Jul 10, 2013

நோன்பு

மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA

ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் சுத்தமான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம்ஆண், பெண்மீதும் கட்டாயக் கடமையாகும். 

நோன்பின் பர்ழுகள்: 

1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்கவேண்டும். 

நிய்யத்: 

'நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி பர்ழிரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா - இந்த வருஷத்து ரமலான்மாதத்தின் பர்ளானநோன்பை அதாவாக நாளைபிடிக்க நிய்யத்து செய்கிறேன்' என்று நிய்யத்செய்து கொள்ளவேண்டும். 
2. நோன்புடைய ஞாபகம் இருப்பதுடனே எந்த பொருளும் உள்ளேசேராமல் பகல் முழுவதும் தடுத்துக் கொள்ளவேண்டும். 

நோன்பின் சுன்னத்துகள்: 

1. ஸஹர் செய்வது

2. ஸஹரை பிற்படுத்துவது.

3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்புதிறப்பதின் மீது விரைந்துகொள்வது.

4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்றுதிராட்சைபழம் அல்லது மூன்று மிடர்தண்ணீரைக் கொண்டு நோன்புதிறப்பது. 

5. நோன்பு திறந்தவுடன் 'அல்லாஹும்மலகஸும்து வபிகஆமன்து வஅலைக்கதவக்கல்து வஅலாரிஸ்கிகஅப்தர்து, பதக்ப்பல்மின்னீ'- இறைவா! உனக்காக நோன்புவைத்தேன். உன்னையே நம்பிக்கைவைத்தேன். உன்னுடைய ரிஸ்கின் மீதே நோன்புதிறந்தேன். எனது நோன்பை நீஏற்றுக்கொள்வாயாக! என்றுதுஆ ஓதுவது.

6. மற்றவர்ளை அழைத்து நோன்பு திறக்கச்செய்வது.

7. ஹைலு,நிபாஸ், ஜனாபத் போன்றவற்றை விட்டும் சுத்தமாவதற்காக பஜ்ருக்கு முன்னால் குளிப்பது.

8. பகல் நேரத்தில் ஆகாரத்தின்மீது ஆசை கொள்வதை விட்டும், வாசனைப் பொருட்களைநுகர்வதைவிட்டும் தன்னை தடுத்துக்கொள்வது.

9. ரமலான் பிந்தியபத்தில் அதிகமாக ஸதகா கொடுப்பதும், தன் குடும்பத்தின்மீது விசாலமாக செலவு செய்வதும், சொந்தக்காரர்கள் அக்கம்பக்கத்தவர்கள்மீது உபகாரம் செய்வதும் சுன்னத்தாகும்.

10. குர்ஆனை அதிகமாக ஓதுவது.

11. அதிகமாக இபாதத் (வணக்கங்கள்) செய்வது.

12. ரமழான் மாதம் பிந்தியபத்தில் இஃதிகாப் இருப்பது கண்டிப்பான
சுன்னத்தாகும்.

நோன்பின் மக்ரூஹ்கள்:

1. ஹைலு, ஜனாபத் குளிப்பை பஜ்ரு உதயமாகும் வரை பிற்படுத்துவது.

2. ஆகாரப் பொருள்களை ருசிபார்ப்பது.

3. பகல் முழுவதும் வாய் மூடி இருப்பது.

4. பகல் முழுவதும் வீண்பேச்சுக்களில் ஈடுபடுவது.

.5.வுழூ செய்யும் போது வாய், மூக்குக்கு தண்ணீரைஅளவு கடந்து செலுத்துவது.

6. லுஹருக்குப்பின்னால்பல்துலக்குவது.


நோன்பை முறிக்கும் காரியங்கள்: 

1. தான்நோன்புஎன்றுதெரிந்துகொண்டுஉடல்உறவுகொள்வது.

2. வேண்டுமென்றேவிந்தைவெளிப்படுத்துவது.

3.செயற்கையாகவாந்திஎடுப்பது.

4. சளி போன்றவை வாயின் எல்லைக்கு வந்தபின் விழுங்குவது.

5. நோன்பு என்ற உணர்வுடன் ஏதேனும் ஒருவஸ்துவை திறந்த துவாரங்களினால் உள்ளே செலுத்துவது.(வாயில் ஊறும்உமிழ் நீரைகொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதால் நோன்பு முறியாது)

6. நோன்பு வைத்துக் கொண்டு நீரில் முங்கி குளிப்பதால்வாய், மூக்கு போன்ற துவாரங்களில் தண்ணீர் செல்லுவது.

7. ஹைழு (மாதவிலக்கு), நிபாஸ்(பேறுகால உதிரப்போக்கு), மதமாற்றம், பைத்தியம், பகல்முழுவதும்மயக்கம்போன்றவைகள்ஏற்படுவது.

நோன்பின் பலனை கெடுக்கும் காரியங்கள்:

1. பொய்சொல்வது

2. புறம்பேசுவது.

3. கோள்சொல்வது

4. இட்டுக்கட்டுவது.

5. பொய்சாட்சிசொல்வது.

6. பிறரைஏசுவது.

நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்:

1.சிறுவர்கள்

2.நீங்காத நோயாளிகள்.

3.வயது முதிர்ந்தவர்கள்

4.நீண்ட பிரயாணம் செய்யக்கூடியவர்கள் (130 கி.மீ அல்லது 82மைல்)

5.மாதவிலக்கு அல்லது பேறுகால உதிரப்போக்குள்ள பெண்கள்

மாதவிலக்கு அல்லது பேறுகால உதிரப்போக்குள்ள பெண்கள்,கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்கள், நோன்பு நோற்பதால்நோய் நீங்கத்தாமதமாகும் என பயப்படும் நோயாளிகள் ஆகியோர் நோன்பை விடுவதற்கு தற்காலிகமாக சலுகைபெற்றவர்கள் ஆவர்.பின்பு இவர்கள் கழாச்செய்வது கமையாகும்.

வயது முதிர்ந்தவர்,நீங்காத நோயாளிகள் நோன்பு நோற்பதனால் குழந்தைக்கு இடையூறு ஏற்படமென பயந்த கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய்மார்கள்,ஒரு ரமழானில் கழாவானநோன்பை மறு ரமழான்வரை கழாச்செய்யாதவர்கள் இவர்கள் அனைவரும் வசதியிருந்தால் விடுபடுகிற ஒவ்வொரு நாளுக்கும் 563 கிராம் (ஒருமுத்து) அரிசி தர்மம்செய்வது கடமையாகும்.


ஸகாதுல்பித்ர்

பித்ரா கடமையாவதற்கு நிபந்தனைகள்:

பெருநாளின் பகலிலும் அடுத்துவரும் இரவிலும் தனக்கும், தனது செலவின்கீழ் இருப்பவர்களுக்கும் கொடுக்கவேண்டிய உணவு, உடை, குடியிருக்கும் இடம் போன்றவைகளையும், வேலைக்காரர்களுக்குரிய செலவு, கடன் இவைகளையும் கொடுத்து மீதமிருந்தால் பித்ரா கொடுப்பது கடமையாகும். தாமதாமாகக் கொடுக்கவேண்டிய கடன் பித்ராவை தடைசெய்யாது.

அளவு:

ஊரில் பெரும்பாலும் உணவாகப்பயன்படுத்தப்படும் பொருளிலிருந்து ஒவ்வொருவருக்கும் 4 முத்து வீதம் நமது நாட்டுஅளவுபடி 3 லிட்டர்கள் அல்லது 2 கிலோ 400 கிராம் கொடுப்பது கடமையாகும்.ஷாபிஈமத்ஹபில் உணவுப் பொருட்களைத்தான் கொடுக்கவேண்டும். அதன் விலையை கொடுத்தால் பித்றாநிறைவேறாது. தான்வசிக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கு பித்றாகொடுப்பது கடமை. வேற்றூரிலுள்ள ஏழைகளுக்கும் பித்றா கொடுக்கலாம்.

கொடுக்கும்நேரம்

கடைசி நோன்பின் மஃரிபு முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வரை பித்ரா வழங்குவதற்குரிய நேரமாகும்.பெருநாள் தொழுகைக்குமுன்பு பித்ரா கொடுப்பது சுன்னத்தாகும். தொழுகைக்குபின் கொடுப்பது மக்ரூஹ்ஆகும். எனினும், சொந்தக்காரர்களையும், பக்கத்து வீட்டாரையும் எதிர்பார்த்து சூரியன்மறைவதற்குள்ளாக கொடுப்பது சுன்னத்தாகும்.

பெருநாள் அன்று சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது ஹறாமாகும். பித்றாவை ரமழான் முதல்பிறையிலிருந்தும் கொடுக்கலாம்.