Nov 25, 2014

தீனுக்காக வாழ்ந்த மகான்


எங்கள் மௌலவீ பாறூக் காதிரீ
உங்கள் பிரிவு இன்றும் வாட்டுது
நெஞ்சில் நினைவு நிழலாய் நிறையுது
உங்கள் வாழ்வு உணர்வில் இருக்குது

                                                அல்லாஹ் அவனின் அடியான் நீங்கள்
                                                வள்ளல் நபீயின் வாரிசு நீங்கள்
                                                நல்லோர் வலீமார் நேசர் நீங்கள்
                                                நல்லாசி பெற்ற நன்மகன் நீங்கள்

சாந்தி மார்க்கத்தை சாந்தமாய் சொன்னீர்
சங்கை பெற்று சாதனை படைத்தீர்
சங்கை நபியை உயிராய்க் கொண்டீர்
சாந்திமிக்க ஸலவாத்து சொன்னீர்

                                                உள்ளமைக் கொள்கையை உரத்துச் சொன்னீர்
                                                வல்லோன் அறிவை வாய்மையாய் தந்தீர்
                                                நல்லோர் சரிதம் நயமாய் உரைத்தீர்
                                                எல்லா நிலையிலும் ஏகத்துவம் செய்தீர்

தீனுக்காக என்றும் வாழ்ந்தீர்
தீனோர் நெஞ்சில் இடம் பிடித்தீர்
தீனுக்காக தியாகங்கள் செய்து
தீனுக்காக ஷஹீதானீர்

கவிஞர் MACM. றபாய்தீன் JP

Nov 24, 2014

நபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்

ஸபர் மாதம் வந்துவிட்டாலே சந்தோசம்தான்..... ஆன்மீக வாதிகளுக்கும், அண்ணல் நபிகளின் மீது பேரன்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் ஆனந்தம்தான்.... ஏன் தெரியுமா? அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின் புகழை தொடர்ந்து 29 தினங்களுக்கு மனமாரப் புகழ்ந்து பாடப் போகி்ன்றோம் என்ற சந்தோசம்தான்......

அந்த வகையில்...

நபீபுகழ் பாவலர்களான இமாமுனா மாதிஹுர் றஸூல் அபீ பக்ர் அல் பக்தாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும், இமாமுனா மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹில் காஹிரீ  றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும் கோர்வை செய்யப்பட்ட கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 23.11.2014 அன்று இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

அல்லாஹ் உதவியால் ஸபர் மாதம் முழுவதும் இஷா தொழுகையின் பின் புனித கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ்வும், ஸபர் மாதம் இவ்வுலகை விட்டும் பிரிந்த ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் தங்கள் வாப்பா நாயகம் அன்னவர்கள் பேரிலான மௌலிதும் ஓதப்படும்.

அண்ணலார் மேல் பேரன்பு கொண்ட அனைவரும் இம்மஜ்லிஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன், தங்களது வீடுகளில் தினமும் நபீபுகழ் மாலை புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை ஓதி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அன்பை அதிகரித்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.











Nov 21, 2014

மௌலவீ ஸுபி இம்தாதீ அவர்களின் கடிதத்திற்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் மறுப்புக் கடிதமும் ஆதாரமும் 20.11.2014

ஸுஹூர் முஹம்மத் என்பவரால் 11.11.2014 அன்று  எமது ஷம்ஸ் மீடியா யுனி்ட்டின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு மௌலவீ ஸூபி இம்தாதீ அவர்களால் எழுதப்பட்ட கடிதத்திற்கான மறுப்புக் கடிதமும் அதற்கான ஆதாரங்களும் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் 20.11.2014 அன்று பதிவுப் தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதியினை எமது இணையத்தளத்தில் பதிவிடுகிறோம்.





Nov 18, 2014

சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு - 2014

காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு - 2014 

வஹ்ஹாபிஸ வழிகெட்ட கூட்டத்தினருக்கு எதிராக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் உலமாஉகளுக்கான அமர்வின் 02ம் நாள் சங்கைக்குரிய ஷெய்ஹுனா அல் ஆலிமுல் பாழில், அல்ஹாஜ், மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் ஆற்றிய கெள்கை விளக்க சிறப்புரை....


ஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்

Nov 15, 2014

கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீப்


Nov 14, 2014

மல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

இவ்விரு வலீமார்களும் ஒரு தாய் பெற்ற சகோதரர்கள். “ஈரான்” நாட்டின் “குறாஸான்” மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவ்விருவரும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை நகரை அடுத்துள்ள “மல்கம்பிட்டி” என்றழைக்கப்படுகின்ற நெல்வயல் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். வாழை மரங்கள் நிறைந்த விசாலமான காணி ஒன்றில் இவர்களின் “தர்ஹா” அமைந்துள்ளது. இருவரும் ஒரே அறையில் துயில்கின்றார்கள்.

Nov 10, 2014

பிரதான குப்பாவிக்கான வேலைகள் ஆரம்பம்

ஸூபிஸத்தின் தளமாக இலங்கிக் கொண்டிருக்கும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஓர் அங்கமாக இன்று 09.11.2014 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05:00 மணியளவில் பள்ளிவாயில் பிரதான குப்பாவின் ஆரம்பப் பணிகள் அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. 

Nov 8, 2014

மௌலவீ பெஸுர் றஹீம்,மௌலவீ ஸூபீ இம்தாதீ ஆகியோருக்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் பதில் கடிதங்கள்

07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ பௌஸுர் றஹீம் அன்னவர்களுக்கு எழுதப்பட்ட பதில் கடிதம்


07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ ஸூபீ இம்தாதீ அவர்களுக்காக எழுதப்பட்ட பதில் கடிதம்


சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு-2014

காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு-2014 

வஹ்ஹாபிஸ வழிகெட்ட கூட்டத்தினருக்கு எதிராக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் 03ம் நாள் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் சங்கைக்குரிய மௌலவீ PA. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அன்னவர்கள் ஆற்றிய கெள்கை விளக்க சிறப்புரை....



வழிகெட்ட கூட்டத்தினர் வஹ்ஹாபிகள்


பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் அருள்மிகு கந்தூரி நிகழ்வுகள் - 2014

இந்தியாவின் தமிழ் நாட்டில் பாசிப்பட்டணம் எனும் ஊரில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைநேசர் செய்யிதுனா நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் தந்தை றாவுத்தர் ஸாஹிப் மௌலானா ஆகியோரினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 07.11.2014 (வெள்ளிக்கிழைமை) அன்று பி.ப 05:00 மணிக்கு திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

Nov 7, 2014

நேசிக்கும் நேசர் நெய்னார் முஹம்மத் வலீ!



பாசிப்பட்டணத்தில் பள்ளி கொண்டுள்ள
நேச மகனார் எங்கள் நெய்னார் வலிய்யுல்லாஹ்!
ஆசை அனைத்தையும் அவனுக்காய் துறந்திட்ட
நேசராய் வாழ்ந்த நெய்னார் வலிய்யுல்லாஹ்!

அப்பா ராவுத்தர் அப்பாவின் வழியிலே
தப்பாத தனையனாய் தரணியில் பிறந்திட்டார்
அப்போதும் இப்போதும் அல்லாஹ்வின் அருளினை
எப்போதும் பெற்றிட்ட ஏற்ற வலிய்யுல்லாஹ்!

உள்ளமை அல்லாஹ்வை உள்ளத்தால் உணர்ந்திட்டார்
இல்லாமை உலகத்தை எடுத்துப் பார்த்திட்டார்
வல்லமை வல்லோனின் வாய்மையை அறிந்திட்டார்
நல்லோர்கள் நபீமார்கள் நல்லாசி பெற்றிட்டார்

சின்னஞ் சிறு வயதினிலே சிறப்புகள் பெற்ற மகன்
உண்ண வைத்த மீனுக்கும் உயிர் கொடுத்த மகன்
விண்பார்த்து மின்பரிலே வியாக்கியானம் சொன்னமகன்
தன்னை உணர்ந்து தலைவனின் தத்துவம் சொன்ன மகன்

காலத்தால்  வாழ்ந்தாலும் கல்பினிலே வாழும் வலீ
கோலத்தைப் பார்க்காது கொள்கையில் இருந்த வலீ
ஆலத்துக்கும் மூலம் அவனே என்ற வலீ
ஞாலத்தில் இருக்கையிலே ஞானம் சொன்ன வலீ

கவிஞர் MACM.றபாய்தீன்


Nov 5, 2014

சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு-2014

காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு-2014 

வஹ்ஹாபிகளின் அண்டப்புழுகுகளுக்கு ஆதாரத்துடனும், வஹ்ஹாபிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுடனும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் 03ம் நாள் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாபிழ் M. ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ MA. அன்னவர்கள் ஆற்றிய கெள்கை விளக்க சிறப்புரை....

வஹ்ஹாபிஸத்திற்குச் சாட்டையடி


Nov 4, 2014

ஆஷூறா தின சிறப்பு நிகழ்வுகள்

இஸ்லாமியப் புதுவருட ஆரம்பத்தை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்தொடர்ந்து 10 தினங்கள் ஓதப்பட்டு வந்த, ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் 03.11.2014 அன்று அஷூறா தின இரவோடு நிறைவு பெற்றது. 

 இந்நிகழ்வில் ஆஷுறா தினத்தையொட்டி மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ அவர்களினால் விஷேட பயானும், இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரில் யாஸீன் சூறாவும் ஓதப்பட்டது நிறைவுபெற்றது.

 நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள்






ஆஷுறா தினம் தொடர்பான முஸாதிக் அஸ்ஹரீஅவர்களின் உரையைப் பார்வையிட இங்கே Click செய்யவும் 

Nov 3, 2014

அழகொளிரும் ஸூபிசத் தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்

இலங்கைத் திருநாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகு மிக்க கண்கவர் ஊரான காத்தான்குடியில் சுன்னத் வல் ஜமாஅத் சத்தியக் கொள்கையை உயிர்பிக்கும் தளமாகவும், இஸ்லாத்தின் ஆணிவேரான ஸுபிஸக் கொள்கையை ஆணி்த்தரமாக எடுத்தியம்பும் கொள்கையின்  சிற்பமாகவும் இயங்கி வரும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் அழகொளிர் காட்சிகள் சில.......


புதிய கட்டிய நிர்மாணப் பணிகளின் போது......









அல்மத்றஸதுர் றப்பானி்ய்யஹ்,பத்ரிய்யஹ் தைக்கிய்யஹ் ஆகிய இரு இறை சொத்துக்களின் ஸ்தாபகரும் ஆரிபுபில்லாஹ் அப்துர் மிஸ்பாஹீ தவப்புதல்வரின் அருமைத் தந்தையும், காத்தநகர் புகழ் சிறக்க பிரசித்தி பெற்ற ஆலிமும், கறாமத்துகளின் இருப்பிடமுமாகிய அல் ஆலிமுல் பாழில் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் தர்கா ஷரீப்





ஏகத்துவக் கொள்கையை உலகம் எடுத்தியம்பும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியின் அமைவிடம்...


அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் ஸ்தாபனங்களின் அலுவலகங்கள்

  • அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை
  • கரீப் நவாஸ் பௌன்டேஷன்


Nov 1, 2014

ஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்

ஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்

முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் ஆஷூறாதினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே ஆஷூறாநோன்பை நோற்று வந்துள்ளார்கள்.
         பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள்.
         பிற்காலத்தில் தாஸூஆஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின் நோற்பேன் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள். நபீ (صلى الله عليه وسلم) அவர்கள் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்காவிட்டாலும் நோற்பேன் என்று கூறியதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
      ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய ஒரு தினமாகும். இத்தினத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

  • இன்றுதான் நபீ ஆதம் (عليه السلم) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவரை ஏற்றுக் கொண்டான்.

நபீமார்கள் அனைவரும் நபிப்பட்டம் கிடைத்த பின்னும், அதற்கு முன்னும் குற்றம் செய்யாதவர்களாயிருக்கும் பட்சத்தில் ஆதம் நபீ செய்த குற்றம் என்ன என்ற கேள்விக்கு இத்துண்டுப் பிரசுரத்தில் விளக்கம் சொல்ல முடியாதுள்ளது.
  • இன்றுதான் நபீ நூஹ் (عليه السلم) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல் தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (عليه السلم)  அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (عليه السلم)  அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.
  • இன்றுதான் நபீ மூஸா (عليه السلم)  அவர்களும், நபீ ஈஸா (عليه السلم)  அவர்களும் பிறந்தார்கள்.
  • இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (عليه السلم)  அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்.
  • இன்றுதான் நபீ யூனுஸ் (عليه السلم)  அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.
  • இன்றுதான் நபீ ஐயூப் (عليه السلم)  அவர்களின் துன்பம் நீங்கியது.
  • இன்றுதான் நபீ யஃகூப் (عليه السلم)  அவர்கள் தனது மகன் யூசுப் (عليه السلم)  அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
  • இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (عليه السلم)  அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
  • இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்.
  • இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்.
  • இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது.
  • நபீ நூஹ் (عليه السلم)  அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் (عليه السلم)  அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்.
  • இன்றுதான் சுலைமான் நபீ (عليه السلم)  அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
  • இன்றுதான் நபீ ஸகரிய்யா (عليه السلم)  அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) மகனாகப் பிறந்தார்கள்.
  • இன்றுதான் நபீ மூஸா (عليه السلم) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள்.
  • இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.
  •   இன்றுதான் நபீ பேரர் ஹுஸைன் (رضي الله عنه)  கொல்லப்பட்டார்கள்.
  • இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபீ (صلى الله عليه وسلم) அவர்களின் இனபந்துக்களில் அநேகர் கொலை செய்யப்பட்டார்கள்.


         இத்தகைய விஷேடங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளும் முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாளான ஆஷூறா தினத்திலேதான் நடைபெற்றுள்ளன. இதனால்தான் இந்நாள் முஸ்லிம்களுக்கு விஷேட நாளாக அமைந்துள்ளது.
              முஸ்லிம்கள் இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், பிக்று செய்தல், தியானம் செய்தல், முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும் பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல் அவசியம்.

       “ஆஷூறாநோன்பு பற்றி நபீ (صلى الله عليه وسلم) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆஷூறாநோன்பு கடந்த வருடத்தின் குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையுமென்று விடை பகர்ந்தார்கள்.

    “ஆஷூறாதினத்தில் மனிதர்கள் நோன்பு நோற்பதுபோல் மிருகங்களும், பூச்சி, புழுக்களும் நோன்பு நோற்கின்றன. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

பறவை இனத்தில் முதலில் ஆஷூறாநோன்பு நோற்ற பறவை மைனா.

     “ஆஷூறாதினத்தில் ஒருவன் தனது குடும்பத்தவர்களையும், உறவினர்களையும் பேணி நடந்தால் அல்லாஹ் அவனுக்கு அருள் நிறைந்த விசாலமான வாழ்வைக் கொடுக்கிறான் என்றும், அந்த வருடம் முழுவதும் அவனுக்கு அளவற்ற அருள் செய்கிறான் என்றும் நபீ (صلى الله عليه وسلم) அவர்கள் அருளினார்கள்.

               “அல்பறகாஎனும் நூலில் இது பற்றிக் கூறுகையில் ஐம்பது ஆண்டுகளாக இந்த விடயத்தை நாங்கள் பரீட்சித்து வருகிறோம். எந்த மாற்றமுமின்றிச் சொன்னபடியே நடந்து வருகிறதென்று ஆத்ம ஞானி சுப்யான் தௌரி (رحمة الله عليه) கூறுகிறார்கள்.

    நபீ பேரர் ஹுஸைன் (رضي الله عنه)  அவர்கள் ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டது  இத்தினத்திலேயாகும்.

      இதனால்தான் ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு ஹஸன், ஹுஸைன், பாதிமஹ் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்ம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் இலங்கையில் பல பாகங்களிலும், குறிப்பாகக் காத்தான்குடியிலும் இருந்து வருகிறது.

இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்த போதினும் சமீபத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டங்களிற் சில இவ்வழக்கம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் மக்களிடையே பறை சாற்றி வருகின்றது. இத்தகைய கூட்டங்கள் பற்றிப் பொது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
       முஹர்றம் மாதமான இம்மாதம் ஒன்பதாம், பத்தாம் நாட்கள் விஷேடமான நாட்களாயிருப்பதுபோல் இம்மாதத்தில் வேறு விஷேட நாட்களும் இருக்கின்றன.
         இம்மாதத்தின் முதல் நாள் இஸ்லாமிய புதுவருடத்தின் முதல் நாளாகும். இந்நாள் அறபு அரசர்களிடம் அதி விஷேட நாளாகும். அவர்கள் இந்நாளில் புத்தாடை உடுத்து அதி விஷேட உணவு சாப்பிட்டு மகிழ்வார்கள். இம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் வாசிகளான நஸாறாக்களுடன் நபீ (صلى الله عليه وسلم)  அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
  • இம்மாதத்தின் ஏழாம் நாள் நபீ யூனுஸ் பின் மத்தா (عليه السلم)  அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியேறிய நாளாகும்.
  • இம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடந்த நாளாகும்.
  • இம்மாதத்தின் பதினேழாம் நாள்தான் நபீ மணி (صلى الله عليه وسلم) அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (رضي الله عنه) கொலை செய்யப்பட்டார்கள்.

        இம்மாதம் இருபத்தைந்தாம் நாள் தொடக்கம் மாதம் முடியும் வரை நஹ்ஸ்உடைய நாட்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது பறகத் குறைந்த நாள் என்று கருதப்படுகிறது. அதாவது இந்நாட்களில் திருமணம் செய்தல், வீடுகட்டுதல், வியாபாரம் துவங்குதல், பொதுவாக நல்ல காரியம் ஆரம்பித்தல் பொருத்தமற்றதென்று வைத்திய நிபுணர்கள் கருதுகிறார்கள். இந் நாட்களில்தான் ஆத், தமூத் கூட்டத்தினர்கள் பயங்கர சோதனை மூலம் அழிக்கப்பட்டார்கள்.

          ரமழான் மாதத்தில் நோற்கத் தவறிய கழாநோன்புள்ளவனும் நேர்ச்சை நோன்புள்ளவனும் தாஸூஆ - ஆஷூறா ஒன்பதாம் பத்தாம் நாட்களில் தம்மீதுள்ள கழா அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால் அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இவ்விரு சுன்னத்தான நோன்புகளின் நன்மையும் கிடைக்கும், ஆனால் நிய்யத் வைக்கும் பொழுது பர்ழான ரமழான் நோன்பு என்றும், நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.

                   “கழாநோன்பு அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் ஆஷூறா - தாஸூஆ நோன்பு என்று நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
       எனவே, இம்மாதத்தின் ஒன்பதாம், பத்தாம் நாட்களில் நோன்பு நோற்றும், குடும்பத்தவர்கள் உறவினர்களைப் பேணியும், ஏழைகளுக்கு உணவு, உடை, பணம் முதலியன வழங்கியும் நல்லடியார்களில் சேர்வோம்.

- வஸ்ஸலாம் -
வெளியீடு
அகில இலங்கை ஸூபிஸ உலமாசபை
31.10.2014