள்ளமை ஆவான். “வுஜூத்என்றால்உள்ளமைஎன்று பொருள் கொள்ள வேண்டும். உள்ளமை என்பது வேறு. உண்மை என்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

உண்மை என்ற பொருளுக்குஸித்குன்அல்லதுஹக்குன்என்ற சொல்தான் பாவிக்கப்படும். “வுஜூத்என்ற சொல் பாவிக்கப்படுவதில்லை. உள்ளமை என்ற பொருளுக்குவுஜூத்என்ற சொல்தான் பாவிக்கப்படும்.

வுஜூத்என்ற சொல்லின் எதிர்ச் சொல் இல்லாமை என்ற பொருள் தருகின்றஅதம்என்ற சொல்லாகும். உண்மை என்ற பொருள் தருகின்றஸித்க்என்ற சொல் அல்ல.

Jul 8, 2015

الله - அல்லாஹ்

மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) -

اللهஅல்லாஹ் என்ற பெயர் தெய்வீகத்தன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய யதார்த்தமான உள்ளமைக்குரிய பெயர்.அந்த யதார்த்தமான உள்ளமையாகிய அல்லாஹ்வைத்தவிர உள்ள மற்ற அனைத்து வஸ்துக்களும் சுயமான உள்ளமை அற்றவையாகும். அவை அல்லாஹ்வின் யதார்த்தமான உள்ளமையிலிருந்து உள்ளமையை பெற்றவையாகும். அல்லாஹ் என்பது அவனது 99 திருநாமங்களில் அவனது ذات -  உள்ளமைக்குரிய பெயர் மற்றயவை அனைத்தும் அவனது பண்புப்பெயர்கள். அல்லாஹ் என்ற பெயர் அவனுக்கு மாத்திரமே பாவிக்கப்படக்கூடிய பெயர்.இந்த கண்ணியமான பெயரை வேறுயாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பாவிக்கமுடியாது.

Jul 7, 2015

நோன்பு மூன்று வகை

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

நோன்பை ஆன்மீக வாதிகள் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.

ஒன்று – “ஸவ்முல் அவாம்பொது மக்களின் நோன்பு. இதுஸவ்முஷ் ஷரீஆஷரீஆவின் நோன்பு எனப்படும். இந்த வகை நோன்புநோன்பை முறிக்கும் காரியங்கள்என்ற மார்க்கத்தில் சொல்லப்பட்ட – “ஷரீஆவில் கூறப்பட்டகாரியங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடும். வீணாகி விடும். இந்த நோன்புகளாமீண்டும் நோற்கப்பட வேண்டும்.

Jul 6, 2015

தமிழ் நாடு ஜமாஅதுல் உலமாவுக்கான பாராட்டுக் கடிதம்

இந்தியா - தமிழ் நாடு ஜமாஅதுல் உலமா சபை வழங்கிய பத்வாவை ஆதரித்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக 05.07.2015 அன்று தமிழ் நாடு ஜமாஅதுல் உலம சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடிதத்தை உலமாஉகளின் பார்வைக்காக இங்கு தருகிறோம்.

الحمد لله الذي نوّر قلوب أنبيائه وأوليائه وعلمائه الربّانيّين بمصابيح العلوم الظاهرة والباطنة، وهدى بهم من ضلّ وزلّ عن العقائد السنّيّة الفاخرة، وطهّربهم قلوب المتنجّسين بالعقيدة الغيريّة، وأعلى بهم مراتب من اتصف بالعقيدة العينية، والصلاة والسلام على أوّل قابل للتجلّي من الحقيقة الكليّة، وعلى آله وأصحابه الذين حازوا الخيرات كلّها ببركات سيّد البريّة، وبعد

فإلى سعادات العلماء السنيّين الكرام! والأساتيذ الربّانيّين  العظام! المنتمين إلى جماعة العلماء بتامل ناد،

السلام عليكم ورحمة الله وبركاته 

أقدّم إلى سعاداتكم أجمل التّهاني وأفضل التحيّات، وأرفع يدي إلى الله الذي لاإله غيره ولا شيئ سواه، ليطيل أعماركم فى نشـر دينه، ولِيَحْفَظَكُم من شرور أعدائكم الذين لا نصيب لهم من العقيدة السنّة الأشعريّة، ولا حظّ لهم من العقيدة الصوفيّة الصافية،

ولمّا عرفت فتواكم بردّة رين العابدين بالراء المهملة، غرقت فى بحر الفرح والسـرور، وأخبرتُ الخبر لجميع الأصدقاء الذين يعملون فى البلاد الخارجيّة من الدّول العربية وغيرها،

إنّ فتواكم هذه قدّت عنقه وأعناق المبتدعين الوهّابيّين الذين يتعلّقون بأذياله ويعيشون بإحسانه، وقلعت أسنانهم بعرقها، وألقتِ الرُّعب فى قلوبهم ودمّرت مخاخَهم،

وأمّا الوهّابيّون بهذه الدّولة فهم منتشـرون فى كلّ ناحية من نواحيها، وفي كلّ قرية من قراها، فقد عمّت الوهّابيّة العباد والبلاد، ودخلت كلّ بيت من بيوت المسلمين، كما تدخل الدِّيدانُ فى أيّام المطر والوحل والبرد الشديد، فكان الأب سنّيا والإبن وهّابيّا فى بيت واحد،

وأمّا العلماء بهذه الدّولة فطائفتان فى العقيدة، طائفة سنّيّون، وطائفة وهّابيّون، والسنّيون أكثر عددا من الوهّابيّين فى نفس الأمر، والوهّابيّون أقلّ منهم، ولكنّهم - الوهّابيّين - أقوياء منهم، والعلماء السنّيّون يخافون من الوهّابيّين خوفا شديدا لقلّة البضاعة فى سفينتهم، فلا يطلعون فى المحافل والمجالس ولا ينكرون شيأ ممّا يقول الوهابيّون، ولايردّون على عقائدهم الفاسدة، واحد منهم يصبح سنّيا ويمسـي وهّابيّا، بسَبَبِ ماينال من الأغنياء الوهّابيّين من الأموال والمساعدات، وأمّا الوهّابيّون فهم أشدّ عداوة على العلماء السنّيّين، لا سِيَّمَا على هذا الفقير الحقير، الذي شغله وكسبه إنكارهم وإقامةُ علمِ التصوف - التوحيد الحقيقي-، 

وشكرا لكم على سعيكم

أحقر العباد وأخوكم فى الله
عبد الرؤوف عبد الجواد


والسلام الأسنى والتحية الحسنى عليكم جميعا
وعلى الشيخ أبى الدلائل عبد الله جمالي
وعلى دائم الوضوء خاجا محي الدين الباقوي


Jul 5, 2015

ஜாக்கிரதை இது வஹ்ஹாபிகளின் ஊடுருவல்

இலங்கைத் திருநாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்

             நமது உயிரினும் மேலான நற்குணத்தின் தாயகம், “ஷரீஆ”வின் மூலவர், நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா? என்ற தலைப்பில் ஆதாரங்களோடு நான் பேசிய கருத்துக்களில் வஹ்ஹாபிகள் ஊடுருவல் செய்தும் திரிவுபடுத்தியும் மக்கள் மத்தியில் தவறான - பொய்யான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

                    நான் இவர்களை எதிர்த்துப் பேசியும், எழுதியும் வருவதால் என்னை அடக்கியும், ஒடுக்கியும் வைக்கும் நோக்கத்துடனும், என்னை பொதுமக்களுக்கு இஸ்லாமிய விரோதி என்று காட்டும் நோக்கத்துடனும் தவறான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு

இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போரில் கலந்து கொண்ட உத்தம ஸஹாபா பெருமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் நடைபெற்று வரும் நினைவு மஜ்லிஸ் இவ்வருடம் 04.07.2015 (சனிக்கிழமை) றமழான் பிறை 17ல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தறாவீஹ் தொழுகையின் பின் திருக் கொடியேற்றி வைக்கப்பட்டு மௌலிது ஸுஹதாயில் பத்ரிய்யீனும், ஸஹாபாக்களின் திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடும் நிகழ்வும் மஜ்லிஸ் நிகழ்வுகளில் நடைபெற்றது. அதன் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து துஆப் பிரார்த்தனையுடன் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.

வீரத்தியாகிகள் பத்ர் ஸஹாபாக்களின் அருள் வேண்டி சமுகமளித்த முஹிப்பீன்களுக்காக அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Jul 4, 2015

பத்ர் போர்.

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)-

இஸ்லாமிய வரலாற்றில்நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது.

சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும்.

மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது.

அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

தமிழ் நாடு “ஜமாஅதுல் உலமா” - உலமா சபை - பீ.ஜே என்பவருக்கு எதிராக வழங்கியுள்ள “பத்வா” மார்க்கத் தீர்ப்பை காத்தான்குடியில் இயங்கிவரும் “அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா” முழுமையாகச் சரிகண்டு செயல்படுத்துகிறது.

இதேபோல் “அல்ஜாமிஉல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தை தனது இதயமாகக் கொண்ட மிஸ்ர் - கெய்ரோ - நாட்டின் மத விவகார அமைச்சு, வஹ்ஹாபிகளின் தலைவர்களான இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு பாஸ் ஆகியோர் எழுதிய அறபு மொழியிலான நூல்களையும், அவர்களின் பேச்சுள்ள CD இறுவெட்டுக்களையும் தடை செய்து அங்குள்ள பள்ளிவாயல்கள், நூலகங்களிலிருந்து அவற்றை அகற்றியதையும் எமது “ஸூபிஸ உலமா சபை”  வரவேற்கிறது. 

Jul 2, 2015

கதிரையில் அமர்ந்து தொழுவது கூடுமா?

ஆக்கம் - மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
+++++++++++++++++++++++++++++++++

கதிரையில் அமர்ந்து கொண்டு தொழும் தொழுகை கூடுமா? அல்லது கூடாதா? என்று அதிகமான கேள்விகள் மக்கள் மத்தியிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணத்தினால் இது சம்பந்தமான விபரங்களை எல்லோரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாக்கத்தை நாம் இங்கு பதிவு செய்கிறோம்.

சுருக்கமான பதில் -  
அதிகமான கால்மூட்டு வலி காரணமாகவோ அல்லது இடுப்பு வலி காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு போன்ற வேறு சில குறிப்பான நோய்களின் காரணமாகவோ அறவே எழும்பி நிற்க இயலாதவர்களும், நிற்பதினாலோ அல்லது காலை ஊன்றி ருகூஃ சுஜூத் செய்வதினாலோ நோயோ வலியோ அதிகரிக்கும் அதனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் எனப் பயந்தோருமே பர்ழான தொழுகைகளை கதிரையில் அமர்ந்தோ அல்லது தரையில் அமர்ந்தோ தொழுவதற்கு ஷரீஅத் அனுமதிக்கின்றது. அவர்கள் அமர்ந்து தொழும் தொழுகையை மீட்டித் தொழ வேண்டும். என்று அவர்களுக்கு அவசியம் கிடையாது என்றும் கூறுகின்றது.