Feb 27, 2014

அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (குத்திஸ ஸிர்ருஹூ) நினைவு தின சிறப்புக்கட்டுரை..

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம். 
அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (குத்திஸ ஸிர்ருஹூ) 

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் 
தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை, 
விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். 
றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள். 

இவர்களின் இயற்பெயர் முஹம்மத் இப்னு அலீ என்பதாகும். பின்வருவன அவர்களின் பட்டப் பெயர்களாகும். 

Feb 19, 2014

மீண்டும் ஆரம்பமானது ஜும்அஹ் தொழுகை


சுன்னத்வல்ஜமாஅத்தின் தளமான காத்தான்குடி -05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 9 வருடங்கள், 3 மாதங்கள், 8 நாட்களாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குத்பஹ் – ஜும்அஹ் தொழுகை  14.02.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

சங்கைக்குரிய மௌலவீ. HMM. இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் குத்பஹ் பிரசங்கம் நிகழ்த்த சங்கைக்குரிய மௌலவீ. ALM. இஸ்மாயீல் (பலாஹீ) அவர்கள் தொழுகை நடாத்தியதோடு தொழுகையின் பின்னர் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் ஆத்மீகப் பேருரை நிகழ்த்தினார்கள்.

பித்அத்எல்லாம் வழிகேடாகுமா ?

தொடர்-04 
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA-Hon

وعن سيدنا رفاعة بن رافع رضي الله عنه قال: كنا نصلي وراء النبي صلى الله عليه وآله وسلم 

فلما رفع راسه من الركعة قال ( سمع الله لمن حمده) قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال (من المتكلم؟) قال: أنا قال: «رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها»([1][66]). 

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள். 

புஹாரீ-799,நஸாஈ-614,அபூதவூத்-770 
அறிவிப்பு- ரிபாஆ இப்னு ராபிஉ(றழி) 

29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்

29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி 14.02.2014 வௌ்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித் மஜ்லிஸ், றாதிப் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் நடைபெற்று 16.02.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 9.00 மணியளவில் தபர்ருக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.

Feb 13, 2014

விஷேட அறிவித்தல்


காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜம்அஹ் பள்ளிவாயலில் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த புனித ஜும்அஹ் தொழுகை சுமார் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் 14.02.2014 வௌ்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்படுகின்றது என்ற மிக மகிழ்ச்சியான செய்தியை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

Feb 11, 2014

இரத்த தான நிகழ்வு 2014


அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம், றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும், அன்னாரின் நீண்ட வாழ்நாளுக்காகவும், எமது சகோதர உறவுகளின் உயிர்களைக் காக்கவும் 03வது இரத்தன தான நிகழ்வு 06.02.2014 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 03.00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் இரத்த தானம் செய்வதற்காக சுமார் 150க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Feb 7, 2014

Feb 5, 2014

வாழ்த்துகிறோம்...


எமது அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவீ AJ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களின் 70வது அகவை தினத்தை முன்னிட்டு ஸம்ஸ் மீடியா யுனிட் அன்னவர்கள் பரிபூரண தேகாரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்பெற்று வாழ வாழ்த்துகின்றது. ஆமீன் 


Feb 4, 2014

ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 70வது அகவை தின சிறப்புக்கவிதை

மௌலவீ  HMM. இப்றாஹீம் நத்வீ
எழுபதிலும் இலங்கும் ஞானத்தாரை!

கருணை நபியின் முன்னே

கவிஞர் ஹஸ்ஸான்,

கவிஞர் கஃப் போன்றோர்

நபீ புகழ் பாடியது

முகத்துதியல்ல!

அது வணக்கம்!

அதே போல் –

தவ்ஹீத் தோப்பில் மலர்ந்த

Feb 1, 2014

பெருமானாரின் திரு முடிகள்