Feb 29, 2012

துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள்

-மௌலவீ.AHM.குறைஷ் (றப்பானீ)-

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறும் பொழுது ‘நீங்கள் என்னை அழைத்துப் பிரார்த்திய்யுங்கள் நான் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்​பேன்” என்று கூறுகின்றான் (40:60). பெருமானார் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்விடம் துஆ கேட்காமலிருந்து விடும் போது அல்லாஹ் கோபிக்கின்றான் என்று சொன்னார்கள் (திர்மிதீ 5/126, -3433-மிஷ்காத்2238) மேற்சொல்லப்பட்ட திருமறை வசனத்திலிருந்தும் திரு நபீமொழியிலிருந்தும் அல்லாஹ்விடம் துஆ கேட்கும்போது அந்த துஆ பயனளிக்க சில ஒழுக்கங்கள் பின்வருமாறு.​

Feb 22, 2012

சியாரதுல் குபூர் -- மண்ணறைகளைத் தரிசித்தல்.


தொடர்-05 
சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ 

முதலாவது நபீமொழி பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த நபீமொழியில் எனது “கப்று” அடக்கவிடத்தை தரிசித்தவன் என்று கூறப்பட்டிருந்தாலும் அதன் சரியான அர்த்தம் என்னைத் தரிசித்தவன் என்பதேயாகும். 

சரியான அர்த்தம் அதுவாக இருந்தாலும் நபீ(ஸல்) அவர்கள் சரியான அர்த்தம் தரும் வசனமான مَنْ زَارَنِيْ என்ற வசனத்தைக் கூறாமல் விட்டிருப்பதில் மிக ஆழமான தத்துவமொன்று மறைந்திருப்பதை மிக நுட்பமாக ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். 

Feb 16, 2012

கத்தார் மஜ்லிஸ் நிகழ்வுகள்...

கடந்த 10/02/2012 வெள்ளி நள்ளிரவு 12:30 மணிக்கு கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் புனித திருக்கொடி ஏற்றத்துடன் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புனித சலவாத் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அகமியம் பற்றி சங்கைக்குரிய மௌலவீ நுழாருல்லாஹ் றப்பானீ அவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து முஹம்மது பிஹாம் அவர்களின் நபி நாயகத்தின் புகழ் பாடவந்த இனிய பாடலும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து பூமான் நபி மீது புனித சலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டது. இதில் கடந்த 05/02/2012 அன்று 68 வது வயதையடைந்த சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களுக்காக விசேட துஆ பிரார்தனையும் செய்யப்பட்டது.

Feb 12, 2012

மாபெரும் இரத்ததான நிகழ்வு - 2012


கண்மனி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக றப்பானிய்யஹ் இளைஞர் கழகமான மாபெரும் இரத்தனான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வானது 11/02/2012 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

கப்றுகளும் ஸியாறத்தும்

Moulavi MJM. Jahaany Rabbani 

“ஹழ்றத் புரைதஹ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபீ (ஸல்) அவர்கள் நவின்றார்கள். கப்றுகளை ஸியாறத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன் இப்போது கப்றுகளை ஸியாறத் செய்யுங்கள் ஏனெனில் அதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” 
நூல்: அபூதாவூத் 
பாகம் – 02, பக்கம் – 105 

Feb 7, 2012

சிறப்பு காதிரிய்யஹ் மஜ்லிஸ் நிகழ்வு....

بسم ا لله ا لر حمن الر يم 
அல் மதத் யாரஸூலல்லாஹ் 
அல் மதத் யாஹபீபல்லாஹ் 
அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஆத்மீகத் தந்தை, ஜவ்ஹறுல் அமல், சாமஷீ, கலாநிதி, காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ், தரீக்கஹ்களின் ஷெய்ஹ் நாயகம், அல்ஆலிமுல் பாழில் அஸ்ஷெய்யிதுஷ் ஷெய்ஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஷ்பாஹி பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹு) அன்னவர்களின் 68வது பிறந்த தினத்தை கண்ணியப்படுத்தும் முகமாக “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிராத்தனை” * 5 - 2 – 2012 ஞாயிறு பி.ப திங்களிரவு நிகழ்வு ஒன்றை காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் வீதியில் இயங்கும் “காதிரிய்யஹ் திருச்சபை” ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிகழ்வில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவர்களின் முரீதீன்கள், முஹிப்பீன்கள் கண்ணியமிக்க உலமாக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Feb 6, 2012

புனித ஸலவாத் மஜ்லிஸ்

பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த சிறப்புமிகு தினத்தை முன்னிட்டு பெருமானார் பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் 05.02.2012 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான முஹிப்பீன்கள் கலந்து கொண்டனர்.

பூமான் நபீ புகழ் கூறும் புனித மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள்....

உலகுக்கோர் அருட்கொடையாய் வந்துதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வந்துதித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக 24.01.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆரம்பமான பெருமானார் பெயரிலான மௌலித் ஷரீப் தொடர்ந்து 12 தினங்கள் ஓதப்பட்டு இறுதித்தினமான 04.02.2012 அன்று தபர்றுக் விநியோகத்துடன் நிறைவுபெற்றது.

Feb 4, 2012

புதிய கட்டிட நிர்மான வேலைகள்

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிட நிர்மான வேலைகள் எமது மக்களின் நிதிப் பங்களிப்புடன் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்த வகையில் 4ம் மாடிக்கான வேலைகள் நடைபெற்று  அதற்கான கொங்கிரீட் இடும் வேலைகள் 30.06.2012 சனிக்கிழமை பி.ப 4.30 மணிக்கு சங்கைக்குரிய ஷெய்குனா அவர்களின் பாத்திஹாவுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Feb 3, 2012

சிறப்பு காதிரிய்யஹ் மஜ்லிஸ்

சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ  (தால உம்றுஹு) அவர்களின் 69வது அகவையினை முன்னிட்டு மாதாந்தம் எமது பள்ளிவாயலில் நடைபெற்றுவரும் புனித காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் 05.02.2013 செவ்வாய்க்கிழமை பி.ப 8.00 மணிக்கு  சிறப்பு றாதிப் மஜ்லிஸாக நடைபெறவுள்ளது.

அன்றைய மஜ்லிஸில் நிகழ்வுகளில் சங்கைக்குரிய ஷெய்குனா அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்தனையும் இடம்பெறவுள்ளது. அத்துடன் அவர்களைக் கௌரவிக்குமுகமாக நினைவுச் சின்னமொன்றும் காதிரிய்யஹ் திருச்சபையினால் வழங்கிவைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்

காதிரிய்யஹ் திருச்சபை

Feb 2, 2012

உத்தம நபீ உன்போன்ற மனிதனா?

அதி சங்கைக்குரியஷெய்குனா 
மௌலவீ,அல்ஹாஜ் A அப்துர்றஊப் மிஸ்பாஹீஅவர்கள் 

வஹ்ஹாபிஸ குழியில் வழுக்கி விழுந்த அல்லாஹ்வின் அடியானே! நபீ ஸல் அவர்கள் என் போன்ற மனிதனென்று நீ சொல்கிறாயா? 

ஏன் இவ்வாறு சொல்கிறாய்? இது உனது அறியமையா? அல்லது ரியாலுக்காக நீ நடிக்கும் நாடகமா? இது உனது அறியாமையாயின் இதற்கு மருந்தும் உண்டு. மருத்துவமனையும் உண்டு. இது உனது நாடகமாயின் இதற்கு மருந்துமில்லை. மருத்துவனையுமில்லை. என்ன மருந்து? எந்த மருத்துவனை என்ற கேட்க நினைக்கிறாயா? கவலைப்படாதே. இரண்டையும் சொல்லி விடுகிறேன்.