Jan 17, 2010

ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்

மௌலவீ  KRM. ஸஹ்லான் றப்பானீ  BBA (Hons) Jp

தலைப்புக்கள்
  1. ஜனாஸா தொழுகை
  2. தொழுகையின் ஷர்த்துக்கள்
  3. ஜனாபத்
  4. தொழுகையின் பர்ழுகள்
  5. தொழுகை நேரங்கள் 
  6. வுழு
  7. தொழுகையைமுறிப்பவைகள்
  8. உழ்ஹிய்யஹ்வின் சட்டங்கள்



ஜனாஸா தொழுகையின் ஷர்த்துகள்

ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.

1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும்.

ஜனாஸா தொழுகையின் பர்ழுகள்

1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை, கிப்லாவைநோக்கி, அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.

Jan 12, 2010

16வது வருட கந்தூரி வைபவம்

படுபிடிய அல்மத்ரஸதுல் மின்ஹாஜிய்யா அரபிக்கலாசாலை மற்றும் தெஹிவளை அல்கௌதிய்யா இஸ்லாமிய கலைஞானபீடம் என்பவற்றின் ஸ்தாபகருமான அதிசங்கைக்குரிய அஸ்​ஸெய்யிதுஸ்ஸாதாத் அஷ்ஷெய்க் அப்துர்ரஷீத் P.P.S.S கோயாத்தங்கள் அல்காதிரிய்யி வர்ரிபாஇய்யி அவர்களின் பெயரிலான 16வது வருட கந்தூரி வைபவம்

சங்கைக்குரிய அஸ்ஸெய்யிது முஹம்மது புஹாரி P.P நல்ல கோயாத்தங்கள் அல்காதிரிய்யி வர்ரிபாஇய்யி அவர்களின் தலைமையில்

காலம் - 13.01.2013 ஞாயிற்றுக்கிழமை 
                          ( காலை 10.00 மணிமுதல் - இரவு 9.30 மணிவரை)

இடம் - அல்மஸ்ஜிதுர்ரியாயி பள்ளிவாயல், படுபிடிய.

நேர்சைகள் வழங்க நாடுபவர்கள் அல்மஸ்ஜிதுர்ரியாயி பள்ளிவாயல் காரியாலயத்தில் ஒப்படைக்கவும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

இவ்வண்ணம்
லஜ்னதுர் ரியாஇய்யா சங்கம் - படுபிடிய