Jun 28, 2013

நோன்பின் மாண்பு

தொடர்- 01...
புதிய தொடர் ஆரம்பம்

சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள்

நோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.

Jun 10, 2013

27வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அறிவித்தல் - 2013

கரீப் நவாஸ் பௌன்டேஸன் நடாத்தும்

27வது வருட உர்ஸே முபாறக் - ஹாஜாஜீ மாகந்தூரியும்
13வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு விழாவும்

திருக்கொடியேற்றம் - 26.06.2013 புதன்கிழமை மாலை 5.00 மணி
மாகந்தூரி - 30.06.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணி
இடம் - காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் 

Jun 5, 2013

36வது வருட புனித புஹாரீ ஷரீப் நிறைவு தின நிகழ்வுகள்...

கடந்த 07.05.2013 அன்று ஆரம்பிக்கப்பட்ட புனித புஹாரீ ஷரீப் 30 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 05.06.2013 புதன்கிழமை நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

Jun 3, 2013

- 26.06.1960 - விஷேட நிகழ்வு

 சங்கைக்குரிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களால் 26.06.1960ம் ஆண்டு காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் பள்ளிவாயலும் அதன் சுற்றுமதிலும் கட்டப்பட்டது. 2002ம் ஆண்டு  இப்பழைய பள்ளவாயல் உடைக்கப்பட்டு புதிய பள்ளிவாயல் அவ்விடத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகிறது.

இந்தவகையில் 06.06.2013 அன்று இதில் இறுதியாக இருந்த முன்பக்க பள்ளிவாயல் சுவரும் உடைக்கப்பட்டது. இது 53 வருட பழமையானதாகும்.

Jun 2, 2013

பெருமானார் (ஸல்) அவர்களின் ஆடை

ஆக்கம் –
அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மௌலவீ
மாணவர் MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ

1. பெருமானார் (ஸல்) அவர்கள் மற்ற ஆடைகளை விட ”கமீஸ்” எனப்படும் கால் வரையுள்ள நீண்ட ஜுப்பாவை மிக விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஆனால் ”கமீஸ்” என்பது எந்த ஆடை என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது.

2. பெருமானார் (ஸல்) அவர்களின் சட்டைக் கைகள் மணிக்கட்டு வரை இருக்கும். 
சட்டக்கைகள்மிக இறுக்கமாகவோ விசாலமாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.

3. பெருமானார் (ஸல்) அவர்கள் பயணங்களில் அணியும் ஆடைகள் உயரம் சற்று குறைவாகவும், கைகள் சற்று சிறியதாகவும் இருக்கும்.