Apr 27, 2015
ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ்
10:44 PM
மர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்களுக்கான கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்
3:13 PM
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் மாணவரும், மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களின் மகனுமான மர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்கள் எங்களை விட்டும் மறைந்த 5ம் ஆண்டு நிறைவையொட்டி அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ் 25.04.2015 அன்று ஜாமிஆ மண்டபத்தில் நடைபெற்றது.Apr 24, 2015
றஜப் மாத ஸலவாத் மஜ்லிஸ்
1:34 PM
Apr 22, 2015
கப்றுகள் தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.
2:51 PM
-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-
கப்றுகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடையே பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கப்றுகளின் மேல் காணப்படும் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமெனவும் கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்பட வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அடிப்டையில் “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவர் இப்னுதைமிய்யஹ் என்பவர்தான்.
(ஸாதுல் மஆத் – பக்கம் 661).
இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன்,அல்ஹதீஸ், அல் இஜ்மாஉ,அல்கியாஸ் ஆகிய நான்கு மூலாதாரங்களின் அடிப்டையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. இந்த தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு படித்தவர்களும் பாமரர்களும் கப்றுகளை உடைத்தெறியவேண்டும் எனகோஷமிடுகின்றனர்.
அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில்
ومن يعظـّـم شعائِر الله فإنـّـها من تقوى القلوب (حج – 32)
“யார் அல்லாஹ்வின் சின்னங்களைகண்ணியம்செய்கின்றானோ அது இறையச்சத்தில் நின்றுமுள்ளது” என கூறுகின்றான்.(ஹஜ்-32)
Apr 18, 2015
38வது வருட புகாரீ ஷரீப் மஜ்லிஸ் ஆரம்பம்
11:30 AM
Apr 13, 2015
அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
11:28 AM
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்
தொடர் – 05
அல் அல்லாமஹ் அஸ் ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தங்களின் அழ்ழவ்உல் லாமிஃ என்ற நூலில் ஹிஜ்ரீ 763ம் ஆண்டு மக்காவில் பிறந்து ஹிஜ்ரீ 823ம் ஆண்டு மதீனாவில் மரணித்த அல் முர்ஷிதீ என்று பிரசித்தி பெற்ற அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அபூபக்ர் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பற்றிக் கூறும் போது “அவர்கள் சிறந்தவர்களாக, மார்க்கப் பற்றுள்ளவர்களாக, பேணுதல் உள்ளவர்களாக இருந்தார்கள். தனது கால்களினால் நடந்து சென்று 50 வருடங்களுக்கும் அதிகமாக நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை ஸியாரத் செய்திருக்கிறார்கள். அதே போன்று மூன்று தடவைகள் பைதுல் முகத்தஸை ஸியாரத் செய்திருக்கிறார்கள். இவர்கள் அங்கு ஒரு நல்ல மனிதரை சந்தித்தார்கள். அவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஆறு திருமுடிகள் காணப்பட்டன. தனது மரணம் நெருங்கிய போது அவற்றை ஆறு நபர்களுக்கு அவர்கள் சமமாகப் பங்கு வைத்தார்கள். அந்த ஆறு நபர்களில் இவர்களும் ஒருவராகும். என்று கூறுகின்றார்கள்.
ஹிஜ்ரீ 862ல் மரணித்த இவர்களின் புதல்வர் உமர் இப்னு முஹம்மத் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இது பற்றிக் கூறும் போது ஆறு பேர்களுக்கன்றி மூன்று பேர்களுக்கு அவை பங்கிடப்பட்டன என்பதே சரியாகும் என்று கூறுகின்றார்கள்.
அதில் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
பைதுல் முகத்தஸில் அவர்களின் தந்தை சந்தித்த ஷெய்ஹிடமிருந்து பெற்றுக் கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் ஒன்று இவர்களிடம் இருந்தது. அந்த ஷெய்ஹிடத்தில் ஆறுதிருமுடிகள் இருந்தன. தனது மரணம் நெருங்கிய போது அவற்றை மூன்று பேர்களுக்கு சமமாக பங்கிட்டார்கள். அவர்களில் இவர்களும் ஒருவர். அவற்றில் ஒரு முடி தவறி விட்டது. அந்தத் திருமுடி கொண்டு நான் பறகத் பெற்றேன்.
அதன் பின் இவர்களின் மகன் அபூஹாமித் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் இந்தத் திருமுடி காணப்பட்டது. இவர்கள் பற்றி அல் இமாம் அஸ்ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அழ்ழவ்உல் லாமிஃ என்ற தனது கிரந்தத்தில் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகின்றார்கள்.
இன்னும் அவர்கள் பற்றிக் கூறும் போது “அவர்கள் சிறந்தவர்கள், சிறந்த வணக்கசாலி, அதிக வறுமை மிக்கவர்கள் தனது தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்ட திருமுடிகளில் ஒன்று இவர்களிடம் இருந்தது.” என்று கூறுகின்றார்கள்.
அல் அல்லாமஹ் அல் குஸ்துல்லானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இந்தத் திருமுடியைத் தரிசித்து இருக்கிறார்கள்.
தங்களின் அல் மவாஹிபுல் லதுன்னிய்யஹ் என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
சிறப்பு மிக்க மக்காவில் ஹிஜ்ரீ 897ம் ஆண்டு துல்கஃதா மாதம் அஷ்ஷெய்ஹ் அபூஹாமித் அல்முர்ஷிதீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் ஒரு முடியைக் கண்டேன். அது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முடி என்ற செய்தி பரவியிருந்தது. அதை நான் மகாம் இப்றாஹீம் என்ற இடத்தில் தரிசித்தேன்.
மக்காவில் இருந்த இன்னுமொரு முடி
தன்ஸீஹுல் முஸ்தபல் முக்தார் என்ற கிரந்தத்தில் அல் அல்லாமஹ் இப்னுல் அஜமீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அல் அல்லாமஹ் இப்னு ஹஜர் அல் ஹைதமீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கூறியதாக பின்வருமாறு கூறுகின்றார்கள்.
மக்காவில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் கண்ணியமிக்க முடிகளில் ஒரு முடி இருக்கிறது. இது பிரசித்தி பெற்ற ஓர் அம்சமாகும். இந்தத் திருமுடியை மக்கள் தரிசிக்கிறார்கள். அது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி என்பது முன்னோரினதும், பின்னோரினதும் ஏகோபித்த முடிவாகும்.
தூனிசியாவில் இருந்த சில திருமுடிகள்
தூனீசியாவைச் சேர்ந்த நம்பிக்கை மிக்க அறிஞர்களில் ஒருவர் அது பற்றி எங்களுக்கெடுத்துரைத்தார். அவை மூன்று இடங்களில் இருந்தன.
01- கண்ணியமிக்க நபீத் தோழர் ஸெய்யிதுனா உபைத் இப்னு அர்கம் அபூஸம்அதல் பலவா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர்களின் புனித கப்று கைறுவான் என்ற இடத்தில் உள்ளது.
நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஜ்ஜதுல் வதாஇன் போது மினாவில் தங்களின் முடிகளைக் களைந்தார்கள். அந் நேரம் ஸெய்யிதுனா அபூஸம்ஆ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளை எடுத்து தங்களின் தொப்பியினுள் வைத்தார்கள். அதனுடனேயே அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அந்தத் தொப்பியினுள் மூன்று திருமுடிகள் காணப்பட்டதாகவும், அவற்றின் ஒன்றை தனது வலது கண்ணிலும், இன்னுமொன்றை தனது இடது கண்ணிலும், இன்னுமொன்றை தனது நாக்கிலும் வைக்க வேண்டுமென்று அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் கூறப்படுகிறது.
02- ஸ்பெயினையும், தூனீசியாவையும் சேர்ந்த அமைச்சர் அஸ்ஸிராஜ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
தூனீசியாவிலுள்ள ஷெய்ஹ்மார்களின் வீடுகளில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் காணப்படுகின்றன. அவை தற்பொழுது “வலிய்யுல்லாஹ் அல்மர்ஜானீ” அவர்களின் ஸாவியா என்று பிரசித்தி பெற்ற அஸ்ஸாவியதுல் பறானிய்யாவில் காணப்படுகின்றன.
இப்னுத் தப்பாஃ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
அவர்களின் பேரர் அபூ பாரிஸ் அப்துல் அஸீஸ் அவர்கள் அவற்றை எனக்குக் காட்டினார்கள். அவற்றைக் கொண்டு நான் அருள் பெற்றேன்.
03- மேற்கூறிய அமைச்சரவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் அஷ் ஷெய்ஹ் அபூ ஷஃறா றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் கட்டிடங்கள் கட்டுவது அவர்களின் தொழிலாக இருந்தது. ஓரிடத்தில் அவர்கள் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்குள்ள ஓர் களஞ்சியத்தில் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் இருப்பதைக் கண்டார்கள். அதற்குரியவர்களிடம் அதைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். தன்னுடன் அந்தத் திருமுடிகளை அடக்க வேண்டுமென்றும் வஸிய்யத் செய்தார்கள். இதை தூனீசியா மக்கள் நன்கறிந்தவர்கள்.
04- எகிப்திலுள்ள அல் ஹுலாதீ என்பவரிடம் காணப்பட்ட திருமுடி
அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இவர் பற்றி தங்களின் அத்துறறுல் காமினஹ் என்ற கிரந்தத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
இவர்கள் அஸ்ஸெய்யித் அலிய்யுப்னு முஹம்மத் இப்னுல் ஹஸன் அல்ஹுலாதீ அல்ஹனபீ அல்காதூஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களாகும். இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒட்டகை அல்லது குதிரையில் ஏறும் சந்தர்ப்பத்தில் தங்களின் அருள் நிறைந்த கால்களை வைத்து ஏறும் இரும்பினாலான படி (அர்ரிகாப்) போன்றது இருந்தது இதனால் அவர்கள் “அர்ரிகாபீ” என்று அழைக்கப்பட்டார்கள்.
இதே போன்று இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளும் இருப்பதை தான் உறுதி கொள்ளவதாக கூறுகின்றார்கள்.
05- எகிப்திலுள்ள மத்ரசது இப்னிஸ்ஸமன் என்ற இடத்திலுள்ள திருமுடி
அல் அல்லாமா அஸ்ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் அழ்ழவ் உல்லாமிஃ என்ற தங்களின் நூலில் இவர்கள் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்கள். டமஸ்கஸைச் சேர்ந்த ஸம்ஸுத்தீன் முஹம்மத் இப்னு உமர் இப்னு முஹம்மத் இப்னு உமர் அஸ்ஸமன் அல் குறஷீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் இப்னுஸ்ஸமன் என்று பிரசித்தி பெற்றிருந்தார்க்கள். ஹிஜ்ரீ 824 ம் ஆண்டு பிறந்தார்கள் ஹிஜ்ரீ 897ம் ஆண்டு மரணித்தார்கள். தனது தந்தையைப் போன்று இவர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அதிகமான மார்க்க அறிஞர்களை சந்தித்திருக்கிறார்கள். பல நல்லடியார்களையும் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் சந்தித்த நல்லடியார்களில் சிலர் அற்புதங்கள் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவற்றைக் கொண்டு அவர்கள் பிரயோசனம் பெற்றார்கள்.
இவர்கள் சந்தித்த நல்லடியார்களில் பீர் ஜமால் ஷீறாஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களும் ஒருவர். இவர்களிடம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடி காணப்பட்டது. அதை இவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்கள். அது தன்னிடம் இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
இதே போன்று ஹைபர் யுத்தத்தின் போது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த பாதம் பதிந்த கல் ஒன்றையும் இவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.
இதே போன்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் வஹ்யுன் – வஹீ எழுதியவர்களில் ஒருவரின் கையெழுத்துப் பிரதியும் இவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.
இவை அனைத்தும் பூலாக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள மத்றஸஹ்வில் பாதுகாக்கப்படுகின்றன.
06- கான்காஹ் என்ற இடத்திலுள்ள பர்ஸபாய் ஜும்அஹ் மஸ்ஜிதிலுள்ள அருள் நிறைந்த முடிகள்
கான்காஹ் என்பது பிரசித்தி பெற்ற கெய்ரோவின் வட பகுதியிலுள்ள ஓர் கிராமம். மன்னர் அந்நாஸிர் முஹம்மத் இப்னு குலாவூன் என்பவர் இந்த இடத்தில் ஸுபிய்யஹ்களுக்கென்று தியான மண்டபம் ஒன்றையும், ஓர் பள்ளிவாயிலையும், குளியலறை போன்ற சில வசதிகளையும் அமைத்தார். ஹிஜ்ரீ 723 ம் ஆண்டு இது இடம் பெற்றது.
இந்த இடத்தைச் சூழக் குடியிருப்பதற்கு மக்கள் விரும்பினர். எனவே அதனைச் சூழ வீடுகளையும், கடைகளையும் கட்டினர். அது பெரிய நகரமாகவே மாறியது. இன்று வரை அந்த ஊர் காணப்படுகிறது. பொது மக்கள் அதை “ அல் ஹானிகஹ்” என்றழைக்கிறார்கள்.
மன்னர் அல் அஷ்ரப் பர்ஸபாய் அத்துர்குமானீ அவர்கள் ஹிஜ்ரீ 825ம் ஆண்டு எகிப்தின் அதிகாரத்தைப் பெற்றார். ஹிஜ்ரீ 832ம் ஆண்டு ஆமித் என்ற பிரதேசத்தைக் கைப்பற்ற நினைத்த அவர் இப்பிரதேசத்தின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் இறங்கி பின்வருமாறு நேர்ச்சை செய்தார்.
“ அல்லாஹு தஆலா என்னை உயிர் பெறச் செய்து, எதிரியுடனான யுத்தத்தில் என்னை வெற்றி பெறச் செய்து, ஈடேற்றம் பெற்ற நிலையில் நான் திரும்பி வந்தால் இவ்விடத்தில் மத்றஸஹ் ஒன்றையும், வழிப்போக்கர்கள் தங்குமிடம் ஒன்றையும் கட்டுவேன்.
யுத்தத்தில் வெற்றி பெற்று அவர் திரும்பிய போது அவ்விடத்தில் பாரிய ஓர் ஜும்அஹ் பள்ளியை அமைத்தார். பல நிறங்களுடைய மாபிள் கற்கள் கொண்டு அதனை அழகுபடுத்தினார் அதனருகில் பிரயாணிகள் தங்குமிடம் ஒன்றையும் கட்டினார்.
லதாயிபு அக்பாரில் அவ்வல் என்ற தனது வரலாற்று நூலில் அல் அல்லாமஹ் அல் இஸ்ஹாகீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். மேலே கூறப்பட்ட ஜும்அஹ் பள்ளிவாயலின் மிஹ்றாபில் அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகளில் ஒன்பது திருமுடிகள் இருக்கின்றன.
இந்த விடயத்தை ஓர் கவிஞர் தனது கவிதையில் பின்வருமாறு கூறுகின்றார்.
மன்னர் அல் அஷ்ரப் கான்காஹ் என்ற இடத்தில் அதன் கூலி கொண்டு அருள் பெறுவதற்காக ஓர் ஜும்அஹ் பள்ளிவாயிலை நிர்மாணித்தார். நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுவடுகளைக் கொண்டு வந்தார். அன்னவர்களின் திருமுடிகள் அதன் மிஹ்றாபில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் இமாம் மக்கள் மத்தியில் உபகாரம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறே நீதிவான்களும் அதன் வாசலில் சாட்சிகளுடன் நின்று கொண்டிருக்கின்றனர்.
அல் அல்லாமஹ் அப்துல் கனீ அந்நாபுலுஸீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எகிப்துக்கு பிரயாணம் சென்ற போது கான்காஹ் என்ற இந்த ஊருக்கும் சென்றார்கள். அங்கே தங்கினார்கள்.
அல் ஹகீகது வல் மஜாஸ் பீரிஹ்லதிஷ் ஷாமி வமிஸ்ற வல் ஹிஜாஸ் என்ற தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அல் அஷ்றப் பர்ஸபாய் மத்றஷஹ்வை நினைவு கூரும் போது
மேற் கூறப்பட்ட ஊரில் மன்னர் அல் அஷ்றபின் ஜும்அஹ் பள்ளிவாயல் இருக்கிறது. அது பாரிய ஓர் ஜும்அஹ் பள்ளிவாயல். ஏனைய ஜும்அஹ் பள்ளிவாயல்களுக்கு மத்தியில் இதற்கு ஓர் தனிச் சிறப்பு உண்டு. அது தான் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் அதன் மிஹ்றாபில் காணப்படுவதாகும். என்று கூறுகிறார்கள்.
07- மன்ஜக் அல் யூஸுபீ அவர்களிடம் காணப்பட்ட சில முடிகள்
ஹிஜ்ரீ 776 ம் ஆண்டு கெய்ரோவில் மரணித்த அல் அமீர் ஸைபுத்தீன் மன்ஜக் அல் யூஸுபீ அந்நாஸிரீ றஹிமஹுல்லாஹ் ஹனபீகளுக்காக அமைத்த அல்மத்றஸதுல் மன்ஜகிய்யஹ் பற்றிக் கூறும் போது அல்அல்லாமஹ் அந்நயீமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“இவர் (மன்ஜக் அல்யூஸுபீ) அண்ணல் முஹம்மத் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடி கொண்டு வெற்றி பெற்றிருப்பதானது இவர் சீதேவீ என்பதன் அடயாளமாகும்.”
தொடரும்…
Apr 7, 2015
துப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?
2:10 PM
மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
ஆம். துப்
(தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி
வழங்கப்பட்டிருக்கின்றது.
துப் (தகறா)
இசைப்பது என்பது அருமை நாயகம் நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புண்ணிய காலம் தொட்டே இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். இதனை இஸ்லாமியப் பாரம்பரியச் செயல் என்றும் கூறலாம்.
பெருநாள் தினங்கள், நபீமார்கள் வலீமார்களின் நினைவு தினங்கள், திருமண வைபவங்களின் போது துப் (தகறா) இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஆகுமான விரும்பத்தக்க செயலாகும்.
எவர் ஒருவர் இவையெல்லாம் கூடாது, இப்படியெல்லாம் மார்க்கத்தில் கிடையாது என்று கூறுகின்றாரோ அவர் “நபீ மொழி அறியாத சில்லறைப் பயல்” என்று அவரைச் சுருக்கமாகக் கூறலாம்.
Apr 5, 2015
38வது வருட புஹாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்
4:48 PM
ஹதீஸ் கலை மாமேதை இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் கோர்வை செய்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன்மொழிகள் அடங்கிய புகாரீ ஷரீபை பாராயணம் செய்யும் மஜ்லிஸ்...
ஆரம்பம் - 16.04.2015 வியாழக்கிழமை (திருக்கொடியேற்றம்)
முடிவு - 15.05.2015 வெள்ளிக்கிழமை
இடம் - காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்.
தினமும் அஸ்ர் தொழுகையின் பி்ன் ஹதீதுகள் வாசிக்கப்பட்டு இஷா தொழுகையின் வாசிக்கப்பட்ட ஹதீதுகளுக்கான விளக்கங்கள் கண்ணியமிக்கக உலமாஉகளால் எடுத்துரைக்கப்படும்.
மேற்படி நிகழ்வுகளில் அனைவரும் கலந்து பொன்மொழிகளை வாசித்து தன் வாழ்க்கையில் செவ்வனே நடப்பதற்கு அன்பாய் அழைக்கின்றோம்.
நிர்வாகம்
பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
காத்தான்குடி-05
Apr 3, 2015
Apr 1, 2015
67வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகத்தின் கந்தூரி நிகழ்வின் தொகுப்பு
1:46 PM













