Dec 28, 2014

Dec 24, 2014

றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்

ஈருலகப் பிரகாசர், ஏக இறை யோனின் இறை நேசர், எங்கள் உயிர் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பித்து காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்குகின்ற நான்கு நிறுவனங்களில் நேற்று 23.12.20114 அன்று சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின....

Dec 23, 2014

ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்

அகிலத்தின் அருட்கொடையாய், அஹதவனின் முதல் வெளிப்பாடாய் இவ்வுலகில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியின் பல இடங்களில் 23.12.2014 செவ்வாய்க்கிழமை அன்னவர்களின் பேரில் திருக்கொடியேற்றி சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமாகவுள்ளது.

காத்தான்குடி-5 பத்ரிய்யஹ்  ஜும்அஹ் பள்ளிவாயல்

தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல்

நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்

ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ்

மேற்கண்ட இடங்களில் தொடர்ந்து 12 தினங்கள் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை புனித ஸுப்ஹான மௌலிதும் இஷா தொழுகையின் பின் கண்ணியமிக்க உலமாக்களின் சன்மார்க்க சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து சிறப்பித்து, அண்ணலாரின் அருளன்பைப் பெற்றேகுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

Dec 16, 2014

18வது வருட தங்கள் வாப்பா கந்தூரி

ஆஷிகுல் அவ்லியா, ஆரிப்பில்லாஹ் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் நினைவாக 18வது வருட மாகந்தூரி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கடந்த 15.12.2014 (திங்கட்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

Dec 14, 2014

அலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்

அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்டு, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் 17வது வருட கந்தூரி வைபவத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட (அலையெழுப்பும் அற்புதக் கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்) எனும் நூலிருந்து....

Dec 12, 2014

18வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி

கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா, குத்புஸ்ஸமான், அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத்,அஷ்ஷெய்கு அப்துர் றஸீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவா்களின் 18வது வருட அருள் மிகு கந்தூரி இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது.

புனித கந்தூரி- 15-12-2014 திங்கட்கிழமை பி..9.00 மணி

        
மஜ்லிஸ் நிகழ்வுகள்
பி. 5.00மணி-புனித திருக்கொடியேற்றம்
தொடந்து- கத்முல் குர்ஆன் தமாம் வைபவம்  

மஃரிபின்பின்-தங்கள் மௌலானா வாப்பா பெயரிலான மவ்லிதும் வித்ரிய்யாஹ் ஷரீபஹ்வும் 

இஷாவின் பின் புனித பயான் நிகழ்வுதுஆதபர்றுக் விநியோகம்ஸலவாத்துடன் நிறைவு

இந்நிகழ்வுகளில் முஹிப்பீன்களும்,முரீதீன்களும் கலந்தும் காணிக்கை நேர்சைகளை வழங்கியும் திங்களொளி முகத் தங்கள் நாயகத்தின் அருள் பறக்கத்தை பெற்றேகுமாறு அனைவரையும் அன்பாக அழைக்கிறாம்.


Dec 7, 2014

ஒன்றும், “சீறோ”வும் இரண்டாகுமா?

ஒன்றும் ஸைபரும் இரண்டாகுமா? என்றுஸூபீகளிடம் ஒரு கேள்வி உண்டு. அதாவது ஒன்று என்பது அல்லாஹ்வையும், ஸைபா் என்பது சிருட்டியையும் குறிக்கும்.

இதன் சுருக்கம் என்னவெனில் ஒன்று என்ற எண்னின் கீழ்ஸைபா்என்பதை எழுதிக் கூட்டினால் ஒன்று என்று முடிவு வருவது போல் ஒன்று என்ற அல்லாஹ்வையும்ஸைபா்என்ற  சிருட்டியையும் சோ்த்தால் -கூட்டினால் - ஒன்றேதான் வரும். அதாவது சிருட்டி என்பது இல்லை என்றும், அல்லாஹ்வின் வுஜுத்உள்ளமை மட்டுமே உள்ளது என்றும் முடிவு வரும்

Dec 6, 2014

நீ அல்லாஹ்வை காண்பவன் போல் அவனை வணங்கு


ஒரு சமயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களிடம் மனித உருவில் வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவா்கள் ஈமான் என்றால் என்ன? இஸ்லாம்என்றால் என்ன? இஹ்ஸான்என்றால் என்ன? என்று கேட்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னார்கள்.
இஹ்ஸான்என்றால் என்ன என்ற கேள்விக்கு

أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ
என்று பதில் கூறினார்கள்விளக்கம் சொன்னார்கள்.

இதன் பொருள் : நீ அல்லாஹ்வை தலைக் கண்ணால் காண்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீ அவனைக் காணாது போனாலும் உன்னைக் காண்கிறான்
                     “இஹ்ஸான்என்பதும் இக்லாஸ்” என்பதும் சாராம்சத்தில் இரண்டும் ஒன்றுதான்.
              “இக்லாஸ்என்பதற்கு  யார் என்ன விளக்கம் சொன்னாலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் கூறியுள்ள விளக்கத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும். அவர்களை விட ஆழமான பொருத்தமான  விளக்கம் சொல்வதற்கு யாருமில்லை. யாராவது விளக்கம் சொன்னால் கூட அது பெருமானின் விளக்கத்தை ஒத்ததாக இருந்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்

            பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் கூறியுள்ள இவ்வரைவிலக்கணம் மிக ஆழமான ஓா் அம்சத்தை உள்ளடக்கியிருப்பது தெளிவு பெற்ற இறை ஞானிகளுக்கு மறைவானதல்ல. ஆயினும் மற்றவா்களுக்கு அது மறைவானதேயாகும்.
அந்த அம்சம் எதுவென்று விளக்கி வைக்க எம்மால் முடியாது போனாலும் அப்படி ஒரு அம்சம் உண்டு என்பதை பிறருக்கு உணர்த்தி தகுதியானவர்களிடம் அதற்கான விடையை பெற்றுக்கொள்ளத் தூண்டும் நோக்கத்தில் ஓா் உதாரணம் எழுதுகிறேன்.

                    முசம்மில் என்பவன் முனாஸ் என்பவனிடம் முக்தார் என்பவனை குறித்து நீ முக்தார் என்பனைக் காண்பவன் போல் இவ்விடத்தில் அமா்ந்து கொள்என்று சொல்வது போன்று.

                  இந்த வசனத்தை அறபு மொழியில் اجلس هنا كأنك ترى مختارا என்று கூறலாம்.
         இவ்வுதாரணத்தில் கூறப்பட்டபடி முனாஸ் என்பவன் செயல்படுவதற்கு அவன் முக்தார் என்பவனை ஏற்கனவே கண்டவனாக இருக்க வேண்டும். ஏற்கனவே காணாத ஒருவனை குறித்துஅவனைக் காண்பவன் போல்என்று கூறுவது பொருத்தமற்ற, உருவகப் படுத்த முடியாத ஒன்றுமாகும். சுருங்கச் சொன்னால் அது அசாத்தியமான ஒன்றுமாகும்.
               அல்லாஹ் உருவமற்றவன், கற்பனைக்கு எட்டாதவன், இவ்வுலகில் தலைக் கண்ணால் காண முடியாதவன், எடை, நிறம், கட்டை, நெட்டை போன்ற சிருஷ்டிகளின் தன்மைகளை விட்டும் துய்யவன் என்ற கருத்தின்படி அவனைக் காண்பவன் போல் வணங்குவது எவ்வாறு சாத்தியமாகும்? அது அசாத்தியமென்றால் அசாத்தியமான ஒன்றைச் செய்யுமாறு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் யாரையும் பணிப்பார்களா?
  
 كَأَنَّكَ تَرَاهُ நீ அவனை காண்பது போல்என்ற வசனத்திலுள்ள  “காப்என்ற எழுத்துக்கு போல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இது அறபு மொழியில் தஷ்பீஹ்எனப்படும். இந்த எழுத்து தேவையற்றதாயின்வீணானதாயின் பெருமானாரின் திருவாயிலிருந்து வெளியாகி இருக்காது. மேலும் குறித்த வசனத்தில்தறாஎன்ற சொல் தலைக்கண்ணால் காண்பதைக் குறிக்கும் ஒரு சொல் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

         இறை ஞானிகளிடமிருந்தும், குறிப்பாக வஹ்ததுல் வுஜுத்ஞானத்தை மறுப்பவர்களிடமிருந்தும் சரியான விளக்கத்தை எதிர்ப்பார்க்கின்றோம்.

(ஷாஹே ஸறன்தீப்)

Dec 4, 2014

மல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

இவ்விரு வலீமார்களும் ஒரு தாய் பெற்ற சகோதரர்கள். “ஈரான்” நாட்டின் “குறாஸான்” மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவ்விருவரும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை நகரை அடுத்துள்ள “மல்கம்பிட்டி” என்றழைக்கப்படுகின்ற நெல்வயல் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். வாழை மரங்கள் நிறைந்த விசாலமான காணி ஒன்றில் இவர்களின் “தர்ஹா” அமைந்துள்ளது. இருவரும் ஒரே அறையில் துயில்கின்றார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள இவர்களின் “தர்ஹா” காட்டு யானைகள் நடமாடும் பகுதியில் உள்ளது.

சில சமயம் யானைகள் வந்தாலும் தர்ஹாவின் விசாலமான காணிக்குள் பிரவேசிக்கமாட்டா. நீண்டகால வரலாறுள்ள இந்த வலீமாரின் முழு விபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் நூற்றுக்கும் மேற்பட்ட வயோதிபர்கள் தந்த தகவல்களின் படியும், காத்தான்குடியில் பெருமகானாக வாழ்ந்து மறைந்த மா்ஹூம் அல்ஹாஜ் மௌலவீ அஹ்மத் லெப்பை ஆலிம் பறழீஅவா்கள் குறித்த இரு வலீமார் பெயரால் அறபியில் எழுதிய மௌலிதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் படியும் சில உண்மைகளை இங்கு தருகின்றோம்.

        இவா்கள் இருவரும் அடக்கம் பெற்றுள்ள மல்கம்பிட்டிஎன்ற இடம் சுமார் 100வருடங்களுக்கு  முன் பயங்கர வன விலங்குகள் வாழ்ந்த காடாக இருந்தது. அங்கு மனிதர்கள் எவரும் வசிக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து சுமார் 3கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள சம்மாந்துறை என்ற ஊரிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனா்.

           இவ்வூர் மக்களில் வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்ட சிலா் ஒரு வாரத்தில் இரு முறை தற்போது தா்ஹா அமைந்துள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று மான்,மறை,முயல் முதலானவற்றை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை விற்று வருவது வழக்கமாக இருந்தது.

                ஒரு நாள் வேட்டைக்குச் சென்றவா்கள் காட்டின் மத்தியில் சிறிய குடிசை ஒன்றில் இரு வயோதிபா்கள் வணக்க வழிபாட்டில் இருந்ததைக் கண்டு வியந்து வியா்த்துப் போனார்கள். அவ்விருவரும் தோற்றத்தில் அறபிகள் போல் இருந்ததால் முஸ்லிம்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவா்களை அணுகி ஸலாம் கூறினார்கள். அவா்கள் இருவரும் அழகாக பதில் கூறினார்கள். அங்கு சென்ற சம்மாந்துறை வாசிகள் தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தனா். அவ்விருவரும் பேசிய மொழி இவா்களுக்கு புரியவில்லை.


           அவா்கள் ஜாடை மூலம் அவா்கள் இருவரையும் தம்மோடு வருமாறு அழைத்தார்கள். அவா்கள் அதற்கு உடன்படாத காரணத்தால் வேட்டையாடாமல் சம்மாந்துறைக்கு வந்து பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் நடந்த விடயத்தை கூறினார்கள். நிர்வாகிள் அறபு மொழி தெரிந்த ஆலிம்கள் இருவரை அழைத்துக் கொண்டு குறித்த காட்டிற்குச் சென்றார்கள்.
தொடரும்....