Aug 25, 2013

சகாத் பற்றி ஓர் ஆய்வு

தொடர் - 02...
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி 
அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

விபரம்

1. சகாத் பெறத் தகுதியானவர்கள் குறைவாகவும் சகாத் பொருள் அதிகமாகவும் இருந்தால் தகுதியுள்ள அனைவருக்கும் சகாத் வழங்க வேண்டும். சகாத் பொருள் குறைவாக இருந்தால் சகாத் பெறத் தகுதியான ஆறு பிரிவினரில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது மூன்று நபர்களுக்காவது கட்டாயமாக்க கொடுத்தாக வேண்டும். இவ்வாறு கொடுப்பதற்காக சகாத் பொருளை ஆறு சம பங்குகளாகப் பங்கீடு செய்வது அவசியமாகும். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்படும் மூன்று நபர்களுக்கிடையில் சம பங்கீடு அவசியமில்லை.

2. ஏதாவது ஒரு பிரிவினர் முற்றிலும் இல்லாதபோதும் அல்லது மூன்று நபர்களை விடக் குறைவாக இருக்கும்போது இப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட தொகையை வேறு பிரிவினர்களுக்கு அல்லது அவர்களிலேயே மீதமுள்ளவர்களுக்குக் கொடுக்கலாம்.

3. உடை​மைகள் இருக்கும் ஊர்களிலேயே சகாத் வழங்கவேண்டும். அவ்வூரை விட்டு வேறு ஊருக்கு சகாத்தைக் கொண்டு செல்லக்கூடாது. அது சகாத் கொடுப்பவனின் சொந்த ஊராக இருப்பினும் சரியே.