Apr 25, 2016

30வருட ஹாஜாஜீ மாகந்தூரி்க்காக அலுவலகம் திறப்பு

கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக எதிர்வரும் 25.05.2016 தொடக்கம் 29.05.2016ம் திகதிகளில் காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்ற 30 வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைக்களுக்கான ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம் 24.04.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று புனித புகாரீ ஷரீப் மஜ்லிஸ் நிறைவின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் திருக்கரங்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகளும், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியி்ன் மாணவர்களும், ஹாஜாஜீ பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- அல்ஹம்துலில்லாஹ் -