Mar 26, 2015

முஹ்ஸின் மௌலானா தா்ஹா ஷரீப்

- ஸாஹே ஸரன்தீப் - 

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் வாழ்ந்து மறைந்த மாமேதைதான் முஹ்ஸின் மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் குடும்ப வழியில் வந்த “ஸாதாத்” மார்களில் ஒருவராவார்கள். இவர்கள் “ஸெய்யித்” மட்டுமன்றி ஓர் ஆலிம் - மார்க்க மகானுமாவார்கள்.

 இவா்கள் கறாமத்என்ற அற்புதம் உள்ள ஒருவலீஎன்பதை ஊா் மக்கள் நன்கறிவா்.

Mar 25, 2015

தொழுகையின் அவசியமும், அதன் சிறப்பும்.

ஆக்கம் -
மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம் - மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்
தீன் நகர், காத்தான்குடி
++++++++++++++++++++++++++++++++++++

தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமான ஒன்றாகும். கியாமத் நாளில் முதலில் கலிமாவைப்பற்றி விசாரிக்கப்படும். அதன் பின் பர்ளான  ஐவேளைத் தொழுகைகளைப் பற்றியே வினவப்படும், ஆராயப்படும்.

தொழும் விடயத்தில் எதுவித காரணமும் சொல்லித் தப்பித்து விட முடியாது. நோன்புக்கு சலுகைகள் இருந்தாலும் தொழும் ஒருவருக்கு அதனை விட்டு விடுவதற்கு எதுவித சலுகையும் இல்லை. வருத்தம், முதுமை உட்பட.

அம்பா நாயகம் நினைவு மஜ்லிஸின் தொகுப்பு

இந்தியா தமிழ் நாடு கம்பம் நகரில் சமாதி கொண்டுள்ள அஸ்ஸெய்யித் முஹம்மத் அப்துர் றஹ்மான் கம்பமீ (அம்பா நாயகம்) அன்னவர்களின் நினைவாக 24.03.2015 செவ்வாய்க்கிழமை அன்று இஷா தொழுகையின் பி்ன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது.

Mar 24, 2015

அல்லாஹ்வின் இறைநேசர் அம்பா நாயகம் (றஹ்) அவர்கள்

-அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ
அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

நான் சென்னையில் தங்கியிருந்த பொழுது தமிழ் நாட்டு உலமாக்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் கம்பம் செல்லுங்கள். அங்கு ஒரு மகான் இருக்கின்றார்கள். அவர்கள் அவ்லியாக்களில் ஒருவர் என்று சொன்னார்கள். கம்பம் நோக்கி விரைந்தேன். ஒரு நாட்காலை நேரம் சுமார் பத்துமணியளவிள் கம்பத்தில் கால் வைத்தேன். மகான் அவர்கள் தங்கியுள்ள தைக்காவை விசாரித்து அறிந்து கொண்டேன். உள்ளே நுழைந்தேன். ஒருவர் வந்து நீங்கள் யார்? எதற்காக வந்தீர்கள்? என்று கேட்டார். நான் ஒரு மௌலவீ இலங்கையைச் சேர்ந்தவன். மகானைச் சந்திக்க வந்தேன் என்றேன்.

கதவு திறக்கப்பட்டது. உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. உள்ளே நுழைந்தேன். அங்கே கணீர் என்ற குரலில் ஒருவர் ஞானவிளக்கம் சொல்லிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. அங்கே ஒரு பெரியார் கம்பீரமான தோற்றம். அடர்ந்த தாடி. கவர்ச்சிமிக்க முகம். சுமார் எழுவது வயது மதிக்கத்தக்கவர்.

Mar 19, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்

சிரேஷ்ட விரிவுரையாளர் - அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்


தொடர் – 04


ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு ஸைத் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள்


இவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸஹாபஹ்தோழர்களில் ஒருவர். ஹஸ்ரஜ் வம்சத்தைச் சேர்ந்த மதீனாவாசி, பத்ர் யுத்தம் மற்றும் பல யுத்தங்களில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடன் கலந்து கொண்டவர்கள். தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைப்பது என்ற ஆலோசனை ஸஹாபாக்களின் மத்தியில் முன்வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அதில் பாங்கு சொல்லும் முறை இவர்களுக்கு கனவில் அறிவிக்கப்பட்டது. தான் கண்ட கனவை நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் அவர்கள் கூறிய போது அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஸெய்யிதுனா பிலால் றழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு கனவில் அறிக்கப்பட்டது போன்று பாங்கு சொல்லும்படி பணித்தார்கள். இவர்கள் அபூமுஹம்மத் என்ற புணைப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள். மதீனா முனவ்வராவில் தனது 64வது வயதில் மரணித்தார்கள். இவர்களின் ஜனாஸா தொழுகையை ஸெய்யிதுனா உத்மான் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நடத்தினார்கள்.

ஷாஹுல் ஹமீத் பாதுஷாஹ் நாயகம் அன்னவர்களின் 67வது வருட கந்தூரிக்கான அறிவித்தல்

இந்தியா - தமிழ்நாடு நாஹுர் ஷரீபில் அரசாட்சி செய்யும் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 

67வது வருட அருள்மிகு கந்தூரி


திருக்கொடியேற்றறம் - 27.03.2015 (வெள்ளிக்கிழமை)

மாகந்தூரி - 29.03.2015 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் - பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-05 

Mar 16, 2015

ஸலாம் ஓர் பார்வை





மௌலவீ  HMM.பஸ்மின் றப்பானீ
மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் பேஷ் இமாம்

ஸலாம் என்பது இஸ்லாத்தில் ஒரு சகோதரர் தன் மற்ற சகோதரரை கண்டபோது  - முகமன் - சொல்வதற்கு  குறிப்பாக பயன் படுத்தப்படுகின்றது. மாற்றுமத சகோதரர்கள் அவர்களின் வழக்கத்திலுள்ள அய்போவன், வணக்கம், குட்மோனிங், என்ற தங்களின் மதம் கூறும் வழியில், அல்லது அவர்களின் வழக்க முறைப்பிரகாரம் தங்கள் முகமன்களை கூறிக் கொள்கின்றனர்.

Mar 15, 2015

றிபாயீ நாயகம் நினைவு மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு

சுல்தானுல் ஆரிபீன், தாஜுல் முஹக்கிகீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர் றிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவாக 13.03.2015 அன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின் காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற நினைவு மஜ்லிஸின் தொகுப்பு

Mar 10, 2015

24வது வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு

முத்துப் பேட்டை ஜாம்புவான் ஓடையின் நல்லாட்சி செய்யும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக 24வது வருட மகா கந்தூரி காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 06.03.2015 வெள்ளிக் கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

Mar 7, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்

தொடர் – 03

அஸ்ஸெய்யிதஹ் ஆயிஷா றழியல்லாஹு தஆலா அன்ஹா அன்னவர்கள்

ஸெய்யிதுனா அபூபக்ர் சித்தீக் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் அன்பு மகள், நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மனைவிமார்களில் வயது குறைந்தவர்களும், மிகப்பிறசித்தி பெற்றவர்களுமாகும்.

Mar 4, 2015

ஐஸ்கட்டியும், தண்ணீரும்

قال الشيخ عبد الكريم الجيلي رحمه الله!

وَمَا الْخَلْقُ فِيْ التَّمْثِيْلِ اِلاَّ كَثَلْجَةٍ
وَاَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعٌ
وَلَكِنْ بِذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ
وَيُوْضَعُ اِسْمُ الْمَاءِ وَالْاَمْرُ وَاقِعٌ


மேற்கண்ட கவியில்இன்ஸான் காமில்நூலாசிரியர் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

         அல்லாஹ்வின் படைப்பு ஐஸ்கட்டி போன்றும், அல்லாஹ் அதிலுள்ள நீர் போன்றவனுமாவான்.

          ஐஸ்கட்டி கரைந்தால் அந்தப் பெயரும், அதன் தன்மையும் இல்லாமற் போய்விடும். நீர் என்ற பெயர் அதற்கு வந்து விடும்.

              ஐஸ்கட்டி என்பது நீரின் ஒரு உருவமேயன்றி எதார்த்தத்தில் ஐஸ்கட்டி என்று ஒன்றில்லை. நீரேதான் ஐஸ்கட்டியின் உருவத்தில் தோற்றுகிறது.

             இவ்வாறுதான் சிருஷ்டியாகும். எதார்த்தத்தில் சிருஷ்டி என்று ஒன்றில்லை. அல்லாஹ்தான் சிருஷ்டியின் உருவத்தில் தோற்றுகிறான்.

          எனவே நீரைத்தவிர வேறொன்றும் இல்லை என்பது போல் அல்லாஹ்தவிர வேறொன்றும் இல்லை என்று அறிவதும், நம்புவதுமே சரியானஈமான்நம்பிக்கையாகும்.

              இதற்கு மாறாக ஒருவன் நம்பினால் ஸுபிகளிடம் அவனின் நம்பிக்கை பிழையானதாகிவிடும்.

         “லாயிலாஹ இல்லல்லாஹ்என்ற திருவசனம் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
ஸாஹே ஸறன்தீப்


Mar 3, 2015

24 வருட ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் கந்தூரி அழைப்பிதழ்

முத்துப் பேட்டை ஜாம்புவான் ஓடையில் அரசாட்சி செய்து, தீராத நோய்களை இறைவனி்ன் அருள் கொண்டு சுகப்படுத்தும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவாக 24வது வருடமாக மாகந்தூரி நடைபெறவிருக்கிறது.


திருக்கொடியேற்றம் - 06.03.2015 (வெள்ளிக்கிழமை)

மாகந்தூரி - 08.03.2015 (ஞாயிற்றுக் கிழமை)

இடம் - பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
காத்தான்குடி-05

ஆன்மீக வழி மனங்கமழும் இந்நிகழ்வுகளில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.