Jun 21, 2015

பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்

றமழான் மாத இரவுகளில்ஸுன்னத் வல் ஜமாஅத்கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில்தறாவீஹ்தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்குநோன்பின் நிய்யத்சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள்.


பள்ளிவாயலில் இரவு 10 மணிக்கு நோன்பிற்கானநிய்யத்வைத்துக் கொண்டு வீடு சென்றவர்கள்ஸஹர்முடியும் வரை – “ஸுப்ஹ்தொழுகைக்கான நேரம் வரும் வரை சாப்பிடாமலும், குடிக்காமலும் இருக்க வேண்டுமா? அல்லது சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் தடை ஒன்றுமில்லையா? (சாப்பிடுவதாலும், குடிப்பதாலும் நோன்பு வீணாகிவிடுமா இல்லையா?)

நோன்பு நோற்கும் ஒருவன் அதற்கானநிய்யத்வைத்துக் கொள்வது கடமை என்பதில் மாற்றமில்லை. அந்தநிய்யத்வைத்துக் கொள்வதற்கான நேரம் இரவு மட்டும்தான். அதாவதுமக்ரிப்தொழுகைக்கான நேரம் முதல்ஸுப்ஹ்தொழுகைக்கான நேரம் வரைஇடைப்பட்ட எந்த நேரத்திலும் – “நிய்யத்வைத்துக் கொள்ளலாம். ஆனால் நிய்யத் வைத்த பின் சாப்பிடுவதோ, குடிப்பதோ கூடாது என்பதுஸுப்ஹ்தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்தேயாகும். ஒருவன் பள்ளி வாயலில்நிய்யத்வைத்துக் கொண்டாலும் கூடஸுப்ஹ்நேரம் வரும் வரை அவன் சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ நோன்புக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படமாட்டாது. அவன் அன்றிரவுஸஹர்செய்தாலும் செய்யா விட்டாலும் ஏற்கனவே பள்ளிவாயலில் வைத்துக் கொண்டநிய்யத்திற்கு எந்தப் பங்கமும் இல்லை. அதேபோல் அவன் அன்றிரவுஸஹர்செய்த பின் மீண்டும்நிய்யத்வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஒருவன் பள்ளிவாயலில் நோன்பிற்கானநிய்யத்வைத்த பின்ஸுப்ஹ்தொழுகைக்கான நேரம் வருவதற்கு முன் மனைவியுடன் உடலுறவு கொள்ளலாமா? அவ்வாறு கொள்வதால் ஏற்கனவே வைத்தநிய்யத்திற்கு பங்கம் ஏற்படுமா? மீண்டும் அவன்நிய்யத்வைக்க வேண்டுமா?

பொதுவாக விளங்க வேண்டியது என்ன வெனில் நோன்பிற்கானநிய்யத்” “மக்ரிப்தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்துஸுப்ஹ்தொழுகைக்கான நேரம் வரும் வரைஇரண்டுக்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும்நிய்யத்வைத்துக் கொள்ளலாம் -. உண்ணுதல், பருகுதல் கூடாதென்பதோ, அல்லது நோன்பை முறிக்கக் கூடிய எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாதென்பதோஸுப்ஹ்தொழுகைக்கான நேரம் வந்ததில் இருந்தேயாகும். இரு தொழுகைக்கும் இடைப்பட்ட எந்த நேரத்திலும் நோன்பை முறிக்கக் கூடிய எதையும் செய்யலாம். நோன்பிற்கோ, ஏற்கனவே வைத்த நிய்யத்திற்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை.

தொலைக்காட்சிப் பெட்டியில் – TVயில்நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டு நோன்பிற்கானநிய்யத்வைத்தால் அது நிறை வேறுமா

ஆம். அதுஷரீஆவின் படி நிறை வேறும். எனினும் அது விரும்பத்தக்கதல்ல. ஆயினும் தஸவ்வுப்ஸூபிஸ வழி செல்வோரிடம் இத்தகையநிய்யத்நிறைவேறாது.

நோன்பிற்கானநிய்யத்வைக்கும்போதுவுழூஉடன் இருக்க வேண்டுமா?
இல்லை. அவசியமில்லை. “வுழூஇல்லா விட்டாலும்நிய்யத்நிறை வேறும். எனினும்வுழூஉடன் இருந்து கொண்டுநிய்யத்வைப்பது சிறந்ததேயாகும்.

நிய்யத்என்பதை அறபு மொழியில்தான் சொல்ல வேண்டுமா? அல்லது எந்த மொழியிலும் சொல்லலாமா?

எந்த மொழியிலும் சொல்லலாம். அல்லது எந்த மொழியிலும் மனதில் நினைக்கலாம். மனதில் நினைப்பதுதான் கடமையே தவிர வாயால் மொழிதல் கடமை அல்ல. எந்த மொழியிலேனும் மொழிய முடிந்தவர்கள் மொழிவதே சிறந்ததேயாகும்.  

அறபு மொழியில்நிய்யத்
نويت صوم غد عن عداء فرض رمضان هذه السّنة لله تعالى

தமிழ் மொழியில்நிய்யத்
இந்த வருடத்து றமழான் மாதத்தின் பர்ழான நோன்பைஅதாவாகநாளைக்குப் பிடிக்கநிய்யத்செய்கிறேன்.


ஒருவன் மேற்கண்ட வசனங்களை வாயால் மொழியாமல் குறித்த வசனங்கள் தருகின்ற கருத்தை மனதால் நினைத்துக் கொண்டாலும் போதும்.