May 21, 2016

பறகத் நிறைந்த பறாஅத் இரவு!



02.06.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற பராஅத் இரவு மஜ்லிஸில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்





அகில இலங்கை “ஸூபிஸ உலமாஉகள் சபையின் மார்க்கத் தீர்ப்பு

فقم ليلة النصف الشريف مصليا        -                 فأشرف هذا الشهر ليلة نصفه

فكم من فتى قد بات فى النصف آمنا         -        وقد نسخت فيه صحيفة حتفه

فبادر بفعل الخير قبل انقضاعه      -                  وحاذر هجوم الموت فيه بصرفه

وصم يومه لله واحسن رجائه      -                لتظفر عند الكرب منه بلطفه

حسن البيان : للسيد عبد ا لله بن محمد بن الصديق الغماري ص 16

“றஜப்” மாதத்திற்கும், “றமழான்” மாதத்திற்கும் இடையிலுள்ள மாதம் “ஷஃபான்” மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இம்மாதத்தின் பதினைந்தாம்    இரவு   “பறாஅத்” இரவு   “நிஸ்பு  ஷஃபான்” என்றழைக்கப்படுகின்றது.

இவ்விரவின் பிற்பகுதியில் “அல்லாஹ்” தனது அடியார்களுக்கு “தஜல்லீ” வெளியாகி பாவமன்னிப்புக் கேட்பவர்களின் பாவங்களை மன்னிக்கின்றான். அருளை வேண்டுபவர்களுக்கு அருள் செய்கிறான். அவனை அழைப்பவர்களுக்கு பதில் கூறுகிறான் - கேட்டதை கொடுக்கின்றான், துன்பத்தில் துவண்டு போனவர்களின் துன்பம் களைகின்றான், இன்னல்களில் சிக்குண்டவர்களின் இன்னல்களை நீக்கியருள்கிறான். நரகிலிருந்து பலருக்கு விடுதலை வழங்குகின்றான், அடியார்களின் விதிகளை நிர்ணயிக்கின்றான்.

May 12, 2016

உலகம் அல்லாஹ் தானானதா?அல்லது அவனுக்கு வேறானதா?

هل العالم عين الحقّ؟ أو غير الحقّ؟

(عينيّة بوجه وغيريّة بوجه، ولكنّ العينيّة هي الحقيقة المعتبرة)

قال الشيخ محي الدين ابن عربي رضي الله عنه في كتابه ” لواقح أنوار القدسيّة “ (لا يقدر أحد وَلَوِارْتَفَعَتْ دَرَجَاتُ مُشاهدتِه أن يقول أنّ العالم عين الحقّ أو اتّحد به)

وانظر إلى ذاتك يا أخي فتعلم قطعا أنّك واحد لكن تعلم أنّ عينَك غيرُ حاجِبِكَ ويدَكَ غيرُ رجلِك الى غير ذلك، وأنّ هذه الأعضاء تفاصيلُ في عين ذاتك. لا يُقال إنّها غيرك، ومن فهم ما أَوْمَأْنَا إليه فهو الّذي يفهم قوله تعالى قل الروح من أمر ربّي، فلم يَحْدُثْ بابتداعِه العالَم في ذاته حادث، تعالى الله عن ذلك علوّا كبيرا، وبالجملة فالقلوب به هائمة والعقولُ فيه حائرةٌ يريد العارفون أن يَفْصِلُوه تعالى بالكلّيّة عن العالم من شدّة التنزيه فلا يقدرون، ويريدون أن يجعلوه عينَ العالم من شدّة القرب فلا يتحقّق لهم فهمٌ على الدّوام متحيِّرُون. فتارة يقولون هو، وتارة يقولون ما هو، وتارة يقولون هو ما هو، وبذلك ظهرت عظمتُه تعالى،


(ஒரு கண்ணோட்டத்தில் அது அவன் தானானது. இன்னொரு கண்ணோட்டத்தில் அது அவனுக்கு வேறானது. எனினும் அது அவன் தானானதென்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட எதார்த்தமாகும்)

அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(எந்த ஒருவனின் ஆன்மிக பலம் எவ்வளவுதான் உயர்ந்தாலும் உலகம் அல்லாஹ் தானானதென்று அவன் சொல்வதற்கோ, அல்லது அவன் அதோடு ஒன்றாகிவிட்டான் என்று சொல்வதற்கோ எவனும் சக்தி பெறமாட்டான்.)

சகோதரா! உன்னைக் கவனி. நீ ஒருவன் என்பது உனக்கு நிச்சயமாகத் தெரியும். எனினும் உனது கண், உனது கண் புருவத்திற்கு வேறானதென்பதும், உனது கை, உனது காலுக்கு வேறானதென்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். இந்த உறுப்புக்களெல்லாம் உனது உடலின் கிளைகளாகும். இவையெல்லாம் உனக்கு - உடலுக்கு - வேறானவை என்று சொல்ல முடியாது.

நாங்கள் இப்போது சுட்டிக் காட்டிய தத்துவத்தை விளங்கிக் கொண்டவன் “றூஹ் என்பது எனது “றப்பு” இரட்சகனின் விடயத்திலுள்ளது” என்ற அல்லாஹ்வின் பேச்சை விளங்கிக் கொள்வான். அல்லாஹ் தன்னில் நின்றும் உலகத்தை - பிரபஞ்சத்தை - முன்மாதிரியின்றிப் படைத்தால் அவனில் - அவனுடைய தாத்தில் - எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. அல்லாஹ் தன்னில் குறை ஏற்படுவதை விட்டும் துய்யவன்.

பொதுவாக - மொத்தத்தில் - அல்லாஹ்வின் விடயத்தில் உள்ளங்கள் நிலை குலைந்துள்ளன. அறிவுகள் தடுமாறுகின்றன. அவனின் அதி தூய்மைத் தன்மையை கவனித்த இறை ஞானிகள் பிரபஞ்சத்தை விட்டும் அவனைப் பிரிக்க - வேறாக்க - நினைக்கின்றார்கள். ஆனால் அதற்கு அவர்களால் முடியவில்லை. அதேபோல் அவன் பிரபஞ்சத்திற்கு அதி நெருக்கமாயிருப்பதை கவனித்த அவர்கள் பிரபஞ்சம் அவனேதான் என்று சொல்ல நினைக்கின்றார்கள். அதற்கும் அவர்களால் முடியவில்லை. இவ்விடயத்தில் ஞானிகள் தடுமாறி நிற்கின்றார்கள். சில நேரம் பிரபஞ்சம் அவனேதான் என்று சொல்கிறார்கள். சில நேரம் அவனில்லை என்று சொல்கின்றார்கள். இன்னும் சில நேரம் இரண்டும்தான் என்றும் சொல்கின்றார்கள். இவ்வாறு “ஆரிபீன்” இறை ஞானிகளே தடுமாறுவதன் மூலம் அல்லாஹ்வின் வலுப்பம் வெளியாகின்றது. 

(தொடரும்)

May 11, 2016

ஸூபியாக்களின் பரிபாஷை தெரியாத மூதேவிகள்

إعلم رحمك الله أنّه لا يجوز الإنكارُ على القوم إلّا بعد معرفةِ مصطلحهم في ألفاظهم  ثمّ إذا رأينا بعد ذلك كلامهم مخالفا للشريعة رمينا به، وقال الشيخ مجد الدين الفيروزابادي صاحبُ كتابِ القاموس في اللّغة لا يجوز لأحد أن يُنكر على القوم ببادئِ الرّأي  ، لِعُلُوِّ مراتبهم في الفهم والكشف، قال ولمْ يَبْلُغْنا عن أحد منهم أنّه أمر بشيئ يهدم الدين، ولانهى أحدا عن الوُضوء ولا عن الصلاة ولا غيرِهما من فروض الإسلام ومستحبّاتِه إنّما يتكلّمون بكلام يدقُّ عن الأفهام، وكان يقول قد يبلغ القومُ في المقامات ودرجاتِ العلوم إلى المقامات المجهولة والعلوم المجهولة الّتي لم يُصرَّح بها في كتاب ولاسنّة، ولكن اكابر العلماء العاملين قد يردّون ذلك إلى الكتاب والسنّة بطريقٍ دقيقٍ لحُسنِ استنباطهم وحسن ظنّهم بالصالحين، ولكن ما كلُّ أحدٍ  يتربّصُ إذا سمع كلاما لا يفهم، بل يبادر إلى الإنكار على صاحبه، وخُلق الإنسانُ عجولا، قال وناهِيْكَ بأبي العبّاس بن سُريج في العلم والفهم، تَنَكَّرَ مرّة، ثمّ حضر مجلسَ أبي القاسم الجنيد لِيَسْمَعَ منه شيئاممّا يُشَاعُ عن الصوفيّة، فلما انصرف قالوا له ماوجدت؟ قال لم أَفْهَمْ من كلامهم شيئا، إلّا أنّ صَوْلَةَ الكلام ليستْ بِصَوْلَةِ مُبْطِلٍ ، (اليواقيت والجواهر - الجزء الأوّل - ص 10 )

تنَكَّرَ - معناه تَغَيَّرَ عن حالٍ تسُرُّه إلى حال يكرهها،
الصَّوْلَة - معناها السطوة ، القهر

சுருக்கம் (மொழியாக்கமல்ல)

பின்வரும் விடயங்களை நீ அறிந்து கொள். அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! றஹ்மத் செய்வானாக!

நீ ஸூபிகளின் கலைச் சொற்களை அறிந்து கொள்ளு முன் அவர்களை “இன்கார்” மறுக்காதே. அவற்றை அறிந்த பின் அவர்களின் பேச்சு “ஷரீஅஹ்”வுக்கு முரணானதாயிருந்தால் அந்தப் பேச்சைத் தூக்கி எறி. (அவர்களின் கலைச் சொற்களை அறிந்து கொள்ளுமுன் அவர்களின் பேச்சு “ஷரீஅஹ்” வுக்கு முரணானதென்று முடிவு செய்து அதை மறுப்பதையும், அவர்களை எதிர்ப்பதையும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்)

“காமூஸ்” என்ற அறபு அகராதியை எழுதிய மஜ்துத்தீன் பைறூஸாபாதீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (ஸூபிஸ ஞானிகளின் கருத்துக்களை பொறுமையுடன் ஆய்வு செய்யாமல் அவர்களை எதிர்க்காதே. ஏனெனில் அவர்கள் விளக்கத்திலும், “கஷ்பு” என்ற ஞானத்திலும் அதியுயர் பதவிகளைப் பெற்றவர்களாவர்.)

“கஷ்பு” என்பது எந்த ஒரு நூலிலும் இல்லாத, ஓர் அடியானுக்கு அல்லாஹ்வால் நேரடியாக வழங்கப்படுகின்ற ஞானத்தைக் குறிக்கும். ஸூபி மகான்களுக்கு இந்த வகை அறிவு இருக்கின்றது. அறபுக் கல்லூரிகளிலோ, பல்கலைக் கழகங்களிலோ படித்து மௌலவீ, அஷ்ஷெய்கு, கலாநிதிப் பட்டங்கள் பெற்ற அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றல்ல. எவர் எங்கு படித்தாலும், படிக்காவிட்டாலும் மனத் தூய்மையுள்ள ஸூபிஸ வழி நடக்கின்ற அனைவருக்கும் கிடைக்கும். “இல்ஹாம்” என்பதும்” “இல்முல் லதுன்னீ” என்பதும் “கஷ்பு” போன்றவையேயாகும்.

வஹ்ஹாபிகளுக்கு மேலே சொல்லப்பட்ட மூன்று வகை ஞானங்களில் ஒன்றுமே கிடைக்காது. ஏனெனில் அவர்கள் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானத்தின் அத்திவாரத்தையே எதிர்ப்பவர்களாவர். அது வழிகேடென்று நம்பினவர்களாவர்.

பைறூஸாபாதீ மேலும் கூறுகையில் (ஸூபீ மகான்களில் ஒருவரேனும் மார்க்கத்திற்கு முரணான ஒன்றைச் செய்யுமாறு மக்களைப் பணித்தார்கள் என்பதற்கோ, தொழுகைக்காக “வுழூ” என்ற சுத்தம் தேவையில்லை என்று சொன்னார்கள் என்பதற்கோ, தொழ வேண்டாம் என்று மக்களைப் பணித்தார்கள் என்பதற்கோ ஓர் ஆதாரமேனும் எமக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் இஸ்லாமிய கடமைகளில், அல்லது “ஸுன்னத்” ஆன விடயங்களில் ஒன்றைச் செய்ய வேண்டாம் என்று தடுத்ததற்கும் எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் எல்லோராலும் மிக எளிதில் விளங்கமுடியாத தத்துவம் பேசுவார்கள். அவ்வளவுதான்) என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

நான் மேலே சொன்ன ஸூபிகள் “ஷரீஅஹ்”வைப் பேணி ஞானம் பேசுகின்ற உண்மையான ஸூபிகளாவர். ஆனால் “ஷரீஅஹ்”வுக்கு முரணாக ஞானம் பேசுவோரும், அவர்கள் “ஷரீஅஹ்”வைப் பேணாமல் ஞானம் பேசுவோரும், நோன்பைக் கிண்டல் செய்யும் பாணியில் நோன்பு ஒரு கிலோ என்ன விலை? என்றும், தொழுகை ஒரு போத்தல் என்ன விலை? என்று கேட்கும் குருட்டு ஞானிகளும், இருட்டு ஷெய்குமார்களும் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களிடம் “பைஅத்” செய்வதோ, இவர்களைப் பின்பற்றுவதோ கூடாது. அது வழிகேடுதான். வெறுங்காடுதான்.

மேலும் பைறூஸாபாதீ கூறுகையில் (ஸூபிகள் சில சமயம் ஆன்மிகப் படித்தரங்களிலும், அறிவின் படித் தரங்களிலும் அதி உச்சக்கட்டத்தை அடைந்து விடுவார்கள். அந்நேரம் அவர்களால் வெளியாகும் அறிவு ஞானங்கள் அறியப்படாதவையாகவும், திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் தெளிவாகச் சொல்லப்படாதவையாகவுமே இருக்கும். எனினும் ஆளமான அறிவு ஞானமுள்ள மகான்கள், பெரும் பதவிகளையடைந்த - “மகாமாத்”களைக் கடந்த - வர்களின் பேச்சுக்களை திருக்குர்ஆனுடனும், நபீ மொழிகளுடனும் மிக நுட்பமாகத் தொடர்புபடுத்தி அழகிய முறையில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவர்கள் இவ்வாறு செய்வது ஸூபீ மகான்கள் மீது அவர்கள் கொண்ட நல்லெண்ணத்தினாலாகும். இவ்வாறான மன நிலை படித்தவர்கள் அனைவரிடமும் இருக்காது. ஞான மகான்களின் பேச்சை விளங்கிக் கொள்ளாதவன் தனது சிற்றறிவென்ற உரை கல்லை உரைத்துப் பார்க்கின்றான். அது சரி காணாவிட்டால் அதை மறுப்பதற்கு முற்படுகின்றான். خُلِقَ الْإِنْسَانُ عَجُوْلًا  மனிதன் தீவிரப் போக்குள்ளவனாகப் படைக்கப்பட்டுள்ளான்) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அபுல் அப்பாஸ் அஸ் ஸுறைஜ் என்பவர் அறிவு ஞானமும், விளக்கமும் உள்ளவராக இருந்தார். இவரின் வரலாறொன்றை தீவிரப் போக்குள்ளவர்கள் ஊன்றிக் கவனித்தார்களாயின்அது அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

அவர் ஒரு காலத்தில் ஸூபீ மகான்களின் தத்துவங்களை - கருத்துக்களை - மறுத்துக் கொண்டிருந்தார். பின்னர் ஸூபீ மகான்களால் சொல்லப்படுகின்ற கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பதற்காக ஸெய்யிதுத் தாயிபஹ் - سيّد الطائفة அபுல் காஸிம் ஜுனைத் பக்தாதீ அவர்களிடம் சென்று அவர்கள் பேசும் சபையில் அமர்ந்து கொண்டார். சில காலம் அவர்களின் பேச்சைக் கேட்டபின் தனது இல்லம் திரும்பினார். அவரின் ஊர் மக்கள் அவரிடம் சென்று ஸூபிகளின் கருத்து பற்றி இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கவர் ஸூபீகளின் கருத்து எனக்குப் புரியவில்லை. ஆயினும் அவர்களின் பேச்சு வீண் பேச்சாக எனக்கு விளங்கவில்லை என்று கூறினார். 

அல் யவாகீத் வல் ஜவாஹிர்
பாகம் 01, பக்கம் 10

குறிப்புக்கள்.

ஸூபீ மகான்கள் அறிஞர்களிலும், ஆன்மிகப் படித்தரம் பெற்றவர்களிலும் மிக விஷேடமானவர்களாவர். அவர்களின் எந்த ஒரு பேச்சாயினும் “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்றே என்ற தத்துவம் உள்ளதாகவே இருக்கும். அவர்கள் தம்போன்ற ஸூபீகளுக்கிடையில் விளங்கும் வகையில் மட்டும் சில சொற்களை தாம் நாடிய அர்த்தங்களுக்காக பாவித்து வந்துள்ளார்கள். அந்தச் சொற்களுக்கு அவர்கள் நாடிய பொருளை ஸூபீகளல்லாதவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் கலாநிதிகளாயிருந்தாலும் சரியே. இதனால் ஸூபீகளின் பேச்சு “ஷரீஅஹ்”வுக்கு முரணானதென்று அந்தச் சொற்களுக்கான பொருளை அறியாதவர்கள் சொல்வார்கள்.

உதாரணமாக فقر - “பக்ர்” என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இச்சொல் வறுமை என்ற பொருளைக் கொண்டதாகும். ஆயினும் ஸூபிகள் இச் சொல்லை தாம் நாடிய பொருளுக்கே பாவிப்பார்கள். அதாவது ஆன்மிக வழியில் பேசப்படுகின்ற “பனா” என்ற நிலைக்கு பயன்படுத்துவார்கள்.

அதாவது ஒரு மனிதன் தானில்லை என்றும், தனக்கென்று ஒன்றுமில்லை என்றும், சிருட்டிகளுமில்லை, அவற்றுக்கென்று ஒன்றுமில்லை என்றும் அனைத்து உணர்வுகளையும் அழித்து அல்லாஹ் தவிர வேறொன்றுமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வருதல் “பனா” என்று சொல்லப்படும். ஸூபீ மகான்கள் இந் நிலைக்கு - மகாமுக்கு - “பக்ர்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார்கள்.  இதுவே الإصطلاحات الصّوفيّة - ஸூபீகளின் பரிபாஷை என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறுதான் عروج ، نزول ஏறுதல், இறங்குதல் என்ற சொற்களுமாகும்.

“உறூஜ்” என்ற சொல்லுக்கு அகராதியில் ஏறுதல் என்றும், “நுஸூல், என்பதற்கு இறங்குதல் என்றும் சொல்லப்படும். ஸூபீ மகான்களின் இவ்விரு சொற்களையும் தமது பரிபாஷையில் ஆன்மிகப் படித்தரங்களில் உயர்ந்து செல்வதற்கும், அவற்றிலிருந்து இறங்குவதற்கும் பயன்படுத்துவர். இவ்விரண்டும் ஆன்மிக உயர்வையும், தாழ்வையும் குறிக்குமேயன்றி ஏணியில் ஏறுதல், இறங்குதல் போன்ற கருத்தைக் குறிக்காது. இதுவே ஸூபீகளின் பரிபாஷை.

ஸூபீகள் தமது பேச்சில் إذا تمّ الفقر هو الله  (“பக்ர்” என்பது பூர்த்தியானால் அவன் அல்லாஹ்) என்று சொல்வதுண்டு. இச் சொல்லுக்குரிய அகராதிப் பொருள் வறுமை என்றதன் படி (வறுமை பூரணமானவன் அல்லாஹ்) என்று விளக்கம் வரும். இது அறிவுக்குப் பொருந்தாத, மார்க்கத்திற்கும் முரணான கருத்தாகும். ஏனெனில் வறுமை பூரணமானவனோ, செல்வம் பூரணமானவனோ எவனாயினும் எந்த வகையிலும் அல்லாஹ்வாக முடியாது.

எனவே, “பக்ர்” என்ற சொல்லுக்கு வறுமை என்ற அகராதிப் பொருள் கொள்ளாமல் மேலே விளக்கம் சொன்ன “பனா” என்ற ஆன்மிக உச்ச கட்ட நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொள்ளுதல் “ஷரீஅஹ்”வுக்கு முரணானதாகவோ, அறிவுக்குப் பொருந்தாததாகவோ ஆகாது.

(“பனா” உடைய நிலையை அடைந்தவன் அல்லாஹ்) என்றால் அதன் சுருக்கம் என்னவெனில் அவனால் ஏற்படுகின்ற சொல், செயல் என்பன அல்லாஹ்வின் சொல், செயலாகவே இருக்கும். அவனே இல்லையென்றால் அவனுக்கென்று சொல், செயல் ஒன்றுமிருக்காது.

ஸூபீ மகான்கள் “பக்ர்” என்ற சொல்லை தமது பரிபாஷையில் எதற்குப் பயன்படுத்துகின்றார்கள் என்ற விபரம் தெரியாதவன் إذا تمّ الفقر هو الله  (“பக்ர்” பூரணமானவன் அல்லாஹ்) என்ற ஸூபிகளின் பேச்சை தவறாக விளங்கிக் கொண்டு “வறியவர்கள் அனைவரும் அல்லாஹ்” என்று அத்வைதிகள் சொல்கின்றார்கள் என்றும், இன்னோரைக் கொன்று அவர்களின் மாமிசத்தை நாய்க்கு உணவாக்க வேண்டும்  என்றும் கூச்சலிடுவார்கள். அண்மைக் காலத்தில் சில அஹமதுகளும், சில முஹம்மதுகளும், சில ஆரீகளும் கூச்சலிட்டது போன்று. துறை தெரியாமல் தோணி தொடுக்கும் இவர்களை எண்ணி கண்ணீர் வடிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறுதான் “உறூஜ்” நுஸூல் என்ற சொற்களுமாகும். عبد الرحمن في العروج  அப்துர் றஹ்மான் ஏற்றத்திலும், امجد في النّزول அம்ஜத் இறக்கத்திலும் உள்ளார்கள் என்று சொன்னால், 

அப்துர் றஹ்மான் ஏணியின் ஏறி நிற்கிறான் என்றும், அம்ஜத் ஏணியில் இறங்கி நிற்கிறான் என்றும் பொருள் கொள்ளாமல் அப்துர் றஹ்மான் ஆன்மிக உயர்விலும், அம்ஜத் ஆன்மிக தாழ்விலும் இருக்கின்றார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே சுயமான “வுஜூத்” உள்ளமை உண்டு. சிருட்டிகள் அவனின் “வுஜூத்” கொண்டு நிலை பெற்றவை என்ற ஸூபிகளின் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு “நாயும் அல்லாஹ், பூனையும் அல்லாஹ்” என்று அத்வைதிகள் - ஸூபீகள் - சொல்கின்றார்கள் என்பதாக ஆரீ ஸாஹிபு ஒரு திசையில் நின்று குரைக்கின்றார். அதேபோல் மன்னர் அஹமத் ஷா இன்னொரு திசையில் நின்று சீறுகின்றார். அதேபோல் பர்ஜீ ஸாஹிபு பிறிதொரு கோணத்தில் நின்று பிதற்றுகின்றார். அம்ஜத் தம்பி கல்வி முனையில் இருந்து கத்துகின்றார். இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை கால் பந்தாக்கிக் கொண்டார்கள். இதற்குக் காரணம் இவர்களுக்கு ஸூபீகளின் பரிபாஷை தெரியாமற் போனதேயாகும். 

எந்த ஒரு ஸூபீயாயினும் அது “ஷரீஅஹ்”வுக்கு முரணானதாயிருந்தால் அதைத் தூக்கி எறிய வேண்டும். எறிவதாயினும் முதலில் அவர்களின் கருத்தை “ஷரீஅஹ்” என்ற உரை கல்லில் உரைத்துப் பார்க்க வேண்டும். உரைத்துப் பார்ப்பவரும் அதற்கான தராதரம் உள்ளவராக இருத்தல் வேண்டும். 

مَعْرِفَة  என்ற சொல்லை مِغْرَفَة  என்று விளங்கி தொழும் போது கழுத்தில் அகப்பை கட்டித் தொழ வேண்டுமென்று சொன்ன ஆலிம்ஷா போல் இருத்தலாகாது.

May 5, 2016

39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸின் தமாம் நிகழ்வு

றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 05.04.2016 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 04.05.2016 நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன், புகாரீ இமாம் மௌலித், ஷாபியீ இமாம் மௌலித், மிஃறாஜ் மௌலித் ஆகிய நிகழ்வுகள் காலை 11.45 மணி வரை நடைபெற்றன. மீண்டும் அஸ்ர்,மஃரிப் தொழுகையின் பின் புகாரீ ஷரீப் ஓதப்பட்டு இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அன்னவர்களால் உரை நிகழ்த்தப்பட்டு இறுதி ஹதீத் வாசிக்கப்பட்டு துஆ, ஸலாவதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.













May 4, 2016

“றழியல்லாஹு அன்ஹும்” எனப்படுவோர் யார்?

ஆக்கம் : MJ. அஹ்மத் ஸுஹ்ரீ
(அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் சிரேஷ்ட மாணவர்)

அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் அலைக்கும்

இன்று இஸ்லாமியர்கள் என்ற போர்வையிலே இவ்வுலகிலே காட்சியளிக்கக் கூடியவர்கள் நபீமார்கள், றஸூல்மார்கள் என்று சொல்லப்படக்கூடிய இறைத்தூதர்களுக்கு, அவர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டால் “அலைஹிஸ்ஸலாம்” என்று சொல்கின்றார்கள்.

ஆனால் நபித்தோழர்களான ஸஹாபாக்களுடைய, இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்களுடைய பெயர் நாமங்கள் சொல்லப்பட்டால் “றழியல்லாஹு அன்ஹு” என்றோ, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்றோ சொல்வது மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது.

சிலர் நாம் யாருடைய, எப்படிப்பட்டவர்களுடைய நாமங்களை – பெயர்களை உச்சரிக்கின்றோம் என்று கூட சிந்திக்காமல் அவமரியாதையாக அபூபக்கர் வந்தார், உமர் வாளையெடுத்தார், உத்மான் உறங்கினார், அலீ செய்தார் என்று இஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களையே தரக்குறைவாகவும், “றழியல்லாஹு அன்ஹு” என்று சொல்லாமலும் அவர்களின் திருநாமங்களைக் கூறுவதை நாம் இன்று காண்கின்றோம்.

May 1, 2016

அல் இஸ்றாஉ, வல் மிஃறாஜ்

ஆக்கம் - மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம், மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்
தீன் நகர், காத்தான்குடி.

மின் காந்த அலைகளை  விட வேகமாகவும், மூன்று, அல்லது நான்கு அல்லது  அதைவிட மிக வேக நொடிப் பொழுதில் நிகழ்ந்தவையே “இஸ்றாஉ” எனப்படும் இராவெளிப்பயணமும், மிஃறாஜு” எனப்படும் உறூஜ், சுஊத் எனும் ஏற்றமுமாகும்.

இவ்விரு அம்சமும் முர்ஸலூன்கள், நபிய்யூன்களுக்கு மத்தியில் ஏன் அனைத்து படைப்புக்களுக்கு மத்தியில் உயிரினும் மேலான  அண்ணல் முஸ்தபா  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  மகா வலுப்பத்தை, உயர் நிலையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

Apr 29, 2016

இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு மஜ்லிஸ்

அகிலத்தின் ஜோதி அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்த அஸ்ஸெய்யித் இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.04.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மஜ்லிஸ் நிகழ்வுகளாக மஃரிப் தொழுகையின் பின் மௌலிது ஜஃபர் ஸாதிக் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ குலாம் முஹம்மத் அரூஸீ அன்னவர்களால் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று இறுதியாக துஆ பிரார்த்தனையுடன் தபர்றுக் விநியோகமும் நிறைவு பெற்று இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்

Apr 28, 2016

இறைஞானிகள் எங்கும் தொழுவர். எதிலும் தொழுவர்.

இனியோரே!

அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மதுல்லாஹிவபறகாதுஹு

இறைஞானிகளான அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் ஷரீஅத் என்ற வணக்க வழிபாடு அம்சங்களை பற்றிப் பிடித்து நடக்கக் கூடியவர்கள்தான் என்ற கருத்தை நான் என் சென்ற கட்டுரையான “ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அக்கட்டுரையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயத்தை இக்கட்டுரை ஊடாக உங்கள் அறிவுகளுக்குச் சுவைக்கத் தர நாடுகிறேன்.

நான் இப்போது கூறப்போகும் அவ்விடயத்தை இறைஞான அமிர்தத்தில் ஒரு சிறு துளியேனும் பருகாத, பருக நினைக்காத சில துர்ப்பாக்கியவாதிகள் நம்பாமல் கேலிசெய்தாலும் அவர்களின் கேலியால் அவ்விடயம் பொய்யாகிவிடாது. அக்கேலி அப்போலிகளின் அறியாமையின் வெளிப்பாடாகும்.