Dec 11, 2012

வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப்

தொடர்- 04 ...

சங்கைக்குரிய ஷெய்குனா 
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்- 

வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபை அவரது சகோதரர் சுலைமானே நிராகரித்தார்! 

வேசத்தைப் பார்த்து ஏமாறுவோர் இருக்கும் வரை வழிகேடர்கள் வலை விரித்துக் கொண்டேயிருப்பர். 

இன்னொரு தடவை அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சுவாரஸ்யமான விவாதம் ஒன்று நடந்தது. 

சுலைமான் தனது சகோதரான வழிகேடன் முஹம்மதிடம் “றமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவும் எத்தனை பேர்களை நரகில் இருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான் என்று கேட்டார். அதற்கும் வழிகேடன் முஹம்மத் “இறுதி இரவுக்கு முந்திய இரவுகளிலெல்லாம் அவன் விடுதலை செய்த மொத்த தொகைக்கு சமனான தொகையினரை விடுதலை செய்கின்றான் என சரியான பதிலையே கூறினான். 
இதை கேட்ட சுலைமான் “ நீ சொல்வது போல் றமழான் மாத்ததின் ஒரு இரவுக்கு ஒரு இலட்சம் பேர் வீதம் முப்பது இரவுகளுக்கும் முப்பது இலட்சம் பேரும், இறுதி இரவான முப்பதாம் இரவுக்கு முந்திய இருபத்தொன்பது இரவுகளுக்கும் விடுதலையான இருபத்தொன்பது இலட்சம் பேரும் ஆக மொத்தம் ஐம்பத்தொன்பது இலட்சம் பேர்களையும் முப்பது நாட்களையும் கொண்ட றமழான் மாத ஒன்றில் நரகிலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்றான் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். 

அதற்கவன் “ஆம்” என கூறிக்கொண்டான். 

வழிகேடன் முஹம்மது ஒப்புக் கொண்டபின் சுலைமான் பின்வருமாறு கூறலானார். 
‘உன்னை பின்பற்றாதவர்கள் அனைவரையும் நீ “முஷ்ரிக்” இணைவைத்தவர்கள் என்று கூறுகிறாய். உலகிலே இதுவரையும் உன்னைப் பின்பற்றியவர்களென்று ஒரு இலட்சம் பேர் கூட இல்லை. உன்னைப் பின்பற்றுவர்கள் மட்டும் தான் சுவர்க்கம் நுழைவர் என நீ சொல்கிறாய். இப்போது உன்னைப் பின்பற்றுவோர் ஒரு இலட்டசம் பேர் வைத்துக் கொள்வோம். அவர்கள் மட்டும்தான் சுவர்க்கம் நுழைகிறார்கள் என்றால் பாக்கியுள்ள ஐம்பத்தெட்டு இலட்சம் பேர்களும் யார்? அவர்கள் நரகிலிந்து வெளியேறியபின் எங்கே செல்வார்கள்? 

“அவர்கள் அனைவரும் விசுவாசிகளாக இருந்ததினால்தானே நரகிலிருந்து றமழான் இரவுகளின் பொருட்டால்விமோசனமடைகிறார்கள்? நீ சொல்வது போல் உன்னைப் பின்பற்றாத அவர்கள் அனைவரும் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களென்று வைத்துக் கொண்டால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? றமழான் மாத இரவுகளின் பொருட்டால் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களும் விடுதலையாவார்கள் என்றும் நீ சொல்கிறாயா? “முஷ்ரிகீன் இணைவைத்தவர்கள் நரகில் நிரந்தரமாகவே தங்கிவிடுவார்கள் என்றும்; இணைவைத்தலொன்றே இறைவனால் மன்னிக்கப்படமுடியாத மாபெரும் குற்றமாகுமென்றும் திருக்குர்ஆனும், திருநபியின் நிறைமொழியும் கூறிக் கொண்டிருப்பதால் நரகிலிருந்து விடுதலை பெறும் அனைவருமே விசுவிசிகளாகவே இருப்பர். என்பது நிரூபனமாகின்றதல்லவா? 

“எனவே, உனது கூற்றுப்டி உன்னைப்பின்பற்றாத 58 இலட்சம் பேர்களும் முஷ்ரிக்குகள் அல்லவா? “முஷ்ரிக்குகள்” நரகிலிருந்து எவ்வாறு எவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள்? 

அடுக்கடுக்கான –நியாய பூர்வமான அவரது வினாக்களை எதிர்கொண்ட வழிகேடன் முஹம்மத் பதில் கூற முடியாமல் வாயடைத்துத் தலை குனிந்தான். 

அண்ணனுக்கும் தம்பிக்குமிடையில் நடைபெற்ற அறிவுபூர்வமான மற்றொரு விவாதம் வருமாறு. 



“நீ கூறி வருகின்ற கொள்கையை உனக்கு முன் யாராவது கூறியிருக்கின்றனரா?என அறிஞர் சுலைமான் கேட்டார். 

அதற்கவன் “ஆம் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் கூறியுள்ளாரே என்றார். 

இப்னு தைமிய்யஹ்வைத் தவிரவேறு எவரேனும் கூறியிருக்கிறனரா? என அறிஞர் சுலைமான் மீண்டும் கேட்டார். 

“இல்லை” என வழி கேடன் இப்னு அப்தில் வஹ்ஹாப் கூறினார். 

அப்பொழுது அறிஞர் சுலைமான் “உனக்கு விசுவாசமான ஒருவர் உன்னிடம் வந்து, உன்னைக் கொலை செய்வதற்காக ஒரு படையினர் மலையின் மறு புறத்தே மறைந்து நிற்கின்றனர் என்று சொன்னால் அதை நீ நம்புவாயா? என்று கேட்டார். 

அதற்கவன் “நிச்சயமாக நம்புவேன்” என்றார். 

அவனது நம்பிக்கை உறுதிப்படுத்திக் கொண்ட அறிஞர் சுலைமான் “சரி அவனது பேச்சை நம்பிய நீ ஆயிரம் போர் வீரர்களை ஆயுதபாணிகளாக மலையின் மறுபுறத்துக்கு அனுப்பி வைத்தாய் என வைத்துக் கொள்வோம். அப்போர் வீரர்கள் அங்கு சென்று வந்து​ அங்கு படையுமில்லை. பட்டாளமுமில்லை. என்று கூறுகின்றனர். அந்த நம்பிக்கையாளன் சொன்னது பொய்யான தகவல் என்று சொல்கின்றனர். நீ எதை ஏற்பாய். ஆயிரம் போர் வீரர்களும் சொல்வதைக் கேட்பாயா? அல்லது ஒரேயொரு நம்பிக்கைக்குரியவர்என நீ மட்டும் கருதும் ஒருவன் சொல்வதை ஏற்பாயா? எனக் கேட்டார். 

அவரின் கேள்விக்கு “ஆயிரம் பேரின் கூற்றைத் தான் நம்புவேன். தனி நபரின் கூற்றைத் ஏற்க முடியாது”என்று வழிகேடன் முஹம்மத் பதிலளித்தான். 

அவனது பதிலைக் கேட்டு திருப்தியுற்ற அறிஞர் சுலைமான் அவனிடம் “நீ சொல்லி வருகின்ற புதிய கொள்கையை உனக்கு முன் சொன்னவர் இப்னு தைமிய்யஹ் மட்டும் தான் எனினும், இப்னு தைமிய்யஹ்வுக்கு முன்னர் தோன்றியவர்களும், பின்னர் தோன்றியவர்களும் அவருக்கு மாறாகத்தானே சொல்லியுள்ளனர். அது மட்டுமா? அவருக்குப் பின்னால் தோன்றிய தலை சிறந்த இமாம்களும், அறிஞர்களும் அவருக்கு எதிர்ப்பாக பல நூல்களையும் எழுதியிருக்கின்றனர். 

“இந்நிலையில் ஒரேயொரு இப்னுதைமிய்யஹ்வை நம்ப வேண்டுமா? அல்லது அவருக்கு மாறாகக் கருத்துக்கூறிய பல்லாயிரம் பேர்களை நம்ப வேண்டும்? எது நியாயம்? என்று கேட்டார். 

இதற்கும் அவனால் பதில் கூற இயலவில்லை. வழிகேடன் முஹம்மத் தலைகுனிந்து நின்றான். 

வஹ்ஹாபிஸ வழிகேடன் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் புதிதாக ஏற்படுத்திய கொள்கைகள் பற்றிஏற்கனவே எழுதியிருக்கிறேன். 

சுருங்கக் கூறினால்; வஸீலத் தேடுதல், கப்றுகளை ஸியாரத் செய்தல், ஸியாரத் செய்வதற்காகப் பிரயாணம் செய்தல், மவ்லித் கத்தம்- பாதிஹஹ்- தல்கீன் போன்றவை ஓதுதல், கந்தூரி கொடுத்தல், தலாயிலுல் கைறாத் எனும் ஸலவாத் ஓதுதல், வெள்ளிக்கிழை ி் ஸலவாத் ஓதுதல் ் பிரமைஇரவில் றாதிப் செய்தல், பாங்கு சொல்வதற்கு முன் அல்லது பின் ஸலவாத்துச் சொல்லுதல், கொடியேற்றுதல், கப்றை முத்தமிடுதல் , “ கஸீத்துல் புர்தஹ் கஸீததுல் வித்ரிய்யஹ் என்பன ஓதுதல், கப்றை போர்வையால் போர்த்துதல், மீலாத் விழா நடத்துதல் என்பன போன்ற விஷயங்கள் இஸ்லாமிய சன்மார்க்கத்திற்கு முரணானவை என்றும் “ஷிர்க்” கானவை என்றும் அவன் சொன்னான். 

இந்த வழிகேடனைப் பின்பற்றி இவனுடைய வழி கேட்டைப் பரப்புவதற்காகப் பசுத்தோல் போர்த்திய புலிகளாக பல இயக்கங்களின் பெயரில் வருபவர்கள் அனைவரும் வழி கேடன் இப்னு அப்தில் வஹ்ஹாபின் சிஷ்யர்ளேயாவர். இவர்கள் வழிகேடர்களும் வழிகெடுப்பவர்களும் என்பதில் ஐயமில்லை 

கேள்வி​:- 

இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான கருத்துக்களை கூறி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்த நஜ்திசாஹிபுவை பிரசித்தி பெற்ற தலை சிறந்த இமாம்களும், அறிஞர்களும் பகிரங்கமாக எதிர்திருந்தும்கூட மக்கள் அவர்களுடைய கருத்துக்குச் செவிசாய்க்காமல் வழிகேடரைப் பின்பற்றி அவர் வழியிற் சென்றதற்கான காரணமென்ன? 

பதில்:- 

நஜ்தி சாஹிபு வழி கேடராக இருந்தாலும் மிகக் கூரிய புத்திள்ளவராகவும், நரித்தந்திரமுடையவராகவும் இருந்தார் என ஏற்கனவே எழுதியிருக்கிறேன். 

அவர் சொல்வது பகிரங்க வழிகேடாக இருந்தும், அவரை உலமாக்கள் எதிர்த்திருந்தும் மக்கள் அவரைப் பின்பற்றக் காரணம் அவரின் கூரிய புத்தியாலும், நரித்தந்திரத்தாலும் ஏற்பட்ட அவரின் நடவடிக்கைகளேயாகும். 

ஏனெனில் அவர் தனது வழிகேட்டைப் பரப்புவதை விட மக்களை கவர்ந்து கொள்வதிலேயே முழுக்க கவனமெடுத்து வந்தார். இதுதான் அவர் செய்த மிகத் தந்திரமான வேலையாகும். 

தனது கொள்கையைப் பரப்புவதை விட மக்களை கவர வேண்டுமென்று அவர் முடிவெடுத்தார். இதற்கு காரணமென்னவெனில் தான் கூறும் கொள்கை புதிய கொள்கையாகியிருப்பதால், பழையகொள்கையில் ஊறிப்போய் இருப்பவர்கள் தான் கூறும் புதிய கொள்கையை ஜீரணிக்கமுடியாமல் எதிர்க்கத் தொடங்கி விடுவார்களென அவர் கருதியதேயாகும். 

இதனால் மக்களைக் கவர்வதற்காக அவர் எடுத்த நடவடிக்கை ​யாதெனில் கிராமப்புறங்களுக்குச் சென்று மார்க்க அறிவும், உலக அறிவுமற்ற பாமரர்களைக் கண்டு அவர்களுடன் தேனையொத்த வார்த்தைகள் கொண்டு உரையாடி முதலில் அவர்களைத் தொழுகைக்கு அழைத்தார். 

அவருடைய இனிமையான பேச்சால் கவரப்பட்ட பாமரர்கள் நல்ல விஷயத்துக்கு அழைக்கும் வரை ஆதரிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் அவரை அணுகி அவருக்கு ஆதரவு வழங்கினர். 

தனது தவறான கொள்கையை வெளிப்படுத்தாமல் அந்த நஞ்சை நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு தன் பக்கம் மேலும் மக்களை நெருங்கச் செய்வதற்காக ஜூம்அஹ் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல் போன்ற விஷயங்களைக் கடைப்பிடிக்குமாறும், விபச்சாரம், கொலை, களவு, கொள்ளை போன்ற தீயசெயல்களை விட்டு விடுமாறும் போதித்து வந்தார். 

இவர் தனது வழிகேட்டை மறைத்துக்கொண்டு நல்ல விஷயங்களை மட்டும் மக்கள் மத்தியில் சொல்லி முதலில் அவர்களை தன் வசப்படுத்திக் கொண்டான். 

இவ்வாறு மக்களைக் கவர்ந்து தானெதைச் சொன்னாலும் அதையவர்கள் நம்பக் கூடிய நிலையை ஏற்படுத்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தனது வழி கேடான கொள்கையை அவர்களிடம் சொல்லத் தொடங்கினார். 

நாட்டுப்புற மக்கள் ஒன்றும் தெரியாதவர்களாயிருந்த காரணத்தாலும், சிந்திக்குமாற்றல் இல்லாதவர்களாக இருந்ததன் காரணத்தாலும், அவர் சொல்வது சரியா பிழையா என பகுத்தறியும் ஆற்றல் அவர்களுக்கு இல்லாததினாலும் அவ்ழிகேடர் சொல்வதையெல்லாம் சரியென்று ஏற்றுக் கொண்டார்கள். 

வழிகேடர் நஜ்தி ஸாஹிபு மக்களைத் தன்வசப்படுத்துவதற்கு கையாண்ட உபாயம் கிராமப் புறத்தில் வாழ்ந்த ஒன்றுமறியாத “அவாம்” பாமரர்களை தன் வசப்படுத்தியதேயாகும். 

இவர் படித்தவர்களையும், சிந்தனையாளர்களையும், பட்டணத்தில் வாழ்ந்தவர்களையும் முதலில் அணுகிஇருந்தால் அவர் இந்தஅளவு முன்னேற்றம் கண்டிருக்க மாட்டார். மாறாக அவரை அவர்கள் முளையிளேயே கிள்ளியெறிந்திருப்பார்கள். 

"அவாம்" என்னும் பாமரர்கள்குறிப்பாக கிராமப் புறங்களில் வாழும் பாமரர்கள் ஒருவனின் உடலைக் கொண்டும், உடையைக் கொண்டும் அவனுடைய பேச்சுத் திறனைக் கொண்டும்தான் அவனின் அறிவை எடை போடுகின்றனர்.இது படிப்பறிவற்ற கிராமப் புறமக்களின் வழக்கமாகும். 

"அன்னாஸ் பில்லிபாஸ்" என்று அறபியில் ஒரு பல மொழி யுண்டு. உடையை கொண்டுதான் மனிதர்கள் எடைபோடப்படுகின்றனர் என்பது இப்பழமொழியின் பொருளாகும். 

மோசமான வேசம் நாசமானது வேதம் 

ஒன்றுமே தெரியாத ஒரு முழு மடையன் அடர்ந்த தாடியும் பெரிய தலைப் பாகையும், நீண்ட ஜுப்பாவும், ஒருகையில் நீண்ட தஸ்பீஹும், மறுகையில் அஸாவும் எடுத்துக் கொண்டால் போதும். 

இவனின் வேஷத்தைக் கொண்டு இவனைப் பெரிய அல்லாமஹ் என்றும், அறஞர் திலகம் என்றும், இவனுக்குள்தான் குர்ஆன் ஹதீஸ் எல்லாம் அடங்கியுள்ள தென்றும் "அவாம்" பாமரர்கள் கணித்து விடுகின்றனர்.இத்தனைக்கும் அவன் முழு மடையன் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த அவாம்கள் "சூரத்" உருவத்தில் கோலத்தில் மயங்கி விடுகிறார்கள். 

இதற்கு மாறாக இமாம் புஹாரி, இமா ஷபிஈ போன்ற மார்க்க ஞானமும், இறைஞானமும் நிறையப் பெற்ற ஒரு இமாம் சாதாரண உடையில் இருக்கும் பொழுது அவரை ஒன்றும் தெரியாத முழு மடையனென்று கணித்து விடுகின்றனர். இது பாமர மக்களின் நிலை. 

வழிகேடர் நஜ்தி ஸாஹிபு பாமர மக்களைக் கவரும் வழியைத் தெரிந்து வைத்திருந்ததால் தனது உடல் வேஷத்தைக் கொண்டும், தேனொழுகும் தெவிட்டாத வார்த்தைகளைக் கொண்டும் பாமர மக்களை முதலில் கவர்ந்துதனக்கென்று பெரும் கூட்ட மொன்றைத் தயார் செய்த பிறகுதான் தனது வழிகேட்டைத் தொடங்கினார். 

இவர் ஒரு பகிரங்க வழிகேடராயிருந்தும் இவரைப் பல அறிஞர்கள் எதிர்த்திருந்தும் இவரின் பக்கம் மக்கள் திரும்பக் காரணம் பாமர மக்களைத் திருப்பக் கையாண்ட நரித்தந்திர நடவடிக்கை அணுகு முறையும் தரித்துக் கொண்ட வேஷமுமேயாகும். 

"அவாம்" எனும் பாமர மக்கள் ஒருவனின் வெளிவேஷத்தைக் கண்டு மயங்கி அறிவிழந்து ஏமாந்து வழிகேட்டையடையும் நிலை தொன்றுதொட்டே இருந்து வருகின்றது. வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபின் வெளிவேஷத்தைக் கண்டு மக்கள் அன்று ஏமார்ந்தது போலவே இன்றும் ஏமாறுவோர் நம்மத்தியில் இருக்கின்றார்கள். அறிவும் நாகரீகமும் வளர்ச்சியடைந்துள்ள காலமாக இக்காலமிருந்தும் பாமர மக்களின் இப்பழங்கால நிலை மாறவே இல்லை. 

மார்க்க அறிவோ, இறை ஞானமோ அறவேயில்லாதஅறபு நட்டிலே மலசல கூடம் கழுவுதல், பாதைச் சுத்திகரிப்பு வேலைகளைச் செய்யும் ஒரு அறபி மாயவலயில் அகப்பட்டு இலங்கைக்கு வரும் போது அவனுடைய தாய் நாட்டின் தேசிய உடையில் நீண்ட ஜுப்பாவும் தலையில் வெள்ளைச் சால்வையும் அதற்கு மேல்"இகால்" எனும் கறுப்பு வளையமும் அணிந்து கையில் நீண்ட தஸ்பீஹும் எடுத்து வருகின்றான். 

இந்த உடையமைப்பு அறபு நாடுகளைப் பொறுத்த வரையில் ஆலிமும் ஜாஹிலும் ஆண்டியும் அரசனும் முதலாளியும் தொழிலாளியும் அணியும் தேசிய உடையாகும். இந்த உடையமைப்பானது நமது இலங்கையை பொறுத்தவரை உலமாக்களும், ஷெய்குமார்களும் அணியும் உடையாக மக்களால் கணிக்கப்பட்டு வருகிறது. 

இதனால் இந்த உடையமைப்பில் அறபு நாட்டிலிருந்து வருகின்ற ஒரு பாமரனை" குர்ஆனும், ஹதீஸும் தெரியாத ஜாஹிலை மடையனை இங்குள்ள பாமர்ரகளும், படித்தவர்களில் ஒரு சிலரும் எல்லாம் கற்றறிந்த மகா மார்க்க மேதை என்றெண்ணி அவனுடைய கையிலும், காலிலும் விழுந்து முத்தமிடுகின்றனர். அவன் சாப்பிட்டு கைகழுவிய நீரில் "பறகத்" அருள் உண்டென எண்ணி அதை பகிதிரசமாகச் சுவைத்து அருந்துகின்றனர். அவனுக்கு கை, கால், பிடித்து விடுகின்றனர். இத்தனையும் போதாதென்று பள்ளிவாயளுக்கு அவனை அழைத்துச் சென்று மக்கள் மத்தியில் எழுந்து நின்று நல்லுரையாற்றுமாறும் அந்த மடையனைக் கேட்டுக் கொள்கின்றனர். 

அவனோ சாதாரணமாகப் பேசுவதற்குக் கூட தெரியாதவன். அறபு நாட்டில் "பலதிய்யஹ்" பட்டினசபை, நகர சபை போன்றவற்றில் மல கூடம் கழுவுதல் போன்ற வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாமரன். 

எனினும் இந்த மடையர்களெல்லாம் தன்னை ஒருபெரும் அறிவாளியென்று கருதி இவ்வாறெல்லாம் செய்யும் போது தனக்கு எதுவும் தெரியாது எனச்சொன்னால் தனது ஜுப்பாவுக்கும், தலைப் பாகைக்கும் கௌரவமில்லாமற் போய்விடுமென்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் ஹதீஸ் என்று கூறித் தானும் வழிகெட்டு இருப்பவர்களையும் வழிகெடுத்து விட்டுச் செல்கின்றான். 

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றவர்கள் இத்தகைய ஆசாமிகள்தான் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். 

எனவே ஒருவனின் உடலையும், உடையையும் கண்ணுற்று ஏமாந்து வழிகேட்டின் பக்கம் போகாமல் அத்தகையவனைத் துருவி ஆராய்ந்து பார்த்த பிறகுதான் அவனைப் பின் பற்ற வேண்டும். என்பதைக் குறிப்பாக பாமரர்கள் படிப்பறிவற்ற ஜனங்கள் தெரிந்து கொள்ளவும் வேண்டும். 

இதில் அதிசயமென்னவெனில் அறபு நாட்டிலிருந்து மக்களை மடையர்களாக்குவதற்காக இங்கு வருகின்ற முழு மடையர்களின் உடலையும், உடையையும் கண்டு அறபுக் கல்லூரிகளில் படித்துக் கொடுக்கின்ற "ஹஸ்றத்" மார்களிற் சிலர் கூட ஏமார்ந்து போவதும் அம்மடையர்களை விலையுயர்ந்த பென்ஸ் லான்ஸர் போன்ற கார்களில் ஏற்றிக் கொண்டு சுற்றித்திரிவதுமாகும். 

முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்னும் நஜ்தி சாஹிபு இஸ்லாத்திற்கு முரணான பல கருத்துக்களைக் கூறினாலும் அவருடைய கருத்துக்கள் யாவும் நான்கு அடிப்படைக்குள் அடங்கியதாகவே இருக்கும். 

01 அல்லாஹ்வை அவனுடைய சிருஷ்டிக்கு ஒப்பாக்குதல். தஷ்பீஹுல்லாஹி பிகல்கிஹி" என்று அறபியில் கூறப்படும். 

02 அல்லாஹ் றப்பாக இருப்பதையும், இலாகாக இருப்பதையும் தவ்ஹீத் செய்தல் இது "தவ்ஹீதுல் உலாஹிய்யத் வர்று பூபிய்யத்"என்று அறபியில் சொல்லப்படும். 

03 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தாதிருத்தல் இது "அதமு தவ்கீரின் நபிய்யி" எனப்படும். 

04 ஹிஜ்ரி 500க்குப் பின்னுள்ள முஸ்லிம்கள் முஃமின்கள் அனைவருமே காபிர்கள் எனக் கூறுதல். இது "தக்பீறுல் முஸ்லிமீன்" என்று கூறப்படும். 

நஜ்து சாஹிபுவின் எந்தக்கூற்றாக இருந்தாலும் அது மேற்குறிப்பிட்ட இன்னான்கு அடிப்படைகளில் ஒன்றிலடங்கினதா​வே இருக்கும். 

இன்னான்கு அடிப்படைகளிலும் "இப்னுதைமிய்யஹ்" என்பவரையே முழுக்க முழுக்க வழிகேடர் நஜ்தி சாஹிபு பின்பற்றியுள்ளார். 

இப்னு தைமிய்யஹ் நஜ்தி சாஹிபை விட அறிவும், ஆராய்ச்சியும் கூடியவர். நன்கு படித்த திறமைமிக்கவர்.அவர் இஸ்லாமியக் கொள்கைக்கு முரணானவராக இருந்தது அவரின் தலை விதியேயாகும். 

இவர் (இப்னு தைமிய்யஹ்) மேலே கூறப்பட்ட நான்கு அடிப்படைகளில் முதலாம் அடிப்படைக்கு "கறாமிய்யஹ்" எனும் வழிகெட்ட கூட்டத்தையும், ஹன்பலி மத்ஹபைபின்பற்றியவர்களில் "முஜஸ்லிமஹ்" எனும் சடவாதி களையும் பின்பற்றியுள்ளார்கள். 

இவர் இரண்டாம் அடிப்படைக்கு இவருக்கு முன் வந்த எவரையும் பின்பற்றவில்லை. எனினும் இந்த இரண்டாவது அடிப்படையைத்தானாகவே கற்பனை செய்து கற்பித்துக் கொண்டார். 

இவ்வாறு கற்பனை செய்து ஏற்படுத்திக் கொண்ட இரண்டாவது அடிப்படையிலிருந்து தான் இவரின் மூன்றாவது அடிப்படை பிரிந்து வருகின்றது. 

இவர் தனது நாலாவது அடிப்படையில் மேலே கூறிய "கறாமிய்யஹ் முஜஸ்லிமஹ்" என்னும் இரு கூட்டங்களையும் "ஹுலூலிய்யஹ்" எனும் வழிகெட்ட கூட்டத்தையும் பின்பற்றினர். 

எனவே வழிகேடர் நஜ்தி சாஹிபு தனக்கு முன் வாழ்ந்த இப்னு தைமிய்யஹ் என்ற வழிகேடரைத்தான் முழுக்க முழுக்க பின் பற்றி வஹ்ஹாபிஸத்தை ஈன்ரெடுத்தார் என்பது தெளிவாகிவிட்டது. 

(முற்றும்)
 ​
==**==**==**==**==**==
தொடர்- 04 ...

முஹம்மது நபியைக் குறை கண்டவரை முஸ்லிம்கள் ஏற்க முடியாது! 

வழிகேடர் "இப்னு அப்தில் வஹ்ஹாபின்" நச்சுக் கருத்துக்கள் முஸ்லிம்களைப் புண்படுத்தக்கூடியவை! 

இது வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் செய்த மாபெரும் மார்க்கத் துரோகமாகும். 

இந்த வழிகேடர் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூறலாமென்று கூறியதோடு நின்று விடாமல் திருக்குர்ஆனிலிருந்து அவரவரின் அறிவுக்கும் சிந்தனைக்கு மேற்ற வாறு சட்டங்கள் நிறுவலாமென்று கூறினார்கள். 
இதனால் அவர்கள் தமக்கு விளங்கின மாதிரி யெல்லாம் திருக்குர்ஆனிலிருந்து சட்டங்கள் தயாரிக்கவும் தொடங்கினர். 

திருக்குர்ஆன் வசனத்திலிருந்து ஒரு விஷயம் ஆகுமென்று ஒருவருக்கு விளங்கினால் அவர் அதை உடனேசொல்லி விடுவார். அவரும், ஏனையோரும் அதன்படி செயற்பட்டு விடுவார்கள். 

இன்னொருவருக்கு அதே வசனத்திலிருந்து ஆகாதென்று விளங்கினால் அவரும் உடனே அதைச் சொல்லி விடுவார். அதன் படி அவரும், அவருடைய சொல்லை நம்பினவர்களும் செயல்பட்டு வந்தனர். 

திருக்குர்ஆனுக்கு "முபஸ்ஸிரீன்" என்னும் திருமறை விரிவுரைகளான இமாம்கள் எழுதிய கருத்துக்களை அவர்கள் பார்க்கமாட்டார்கள். ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். 

மத்ஹபுடைய நான்கு இமாம்கள் பற்றியும் அவர் குறை கூறிக் கொண்டேயிருப்பார்கள். நாலு இமாம்களும் இயற்றியுள்ள சட்டங்கள் பற்றி அவர்களிடம் பேசினால் அவர்களில் ஒரு விஷயமும் கிடையாது என சுருக்கமாகச் சொல்லி மழுப்பி விடுவார்கள். 

மத்ஹபுடைய நான்கு இமாம்களின் சிஷ்யர்கள் பற்றி இந்த வழிகேடர் கூறுகையில் "ளல்லூ வஅளல்லூ" தாமும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுத்து விட்டார்கள் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். 

இன்னும் மார்க்கம் ஒரேயொரு மார்க்கமாயிருக்கும் இமாம்கள் என்போர் அதை நான்காக்கி வைத்திருப்பது விந்தையான விஷயமென்றும் நாம் அல்லாஹ்வையும் றஸூலையும் தவிர வேறு யாருடைய சொல்லையும் கேட்கவோ பின் பற்றவோ தேவையில்லையென்றும் அடிக்கடி சொல்லிக்கொள்வார். 

வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கு மறுப்புக் கூறியவர்களில் அனேகர் ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்த படியால் இப்னு அப்தில் வஹ்ஹாபும் அவர்களையே எதிர்த்து எச்சரித்து வந்தார். 

வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் தன்னிடம் ஒரு வரை விலக்கணம் வைத்திருந்தார். அதாவது எந்தவொரு விஷயம் தனது மனோ இச்சைக்கு இசைந்ததாக இருக்கின்றதோ அது திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமாயிருந்தாலும் கூட அதுதான் சத்தியம் என்றும் எந்தவொரு விஷயம் தனது மனோ இச்சைக்கு மாறானதாக இருக்கின்றதோ அது திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் இசைந்ததாக இருந்தாலும் அதுதான் அசத்தியம் என்றும் அவர் கணித்தும் கூறியும் வந்தார். 

இந்த வழிகேடர் நபி ஸல் அவர்களை மிகவும் தரக்குறைவாக கணித்து வந்தார். இவர் அவ்வாறு, கணித்ததற்கு காரணம் என்ன வெனில் நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதால் "ஷிர்க்" ஏற்பட்டுவிடுமென்று அவர் பயந்த்தேயாகும். இது அவருடைய அறியாமையே அன்றி வேறொன்றுமில்லை. 

இவ்வழிகேடர் தனது பல நூல்களில் நபி (ஸல்) அவர்களைப்பற்றி குறிப்பிடும் பொழுது தரக் குறைவாகவே எழுதியுள்ளார். அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். 

நபிகளாரைகுறை காணும் நயவஞ்சகர் நஜ்தி 

நஜ்தி ஸாஹிபு நபி (ஸல்)அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது 'தாரிஷ்' என்ற சொல்லை பிரயோகிப்பார்.சவூதி அரேபியாவில் கிழக்குப்பகுதியில் வாழ்பவர்கள் இச்சொல்லை ஒரு கூட்டத்திடம் செய்தி கொண்டு போகின்ற ஒருவனுக்கு உபயோகிப்பார்கள். 

ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் ஒரு செய்தி கொண்டு போகின்றவரை அரபியில் "றசூல்" என்று சொல்லப்படும். 

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களிடம் சொல்பவர்களாக விளங்குவதால் 'றசூல்' என்று அழைக்கப்பட்டார்கள். 

திருக்குர்ஆனிலும் திருநபியின் நிறைமொழியிலும் நபி (ஸல்) அவர்கள் "றசூல்" என்ற சொல் கொண்டுதான அழைக்கப்பட்டுள்ளார்களேயல்லாமல்வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் சொல்வது போல் 'தாரிஸ்' என்ற சொல் கொண்டு அழைக்கப்படவில்லை. 

ஏனெனில் 'றசூல்'என்றசொல் தருகின்ற 'தூதர்'என்ற அர்த்தம்'தாரிஸ்'என்ற சொல்லுக்கு இருந்தாலும் கூட இச்சொல் அவர்களுடைய வழக்கில் கீழ்த்தரமான விஷயங்களுக்கு தூது கொண்டு செல்லும் கீழ்த்தரமான ஒருவனுக்கு உபயோகிக்கப்பட்டது. 

இந்த வழிகேடர் நபி ஸல் அவர்களை கீழ்த்தரமாகவும் தரக்குறைவாகவும் கணித்திருந்ததினால்தான் 'றசூல்' என்ற சொல்லைபாவிக்காமல் 'தாரிஸ்' என்ற சொல்லைப் பாவித்தார்கள். 

இது நபி (ஸல்) அவர்களை தரக்குறைவானவராக எடுத்துக் காட்டுவதற்கு வழிகேடர்நஜ்திஸாஹிபு கையாண்டு ஒரு பயங்கர சூழ்ச்சியும் நரித் தந்திரமும் ஆகும். 

முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்ற வழிகேடரை ஒரு வஹ்ஹாபி என்ற அளவுதான் மக்கள் கணித்துள்ளார்களே யன்றி அவர் எத்தகையவர் என்பதை சரியாக புரியாமல் இருக்கின்றார்கள். 

இதுவரை நான் சொல்லிவந்த அவருடைய அட்டூழியங்கள் மூலமும் இதன் பிறகு நான் சொல்லப் போகின்ற அவருடை ய அட்டூழியங்களின் மூலமாகவும் தான் அவர் எத்தகைய வழிகேடர் என்பதும் மாரக்கத் துரோகி என்பதும் தெரிய வரும். 

அவருடைய அட்டூழியங்களில் பின்வரும் விஷயமும் ஒன்றுதான். 

நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் காபிர்களுடன் செய்து கொண்ட "ஹுதைபிய்யஹ" ஒப்பந்தம் இஸ்லாத்தில் மிகப் பிரசித்தி பெற்ற ஓர் ஒப்பந்தமாகும். 

இவ்வொப்பந்தம் நபி ஸல் அவர்களின் தலைமையில் செய்யப்பட்ட ஒப்பந்தமாகையால் அதில் பொய், அநீதி, பாரபட்சம் போன்ற எவ்விதத்தில்லுமுல்லுகளும் இருக்கவில்லை, இருப்பதற்கு நியாயமுமில்லை. அது அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும் பொறுத்தமான முறையில் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். 

இவ்வொப்பந்தம் பற்றி வழிகேடர் நஜ்தி ஸாஹிபு குறிப்பிடுகையில் " நான் ஹுதைபிய்யஹ் உடன் படிக்கையைப் பார்த்தேன் அதில் பொய் இருப்பதைக் கண்டேன்" எனக் கூறியுள்ளார். 

நபி (ஸல்) அவர்களைப் பொய்யர் என்று அல்லது அநீதியாளர் என்று வெளிப்படையாகச் சொன்னவனும், சூசகமாகச்சொன்னவனும்,மனதில் அவ்வாறு நினைத்தவனும் காபிர் ஆகிவிட்டான் என்று பிக்ஹுடைய இமாம்களான "புகஹாக்கள்"எழுதியுள்ளார்கள். 

நஜ்தி ஸாஹிபு இவ்வாறு சொன்னது மட்டுமின்றி தனது ஆதரவாளர்களையும் அவ்வாறு சொல்லுமாறு பணித்து வந்தார். இதற்கமைய அவர்கள் "ஹுதைபிய்யஹ் உடன் படிக்கைய்யில் பொய் உள்ளது" என்ற செய்தியை பகிரங்கப்படுத்தினர். 

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல் ஹுதைபிய்யஹ் உடன் படிக்கையில் ஒரு சில பொய்கள் உள்ளன என்று அவர் சொன்னதை வைத்துக் கொண்டு அவருடைய வால்களும் கூலிகளும் பல பொய்கள் என்று மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்தனர். 

அவ்வாறு இவர்கள் மிகைப்படுத்திச் சொன்னது நஜ்தி ஸாஹிபுக்குசொல்லொண்ணா மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால் அவ்வாறு சொல்லித் திரிபவர்களை அழைத்து வாழ்த்துக் கூறி உட்சாகப்படுத்தினார். 

ஒரு சமயம் அவருடைய கூலிகளில் ஒருவன் பிரசங்கம் நிகழ்த்திய நேரம் தனது கையிலிருந்து தடியைக் காண்பித்து "அஸாய ஹாதிஹீ கைறுன் மின் முஹம்மத்" (எனது கையிலிருக்கும் இத்தடி முஹம்மதை விட சிறந்தது) என்று கூறினார். 

அவனிடம் காரணம் கேட்கப்பட்ட பொழுது "எனது கைத்தடியால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களை அடித்துக் கொள்ள முடியும். இத்தகைய பிரயோசனங்கள் இக்கைத்தடியில் இருக்கின்றன. எனினும் முஹம்மது மரணித்து விட்டார். அவரால் எவ்வித பிரயோசனமும் இல்லை. அவர் ஒரு 'தாரிஷ்'(தூதன்) தான் அவர் வந்து போய்விட்டார். அவரின் கதை முடிந்த கதை." என்று விளக்கமளித்தார். 

இவனுக்கு மறுப்பெழுதிய 'ஸுன்னத் வல் ஜமாஅத்' உலமாக்கள் இந்த வார்த்தைகளால் இவன் காபிராகி விட்டான் என திட்டவட்ட மாகக் கூறியுள்ளார்கள். 

இன்னும் இவருடைய மார்க்க விரோதங்களிலும் ,வழிகெட்ட கொள்கையிலும் உள்ளதுதான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை "மௌலானா = ஸெய்யிதுனா" என்றழைப்பது "ஷிர்க்" என்றுஇவர் சொல்லியிருப்பதும் ஆகும். 

ஒருவன் இன்னொருவனை "மௌலானா" என்றோ "ஸெய்யிதுனா" என்றோ அழைப்பானாயின் அவ்வாறு அழைத்தவன் காபிர் ஆகி விட்டான் என்று வழிகேடர் நஜ்தி ஸாஹிபு கூறியிருக்கிறார். 

"மௌலானா - ஸெய்யிதுனா" என்ற இரண்டு சொற்களும்"எங்கள் தலைவர்" என்று பொருள் வரும். 

இந்த நஜ்தி ஸாஹிபு அல்லாஹ்வை மட்டும்தான் அவ்விரு சொற்களைக் கொண்டு அழைக்கலாமென்று நம்பிக்கை உள்ளவராக இருந்தார். இதனால் அல்லாஹ் அல்லாத ஒருவனை அவ்வாறு அழைத்தல் "ஷிர்க்" இனை வைத்தலை ஏற்படுத்திவிடும் என்று கூறினார். 

இந்த வழிகேடர் திருக்குர்ஆனையும் திருநபியின் நிறைமொழியையும் சரியாக ஆராவில்லை என்றோ, அல்லது திருக்குர்ஆனை ஒரு தடவையாயினும் ஓதவில்லை என்றேதான் நாம் கூறவேண்டும். 

ஏனெனில் நஜ்திஸாஹிபுஒரு அறபி. அவர் மதீனஹ் நகரில் பல வருடங்களாக ஓதி உள்ளார். அறபு மொழியில் உள்ள திருக்குர்ஆனை ஓதும் பொழுது அதனுடைய அர்த்தம் மேலோட்டமாகவேனும் புரியாமற் போயிருக்காது. 

அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி யஹ்யா (அலை) அவர்களைப் பற்றி கூறுகையில் "ஸெய்யித்" என்று அவர்களைக்குறிப்பிட்டுள்ளான். 

இன்னும் யூஸுப் ஸுலைஹாவின் வரலாற்றில் அவன் தனது படைப்புக்கு "ஸெய்யித்" என்ற சொல்லை உபயோகித்துள்ளான். 

ஒரு சமயம் நபி ஸல் அவர்கள் "அன்ஸார்" களைப் பார்த்து "கூமூ லிஸெய்யிதிகும்"(உங்களுடைய தலைவர்களுக்கு எழுந்து நில்லுங்கள்) என்று சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸில் நபி தோழர் ஹஸ்றத் சஃதிப்னு மஆத் (றழி) அவர்கள் ஸெய்யித் என்று நபி ஸல் அவர்களால் சொல்லப்பட்டுள்ளார்கள். 

அலீ (றழி) அவர்களின் அன்பு மகனும் நபி ஸல் அவர்களின் அருமைப் பேரருமான ஹஸன் (றழி) அவர்கள் பற்றிக் கூறிய நபி (ஸல்) அவர்கள் " இன்னப்னீ ஹாதா ஸெய்யிதுன்" (எனது இந்த மகன் ஸெய்யித்)என்று கூறினார்கள். 

ஆதாரம் – புஹாரி பாகம் – 29 

மேலே கூறப்பட்ட விபரங்களிலிருந்து அல்லாஹ் அல்லாதவர்களுக்கு "மௌலானா - ஸெய்யிதுனா" போன்ற சொற்களை உபயோகிக்கலாம் என்பது தெளிவாகிறது. 

"மௌலானா - ஸெய்யிதுனா" என்ற இவ்விரு சொற்களும் "எங்கள் தலைவர்" என்ற ஒரே அர்த்தத்தை கொண்டதாக இருப்பதால் "ஸெய்யித்"என்று சொல்வதற்கு கூறிய ஆதாரங்களைக் கொண்டு "மௌலானா" என்று சொல்வது கூடும் என்பதும் புலனாகின்றது. 

நபி (ஸல்) அவர்களின் வம்சத்தினர் உலகின் எக்கோணத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் ஸெய்யிதுகள், சாதாத்துமார்கள் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வழிகேடர் நஜ்தி ஸாஹிபுவும்அவரின் கூலிகளும்தான் அவ்வாறு அழைக்கக் கூடாதுஎன்று கூறிவருகிறார்கள். 

இதுவரை வழிகேடர் நஜ்தி ஸாஹிபுசெய்த மார்க்க துரோகங்கள், அட்டூழியங்கள் போன்றவற்றில் ஒரு சிலதை மட்டும் மேலே எழுதியுள்ளேன். 

இன்னும் இவர் செய்த அராஜக மார்க்க துரோகங்களும், அட்டூழியங்களும் அநேகமிருக்கின்றன. அவை அவருக்கு இமாம்களால் மறுப்பாக எழுதப்பட்ட விரிவான நூற்களில் விளக்கமாக உள்ளன. மேலதிக விபரம் தேவையானோர் அந்நூல்களைப் பார்த்துக் கொள்ளவும். 

இறந்த ஆண்டு சபித்த இழுவுடையான். 

நஜ்தி ஸாஹிபு சஊதி அரேபியாவிலுள்ள புனித மதீனா நகரின் கிழக்கே உள்ள "நஜ்து" எனும் ஊரில் "தமீம்" வம்சத்தில் ஹிஜ்ரி 1111ம் ஆண்டு அறிஞர் அப்தில் வஹ்ஹாப் அவர்களுக்கு மகனாகப்பிறந்தார். 

திரு மதீனா நகரில் பல்லாண்டு கல்வி கற்று பல்வேறு பித்னாக்களையும், பித்தலாட்டங்களையும் செய்து விட்டு ஹிஜ்ரி 1206இல் இறந்து விட்டார். 

"பதா ஹலாகுல் ஹபீத்"بدا هلاك الخبيث என்ற வசனம் இவர் இறந்த ஆண்டைக் குறிக்கும். 

இதன் அர்த்தம் "கெட்ட வனின் அழிவு வெளியாகி விட்டது" என்பதாகும். 

இந்த வசனத்தில் வந்துள்ள அறபு எழுத்துக்களுக்கு "அப்ஜத்" கணித முறைப்படி கணக்கெடுத்தால் அவர் இறந்த ஆண்டு வரும். 

"பதா ஹலாகுல் ஹபீத்" என்ற வசனத்தில் 13 எழுத்துக்கள் உள்ளன. அவையும் அவைக்கான எண்ணும் பின் வருமாறு. 

1. ب - பே - 02 

2. د– தால் - 04 

3. ا– அலிப் - 01 

4. ه– ஹே - 05 

5. ل– லாம் – 30 

6. ا– அலிப் - 01 

7. ك– காப் - 20 

8. ا- அலிப் - 01 

9. ل– லாம் – 30 

10. خ - கே - 600 

11. ب– பே - 02 

12. ي– யே - 10 

13. ث– தே – 500 

மொத்தம் 1206 இதுதான் வழிகேடர் இறந்த ஆண்டு. 

வழிகேடர் நஜ்தி ஸாஹிபு இறந்த பொழுது அவருக்கு நான்கு ஆண்குழந்தைகள் இருந்தனர். தந்தையின் மரணத்தின் பின் இவர்கள் வஹ்ஹாபிஸ வழிகேட்டைப் பரப்பினார்கள். 

இவர்கள் "அவ்லாதுஷ் ஷெய்க்" ஷெய்குடைய பிள்ளைகள் என அழைக்கப்பட்டார்கள். இன்னும் அவருடைய சந்ததிகள் அவ்வாறுதான் அவருடைய ஆதரவாளர்களினால் அழைக்கப்பட்டு வருகிறார்கள். 

அவர்கள் அப்துல்லாஹ், ஹசன், ஹுஸைன், அலீ ஆகியோர்களாவர். அவரின் மூத்த மகன் தந்தை வழி சென்று வஹ்ஹாபிஸ வழிகேட்டைப் பரப்பும் பணியில் இறங்கினார். 

இவனுக்கு ஆண் மக்கள் பிறந்தனர். ஒருவன் சுலைமான், மற்றவர் அப்துர் றஹ்மான். 

சுலைமான் என்பவர் தந்தையை விட கொடியவனாக இருந்தான். இவன் ஹிஜ்ரி 1233ல் அரசர் இப்றாஹீம் பாஷா அவர்களால் கொலை செய்யப்பட்டான். 

அவனுடைய தம்பி அப்துர் றஹ்மானைக் கொலை செய்யாமல் "மிஸ்ர்" நாட்டுக்கு அரசர் அனுப்பி வைத்தார். அவன் சில காலம் அங்கு வாழ்ந்து விட்டு அங்கேயே இறந்து விட்டான். 

நஜ்து ஸாஹிபுடைய இரண்டாவது மகன் ஹஸன் என்பவன் தந்தையைப் போலவே வஹ்ஹாபிஸ சேவைகள் செய்து விட்டு மரணித்து விட்டான். 

இவனுடைய மகன் அப்துர் றஹ்மான் என்பவன் சில காலம் மக்காவில் நீதிபதியாக இருந்து விட்டு இறந்து விட்டான். இவனுக்கு அப்துல்லதீப் என்று ஒரு மகன் இருந்தான். 

நஜ்து ஸாஹிபுடைய மூன்றாவது மகன் ஹுஸைன் என்பவன் தனது சகோதரர்கள் போல் வஹ்ஹாபிஸப்பணி செய்து இறந்தான். 

நஜ்து ஸாஹிபுவின் நாலாவது மகன் பற்றிய தகவல் கிடைக்க வில்லை. 

கொள்கையும் இரத்த பாசமும் 

அறிஞர் அப்துல் வஹ்ஹாப் அவர்களும் மகன் சுலைமான் அவர்களும் "ஸுன்னத் வல் ஜமாஅத்"கொள்கையுடைய வர்களாயும், மற்ற மகன் முஹம்மத் வழிகெட்ட கொள்கையுடையவனாக இருந்தாலும் அவர்கள் தந்தையும் மக்களும்தான். அவர்களுக்கிடையில் இரத்த பாசம் நிச்சயமாக இருக்கவே செய்யும். 

எனினும் கொள்கை வேற்றுமை இவர்களுக்கிடையில் இரத்த பாசத்தை பறக்கச் செய்தது. தந்தை மகன் என்று பார்க்காமலும்வழிகேடன் முஹம்மதை எதிர்க்கத்தொடங்கினார்கள். அவனை கொண்று விடுவதற்கும் முயன்றார்கள். 

ஒரு சமயம் தந்தை அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது மகன் முஹம்மதை உரிமையோடழைத்து பதின் முறை புத்திமதி கூறியும் அவன் கேட்கவில்லை. அதேபோல் சகோதரன் சுலைமான் சொல்லியும் அவன் கேட்கவில்லை. 

தான் கொண்டதே கொள்கை என்ற அடிப்படையில் தந்தை சொல் மதிக்காமல் சகோதரன் சொல் பேணாமலும் தனது கெட்ட தனிவழிப் போக்கில் போய்க்கொண்டிருந்தான். 

சகோதரனின் மார்க்க ரீதியாக அட்டூழியத்தை பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் கோபமுற்ற சகோதரன் சுலைமான் அவனைப் பகிரங்க விவாதத்துக்குஅழைத்து விவாதித்தார். 

ஒரு தடவை சுலைமான் வழிகேடன் முஹம்மதை அழைத்து இஸ்லாத்தின் "றுக்ன்" தூன் எத்தனை என்று கேட்டார். அதற்கவன் ஐந்து என்று பதில் கூறினான். 

அதற்கு சுலைமான் அவனை நோக்கி "உன்னிடம் இஸ்லாத்தின் தூன் ஆறல்லவா? ஏன் ஐந்து என்று சொல்கிறாய்?" என்று வினவினார். 

அதற்கவன் "நான் அவ்வாறு சொன்னதற்கான ஆதாரம் என்ன?" என்று திருப்பிக்கேட்டான். 

"உன்னைப் பின்பற்றாதவர்களெல்லாம் "முஷ்ரிக்" ​இணைவைத்தவர்களென்று சொல்கிறாயே, இது ஆறாவது தூணா? இல்லையா?" என்றுகேட்டார். அதற்கு அவன் பதில் கூற முடியாமல் தலை குனிந்து நின்றான். 

(தொடரும்.....)

==**==**==**==**==**==
தொடர்- 03 ...


சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள்

ஷெய்தானின் கொம்பு என்று நபிகளால் பிரகடனம் செய்யப்பட்டவர் வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாபேதான்!

வழிகேடர் நஜ்தி சாகிபுதனது கொள்கைக்கு மாறானவர்களையெல்லாம் இணைவைத்தவர்களென்று கூறி வந்ததால் அவர்களிலொருவனைத் தனது பக்கம் சேர்த்துக் கொள்ளும்போது அவனின் தலைமுடியை சிரைத்துவிடுமாறு பணித்து அது “ஷிர்குடைய காலத்தில் முளைத்த முடி யென்றும் காரணம் சொல்லி வந்தார்.

அசல் வஹ்ஹாபிக் குஞ்சுகளிடம் இப்படியொரு கொள்கையும் , திட்டமும் இப்போது இருந்து வருகின்றது.

மேலே கூறிய ஹதீஸ்களில் “யத்லுஉ கர்னுஷ்ஷெய்தான்” ஷெய்தானுடைய கொம்பு வெளியாகுமென்று இருப்பது போல் இன்னும் சில ஹதீஸ்களில் “யத்லு உகர்னாஷ் ஷெய்தான்” ஷெய்தானுடைய இரு கொம்புகள் வெளியாகும் என்றும் வந்துள்ளது.
அதாவது “கர்னுன்“ என்ற சொல்லின் இருமைச் சொல்லான “கர்னானி” என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹதீதுக்கு விளக்க மெழுதிய இமாம்கள் இரண்டு கொம்புளென்பது முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்பவரையும், தன்னை நபி என்று வாதிட்ட “முஸைலமதுல் கத்தாப்”என்பவரையும் குறிக்கும் என்று எழுதியுள்ளார்கள்.

ஏனெனில், தானொரு நபியென்றுவாதிட்ட “முஸைல மதுல் கத்தாப்” என்பவரும் முஹம்மதுடைய ஊரான “நஜ்து” எனுமூரில் தான் பிறந்தார்.

அறிஞர் அல்லாமஹ் அஸ்ஸெய்யித் அலவீ பின் அஹ்மத் பின் ஹஸன் பின் அல் குதுபு அஸ்ஸய்யித் அப்துல்லாஹில் ஹந்தாத் பாஅலவீ (றஹ்) அவர்கள் வழிகேடர் முஹம்மதுக்கு அறபியில் ஒரு மறுப்பு நூல் எழுதினார்கள். அதற்கு “ஜிலா உழ்ழலாம் பிர்றத்தி அலன் நஜ்திய்யில்லதீ அழல்லல் அவாம்” என்று பெயரிட்டார்கள்.

இந்த நூலில் இமாம் அவர்கள் பல ஹதீஸ்களை இடம் பெறச் செய்துள்ளனர். அவற்றிலொன்றை மாத்திரம் கீழே எழுதுகிறேன்.

“பன்னிரண்டாம் நூற்றான்டில்” வாதீபனீஹனீபா ” எனும் இடத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவன் காளைமாடு போலிருப்பான். அவனுடைய காலத்தில் கொலையும், கொள்ளையும் அதிகப்படும். அவனும் அவனுடைய ஆதரவாளர்களும் முஸ்லிம்களுடைய சொத்துக்களை ஹலாலெனக் கருதி அவற்றை அபகரித்துக் கொள்வார்கள். முஸ்லிம்களைக் கொலைசெய்வதும். ஹலாலெனக்கருதி அவர்களையும் கொலை செய்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் அவர்களால் ரிவாயத் செய்யப்பட்டுள்ளது.

மேலே குறித்த ஹதீஸின்படி ஹிஜ்ரி பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்து வாழ்தவர்தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஆவார்.

இவர் ஹஜ்ரி 1111ல் பிறந்தார் மேலே குறிப்பிட்ட ஹதீஸும் இந்த வழிகேடரையே குறிக்கின்றது. ஏனெனில் 12ம் நூற்றாண்டில் மார்க்க ரீதியாக ஏற்பட்ட மாபெரும் குழப்பம் இவரால்தான் உண்டானது. இவரைத்தவிர வேறெவராலும் குறித்த நூற்றாண்டில் மார்க்க ரீதியான குழப்பமொன்றும் ஏற்படவில்லை. குறித்த ஆண்டில் அறபு நாட்டில் மார்க்க ரீதியாகத் தோன்றிய புரட்ச்சி இவருடைய புரட்ச்சி மட்டும்தான்.

நபி (ஸல்) அவர்கள் தீர்க்கதரிசனமாக முன்கூட்டியே சுட்டிக்காட்டிய வழிகேடர் இந்த முஹம்மது மட்டும்தான் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

நபித்தோழர்களில் “துல்குவைஸறா அத்தமீமி” என்றொரு ஸஹாபி இருந்தார். அவர் தமீம் கூட்டத்தைச் சேர்தவர்.

ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் இவரைச் சுட்டிக்காட்டி இவருடைய சந்ததிகளில் சிலர் வருவார்கள். அவர்கள் திருக்குர்ஆன் ஓதுவார்கள். எனினுமது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு வெளியேறுவது போல் இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள். விக்ரகவாதிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்களையடைந்தால் “ஆத்” கூட்டத்தாரை கொன்றது போல் அவர்களை நான் கொன்று விடுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நஜ்தில்பிறந்த வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் தமீம் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நபி மொழியிலிருந்து நபி (ஸல்) அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டவர் வழிகேடர் முஹம்மத் என்பது தெளிவாகிவட்டது.

“ கடைசி காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். நீங்களும் உங்கள் பெற்றோர்களும் கேட்டிராத விஷயங்ளையெல்லாம் அவர்கள் சொல்வார்கள். எனவே, அவர்களைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கின்றேன். அவர்கள் உங்களை வழி கெடுக்கவும் வேண்டாம். உங்களைக் குழப்பத்திலாக்கி விடவும் வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”
ஆதாரம்:மிஸ்காத், முஸ்லிம்
அறிவிப்பு: அபூ ஹுரைரா (றழி)

இந்த ஹதீஸில் குறிப்பிட்ட கூட்டம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் கூட்டமென்பது அறிவுள்ளவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தெளிவாகப்புரியும்.

ஏனெனில், இவரும் இவரின் கூலியாட்களும்தான் வஸீலா, மெளலித், தல்கீன், கத்தம், பாத்திஹா, கந்தூரி போன்ற வற்றையும் மறுக்கின்றார்கள். இவர்களுக்கு முன் இவற்றை யாரும் மறுத்ததற்கு ஆதாரமில்லை.

தமீம் கூட்டத்தாரைப்பற்றி திருக்குர்ஆனிலும் சில வசனங்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரிலுள்ள தங்களுடைய வீட்டிலிருந்த சமயம் அவர்களைச் சந்திப்பதற்காக வருபவர்கள் அவர்கள் வெளியேவரும்வரை காத்திருப்பது வழக்கம்.

ஒரு சமயம் தமீம் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்தார்கள். அந்நேரம் நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள்ளே இருந்தார்கள்.

வந்தவர்கள் நபி (ஸல்) அவர்கள் வரும்வரை காத்திருக்காமல் வெளியே நின்ற வண்ணம் நபி (ஸல்) அவர்களின் பெயரைச் சொல்லி அவர்களை அழைத்தனர்.

அப்பொழுது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கொண்டு வந்தார்கள். “இன்னல்லதீன யுனாதூனக மின்வறாயில் ஹுஜுறாதி அக்தறுஹும் லா யஃகிலூன்”

உங்களுடைய வீட்டுக்கு வெளியே நின்று உங்களை அழைப்பவர்களில் அநேகர் உங்ளைப் புரியாதவர்களாகவே உள்ளனர்.
(அல்குர்ஆன்: 49-04)

இத்திருவசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்களின் பெயர் கொண்டு அவர்களை அழைக்கக் கூடாதென்பதும், நபி (ஸல்) அவர்களை மரியாதைக் குறைவாக அழைத்தவர்கள் “தமீம்” கூட்டத்தவர்கள் என்பதும், அவர்களில் அநேகர் ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், நபி (ஸல்) அவர்களைப் புரியாத வர்களென்றும் அல்லாஹ் அவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளான் என்பது தெளிவாகிவிட்டது.

“தமீம்” கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களைத் தரக்குறைவாக கணித்திருப்பதினாலும், நபி (ஸல்) அவர்களைத்தரக்குறைவாக பேசியுள்ள வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் அதே கூட்டத்தைச் சேர்ந்தவராகயிருப்பதினாலும் “தமீம்”கூட்டத்தார் தொன்று தொட்டு நபியைக் கண்ணியப் படுத்தாமல் வந்தவர்களென்பதும் விளங்கிவிட்டது.

நபி (ஸல்) அவர்களைக் காணவந்த தமீம் கூட்டத்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயர் கொண்டு அவர்களைழைத்தது மட்டும் குற்றமில்லை. வீட்டினுள்ளேயிருந்த நபிகளாரை வெளியே நின்று கொண்டு அழைத்ததும் குற்றம்தான்.

அவர்கள் நபிகளாரின் பெயர் கொண்டு அழைக்காமல் “யாரஸூல்லாஹ், யாஹபீபல்லாஹ்”போன்ற கண்ணியத்துக்குரிய வார்த்தைகள் கொண்டு அவர்களையழைத் திருந்தாலும் வெளியே நின்று அழைத்தது அவர்கள் செய்த குற்றமேயாகும்.

நபி (ஸல்) அவர்களைக்காண வருபவர்களிற் சிலர் அவர்களைவிடக் கூடுதலாகத் தமது சப்தத்தை உயர்த்திப் பேசுவார்கள்.

ஒரு சமயம் மேலே கூறிய தமீம் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் சப்தத்தைவிடத் தமதுசப்தத்தையுயர்த்திப் பேசினார்கள். அப்பொழுது பின்வரும் திரு வசனம் இறங்கியது.

“விசுவாசிகளே! நபி பேசும் பொழுது நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள். அன்றி உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் உரக்கப் பேசுவதைப்போல் அவரிடம் சப்தத்தையுயர்த்தி நீங்கள் உரக்கப் பேசாதீர்கள் ஏனெனில் உங்களுடைய நன்மையான செயல்களெல்லாம் பயனற்று விடக்கூடும் இதை நீங்கள் உணர்ந்து கொள்ளமுடியாது”
(திருக்குர்ஆன்: 49-02)

இத்திருவசனத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுடைய சப்தத்திற்கு மேலாக யாரும் சப்தத்தையுயர்த்திப் பேசக்கூடாதென்பதும், அவ்வாறு பேசியவர்கள் வழிகேடர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபுடைய மூதாதையர்களான “தமீம்” கூட்டத்தை சேர்ந்தவர்களென்பதும தெளிவாகி விட்டது.

இத்திரு வசனத்தின் மேலதிக விபரங்களை “நபி (ஸல்) அவர்கள் நம் போன்ற மனிதனா? என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.

உலகில் வழிகெட்டவர்களில் அநேகர் தமீம் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகவேஇருக்கின்றார்கள். வழிகேடர் முஹம்மதும், அவருக்கு உதவி வந்த மன்னன் அப்துல் அஸீஸ்பின் முஹம்மத் பின் சுஊத் என்பவரும் “தமீம்”கூட்டத்தை சேர்ந்தவர்களேயாவர்.

இமாம் அஸ்ஸெய்யித் அலவி அல்ஹத்தாத் (றஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“தாயிப் நகரில் சமாதி கொண்டிருக்கும் “ஹிப்றுல் உம்மத்”அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (றழி) அவர்களை ஸியாறத் செய்வதற்காக நான் அங்கு சென்ற பொழுது அல்லாமஹ் அஷ்ஷெய்கு முஹம்மத் ஸுன்புல் அஷ்ஷாபியீ (றஹ்) அவர்கள் மகன் அஷ்ஷெய்கு தாஹிர் ஸுன்புல் அல்ஹனபீ அவர்களைக் கண்டு உரையாடினேன்.

வழிகேடர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பற்றியும், அவருடைய கூலியாட்கள் பற்றியும், அவர்களின் வழிகேடான கொள்கை பற்றியும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அவர்களின் வழிகெட்ட கொள்கையை எதிர்த்து “அல் இன்திசார்லில் அவ்லியாயில் அப்ரார்” என்ற பெயரில் தானொரு நூல் எழுதி வெளியிட்டதாகவும் கூறினார்கள்.

மேலும், தனது நூல் வழிகேடர் நஜ்தியின் கொள்கைநுழையாத உள்ளங்களைத் திருத்திவிடுமென்றும், அவருடைய கொள்கை நுழைத்த உள்ளங்கள் வில்லை விட்டும் வெளியான அம்பு மீண்டும் வில்லளவில் மீளாதென்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதுபோல் அவர்கள் ஒரு பொழுதும் நல்வழிக்குத் திரும்பமாட்டார்ளென்றும் என்னிடம் சொன்னார்கள். வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் தவறான கொள்கையுள்ளவராக இருந்தாலும் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த ஒன்றும் தெரியாத மக்களைஒன்று சேர்த்து தொழுகை,நோன்பு போன்ற கடமைகளைச் செய்ய வைத்தும், பாவமான காரியங்ளை விட வைத்தும்,கொள்ளையர்களை திருத்தியும் இருக்கின்றார் ஆகையால் அவரைச் சரி கண்டால்என்னவென்று சிலர் கேட்கிறார்கள்.

இவர்களுக்கு சுன்னத் வல்ஜமாஅத்தவர்கள்கூறும் பதில் பின்வருமாறு:

இவ்வாறு கேட்பவர்கள் வழிகேடர் முஹம்மதுவின் வழிகேடுபற்றியும், அவர்செய்த அட்டூழியங்கள் பற்றியும் தெரியாதவர்களேயாவர். அவரின் வழிகேடு பற்றி மக்கள் தெரிந்து அதிலவர்கள் விழுந்து விடாமலிருக்கும் பொருட்டு அவரின் வழிகேட்டில் சிலதை இங்கு எழுதுகிறேன்.

உலகில் சுமார் 600ஆண்டுகாலமாக வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் “முஷ்ரிக்”இணைவைத்தவர்ளென்று அவர் கூறிய வார்த்தையை விட பெரிய குற்றம் ஒன்ருமிருக்க முடியாது.

இதன் விவரமென்னவெனில். ஹிஜ்ரி 1111ல் பிறந்த வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் ஹிஜ்ரி 500க்குப்பிறகுள்ள அனைவரும் “முஷ்ரிக்” குகள் – இணைவைத்தவர்கள் என்று கூறினார்.

இவருடைய இக்கூற்றின் படி ஹிஜ்ரீ 500க்குப் பிறகுவந்த இமாம்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் என்றாகிவிடும்.

சாதாரண ஒரு முஸ்லிமைக் கூட “முஷ்ரிக்”என்றும் “முர்தத்” என்றும் கூறுவது மிகப் பெரிய பிழையாகவும், பாரிய குற்றமாகவுமிருக்கும் பட்சத்தில், அவ்லியாக்கள், இமாம்கள், நாதாக்கள் முதலானோரை “முஷ்ரிக்” குகள் என்றும் “முர்தத்” துகள் என்றும் சொல்வது மிகப்பெரிய குற்றமும், நாதாக்களின்’ சாபத்தை அழைத்துக் கொள்வதுமாகும்.

இன்னும் வழிகேடர் நஜ்திசாஹிபு செய்த வழிகேடு என்னவெனில் “பிக்கு” என்னும் மார்க்கச் சட்ட நூற்களையும், மற்றும், ஹதீஸ், அவ்ராது போன்ற இமாம்களால் எழுதப்பட்ட நூற்களையெல்லாம் எரித்துச் சாம்பராக்கி விட்டதாகும்.

இந்த வழிகேடருக்கு இமாம்களைப்பிடிக்காது ஏனெனில் இமாம்கள் என்போர் இவருடைய கொள்கைக்கு மாறானவர்களாயிருந்தபடியால் அவர்கள் எழுதிய நூற்களையெல்லாம் எரித்துச் சாம்பராக்கிவிட்டார். இதுவும் அவர் செய்த அட்டூழியங்களில் ஒன்றாகும்.

இன்னுமவர் செய்த மிக மோசமான அட்டூழியமென்னவெனில் தனது கொள்கைக்கு மாறாகவிருந்த உலமாக்கள், இமாம்கள், நல்லடியார்கள் போன்றவர்களையெல்லாம் கொலை செய்ததும், அவர்களுடைய சொத்துக்கள் ஹலால் எனக்கருதி அவற்றை அபகரித்துக் கொண்டதுமாகும்.

இன்னும் அவருடைய வழிகேடு என்னவெனில் அல்லாஹ் சடமுள்ளவன் என்றுமட்டும் நம்பினதும், சொன்னதுமாகும்.

இன்னும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் செய்த வழிகேடு யாதெனில் நபீமார்கள், றசூல்மார்கள், அவ்லியாக்கள், ஆகியோர்களை தரக்குறைவாகப் பேசியிருப்பதும், அவர்களுடைய கப்றுகளைத் தோண்டித் தரைமட்டமாக்கியிருப்பதுமாகும்.

சவூதி அரேபியாவில் “ஹஸ்ஸர்” எனுமூரிலிருந்த அவ்லியாக்களின் கப்றுகளை உடைத்து தரைமட்டமாக்கிவிட்டு அவற்றையெல்லாம் மலசல கூடமாக மாற்றியதும் அவர் செய்த பயங்கரமார்க்கதுரோகமாகும்.

“தலாயிலுல் கைறாத்”என்ற உலகப்பிரசித்தி பெற்ற ஸலவாத், அவ்றாத் அடங்கிய நூலைப் படிக்க வேண்டாமென்று மக்களை தடைசெய்ததுடன் அதை எரித்துச் சாம்பராக்கினதும் அவர் செய்த மோசமானமார்க்கதுரோகமாகும்.

இந்நூலில் அஷ்ஷெய்கு முஹம்மதிப்னு சுலைமான் அல்மக்ரிபீ அல்ஜஸூலி (றஹ்) அவர்களால் இயற்றப்பெற்றது. இப்பெரியார் அறிஞர் இப்னு ஹாஜிப் (றஹ்) அவர்கள் எழுதிய நூலை மனனம் செய்திருந்தார்.

சூபிஸ ஞானக்கலையில் பலநூல்கள் எழுதியுள்ளார்கள். மொரோக்கோ நாட்டின் கடலோரங்களில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் இறைவணக்கத்தில் நிலைபெற்றிருந்தார்.

தினமும் பகல் நேரத்தில் மட்டும் பதினாலாயிரம் தரம் “பஸ்மலா” (பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று) ஓதுவதுடன் தாங்கள் எழுதிய “தலாயிலுல் கைறாத்”சலவாத்தை இரு தடவைகள் ஓதியும் முடிப்பார்கள்.

இரவு நேரத்தில் மட்டும் “தலாயிலுல் கைறாத்”தை ஒருதரமும் திருக்குர்ஆனில் நூலில் ஒரு பகுதியையும் ஓதி முடிப்பார்கள்.

இவர் ஹிஜ்ரி 870ம் ஆண்டு றபீஉனில் அவ்வல் மாதம் ஆறாம்நாள் இறையடி சேர்ந்து “ஸூஸ்” எனும் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவர் அடக்கப்பட்டு 77 ஆண்டுகள் கழிந்தபிறகு, ஈரான் நாட்டிலுள்ள “ஸூஸ்” எனுமிடத்திலிருந்து மொரோக்கோநாட்டிலுள்ள “மர்ராகிஸ்” என்னுமிடத்துக்கு இவரை மாற்றியடக்க வேண்டிய நிலைமையேற்பட்டது.

அவரைத் தோண்டியெடுத்து அடக்கம் செய்தார்கள் அப்பொழுது அவர் அன்று மரணித்து அடக்கப்பட்டவர் போல் இருந்தார் என்றும் அவருடைய உடலில் எவ்வித மாற்றமும் இருக்கவில்லையென்றும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புக்களுடைய இமாம் ஜஸூலி (றஹ்) அவர்கள் எழுதிய “தலாயிலுல் கைறாத்”எனும் நூலைத் தான் வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் எரித்துச் சாம்பராக்கினார். இதுவும் அன்று அவர்செய்த மாபெரும் சன்மார்க்க துரோகமாகும்.

இமாம்கள், அவ்லியாக்களால் கோர்வை செய்யப்பட்டு வௌ்ளிக்கிழமையிரவுகளில் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வீடுகளிலும் பள்ளிவாயல்களிலும்ஓதி வருகின்ற – செய்து வருகின்ற “ராதிப்” ஒதக் கூடாது என்று அவர் தடை செய்தவுடன் அத்தகைய நுல்களை எரித்துச் சாம்பராக்கியதும் அவர் செய்த மார்க்கத் துரோகமாகும்.

இன்னும் நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடப்பட்ட மௌலிதுகளும் அவ்லியாக்களை புகழ்ந்து பாடப்பட்ட மௌலிதுகளும் மார்க்கத்துக்கு முரணானவை என்று கூறி அவற்றை தடைசெய்ததும், அவற்றைத் தீயிட்டு அழித்ததும் அவர் செய்த மார்க்கத் துரோகமாகும்.

ஐங்காலத் தொழுகைக்காகவும் பாங்கு சொன்ன பிறகுநபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லும் வழக்கம் இருந்துவந்தது. இவர் இதையும் தடைசெய்ததுடன், இதற்கு மாறாகச் செயல்பட்டு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னவர்களைக் கொலை செய்தார்.

தனது கிராமத்துப்பள்ளி வாயலொன்றில் ஐங்காலத் தொழுகைக்காகவும் பாங்கு சொல்லிக் கொண்டிருந்த“முஅத்தின்” ஒருவரை பாங்கு சொல்லி முடிந்த பின் நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்” சொல்லவேண்டாம் என்று தடைசெயதார். அவர் விதித்த தடையை மீறி அவர் வழமைப்படி “ஸலவாத்” சொன்ன பொழுது அவரைக் கொலைசெய்தார்.

காத்தான்குடி பள்ளி வாயல்களில் தொழுது கொண்டிருந்த அப்பாவி மக்களை மிருகத்தனமாக சுட்டும், வெட்டியும் கொலைசெய்த பயங்கரக் காபிர்களை விடவும் கொடியவர்தான் நபி (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்”சொன்னதற்காகப் பள்ளி முஅத்தினைப் படு கொலைசெய்த வழிகேடர் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் பயங்கரவாதியாவார்.

விபச்சாரியின் வீட்டில்தங்குவது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்சொல்வதைவிடப் பாவம் குறைந்தது என்று சொல்லியுள்ளார்கள்.

வழிகேடரின் இக்கூற்று இஸ்லாத்தை முழுமையாகத் தகர்த்துவிடக் கூடிய ஒன்றாகும் இவருடைய இக்கூற்று போ ன்று இவருக்கு முன் வந்த வழிகேடர்களில் எவரும் செய்யவுமில்லை, சொல்லவுமில்லை.

தன்னை பின் பற்றினவர்களில் விரும்பினவர்கள் அவரவர் புத்திக்கும், விருப்பத்திற் கேற்றவாறும் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்கலா மென்று இவர் சொன்னார்.

இவ்வாறு அவர் சொன்னவுடன் ஒன்றுமறியாதவெர்களெல்லாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கி விட்டார்கள்.

திருக்குர்ஆனை ஓதத்தெரியாதவர்கள் அதை ஓதத்தெரிந்தவர்களிடம் ஒதச் சொல்லி விட்டு அவர்கள் விளக்கம் கூறுவார்கள். இந்த அளவுக்கு திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் விவகாரம் மிக மோசமாகப் போய்விட்டது.

திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் திறமை தரமான இமாம் களுக்கு மட்டும்தான் உண்டு.திருக்குர்ஆன் அறபு மொழியில் இறக்கப்பட்டிருந்தாலுங்கூட அந்த மொழி தெரிந்தவர்களெல்லாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லிவிட முடியாது.

திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் ஒருவர் குறைந்த பட்சம் தப்ஸீர்கலை, ஹதீஸ்கலை, சட்டக்கலை, மொழியிலக்கணம், சொல்லிலக்கணம், இலக்கியம், வரலாறு, தர்க்கவியல் போன்ற கலைகளில் பாண்டித்தியம் பெற்றவராயும் இவையல்லாத ஏனைய கலைகளில் அறிவுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

எனினுமந்த வழிகேடர் முஹம்மத் தனது ஆதரவாளர்களுக்கு அவரவரின் சிந்தனை அறிவிற்கேற்ப திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூறலாமென்று கூறியவுடன் எழுத வாசிக்கத்தெரியாதவர்களும், அறவே மார்க்க ஞானமில்லாதவர்களும் திருமறைக்கு விளக்கம் கூற முன்வந்தனர்.

(தொடரும்.....)


==**==**==**==**==**==

தொடர்- 02 ...


வஹ்ஹாபிஸத்தின் தந்தை இப்னு அப்தில் வஹ்ஹாப் பற்றிய இமாம்களின் கருத்துகள்

இவர் ​​தொழுகைக்குப் பின் “துஆ ஓதுவதை-பிராத்தனை செய்வதை தடை செய்தார். இது இஸ்லாத்திற்கு முரணான “பித்அத்” என்று கூறி வந்தார். தொழுகைக்குப் பின் நீங்கள் “துஆ” கேட்டால் அது நீங்கள்​ செய்த வணக்கத்திற்கு கூலி கேட்பது போலாகிவிடுமென்று போலிக்காரணமும் கூறி வந்தார்.

இவரின் வழிகேடும், அநாச்சாரக் கொள்கையும் காட்டுத்தீ​ போல் நாடெங்கும் பரவி வருவதைக் கண்ட சத்திய சன்மார்கத்தில் பற்றும், அதன் மீது ​​ரோஷமும் கொண்ட அறிஞர்கள் பலர் இவருக்கு எதிராக பல மறுப்பு நூல்களை எழுதி வெளியிட்டார்கள். 
உலகில் அநாச்சாரம் ​வெளியாகிவிடும் பொழுது மார்க்க அறிஞனொருவன் அதை மறுக்காமல் மௌனியாக இருப்பவனாயின் அவன் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மற்றும் எல்லா மலக்குகளினதும் சாபம் ​உண்டாகட்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

ஆதாரம்- அத்துறறுஸ்ஸனிய்யஹ். 

அநா​ச்சாரக்கார​ர்கள் வெளியாகி விடுவார்களாயின் அவர்களை மறுப்பதற்காக தான் நாடிய அடியார்களை அல்லாஹ் தயார் செய்து விடுவான் என்றும் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள். 
ஆதாரம்- அத்துறறுஸ்ஸனிய்யஹ். 

நபி(ஸ​ல்) அவர்களின் ​இவ்விரு பொன்மொழிகளும்தான் ஸுன்னத் ​வல்ஜமாஅத் உலமாக்களை இவருக்கு மறுப்பெழுதுமாறு தூண்டிவிட்டன. 

இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன. தலை சிறந்த பல உலமாக்கள் இவரின் வழிகேட்டை மக்களுக்கு எழுத்து மூலமும், பேச்சு மூலமும் தெளிவு படுத்தி இவரின் வழிகேட்​டிலிருந்து அவர்களை எச்சரித்தார்கள். 

இவருக்கு மறுப்பெழுதிய இமாம்களின் பட்டியல் மிக விரிவானது. அதை முழுமையாக எழுதினால் இவ்விதழ் மிக விரிவடைந்துவிடும். எனினும் இவரை மறுத்து நூல்கள் எழுதிய அறஞர்களின் விவரத்தை மட்டும் இங்கு தருகிறேன். 

வழிகேட்டை எதிர்த்த வழிகாட்டிகள். 

1. இவருக்கு கல்வி கற்றுக் கொடுத்த “உஸ்தாத்” ஆசிரியர் முஹம்மத் இப்னு ஸுலைமான் அல்குர்தீ அஷ்ஷாபிஈ(றஹ்) அவர்கள். 

2. இவரின் ஆசிரியர் அல்லாமஹ் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லதீப் அஷ்ஷாபிஈ(றஹ்) அவர்கள். இவர்கள் எழுதிய மறுப்பு நூலின் பெயர் “தஜ்ரீது ஸெய்பில் ஜிஹாத்லி முத்தயில் இஜ்திஹாத்” என்பதாகும். 

3. அல்லாமாஹ் அபீபுத்தீன் அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல்ஹன்பலீ(றஹ்) அவர்கள். பஸறஹ், பக்தாத், ஹலப், அஹ்ஸா ஆகிய நகரங்களிலுள்ள அறிஞர்களின் மதிப்புரையுடன் இருபது தாள்களை கொண்டதாக வெளிவந்த இவரின் மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸவாயிகுவர்றுஊத்” என்பதாகும். இந்நூலை ஓமானைச் சேர்ந்த அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னுபஷீர் காழீ(றஹ்) அவர்கள் சுருக்கி எழுதியுள்ளார்கள். 

4. அல் அல்லாமதுல் முஹக்கிக் அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு அமாலிக் அல்ஹன்பலீ(றஹ்) அவர்கள். இவருடைய மறுப்பு நூலின் பெயர் “தஹக்குமுல்முகல்லிதீன் பிமன் இத்தஆதஜ்தீதத்தீன்” 

5. அல்லாமாஹ் அஹ்மத் இப்னு அலீ அல்குபானீஅல்பஸரீ அஷ்ஷாபிஈ(றஹ்) அவர்கள். 

6. அல் அல்லாமாஹ் அப்துல் வஹ்ஹாப் இப்னு அஹ்மத்பறகாத் அஷ்ஷாபிஈ அல் அஹ்மதீ அல் மக்கீ(றஹ்) அவர்கள். 

7. அஸ்ஸெய்யிதுஷ் ​​​ ​ஷெய்கு அதாஉல் மக்கீ(றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸாரிமுல் ஹிந்திய்யு பூ உனுகின் நஜ்திய்யி” 

8. அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் இப்னுஈஸா அல்முவைஸீ(றஹ்) அவர்கள். 

9. அஷ் ஷெய்கு அஹ்மத் அல் மிஷ்ரீ(றஹ்) அவர்கள். 

10. பைதுல் மக்தி​ஸை சேர்ந்த ஒரு மார்க்க மேதை. நூலின் பெயர் “அஸ்ஸுயூபுஸ்ஸிகால் பீ அஃனாகிமன் அன்கற அலல் அவ்லியாயி பஃதல் இன்திகால்”. 

11. அஸ்ஸெய்யித் அலவீ பின் அஹ்மத் அல்ஹத்தாத்(றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸெய்புல்பாயிர் லி உனுகில் முன்கிரி அலல் அகாபிர்”. இந்நூல் 100 தாள்களை கொண்டது. 

12. அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு அஷ்​​ஷெய்கு அஹ்மத் இப்னு அப்தில் லதீப் அல்இஹ்ஸாயி(றஹ்) அவர்கள். 

13. அல் அல்லாமாஹ் அப்துல்லாஹ் இப்னு இப்றாஹீம் மீர்கானிய்யி(றஹ்) அவர்கள். இவர் தாயிப் நகரை சேர்ந்தவர். மறுப்பு நூலின் பெயர் “தஹ்ரீளுல் அக்பியாயி அலல் இஸ்திகாததி பில் அன்பியாயி வல்அவ்லியாயி”. 

14. அஸ்ஸெய்யித் அலவீ இப்னு அஹ்மத் அல்ஹத்தாத்(றஹ்) அவர்கள். 

15. அல்அல்லாமாஹ் தாஹிர் ஸுன்புலீ அல்ஹனபீ(றஹ்) அவர்கள். நூலின் பெயர் அல்இன்திஸார்லில் அவ்லியாயில் அப்றார். 

16. அஷ்ஷெய்குல் முஹத்தித் ஸாலிஹுல் பல்லானீ அல்மக்ரிபீ(றஹ்) அவர்கள். 

17. அல்அல்லாமாஹ் அஸ்ஸெய்யிதுல் முன்அமி(றஹ்) அவர்கள். 

இப்னு அப்தில் வஹ்ஹாப் ஒரு சமயம் தலைமுடி களையாதவர்களையெல்லாம் கொலை செய்தார். அந்நேரம் இப்பெரியார் ஒரு கவி நடையில் ஒரு நூல் எழுதினார்கள். 

18. அல் அல்லாமாஹ் அஸ்ஸெய்யித் அப்துர்றஹ்மான் (றஹ்) அவர்கள். இவர்கள் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கு எதிராக 67 பாடல் கொண்ட, அர்த்தமுள்ள ஒரு மறுப்பு நூல் எழுதினார்கள். 

19. அல்அல்லாமாஹ் அஸ்ஸெய்யித் அலவீ இப்னு அல்ஹத்தாத் (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “மிஸ்பாஹுல் அனாம் வஜிலாஉள்ளலாம் பீ றத்தி ஷுபஹில் பிதயிய்யின் நஜ்தியில்லதீ அழல்லபிஹல் அவாம்”இது ஹிஜ்ரி 1325 இல் அச்சிடப்பட்டது. 

20. அஷ்ஷெய்கு ஸுலைமான் இப்னு அப்தில்வஹ்ஹாப் (றஹ்) அவர்கள். இவர் இப்னு அப்தில்வஹ்ஹாபின் உடன் பிறந்த சகோதரன். மறுப்பு நூலின் பெயர் “அஸ்ஸவாயிகுல் இலாஹிய்யஹ்” 

21.அல்-அல்லாமதுல் முஹக்கிக் அஷ்ஷெய்குல் இஸ்லாம் இஸ்மாயீல் அத்தமீமீ அல்மாலிகீ (றஹ்) அவர்கள். 

22. அல்-அல்லாமதுல் முஹக்கிக் அஷ்ஷெய்கு ஸாலிஹுல் குவாஷ் அத்தூனூஸி (றஹ்) அவர்கள். 

23.அல்-அல்லாமதுல் முஹக்கிக் அஸ்ஸெய்யித் தாவூத் அல்பக்தாதீ (றஹ்) அவர்கள் 

24. அஷ்ஷெய்கு இப்னு கலபூன் அல்லீபிய்யி (றஹ்) அவர்கள். லிபியா நாட்டைச் சேர்ந்த இவர் நாற்பது பாடல்கள் மூலம் நஜ்திக்கு மறுப்பெழுதினார். 

25. அஸ்ஸெய்யித் முஸ்தபல் மிஸ்ரிய்யில் பூலாதிய்யி (றஹ்) அவர்கள். இவர் 126 பாடல்க​ள் மூலம் நஜ்தி சாஹிபுவை இழித்துரைத்துள்ளார். 

26. அஸ்ஸெய்யித் அத்தபாதபாயி அல் பஸரி (றஹ்) அவர்கள். 

27. அல் அல்லாமஹ் அஷ்ஷெய்கு இப்றாஹீம் அஸ்ஸம்னூதி (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “ஸஆததுத் தாறைன் பிர்றத்தி அலல் பிர்கதைன்” என்பதாகும். 

28. அஸ்ஸெய்யித் அஹ்மத் ஸெய்னீ தஹ்லான் (றஹ்) அவர்கள். இவர்கள் எழுதிய மறுப்பு நூலின் பெயர் “அத்துறறுஸ் ஸனிய்யஹ்” இவர் மக்கா முப்தியாக இருந்து ஹிஜ்ரீ 1304இல் வபாத்தானார். இவருக்கு வேறு கிதாபுகளும் உள்ளன. இலங்கையில் வேர் விலை எனும் ஊரிலும், காத்தான்குடியிலும் முப்பது நாட்கள் இமாம் புஹாரீ (றஹ்) அவர்களின் “ஸஹீஹுல் புஹாரீ”ஓதிய பின் இப்பெரியார் கோர்வை செய்த “துஆ”பிராத்தனைதான் உலமாக்களால் இன்றும் ஓதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

29. அஷ்ஷெய்ஹு அல்லாமஹ் யூஸுப் அந்நபஹானீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “ஷவாஹிதுல் ஹக் பித்தவஸ்ஸுலி பிஸெய்யிதில் கல்கி” எனப்படும். 

30. அஷ்ஷெய்கு ஜெமீல் அஸ்ஸிந்தீ அஸ்ஸஹாவீ அல்பக்தாதீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அல் பஜ்றுஸ் ஸாதிக்” 

31. அஷ்ஷெய்குல் மஷ்றபீ அம்மாலிகீ அல்ஜஸாயிரீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “இள்ஹாறுல் உகூக் மிம்மன் மனஅத் தவஸ்ஸுல பின் நபிய்யிவல் வலிய்யிஸ் ஸதூக்” 

32. அஷ்ஷெய்கு அல் மஹ்தீ அல்வஸ்ஸானீ (றஹ்) அவர்கள். இவர் ஈரானிலுல்ல “பாஸ்” நகரின் முப்தியாவார். 

33. அஷ்ஷெய்கு முஸ்தபல் ஹமாமி அல்மிஸ்ரி (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “கவ்துல் இபாத் பிபயானிர் ரஷாத்” 

34. அஷ்ஷெய்கு இப்றாஹீம் ஹில்மி அல்காதிரீ அல் இஸ்கந்தரீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “ஜிலாலுல் ஹக் பீ கஷ்பி அஹ்வாலி அஸ்றாரில் கல்க்”இந்நூல்1355ல் இஷ்கந்தரிய்யாவில் அச்சிடப்பட்டது. 

35. அல் அல்லாமஹ் அஷ்ஷெய்கு ஸலாமதுல் அஸாமீ (றஹ்) அவர்கள். மறுப்பு நூலின் பெயர் “அல் பராஹீனுஸ் ஸாதிஆ” 

36. அஷ்ஷெய்கு ஹஸன் சிஷ்தீ அல்ஹனபீ அத்திமிஸ்கி (றஹ்) அவர்கள்.மறுப்பு நூலின் பெயர் “அன்னுகூதுஷ் ஷர்யிய்யா பிர்றத்தி அலல் வஹ்ஹாபிய்யஹ்” 

37. அஷ்ஷெய்கு முஹம்மது ஹுனைன் மக்லூபி (றஹ்) அவர்கள். 

38. அஷ்ஷெய்கு ஹஸன் கஸ்பக் (றஹ்) அவர்கள்.மறுப்பு நூலின் பெயர் “ அல்மகாலாதுல் வபிய்யா பிர்றத்தி அலல் வஹ்ஹாபிய்யஹ்” 

39. அஷ்ஷெய்கு அதா அல்கஸ்ம் அத்திமிஸ்கீ கஸ்பக் (றஹ்) அவர்கள்.மறுப்பு நூலின் பெயர் “ அல் அக்வாலுல் மர்ழிய்யஹ் பிர்றத்தி அலல் வஹ்ஹாபிய்யஹ்” 

40. அல் அல்லாமஹ் அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் அல்குறஸி அல் அஜ்லீ (றஹ்) அவர்கள்.இவர்கள் 95 பாடல்களில் வழிகேடர் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பருக்கு மறுப்பெழுதினார்கள். 

வழிகேடர் இப்னு அப்தில்வஹ்ஹாபுக்கு மறுப்பெழுதிய நாதாக்களில் நாற்பது பேர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் இல்லாத இன்னும் அநேக இமாம்களும், மகான்களும் வழிகேடர் நஜ்தி சாஹிபுக்கு மறுப்பெழுயுள்ளார்கள். அவர்கள் அனைவரும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுடைய வர்களேயாவர். 

இறைத்தூதரின் எச்சரிக்கை 

நபீ (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலகட்டத்தில் பின்னொரு காலத்தில் தோன்றக்கூடிய வழிகேடர்கள் பற்றியும், அவர்கள் தோன்றும் இடங்கள் பற்றியும் சூசமாகச் சொல்லியிக்கின்றார்கள். அவற்றில் ஒருசில ஹதீஸ்களை மட்டும் இங்கு எழுதுகிறேன். 

“குழப்பம் இங்கிருந்துதான் உண்டாகும். குழப்பம் இங்கிருந்துதான் உண்டாகும் எனறு இருமுறை கூறிய நபீ (ஸல்) அவர்கள் கிழக்குப் பக்கமாக தங்களின் திருக்கரத்தைக் காட்டினார்கள். 
ஆதாரம்:புஹாரி, அத்துற்றுஸ்ஸனிய்யானிய்யஹ். 
அறிவிப்பு: அலி (றழி) 

“கிழக்குப் பக்கமிருந்து சில மனிதர்கள் வெளிப்படுவார்கள். அவர்கள் திருக்குர்ஆனும் ஓதுவார்கள். எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு புறப்படுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். வில்லை விட்டும் வெளியேறிய அம்பு மீண்டும் வில்லளலவில் மீளாதது போல் அவர்களும் சன்மார்க்கத்தினளவில் மீளமாட்டார்கள். அவர்களின் அடையாளம் “அத்தஹ்லீக்” சிரைத்தல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

“எனது உம்மத்துக்களில் பல்வேறுகருத்து வேறுபாடுகளும், பல கூட்டங்களும் உண்டாகும். ஒரு கூட்டத்தினர் மிக அழகாகப் பேசுவார்கள். எனினும் கெட்ட செயல்களையேசெய்வார்கள். அவர்கள் திருக்குர்ஆனும் ஓதுவார்கள். எனினும் அவர்களுடையை “ஈமான்” விசுவாசம் அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லில் இருந்து அம்பு வெளியேருவது போல் அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேருவார்கள். அம்பு மீண்டும் வில்லுக்கு திரும்பாதது போல் அவர்களும் மார்க்கத்தளவில் மீள மாட்டார்கள்.அவர்கள் குணமும், நடைமுறையும் கெட்டவர்கள். அவர்களைக் கொண்றவர்களுக்கும், அவர்களால் கொள்ளப்பட்டவர்களுக்கும் சுபச்செய்தி உண்டாவதாக! அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின் பால் மக்களையழைப்பர்கள். எனினும் அவர்கள் வேதத்தில் இருக்க மாட்டார்கள். அவர்களின் அடையாளம் “அத்தஹ்லீக்” சிரைத்தல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

கடைசி காலத்தில் ஒரு கூட்டம் வரும். அவர்கள் சிறுவயதினராகவும், புத்தி குறைந்தவர்களுமாயிருப்பார்கள். எனதுபேச்சையும் எடுத்துப் பேசுவார்கள்.அவர்கள் திருக்குர் ஆனையும் ஓதுவார்கள். எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு புறப்படுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் புறப்படுவார்கள். நீங்கள் அவர்களைக் கண்டால் கொன்று விடுங்கள். அவர்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ்விடம் நற்கூலியுண்டு என நபி (ஸல்)அவர்கள் அருளினார்கள். 

ஆதாரம்: புஹாரி 
அறிவிப்பு : அலீ (றழி) 

“ எனது உம்மத்துக்களில் சிலர் இருப்பார்கள். சிரைத்தல் அவர்களின் சின்னமாக இருக்கும். அவர்கள் திருக்குர் ஆனை ஓதுவார்கள். . எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு வெளியேறுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். குணமும், நடைமுறையும் கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

‘ கிழக்கிழிருந்து சில மனிதர்கள் வெளிப்படுவார்கள். அவர்கள் திருக்குர் ஆனை ஓதுவார்கள். அது அவர்களுடயை தொண்டையைத் தாண்டாது. வில்லை விட்டும் அம்பு வெளியேறுவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியேறுவார்கள். அம்பு வில்லுக்குத் திரும்பி வராதது போல் மார்க்கத்துக்கு, திரும்பி வரமாட்டார்கள். அவர்களின் சின்னம் சிரைத்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

குப்றுடைய தலை கிழக்குப் பக்கத்திலிருக்குமென்றும், பெருமை என்பது குதிரை ஓட்டங்களுடையவர்களில் இருக்குமென்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இங்கிருந்துதான் குழப்பம் “பித்னஹ்” வருமென்று கூறிய நபி (ஸல்) அவர்கள் கிழக்குப் பக்கம் கையைக்காட்டலானார்கள். 

“ ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் “இறைவா” எங்களுடைய ஷாம் சிரியாவிலும், எங்களுடைய எமனிலும் பறகச் செய்வாயாக” என்று பிராத்தனை செய்தார்கள். அப்பொழுது அங்கு வீற்றிருந்த “ நஜ்து” நாட்டைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய நஜ்திலும் என்று சேர்ந்துச் சொன்னார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள்“இறைவா!எங்களுடைய ஷாமிலும் எங்களுடைய எமனிலும் பறகச் செய்வாயாக”என்று மீண்டும் கேட்டார்கள். மூன்றாம் முறையில் அங்கு – நஜ்தில்தான் குழப்பங்களும், வழிகேடுகளும் உண்டாகும்.இன்னும் அங்குதான் ஷெய்தானுடை​ கொம்பு வெளியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
ஆதாரம் : புஹாரி 
அறிவிப்பு : இப்னு உமர் (றழி) 

“கிழக்கிழிருந்து சில மனிதர்கள்தோன்றுவார்கள். அவர்கள் திருக்குர் ஆனை ஓதுவார்கள்.எனினும் அது அவர்களின் தொண்டையைத் தாண்டாது. ஒரு கொம்பு இல்லாமற் போனால் மறுகொம்பு உண்டாகும்.கடைசியாக வரும் கொம்பு தஜ்ஜாலுடனிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

மேலே எழுதிக்காட்டிய ஹதீஸ்களில் “நஜ்து” எனுமிடத்தில் தோன்றக்கூடிய ஒருவர் பற்றி நபி (ஸல்) அவர்கள் தீர்க்கதரிசனமாக ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். 

நபி (ஸல்) அவர்கள் “நஜ்தில்” தோன்றக்கூடிய வழிகேடரின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும, அவருடைய தன்மைகள் பற்றி மேலே குறித்த ஹதீஸ்களில் சொல்லியிருக்கின்றார்கள். 

“நஜ்து” நாட்டில் தோன்றியவர்களில் மேலே கூறிய ஹதீஸ்களில் கூறப்பட்ட தன்மையுள்ளவர் யாரென்று மார்க்க அறிஞர்களும், மார்க்க வரலாற்றாய்வாளர்களும் ஆராய்ந்த வகையில் ஹிஜ்ரி (1111) ஆயிரத்து நூற்றுப்பதினொன்றில்“நஜ்தில்” பிறந்த முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்பாரைத் தவிர வேறெவரும் அங்கு தோன்றியதற்கு வரலாறில்லையென்று சொல்லியிருக்கின்றார்கள். 

நபி (ஸல்) அவர்கள் வபாத்தான காலத்திலிருந்து இன்றுவரை ஹதீஸ்களில் கூறப்பட்ட தன்மையுள்ளவர் “நஜ்து” நாட்டில் யார் தோன்றினார் என்று ஆராய்ந்தால் அப்துல் வஹ்ஹாப் உடைய மகன் முஹம்மது என்பவரைத் தவிர வேறு யாருமில்லை என்பது ஆய்வாளர்களின் முடிவிலிருந்து நன்கு தெளிவாகின்றது. 

ஹிஜ்ரீ 1111ல் பிறந்த வழிகேடர்தான் இஸ்லாமிய சன்மார்க்கத்தில் பெரிய புரட்சியையும், பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், முஸ்லிம்களுக்கிடையில் பெரும் சன்டைகளையும், பொதுவாக இப்னு தைமிய்யஹ்வுடைய வழிகெட்ட கொள்கைகளையும் வஹ்ஹாபிஸத்தையும் ஏற்படுத்தினார். 

“நஜ்து” நாட்டில் இவரைத் தவிர சத்திய சன்மார்க்கத்தில் புரட்சியையும், வழிகேட்டையும் ஏற்படுத்தினவர் வேறுயாருமில்லை. 

ஹிஜ்ரீ 1111ல் பிறந்த இவர்ஹிஜ்ரீ 1206ல் இறக்கும்வரை அறபு நாடெங்கும் பெரும் குழப்பங்களும், பிரச்சினைகளும் இருந்து வந்தன. 

மேலே குறிப்பட்ட ஹதீஸ்களில் இந்த வழிகேடரின் அடையாளமும், இவரைப் பின்பற்றுபவர்களின் அடையாளமும் “அத்தஹ்லீக்”சிரைத்தலென்றும் நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

சபிக்கப்பட்டவர்களின் சிரைத்தற்றொழில் 

நபீ (ஸல்) அவர்கள் குறித்த வழிகேடர் “நஜ்து” நாட்டில் பிறந்த முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் என்பவர்தான் என்பதற்கு “அத்தஹ்லீக்” சிரைத்தலென்று அவர்கள் அடையாளம் கூறியிருப்பது மறுக்கமுடியாத ஆதாரமாகும். 

ஏனெனில், வழிகேடர் முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் தனது கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை “முஷ்ரிக்” இணை வைத்தவர்களென்று கருதியிருந்ததால், அவர்களில் யாராவது தனது கொள்கையை ஏற்றுத் தன்னுடன் சேர்ந்து கொள்ள வந்தால் முதலில் தலை முடியைச் சிரைத்து விடுமாறு அவனைபணிப்பார். இது அவருடைய நிபந்தனைகளில் மிகப் பிரதானமான நிபந்தனையாகும். 

இதற்கு வழிகேடர் முஹம்மதும், அவரின் ஆதரவாளர்களும் கூறும் காரணமென்னவெனில் “ஷிர்க்” உடைய காலத்தில் முளைத்த முடியைக்களைந்து விட வேண்டுமென்பதாகும். 

வழிகேடர் முஹம்மத் தலை முடியைச் சிரைத்து மொட்டையடித்துக் கொள்ள வேண்டுமென்று ஆண்களுக்குக் கட்ளையிட்டதுபோல்பெண்களுக்கும் கட்டளையிட்டு வந்தார். 

ஒருசமயம் வழிகேடர் முஹம்மதுவின் கூலியாட்கள் தமது கொள்கையில் சேர்த்துக் கொள்வதற்காக பலாத்தாரமாக ஒரு பெண்ணைப்பிடித்து பிடித்து வந்து முஹம்மதுக்கு முன்னால் நிறுத்தினார்கள். அவர் தலை முடியைச் சிரைக்குமாறு அப்பெண்னைப்பணிந்தார். 

அதற்கவள் “நீ தலை முடியைச் சிரைக்குமாறு ஆண்களைப்பணிக்கின்றாய். அதற்குக் காரணமாகஅது ஷிர்க்குடைய காலத்தில் முளைத்த முடியென்றும் சொல்கிறாய். அதேபோல் பெண்களுக்கும் தலை முடியைச் சிரைக்குமாறு கட்டளையிடுகின்றாய். ஆனால் நீ சொல்லும் காரணத்தின்படி ஆண்கள் தமது தாடியையும் சிரைத்து விட வேண்டுமென்றும் கட்டளையிட வேண்டுமே! என்று கூறினாள். இக்கூற்றுக்கு பதிலலிக்க முடியாமல் அவ்வழிகேடர் விழிபிதிங்கித்தலைகுனிந்தார். 

வழிடேர் முஹம்மதும், அவரின் ஆதரவாளர்களும்தமது கொள்கையைப் பின்பற்றுவோர் அனைவரும் தமது தலை முடியைச் சிரைத்துவிட வேண்டும் என்று கூறுவதாலும், தலைமுடி களைவதை அவர்கள் பிரதான சட்டமாக வைத்திருப்பதனாலும்நபீ (ஸல்) அவர்கள் கூறிய வழிகேடர் முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

நபீ (ஸல்) அவர்கள் கூறிய “அத்தஹ்லீக்” சிரைத்தல் என்ற வார்த்தை இவரையும் இவருடைய வால்களையும் தான் காட்டுகிறது. 

திருமதீனஹ் நகருக்கு கிழக்கேயிருக்கும் “நஜ்து” எனும் ஊரில் அன்று முதல் இன்றுவரை பல அறிஞர்களும், ஆலிம்களும் தோன்றியிருக்கின்றார்கள். 

அவர்களில் மார்க்கரீதியில் புரட்சியும், குழப்பமும் செய்தவர் இவரைத் தவிர வேறுயாருமில்லை. 

இவர்தான் “அத்தஹ்லீக்” சிரைத்தல் என்ற திட்டத்தையும் ஏற்படுத்தினார். நஜ்து எனும் ஊரில்இப்படியொரு சிரைக்கும் திட்டத்தையேற்படுத்தியவர் இவரைத்தவிர வேறுயாருமில்லை. 

இவரும் இவரது ஆதரவாளர்களும் ஏனையோர்களை “முஷ்ரிகீன்” ​இணை வைத்தவர்கள் என்று சொல்லி வந்ததால், இவர்களின் கொள்கையையேற்று இவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பு மொருவனுக்கும் அவனுடைய தலை முடியைச் சிரைத்து விடுமாறு கட்டளையிடுவார்கள். 

“நஜ்து” எனுமிடத்தில் வாழ்ந்தவர்களில் இவரையும், இவருடைய ஆதரவாளர்களையும் தவிர வேறு எவரும் சிரைக்கும் திட்டத்தையேற்படுத்தவில்லையாதலால் மேலே நான் எழுதிக்காட்டிய நபீ மொழிகளில் சொல்லப்பட்ட வழிகேடர் இவர்தான் என்பது திட்டமாகிவிட்டது. 

(தொடரும்...)
==``==``==``==``==``==``==``==``==``==``==

தொடர்- 01 ...

இங்கு நான் குறிப்பிடும் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரைத்தான் “ஸுன்னத்வல் ஜமாஅத்” உலமாக்கள் வஹ்ஹாபிஸத்தின் தந்தை என்று சொல்கிறார்கள். 

இவரின் கொள்கை வழியிற் செல்பவர்களே வஹ்ஹாபிகள் என்று ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாக்களால் அழைக்கப்படுகிறார்கள். இவரின் கொள்கைக்கு “அல்வஹ்ஹாபிய்யஹ்” என்று சொல்வார்கள். 

உலக முஸ்லிம் நாடுகளில் இவரின் கொள்கையை அரசாங்க ரீதியில் செயல்படுத்தும் நாடு ஸஊதி ஒன்று மட்டுமேயாகும். இவதற்குக் காரணம் இவர் இந்நாட்டவராயிருப்பதாகும். 

இந்நாட்டு மார்க்க அறிஞர்கள் இவரின் கூற்றையும், இப்னுதைமிய்யாஹ்வின் கூற்றையுமே ஏற்றுக்கொள்வார்கள். இவ்விருவரின் கருத்துக்கும் மாறாக எந்த இமாம் கருத்துச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 

இவ்விருவர் மட்டுமே இஸ்லாத்தை ஐயரிந்திரிபற அறிந்தவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 

இந்நாட்டு மன்னர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளையோகுறை கூற முடியாது. ஏனெனில் அவர்கள் மார்க்க அறிஞர்களல்லர். அவர்கள் அறிஞர்களின் சொற்படி செயல்படுவர்களும், அதைச் செயல்படுத்துபவர்களுமேயாவர். 

அறிஞர்கள்தான் குழப்பவாதிகள். இந்நாட்டு அறிஞர்கள் அனைவரையும் குறை கூறவும் முடியாது. 

ஏனெனில் வஹ்ஹாபிஸத்தை ஏற்றுக் கொள்ளாத ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வழியில் வாழ்கின்ற அறிஞர்கள் இந்நாட்டில் இலைமறை காய் போல் இருக்கிறார்கள். உண்மையைப் பகிரங்கமாகக் கூறினால் கழுத்துப் பறக்குமெனப் பயந்து மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு போல் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

மதீனஹ்விலுள்ள அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யஹ் பல்கலைக்கழகம் வஹ்ஹாபிஸத்தின் தளமாக இருந்தாலும் அங்குள்ள போதனாசிரியர் அனைவரும் வஹ்ஹாபிகள் என்று சொல்ல முடியாது. கொள்கையை மனதோடு வைத்துக் கொண்டு உயர் சம்பளத்துக்காக வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள். 

ஒரு நாளிரவு இஷாத் தொழுகையின் பின் நபீ (ஸல்) அவர்களின் புனித “றவ்ழா”வின் பக்கமாக நின்றிருந்தேன். 

ஓர் அறபீ “றவ்ழா” வை முத்தமிட்டார். அதை முன்னோக்கி “துஆ” பிராத்தனையும் செய்தார். இந்நேரம் அவர் கள்வன் போல் நடந்து கெண்டார். அவரை நெருங்கிய போது அவர் மதீனா பல்கலைக்கழகத்தில் “தப்ஸீர்” திருக்குர்ஆன் விளக்கப்பாடம் எடுக்கும் மிஸ்ர் நாட்டைச் சேர்ந்த ஒரு கலாநிதி என்று அறிந்து கொண்டேன் எனது வகுப்புக்கும் குறித்த பாடம் எடுத்தவரும் அவர்தான். 

மறுநாள் வகுப்புக்குச் சென்று அவரிடம், நீங்கள் நேற்றிரவு நபீ (ஸல்) அவர்களின் “றவ்ழா” வை முத்தமிட்டீர்கள்: அதைமுன்னோக்கிப் பிராத்தனை செய்தீர்கள். 

இவ்விரு செயல்களும் “ஷிர்க்” இணை வைத்தலாகாதா? என்று கேட்டேன். அதற்கவர், நான் அவ்வாறு செய்யவில்லை, அவை “ஷிர்க்” ஆன காரியம்:நீங்கள் என்னைப் போல் வேறொருவரைப் கண்டிருக்கலாம் என்றார். இவரின் இக்கூற்று எனது கண்ணில் எனக்கு ஐயத்தை உண்டு பண்ணியது. ஒன்றும் பேசாமல் திரும்பி விட்டேன். 

இன்னொரு நாள் இஷாத் தொழுகையின் பின் இவர் மதீனஹ் பள்ளிவாயலில் நின்று கொண்டிருந்தார். எனக்கு இவரைத் தொடர வேண்டும் போல் இருந்தது இவருக்கு தெரியாமல் தொடர்ந்தேன். யாருக்கும் தெரியாமல் ஏதோ ஒன்றைச் செய்யப் போபவர் போல் தென்பட்டார். 

இறுதியில்நபீ(ஸல்) அவர்களின்“றவ்ழா”வை அணுகி அதை முத்தமிட்டர்கள். கையேந்தி ஏதோ கேட்பது போல் நின்றார். அவர் திரும்பி வரும் வழியில் அவரைக் காத்து நின்றேன். கண்டதும் சலாம் சொன்னேன். வியந்து வியர்த்து விட்டார். பழைய கதை நினைவுக்கு வந்தது போலும் நாணினார். 

இப்போது என்ன சொல்கிறீர்கள்? “றவ்ழா” வை முத்த முடுவதும், அதை முன்னோக்கிப் பிராத்திப்பதும் சரியா? பிழையா? என்று கேட்டேன். 

என் கரம் பற்றிய அவர் “றவ்ழஹ்” வை நோக்கி அழைத்துச் சென்றார். அதன் பக்கம் தனது விரலை சுட்டி இந்த நபி சாட்சியாக இருக்கட்டும். நான் சொல்வதை நீங்கள் இங்கு யாரிடமும் சொல்லக்கூடாது. சரியா?என்றார்.சரி என்றேன். சொல்லத்தொடங்கினார். 

நபி (ஸல்) அவர்களின் “றவ்ழஹ்” வை மட்டுமன்றி அவ்லியாக்கள் நல்லடியார்கள் கப்றுகளையும் முத்தமிடலாம். “கிப்லஹ்” வை முன்னோக்கி பிராத்தனை செய்வதை விட “றவ்ழஹ்” வை அல்லது கப்றை முன்னோக்கி பிராத்தனை செய்வதே சிறந்தது. என்று சொன்னதுடன் வஹ்ஹாபிஸம் என்பது ஒரு வழிகேடேதான் என்று கூறி முடித்தார். 

ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையுள்ள நீங்கள் வஹ்ஹாபிஸக் கோட்டைக்குள் ஏன் வந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர், நான் “மிஸ்ர்” நாட்டைச் சேர்தவன்: அல்அஸ்ஹர் பல்கலைக்கழக பட்டதாரி கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளேன். நான் ஓர் ஏழை எனது நாட்டில் எனது படிப்புக்கேற்ற சம்பளம் பெற முடியவில்லை இங்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது இதனால் தான் நெருப்பின் மேல் கால் வைத்தவன் போல் இங்கு இருக்கிறேன் என்று சொன்னார். அவர் இது வஹ்ஹாபிஸக் கோட்டை என்பதை நீங்கள் அறிந்திருந்தும் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டார். நான் படிக்க வரவில்லை. மதீனாஹ்வில் ஒரு வருடம் தங்கியிருந்து நபி (ஸல்) அவர்களைத் தினமும் தரிசித்து அவர்களின் அன்பைப் பெறுவதற்காகவே இங்கு வந்தேன். படிக்கும் போர்வையில் வந்தால் மட்டும்தான் ஒரு வருடமாவது இங்கு தங்க முடியும். அரசின் அனுமதியும் கிடைக்கும் என்றேன். இன்னுமொரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். 

ஒரு நாளிரவு சுமார் 9 மணியிருக்கும். அழகிய தோற்றமும், அடர்ந்த தாடியுமுள்ள,பெரிய தலைப்பாகை அணிந்த, ஒரு தரீகாவின் ஷெய்கு என்று எண்ணத்தக்க ஒருவர் நபி (ஸல்) அவர்களின் றவ்ழாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சுற்றின் போதும் அதை முத்தமிட்டுக்கொண்டிருந்தார். அவரை அணுகி ஸலாமுரைத்து நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்? நீங்கள் யார்? “றவ்ழஹ்” வை முத்தமிட்டீர்களே இது சரியா? என்று கேட்டேன். அதற்கவர் நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். நான் இலங்கை நாட்டவன். மதீனஹ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். அதற்கவர் நான் உங்களுடன் இப்போது பேசுவதற்கு விரும்பவில்லை. நான் இன்னஹோட்டலில் தங்கியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம் என்று கூறி ஹோட்டலின் பெயரையும், அறையின் இலக்கத்தையும் தந்தார். குறித்த நேரம் அங்கு சென்று வரவேற்பு மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். சற்று நேரந்தின் பின் மாடியிலிருந்து வந்தார். அவர் என்னிடம், நான் உங்களோடுபேசுவதாயின் நீங்கள் உண்மை பேச வேண்டும். நீங்கள் ஸஊதியின் உளவாளியா? என்று கேட்டார். இல்லை. நான் இலங்கை நாட்டவன். நபீ (ஸல்) அவர்கள் மீது எனக்குள்ள அன்பினால் படிக்கும் போர்வையில் இங்கு ஒரு வருடமாவது தங்கியிருக்க வேண்டுமென்று வந்தேன் என்றேன். அதற்கவர் நான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவன்; நக்‌ஷபந்திய்யஹ் தரீக்கஹ்வின் ஷெய்கு ஆக இருக்கிறேன். எனக்கு எனது நாட்டிலும், இந்த நாட்டிலும் பல “முரீத்” சிஷ்யர்கள் இருக்கிறார்கள். நானும், எனதுஉடன் பிறந்த சகோதரனும் நேற்று இங்கு வந்தோம். இரண்டு இரவுகள் மட்டும் இங்கு தங்கியிருந்து நாட்டுக்குப் போய் விடுவோம். இன்றிரவுதான் அன்னை ஆமினஹ்வின் கர்ப்பத்தில் நபீ (ஸல்) அவர்கள் கருவான இரவு. இன்றிரவு மிக விஷேடமான இரவாகும் என்று கூறினார். 

நபீ (ஸல்) அவர்களின் “றவ்ழஹ்”வை முத்தமிடுவது பற்றியும், நபிமார், வலீமார்களின் கப்றுகளை முத்மிடுவது பற்றியும் நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர் இமாம் அபூஸயீத் முஹம்மது அல்பூஸீரீ (றஹ்) அவர்களின் “புர்தஹ்”காப்பியத்தில் பின்வரும் பாடலைப் பாடிக்காட்டி விளக்கம் சொன்னார். 
لاطيب يعدل تربا ضم أعظه 
طوبي لمنتشق منه وملتثم 

நபீ (ஸல்) அவர்களின் புனித உடலைத் தாங்கி நிற்கும் மண்ணுக்கு நிகரான மணம் எதுவுமில்லை. அந்த மண்னை நுகர்ந்து முத்தமிட்டவனுக்கே சுபசோபனம் அல்லது சுவர்க்கம். 

அவர் தொடர்ந்து பேசுகையில் ஒருவன் தனது மனைவி மக்களை, தனக்கு விருப்பமானவர்களை முத்தமிடுவது ஆகுமான அல்லது “ஸுன்னத்” ஆன விடயமாயிருப்பது போல் கப்றை முத்தமிடுவது ஆகுமானதேயாகும்; இந்த அரசாங்கம் இப்னுதைமிய்யஹ், இப்னு அப்தில் வஹ்ஹாப் இருவரின் கருத்தை மட்டுமே இந்நாட்டில் அமுல்செய்து வருகிறது; இதற்கு காரணம் இங்குள்ள முப்திகளும், மார்க்க அறிஞர்களுமேயாவர்; மன்னர்களோ மக்களோ அல்லர்; வழிகாட்டிகள் காட்டும் வழியில்தான் அவர்கள் செல்வார்களோயன்றி அவ்வழியை வழிகேடென்று ஒருபோதும் கருதமாட்டார்கள்; ஆனால் ஒரு காலம் வரும். அந்நேரம் வஹ்ஹாபிஸம் அழிந்து சரியான ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கை செயலில் இருக்கும்என்று கூறி முடித்தார். 

முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் 

இவர் ஹிஜ்ரீ (1111) ஆயிரத்து நூற்றுப் பதினொன்றில்பிறந்து ஹிஜ்ரீ (1206) ஆயிரத்து இருநூற்று ஆறில் இருந்தார். (95) தொண்ணூற்றைந்து வருடங்கள் வாழ்ந்துள்ளார். 

ஸஊதி அரேபியாவிலுள்ள“நஜ்து”என்ற ஊரில் பிறந்த இவர் “பனூதமீம்”என்ற குடும்பத்தைச் சேர்ந்தவராவார். 

இவரின் பெயர் முஹம்மத் தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் இவருக்குஸுலைமான் என்ற பெயரில் இன்னும் ஒரு மகன் இருந்தார். 

தந்தை அப்துல் வஹ்ஹாப் மாபெரும் மார்க்க மேதை. தலை சிறந்த ஆலிம். தனது மக்கள் இருவரும் தன்னைப் போல் வர வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் இருவரையும் மார்க்கக் கல்வி கற்பதற்காக கல்விக்கூட மொன்றில் சேர்த்து வைத்தார்.இருவரும் ஒதிப்படித்து ஆலிம்களாயினர். 

ஸுலைமான் என்பவர் தந்தை போல் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கை வழியிற் கால் சறுகாமல் செவ்வனே நடந்தார். ஆனால் அவரின் சகோதரன் முஹம்மத் கால் சறுகி வழிகேட்டில் விழுந்து விட்டார். 

எனவே தந்தை அப்துல் வஹ்ஹாப் அவர்களையும், நல் வழிபெற்ற மகன் ஸுலைமான் அவர்களையும் இங்கு விமர்சிக்காமல் வழிதவறிய முஹம்மத் என்பவர் பற்றியும், இவரின் கொள்கை பற்றியும் எழுதுகிறேன். 

இவர்தான் வஹ்ஹாபிஸத்தை ஈன்ரெடுத்தவர். இவர் முன்வைத்த கொள்கைதான் வஹ்ஹாபிஸம் என்றழைக்கப்படுகின்றது. 

இவரால் ஏற்படுத்தப்பட்ட புதிய கொள்கை இவரின் பெயரோடு தொடர்பு படுத்தி “முஹம்மதிஸம்” என்று வழக்கப்படாமல் இவரின் தந்தையின் பெயரோடு தொடர்பு படுத்தி “வஹஹாபிஸம்”என்று வழங்கப்படலாயிற்று. 

இதற்கு காரணம் முஹம்மதிஸம் என்று சொன்னால் அது நபீ (ஸல்) அவர்களுடன் சேர்க்கப்பட்டதா? அல்லது நஜ்து நாட்டு முஹம்மதுடன் சேர்க்கப்பட்டதா? என்ற சந்தேகத்தை தவிர்ப்தேயாகும். 

இவர் ஆரம்பத்தில் திருமதீனஹ் நகரில் கல்வி கற்றார். அக்காலை மக்கஹ்வுக்கும், மதீனஹ்வுக்குமிடையே போவதும் வருவதுமாக இருந்தார்.மதீனஹ்வில் அக்காலை வாழ்ந்த அநேக மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றார். 

அவர்களில் குர்தீ இமாம் என்றழைக்கப்படும் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு ஸுலைமான் அல்குர்தி (றஹ்) அவரகளும், அஷ்ஷெய்கு முஹம்மதுஹயாத் அஸ்ஸிந்தீ அல்ஹனபீ (றஹ்) அவர்களும் பிரசித்தி பெற்றவர்களாவர். 

இவரின் மேற்கண்ட இரு ஆசிரியர்களும், இவர்களல்லாத ஏனைய ஆசிரியர்களும் இவர் சிறுவனாயிருந்த பொழுதே இவரின் முகக்குறிகொண்டும், இவரிடம் மனமுரண்டும் வழிகேடும் இருந்தது கண்டும் இவர் பிற்காலத்தில் வழிதவறி விடுவார் என்றும், இவரைக் கொண்டு பலர் வழகேட்டில் விழுவர் என்றும் கூறியுள்ளார்கள். 

ஆசிரியர்கள் முன்னறிவிப்பு செய்தவாறே பிற்காலத்தில் இவரின் நிலமை ஆகிவிட்டது. இவரில் அவர்கள் கண்ட முகக்குறு சரியாகி விட்டது. 

மார்க்கப்பற்றுள்ள, தலைசிறந்த மார்க்க அறிஞரான இவரின் தந்தையே தனது மகன் பிற்காலத்தில் வழிதவறி விடுவான் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தார். மேலும் தனது மகன் முஹம்மதுடன் சேர வேண்டாமென்று மனிதர்களை எச்சரிக்கை செய்து கொண்டுமிருந்தார். 

அறிஞர் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் மற்ற மகன் ஸுலைமான் என்பவர் தனது தந்தை போல் மார்க்கப்பறுள்ள“ஸுன்னத்வல்ஜமாஅத்”கொள்கை வழி வாழும் தலை சிறந்தஅறிஞராகப் பிரகாசித்தார். 

இவர்கூட தனது சகோதரன் முஹம்மதைப் பலமுறை எச்சரித்து வழிகெட்ட கொள்கையை விட்டுவிடுமாறு கேட்டிருந்தார். எனினும், அவர் தந்தைக்கோ,சகோதரனுக்கோ, கட்டுப்படவில்லை.இவரிடம் பிடிவாதம் இருந்தது.இவரின் கொள்கை வழியில் வருபவர்களிடம் இதைக் காணலாம். 

இவர் தனது மனோயிச்சையின் படியும், தன்மனம் போன போக்கிலும் சென்றார். 

இதனால் இவரின் வழிகேட்டிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அறிஞர் ஸுலைமான் அவர்கள் தனது சகோதரன் முஹம்மதுக்கு மறுப்பாக அறபு மொழியில் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். 

மதீனஹ்வில் வாழ்ந்து கொண்டிருந்த முஹம்மதுக்கு தனது வழிகெட்ட கொள்கையை பரப்ப வாய்ப்பு இல்லாமற் போனது. இதனால் மதீனஹ்வை விட்டும் வெளியேறி வேறு ஊர்களுக்குப் பிரயாணம் செய்தார். 

ஹிஜ்ரி 1143ல் தான்இவரின் வழிகெட்ட கொள்கை ஆரம்பமானது. ஆயினும் ஐம்பது ஆண்டுகள் வரை இவரின் கொள்கை பிரசித்தி பெறவில்லை. 

சொந்த ஊரான நஜ்து என்ற இடத்திலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இவரின் கொள்கை ஆமை வேகத்தில் பரவத் தொடங்கியது. 

அப்பொழுது சஊதி அரேபியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த முஹம்மத் இப்னு ஸுஊத் என்பவர் இவரைக் கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த விரும்பி இவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து இவரின் வழிகேடு பரவுவதற்கு பக்கபலமாகவும் இருந்தார். 

முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரைப் பின் பற்றுமாறு தனது ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு இவர் கட்டளையிட்டார். இதனால் சஊதி அரேபியா எங்கும் இவரின் வழிகெட்ட கொள்கை பரவவும், மக்கள் வழிகேட்டில் விழவும் வழியேற்பட்டது. 

நாட்செல்லச் செல்ல இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெருகியது. அறபு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவரைப்பின்பற்றத் தொடங்கினர். இதனால் இவருக்கு நல்ல பலம் ஏற்பட்டது. 

எனினும் நாட்டுப் புறத்தில் வாழ்ந்த மக்கள் இவரைப் பின்பற்றப் பயந்தனர். இவர் ஒரு புதிய கொள்கையைப் பிரகடனம் செய்கிறார். எனக் கருதிய அவர்கள் இவரைப் பின் பற்றத் தயங்கினர். 

நாட்டுப் புற மக்கள் பின் வாங்குவதை அறிந்த இவர் அவர்களையணுகி “நான் உங்களை தவ்ஹீத் எனும் ஏகத்துவ மார்க்கத்தின் பக்கம் அழைப்பதற்கும், “ஷிர்க்”​எனும் இணைவைத்தலை எச்சரிப்பதற்கும் வந்துள்ளேன்”. என்று அடிக்கடி சொல்வார். 

அவர்களோ கிராமவாசிகள், அவர்களுக்கு குறிப்பாக மார்க்க ஞானம் அறவே புரியாது. இதனால் இவர் அவர்களிடம் சொல்வதையெல்லாம் நம்பக்கூடியவர்களாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும்இருந்தார்கள். 

இவர் கிராமவாசிகளிடம் சென்று நான் உங்களை “தவ்ஹீத்” எனும் ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கிறேன்.இன்று பூமியில் வாழும் அனைவரும் “முஷ்ரிக்”இணைவைத்தவர்களாவே ​உள்ளனர். ஒரு “முஷ்ரிக்” 

இ​ணைத்தவனைக் கொன்றவனுக்கு சொர்க்கம் கிடைக்குமாதலால் எனது கொள்கைக்கு மாறானவர்களைக் கொன்றவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும்” என்று பிரச்சாரம் செய்து வந்தார். இவர் அந்த மக்களிடம் ஒரு நபீ போன்று மதிக்கப்பட்டு வந்தார்.இவர் சொல்வதில் ஒன்றைக்கூட அவர்கள்விடாதவர்களாகவும், இவரின் அனுமதியின்றிஒரு வேலையும் செய்யாதவர்களாகவும் இருந்தார்கள். 

இவரின் வஹ்ஹாபிஸக் கொள்கைக்கு மாறானவர்கள்“முஷ்ரிக்” என்றும், அவர்களைக் கொன்று விடுவது வணக்க மென்றும், அவர்களைக் கொல்பவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்றும் இவர் கூறி மக்களைக் கொலைக்குத் தூண்டியதன் விளைவாக அப்பாவி கிராமவாசிகள்இவரின் கொள்கைக்கு மாறானவர்களை யெல்லாம் கொலை செய்யத் தொடங்கினர். 

அக்கொலைஞர்கள் இவரின் கட்டளைய​ச் சிரமேற் கொண்டு இவருக்கு மாறானவர்களைக் கொலை செய்து அவர்களின் உடைமைகளைச் சூறையாடி அதில் அரசன் முஹம்மத்இப்னு ஸுஊதுக்கு ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதியை தமக்கிடையில் பங்கிட்டுக் கொள்வார்கள். 

அவர்கள் தமது தலைவன் முஹம்மதுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். அவருக்காக தமது உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருந்தார்கள். 

அரசன் முஹம்மத் இப்னு ஸுஊத் வழிகேட்டின் தந்தை முஹம்மதுக்காகவும், அவரின் ஆதரவாளர்களுக்காகவும், எதைச் செய்வதற்கும் தயாராக இருந்தார். 

மன்னனின் மரணத்தின் பின்னர் அவரின் பிள்ளைகள் ஆட்ச்சிக்கு வந்து தந்தை போலவே வழிகேட்டுக்கும், வழிகேடன் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கும் ஆதரவு வழங்கினர். அவரின் வஹ்ஹாபிஸம் அறபு மண்ணில் விரிவடைய தந்தையை விட ஒருபடி இல்லை பலபடி மேலே நின்று பாடுபட்டார்கள். 

இவ்வாறே வழிகேடன் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் மரணித்த பிறகு அவரின் பிள்ளைகள் தந்தை போன்று வழிகேட்டைப் பரப்பும் பணியைச் செய்தனர். 

இப்னு அப்தில் வஹ்ஹாபின் ஆதரவாளர்கள் தங்களின் கொள்கைக்கு மாறானவர்களிடன் யுத்தம் செய்து பலநூறு உண்மையான “ஸுன்னத்வல் ஜமாஅத்” உலமாக்கள் – அறிஞர்களையும் கொன்றொழித்தார்கள். 

இப்னு அப்தில் வஹ்ஹாப் தனது வழிகெட்ட கொள்கையைப் பரப்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகளாக உலக முஸ்லிம்கள் யாவரும் “முஷ்ரிக்” இனை வைத்தவர்களாக இருந்து வருகிறார்கள் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.அவர் தனது எந்த ஒரு பிரசங்கத்திலும் இந்தக் கருத்தைச் சொல்ல்த் தவறவில்லை. 

“வஸீலஹ்” உதவி தேடுவது கொண்டும் “கப்று” மண்ணறைகளை “சியாறத்” தரிசிப்பது கொண்டும் உலக முஸ்லிம்கள் அனைவரும் இணைவைத்தவர்களாகி விட்டார்கள். என்றும், அவர்களை இஸ்லாதின்பால்அழைப்பது கடமை என்றும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தால் அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்றும் பேசி வந்தார். 

சுய விருப்பத்தின் பேரில் அல்லது வற்புறுத்தலின் பேரில் எவனாவது அவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால்முதலில் அவனுக்கு“கலிமஹ்” சொல்லிக் கொடுத்த பிறகுதான் அவனை ஏற்றுக்கொள்வார்கள். 

அவனுக்கு “கலிமஹ்” சொல்லிக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், தான் இதுவரை காபிராக இருந்ததாகவும், தனது பெற்றோர்கள் காபிர்களாக இருந்து மரணித்த விட்டதாகவும்அவனைச் சொல்லுமாறு வலியுறுத்துவார்கள். 

மேலும் முன்னோர்களில் பிரசித்தி பெற்ற இமாம்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள் ஆகியோரில் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைக் குறித்து இவர்கள் எல்லோரும் காபிர்கள் என்று ஏற்றுக்கொள்ளுமாறும் அவனை வற்புறுத்துவார்கள். 

இன்னும் இப்னு அப்தில் வஹ்ஹாபின் கொள்கைக்கு மாறாக நூல்கள் எழுதிய அறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் காபிர்கள் என்று நம்புமாறும் வற்புறுத்துவார்கள். 

ஒருவன் இவ்வாறெல்லாம் செய்தால் மட்டுமே அவனை அவர்களுடன் சேர்த்துக் கொள்வார்கள். இல்லையானால் அவனைக் கொன்று குழியில் தள்ளி விடுவார்கள். இவர்களுடன் சேர்ந்து கொள்ள விரும்பும் ஒருவன் ஏற்கனவே ஹஜ் வணக்கம் செய்தவனாய் இருந்தால் காபிராக இருந்த காலத்தில் செய்த ஹஜ் வணக்கம் நிறைவேறாது என்று அவனிடம் கூறி மீண்டும் ஹஜ் செய்ய வேண்டுமென்று அவனைப் பணிப்பார்கள். 

இந்த வழிகேடர்கள் வெளியூரில் இருந்து வந்த தமது கொள்கையைப் பின்பற்றினவர்களை “முஹாஜிரீன்”என்றும் உள்ளூரில் இருந்து கொண்டு பின்பற்றினவர்களை “அன்ஸாரீன்” என்றும் அழைத்து வந்தார்கள். 

இப்னு அப்தில் வஹ்ஹாப் “வஸீலஹ்”தேடுதல், கப்றுகளை சியாறத் செய்தல் போன்ற விடயங்களை மறுத்து வந்ததுடன், தான் ஒரு நபி என்று கூடச் சொல்வதற்கும் நினைத்திருந்தார். ஆயினுமது அவரால் முடியாமற்போயிற்று. 

இவரின் ஆரம்ப காலத்திலிருந்து நபித்துவத்தை வாதிட்ட முஸைலமதுல்கத்தாப், சுஜாஹ் அல் அஸ்வதுல் அன்ஸீ, துலைஹதுல் அஸதீ போன்றோரின் வரலாறுகளைப் படிப்பதில் இவருக்கும் கூடுதலான விருப்பம் இருந்துவந்தது. இதனால் நபித்துவத்தை வாதிடும் எண்ணம் இவருக்கு மறைமுகமாக இருந்து வந்தது. சரியான வாய்ப்புகிடைக்காதலால் வெளிப்படுத்தாமல் இருந்து விட்டார். 

ஆயினும் இவரின் சொல், செயல் யாவும் தான் ஒரு நபியென்று இவர் தன்னை நம்புயிருந்தார் என்று காட்டியது. 

இவர்தனது ஆதரவாளர்களிடம், நான் உங்களுக்கு புதியதொரு “தீன்” மார்க்கத்தை கொண்டு வந்துள்ளேன் என்று கூறுவார்.இவருடைய கூற்றின் உண்மை இவரின் சொற் செயல்களில் தென்பட்டது. 

இதனால்தான் நான்கு “மத்ஹப்” பற்றியும், மார்க்க அறிஞர்களின் சொற்கள் பற்றியும் இவர் குறை கூறிக்கொண்டிருந்தார். 

“தீனுல் இஸ்லாம்”என்பது ஒரே ஒரு மார்க்கம்தான். நாலாகப் பிரிந்திருப்பது வழிகேடென்று இவர் அடிக்கடி சொல்வார். 

“ஸுன்னத்வல் ஜமாஅத்”கொள்கைவாதிகள் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் நான்கென்று கூறுகிறார்கள். ஆனால் இவர் இஸ்லாத்தின் மூலாதாரம் குர் ஆன் மட்டும்தான் என்று ஒரு சந்தர்ப்பத்திலும், குர்ஆனும் ஹதீதும் என்று இன்னொரு சந்தர்ப்பத்திலும் கூறுகிறார். 

இஜ்மாஉ, கியாஸ் இவ்விரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இமாம்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிவரும் என்று பயந்து தனது சுயநலம் கருதி இவ்விரண்டையும் முற்றாக மறுத்து விட்டார். 

இவர் திருக்குர்ஆனையும், ஹதீதையும் ஏற்றுக்கொண்டாலும் கூட இவ்விரண்டிற்கும் தனது விருப்பத்தின் படியும், தனது மனோ இச்சைக்கேற்றவாறும் விளக்கம் கூறி வந்தார். 

திருமறைக்கும், திரு நபியின் நிறைமொழிக்கும் ஸஹாபாக்கள் தாபியீன்கள், இமாம்கள், அவ்லியாக்கள் போன்றவர்கள் கூறிய விளக்கத்தையும் இவர் மறுத்து வந்தார். 

இவர் வழிகேட்டிலிருந்தாலும்கூட புத்திமானாயிருந்ததால் தனது வழிகேட்டை மக்களிடம் காட்டிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக வாழ்ந்து வந்தார். 

இவர் நான்கு “மத்ஹப்” களை மறுத்தாலும்கூட மக்களின் பார்வையில் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (றஹ்) அவர்களின் ஹம்பலீ மத்ஹபைபின்பற்றினவர் போல் நடித்து வந்தார். 

இவர் இவ்வாறு நடித்துக் கொண்டிருந்ததை அறிந்த அக்கால உலமாக்களில் ஹம்பலீ மத்ஹபைச் சேர்ந்த உலமாக்கள் இவரால் தங்களின் மத்ஹபுக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதையுணர்ந்து இவருக்கு மறுப்பு எழுத தொடங்கினர்கள். 

இவருக்கு மறுப்பு எழுதிய அறிஞர்களில் அநேகர் ஹம்பலீ மத்ஹபைச் சேர்ந்தவர்களாயிருந்தது இதனால்தான். 

இவர் செய்த மிகப் பெரிய வழிகேடு என்னவெனில் “முஷ்ரிகீன்” இணைவைத்தவர்கள் தொடர்பாக இறக்கப்பட்ட திருமறை வசனங்களை “முஃமினீன்” விசு வாசிகள் தொடர்பாக இறக்கப்பட்டவை என்று பிரச்சாரம் செய்ததேயாகும். 

இவர் செய்தது போல் இவருக்கு முன் வாழ்ந்த வழிகேடர்களும் செய்துள்ளார்கள். 

“கவாரிஜ்” என்ற வழிகெட்ட கூட்டத்தார் பற்றிக் கூறப்படுகையில் அவர்கள் “முஷ்ரிகீன்”இணைவைத்தவர்கள் தொடர்பாக இறங்கிய திருக்குர்ஆன் வசனங்களை “முஃமினீன்” விசு வாசிகள் தொடர்பாக இறங்கியவை என்று சொல்கிறார்கள். 
ஆதாரம் – புஹாரீ 
அறிவிப்பு – அப்துல்லாஹ் இப்னுஉமர் (றழி) 

நான் எனது உம்மத்துக்கள் மீது ஒருவனை பயப்படுகிறேன். அவன் திருக்குர்ஆனுக்கு மனம் போன போக்கில் வலிந்துரை கூறுவானென்று நப (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
ஆதாரம் – துர்முதீ,இப்னு மாஜஹ் 

மேலே எழுதிய இரண்டு நபிமொழிகளும், இன்னும் இது தொடர்பாக வந்துள்ள ஏனைய நபிமொழிகளும் இப்னு அப்தில் வஹ்ஹாபுக்கும் இவரின் வழியில் நடப்பவர்களுக்குமே பொருத்தமானவையாகும். 

இவர் தான் விரும்பினவாறு திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொன்னதுடன் மட்டும் நின்றுவிட வில்லை.இவர் இதைவிட பெரிய வேலைகளும் செய்துள்ளார். 

அது என்னவெனில் புத்தக அறிவோ, பொது அறிவோ இல்லாத தனது வேலையாட்களுக்கும், தன்னுடன் இருந்தவர்களுக்கும் தாம் விரும்பின மாதிரி யெல்லாம் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லலாம் என்றும், தாம் விரும்பின மாதிரியெல்லாம் சட்டம் கூறலாம் என்றும், இமாம்கள் எனப்படுவோர் எழுதிய நூல்களில் சரியான விடயமும்பழையான விடயமும் இருப்பதால் அவற்றைப் பார்க்க வேண்டாமென்றும் கட்டளையிட்டு வந்தார். 

இவர் தனது கொள்கைக்கு மாறாக இருந்த உலமாக்கள், நல்லடியார்கள், பொது மக்கள் அனைவரையும் கொலை செய்தார். 

பணவசதி உள்ளவர்களிடமிருந்து “ஸகாத்” நிதியைப் பெற்று இஸ்லாம் கூறிய வழியின்றித் தாம் விரும்பியமாதிரிப் பங்கிட்டு வந்தார். 

இவரைப் பின்பற்றுவோரும் இவர் போலவேநான்கு மத்ஹப்களில் எந்தவொரு மத்ஹபையும் பின்பற்றாதவர்களாயும், திருக்குர்ஆனை ஆராய்ந்து புதுப்புது சட்டங்களைக் கண்டு பிடிப்பவர்களாயும் இருந்தார்கள். 

(தொடரும்.....)