Nov 8, 2014

பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் அருள்மிகு கந்தூரி நிகழ்வுகள் - 2014

இந்தியாவின் தமிழ் நாட்டில் பாசிப்பட்டணம் எனும் ஊரில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் இறைநேசர் செய்யிதுனா நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், அன்னாரின் தந்தை றாவுத்தர் ஸாஹிப் மௌலானா ஆகியோரினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 07.11.2014 (வெள்ளிக்கிழைமை) அன்று பி.ப 05:00 மணிக்கு திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


கொடியேற்ற நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ  மஜீத் றப்பானீ அவர்களின் துஆப் பிரார்த்தனையும், திருக்கொடியேற்ற நிகழ்வுக்காக ஒன்று சேர்ந்திருந்த மக்களின் முறாதிய்யஹ் முழக்கத்துடனும் கந்தூரிக்காக அட்டாளைச்சேனையிலிருந்து வருகை தந்திருந்த ஸெய்யிது வம்சத்தைச் சேர்ந்த மௌலானா அவர்களால் திருக்கொடியேற்றியும் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆனும், மஃரிப் தொழுகையின் பின் இரு மகான்களின் பேரில் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும், இஷாத் தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ ஜலால்தீன் பலாஹீ அவர்களால் சன்மார்க்க விளக்கவுரையும் நிகழ்த்தப்பட்டது.

இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகத்தின் பின் இனிதே ஸலவாத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்

கந்தூரி நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள்