Jan 26, 2012

புனித றபீஉனில் அவ்வல் மௌலித் ஷரீப் நிகழ்வுகள்


உலகுக்கோர் அருட்கொடையாய் வந்துதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வந்துதித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக 24.01.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பில் கூட்டிணைக்கப்பட்டுள்ள மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், அல்மத்ரஸர் றஹ்மானிய்யஹ்அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஆகிய தாபனங்களிலும் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து பெருமானார் பெயரிலான மௌலித் ஷரீப்பும் ஓதப்பட்டது. இந்நிகழ்வுகள் தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறும். 

Jan 25, 2012

ஜுனைதுல் பக்தாதி றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.....

-மௌலவீ AAM.அறூஸ் (றப்பானீ)- 

ஹழரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘நுஹாவந்த்’ என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுல் பக்தாதி(றழி) அவர்கள் . இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடைவைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதுல் பக்தாதி(றழி)அவர்களும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று வந்தார். 

Jan 19, 2012

BJM New Building 18.01.2012

காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட கொங்கிரீட் போடும் வேலைகள் 18.01.2012 புதன் கிழமை அஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பமாகி அன்று நல்லிரவு நிறைவுபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் எமது ஸம்ஸ் இணையத்தள நேயர்களுக்காக......


Jan 15, 2012

ஏகத்துவ உலகம் மறக்க முடியாத ஏந்தல்அப்துர்றஷீது நாயகம் அவர்கள்​​​

மௌலவீ HMM.இப்றாஹீம் (நத்வீ) 
1841 தொடக்கம் இலங்கை வந்த காதிரிய்யஹ் –ரிபாயிய்யஹ் தரீகதுகளின் அணியில் மலர்ந்த ஷெய்குமார்களின் எட்டாமவரும், கண்மணி நபி (ஸல்) 33வது தலைமுறையினரும் “குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா” எனப் புகழப்பட்டவர்களுமான அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அப்துர்றஷீது தங்கள் மெளலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்கள் இலங்கை வந்த​ ஷெய்குமார்களில் மாணிக்கமாக – மரகதமாக கணிக்கப்படுகிறார்கள்.​

Jan 11, 2012

நபீகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அவர்களது தோழர்கள் கொண்டிருந்த அன்பு

மௌலவீ ACA. ஜெஸ்லின் (றப்பானீ)

ஹஜ்ரத் அலீ(றழி) அவர்களிடம் அண்ணல் நபீ(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது? என்று ஒருவர் கேட்டார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், பெற்றெடுத்த மக்கள், அன்பு அன்னை மார்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள், அண்ணலாரை நேசித்தோம்” என்று கூறினார்கள். 

Jan 6, 2012

றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் 
கணிணிப் பிரிவு திறப்பு விழா 

றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களின் கணிணி அறிவை மேம்படுத்துவதற்காக 03.01.2012 செவ்வாய்க்கிழமை பி.ப 04.30 மணியளவில் இக்கலாபீடத்தில் ‘‘கணிணிப்பிரிவு’’ ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

Jan 3, 2012

தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் 16வது வருட கந்தூரி

காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான கந்தூரி இவ்வருடமும் 16வது வருடமாக மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

** திருக்கொடியேற்றம் 04.01.2013 வௌ்ளி பி.ப 5.00 மணி
தொடர்ந்து கத்முல் குர்ஆன்
** மஃரிப் தொழுகையின்பின் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ்
** இஷாத்தொழுகையின்பின் பயான், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத்

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடி அஞ்சல் செய்யப்படும்