Mar 19, 2016

30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம்

கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம் 16.03.2016ம் திகதி அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Mar 16, 2016

ஊடக அறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் 

காத்தான்குடி - 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த  யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம்.

Mar 10, 2016

மாணிக்கப்பூர் தந்த மாபெரும் மார்க்க ஞானி சங்கைமிகு ஷாஹுல் ஹமீத் ஆண்டகை அவர்கள்

ஆக்கம- MIM. அன்ஸார் ஆசிரியர்


இறை அதிகாரிகள்

உமது இறைவன் புவியில்நிழலை எவ்வாறு பரப்பியிருக்கிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (20:45)

பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? (78:06:7)

மேற்படி இரு திருமறை வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளநிழல்”, “மலைகள்என்பவை இறைவனால் நிறைவேற்று அதிகாரமளிக்கப்பட்ட அவ்லியாக்களையே குறிக்கும் என்பது மெய்ஞ்ஞானிகளின் கூற்றாகும் எமது பூமியெங்கும்நிழல் எவ்வாறு பரம்பி இருக்கின்றதோ அவ்வாறே அல்லாஹ்வுடைய அவ்லியாக்களும் இப்பூமியெங்கும் பரந்து நிரம்பி இருக்கின்றார்கள் .

Mar 6, 2016

ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா

- ஷெய்குனா மிஸ்பாஹீ -

1964ம் ஆண்டு நானும், அட்டாளைச்சேனை அஸ்ஸெய்யித் மௌலவீ  அஸ்ஸெய்யித் மௌலானா அவர்களும் பாணந்துறை தீனிய்யா அறபுக்கல்லூரியில் சங்கைக்குரிய மர்ஹும் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் முப்தி பலகீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்கொண்டிருந்தோம்.

ஒரு நாள் நாங்கள் இருவரும் வெளிகாமம் அல்லாமா ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்திப்பதற்காக வெளிகாமம் சென்றோம்.

ஞான ஜோதி அவர்கள் எங்களை விசாரித்த பின் இருவரையும் அமரச்செய்து தேனீர் தந்து உபசரித்து விட்டு எதற்காக என்னைச் சந்திக்க வந்தீர்கள் என்று வினவினார்கள்.

Mar 2, 2016

أيّ فرق بين القائل بكفر وحدة الوجود وبقتل القائلين بها وبين رجل موصوف بالأوصاف الآتية؟


وأمّا القول بقتل القائلين بوحدة الوجود فهو كقول رجل يدور الشّوارع والطّرق وعلى عاتقه ورأسه أثواب وسخة خَلِقَة، وبيده خشبة طويلة، ويتكلّم بكلمات لا تناسب ما قبلها ما بعدها، ويرفع صوته بكلمات لا معنى لها في أيّة لغة من اللّغات، ويشتم المارّين في الطّريق، وورائه صبيان يرمونه بالأحجار والبيضات،


وأمّا هذا القائل فلا يلتفت إليه ولا يعتدّبه ولا بكلامه، ولوكان القائل هكذا سيّدا أو شيخا هرما أو شيخا يبايع النّاس أو أستاذا صوفيّا أو مدرّسا مرجوما أو جنديّا أو هنديّا، لأنّ قوله ”بقتل القائلين بوحدة الوجود “ قول ضائع مخالف للكتاب والسنّة، ولأقوال الأولياء العارفين بالله والفانين في الله، كالشّيخ الأكبر محي الدّين ابن عربي والشّيخ عبد الكريم الجيلي والشّيخ عبد القادر الجيلاني والشّيخ تاج الدّين عطاء الله الإسكندري والسيّد الشّيخ زين العابدين من أهل بيت رسول الله صلّى الله عليه وسلّم والشّيخ حجّة الإسلام محمّد الغزّالي والشّيخ عبد الوهّاب الشّعراني وأمثالهم ، رضي الله عنهم،

Feb 29, 2016

25வது வருட அருள் மிகு கந்தூரி, நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு

முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடையில் வாழும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் 25வது வருட அருள்மிகு கந்தூரியும், றிபாயிய்யஹ் தரீகாவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸும் 26.02.2016 (வெள்ளிக்கிழமை) - 28.02.2106 (ஞாயிற்றுக்கிழமை) வரை காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று இரு நாதாக்கள் பெயரி்ல் திருக்கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன், ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மௌலித், தலைபாதிஹா, றிபாயீ நாயகம் மௌலித், கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடர்ந்து மூன்று தினங்களும் சங்கைக்குரிய உலமாஉகளால் சன்மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்றதுடன் இறுதித்தினமான ஞாயிற்றுக்கிழமை அன்றிரவு பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு ஸலவாத்துடன் இனிதே நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

Feb 28, 2016

ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அபுல் அப்பாஸ் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸத் அஸ்றாறுஹு

எழுதியவர் மெளலவீ MM. அப்துல் மஜீத் (றப்பானீ)
சிரேஷ்ட விரிவுரையாளர்
றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.
காத்தான்குடி - 05
*********************************************************************************

இறைநேசர்களான வலீமார்களின் வரிசையில் ஜுமாதல் ஊலா மாதம் உலகெங்கிலும் வாழும் ஸுன்னத் வல் ஜமாஅத் மக்களினால் நினைவு கூரப்படுபவர்கள்தான் ரிபாயிய்யஹ் தரீகஹ்வின் ஸ்தாபகர் ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள்.

இவர்கள் அலமுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சின்னம்), ஷெய்ஹுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் ஷெய்ஹ்), ஸெய்யிதுல் அக்தாப் (குத்புகளின் தலைவர்), தாஜுல் ஆரிபீன் (ஞானிகளின் கிரீடம்), உஸ்தாதுல் உலமா (ஆலிம்களின் உஸ்தாத்), இமாமுல் அவ்லியா (வலீமார்களின் தலைவர்) போன்ற பல பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.

அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸ ஸிர்றுஹு அன்னவர்கள் இறாக்கிலுள்ள உம்மு அபீதா என்ற கிராமத்திலுள்ள அல்பதாயிஹ் என்ற இடத்தில் ஹிஜ்ரீ 512ம் ஆண்டு றஜப் மாதம் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் அஸ்ஸெய்யித் அலீ. தாயின் பெயர் உம்முல் பழ்ல் பாதிமா அந்நஜ்ஜாரிய்யஹ் றழியல்லாஹு அன்ஹுமா.

ரிபாயீ நாயகம் அன்னவர்கள் தந்தை வழியில் அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும், தாய் வழியில் நபீத் தோழர் அஸ்ஸெய்யித் அபூ ஐயூப் அல்அன்ஸாரீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களின் வம்சத்தைச் சார்ந்தவர்களாகவும் திகழ்கின்றார்கள்.

Feb 24, 2016

வைத்தியக் கலாநிதி ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ்.

-சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்-

இறை நேசர்களான வலீமார் வரிசையில் தமிழ்நாடு முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்போவா னோடையில் கொலுவீற்றிருந்து “கறாமத்” என்னும் அற்புதம் நிகழ்த்திவரும் “ஷெய்குத்தவா” ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்களும் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.

இவர்கள் நபீ மூஸா (அலை) அவர்களின் காலத்தவர்கள் என்றும் அக்காலத்தில் தலைசிறந்த வைத்திய மேதையாக இருந்தவர்கள் என்றும் அவர்களைக் கனவில் கண்டுஇவ்விவரத்தை அவர்கள் மூலம் அறிந்தோர் கூறுகின்றனர்.