Sep 28, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 09

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்.

அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடியில் மாத்திரமல்ல அவர்களுடன் தொடர்புடைய அனைத்திலும் பறகத்அருள் உண்டு என்பதே ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் ஏகோபித்த கருத்தாகும். இதனாற்றான் கண்ணியமிக்க ஸஹாபஹ்தோழர்கள் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடன் தொடர்புடைய அனைத்தைக் கொண்டும் பறகத்அருள் பெற்றார்கள். நோய் நிவாரணம் பெற்றார்கள். அண்ணலின் தோழர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.

Sep 26, 2015

ஏத்துக்கால் கடற்கரையில் கந்தூரி

புதிய காத்தான்குடி ஜெய்லானி ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கம், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்கள் பெயரிலான மௌலித் நிகழ்வு ஒன்றை 26.09.2015 சனிக்கிழமை பின்னேரம் ஏத்துக்கால் கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பான இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட உஸ்தாத்மார்கள், மௌலவீமார்கள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் முஹ்யித்தீன் மௌலித் ஓதி, கௌதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களின் பொருட்டு கொண்டு மீனவர்கள், அப்பிரதேச வாசிகள் வாழ்வில் செல்வமும், அருளும் வேண்டி  துஆப்பிரார்த்தனை செய்யப்பட்டது.

27.09.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் கந்தூரி நார்ஷா வழங்கப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும்.

Sep 25, 2015

ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்

இஸ்லாமிய வரலாற்றில் பல படிப்பினைகளை எடுத்துக் கூறும் ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் நிகழ்வுகள் 24.09.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அந்நிகழ்வுகளின் தொகுப்பு...

Sep 23, 2015

Sep 22, 2015

இலவச நூல்கள் வெளியீடு

2015 “ஈத் முபாறக்” நல்வாழத்துக்கள்

இலவச நூல்கள் வெளியீடு
-------------------------------------------

மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களால் எழுதப்பட்ட


# வஹ்ததுல் வுஜூத் பற்றிய சந்தேக நிவர்த்தி
( வினா - விடை விருந்து)


# தவ்ஹீத் வரலாற்றில் நிகழ்ந்த உண்மைக் கதைகள்

24.09.2015 அன்று பெருநாள் குத்பஹ்வின் பின் எதிர்பாருங்கள்


அஷ்ஷுப்பான் ஏற்பாட்டுக் குழு

புனித அறபா நாள் !

மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ
பேஷ் இமாம் - மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத்

சங்கையான மாதங்களின் நாட்களில் ஒன்று அறபாவுடைய நாளாகும்.


அல்லாஹ் அல்குர்ஆனில் சங்கையான மாதங்கள் குறித்து குறிப்பிடும்போது..

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌ ؕ وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌  ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சங்கையான அந்நான்கு மாதங்களாவன, “துல் கஃதா, துல்ஹஜ், முஹர்றம், றஜப்,” ஆகியனவாகும்.

Sep 21, 2015

ஹஜ் வணக்கத்தின் அடிப்படை




“ஹஜ் வணக்கத்தின் சிறப்புக்களும் கடமைகளின் அர்த்தங்களும்”
மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர்  அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05
புனித இஸ்லாத்தின் கடமைகளில் ஐந்தாவதும் இறுதியுமான கடமையே ஹஜ் கடமையாகும்இக் கடமை உடற்பலம்பணப்பலம் உள்ளவர்களுக்கே கடமையாகும்இஸ்லாமிய ஏனைய கடமைகளான தொழுகைஸகாத்நோன்பு ஆகியவற்றை தான் வதியும் இடத்தில் இருந்தவாறே செய்துகொள்ள முடியும்ஆனால் ஹஜ் கடமை இதற்கு மாறானதாகும்ஹஜ் மையைச் செய்வதாயின் மக்கா சென்றே செய்ய முடியும்.

ஹஜ் கடமையின் சிறப்புக்கள் அனந்தம். அவற்றில் சிலதை இங்கு குறிப்பிடுகின்றேன்.

Sep 19, 2015

பெயர் எதுவாயிருந்தால் என்ன?


ஆக்கம் - மௌலவீ பிலால் றப்பானீ
தூய மனதோடும் பரவலான, பாரபட்சமற்ற கண்ணோட்டத்தோடும் ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு வஹ்ததுல் வுஜூத்என்ற வசனம் உணர்த்துகின்ற தத்துவமும், “தவ்ஹீத்என்ற சொல் உணர்த்துகின்ற தத்துவமும் ஒன்றேதான்றி இரண்டும் வேறானதல்ல. என்ற உண்மை தெளிவாகும்.

வஹ்ததுல் என்ற வசனம் யாரால்? என்ன கருத்தைக் கருவாகக் கொண்டு? எப்போது சொல்லப்பட்டது? அறிமுகம் செய்யப்பட்டது என்ற விடயங்களில் வாதப் பிரதிவாதம் செய்பவர்கள் அதிலேயே காலம் கழிக்காமல் அந்த வசனம் உணர்த்துகின்ற தத்துவம் சரியானதா? பிழையானதா? அத்தத்துவத்திற்கும், “தவ்ஹீத்என்ற சொல் தருகின்ற தத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்? என்ற விபரங்களை தாமும் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அதை எட்டி வைக்க முன்வர வேண்டும்.