Mar 27, 2013

Mar 21, 2013

ஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு

தொடர்- 09
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் 
A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
முடிவுரை

இங்கு ஈஸால் தவாப் என்ற தலைப்பில் என்னால் முடிந்த வரை ஆதாரங்கள் திரட்டி மரணித்தவர்களுக்காக உயிரோடு செய்கின்ற நல்லமல்களின் பலன் அவர்களைச் சென்றடையும் என்பதை நிறுவியிருக்கின்றேன். இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் தவிர இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு எழுதி இத்தொடரை பெரிதாக்கவிரும்பவில்லை.

Mar 16, 2013

இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா

கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் ஈராக் நட்புறவு ஒன்றியம் ஏற்பாடு செய்த இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா நிகழ்வு 08.03.2013 அன்று கல்முனைக் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் எண்கோண மேடையில் பி.ப 06.30 மணியளவில் (மஃரிப் தொழுகையின் பின்) வெகு சிறப்பாக ஆரம்பமானது. 

இப்பெரு விழாவில் கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அன்னவர்களின் நினைவாகவும், பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புகழ் காப்பியம் கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் நூல் வெளியீட்டு விழாவும், சுன்னத் வல் ஜமாஅத் பெரும் உலமாக்களால் மார்க்க உபன்னியாசமும் இடம்பெற்றது. 

Mar 9, 2013

அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தின பிரசுரம்

அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 09.03.2012 அன்று சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களினால் வெளி​யீடு செய்யப்பட்ட பிரசுரம் எமது இணையத்தள வாசகர்களுக்காக....  

Mar 8, 2013

நினைவு தின நிகழ்வு பற்றிய அறிவித்தல்

அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தின நிகழ்வுகள் எமது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 09.03.2013 சனிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் பின்வரும் விபரப்படி நடைபெறும்.

மஃரிப் தொழுகையின் பின் - புனித கத்முல் குர்ஆன், தொடர்ந்து மௌலித் மஜ்லிஸ்

மஃரிப் தொழுகையின் பின் - பயான் நிகழ்வு , தபர்றுக் விநியோகம் 

இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் பேரருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் எமது இணையத்தளத்தில் நேரடி ஔிபரப்புச் செய்யப்படும்.

Mar 2, 2013

கந்தூரி நிகழ்வுகள்


கன்ஜேஷவா குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ அன்னவர்கள் பெயரிலான 65வது வருட கந்தூரி நிகழ்வுகள் 26.04.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித், பயான் நிகழ்வுகள் இடம்பெற்று 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை 9.00 மணிக்கு தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
 - அல்ஹம்துலில்லாஹ் -