எழுதியவர் மெளலவீ MM. அப்துல் மஜீத் (றப்பானீ)
சிரேஷ்ட விரிவுரையாளர்
றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.
காத்தான்குடி - 05
*********************************************************************************
இறைநேசர்களான வலீமார்களின் வரிசையில் ஜுமாதல் ஊலா மாதம் உலகெங்கிலும் வாழும்
ஸுன்னத் வல் ஜமாஅத் மக்களினால் நினைவு கூரப்படுபவர்கள்தான் ரிபாயிய்யஹ் தரீகஹ்வின்
ஸ்தாபகர் ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ கத்தஸல்லாஹு
ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள்.
இவர்கள் அலமுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சின்னம்), ஷெய்ஹுல் முஸ்லிமீன்
(முஸ்லிம்களின் ஷெய்ஹ்), ஸெய்யிதுல் அக்தாப் (குத்புகளின் தலைவர்), தாஜுல் ஆரிபீன்
(ஞானிகளின் கிரீடம்), உஸ்தாதுல் உலமா (ஆலிம்களின் உஸ்தாத்), இமாமுல் அவ்லியா
(வலீமார்களின் தலைவர்) போன்ற பல பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.
அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸ ஸிர்றுஹு அன்னவர்கள் இறாக்கிலுள்ள
உம்மு அபீதா என்ற கிராமத்திலுள்ள அல்பதாயிஹ் என்ற இடத்தில் ஹிஜ்ரீ 512ம் ஆண்டு
றஜப் மாதம் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் அஸ்ஸெய்யித் அலீ. தாயின்
பெயர் உம்முல் பழ்ல் பாதிமா அந்நஜ்ஜாரிய்யஹ் றழியல்லாஹு அன்ஹுமா.
ரிபாயீ நாயகம் அன்னவர்கள் தந்தை வழியில் அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ
இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும்,
தாய் வழியில் நபீத் தோழர் அஸ்ஸெய்யித் அபூ ஐயூப் அல்அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு
அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றார்கள்.