Sep 3, 2015

“துன்யா” என்ற சொல் ஆண்பாலா? பெண்பாலா?

துன்யாஎன்ற சொல்அத்னாஎன்ற சொல்லின் பெண்பால் சொல்லாகும். “துன்யாஎன்ற இச்சொல் இவ்வுலகை மட்டும் குறிக்கும் சொல்லேயன்றி பிரபஞ்சத்தைக் குறிக்காது. எனினும்ஆலம்உலகம் என்ற சொல் பிரபஞ்சத்தை உள்வாங்கிய ஒரு சொல்லாகும்.

துன்யாஎன்ற இவ்வுலகு ஒரு பெண் போன்றது. ஓர் ஆண் பெண்ணைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவது போல் மனிதன் இவ்வுலகைக் கண்டு மிக எழிதில் மயங்கி விடுவான். இதனால் இவ்வுலகுக்கு பெண்பால் சொல் பாவிக்கப்பட்டிருக்கலாம். (வைக்கப்பட்டிருக்கலாம்)

Sep 1, 2015

துறவறம்

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله "ما معنى قول صوفيّ من اكتفى بالفقه عن الزّهد فَسَقَ، فأجاب بقوله معناه أنّ من تساهل فى الزّهد والورع ادّى ذلك إلى ارتكاب الشّبهات، ومن تساهل فى ارتكاب الشبهات ادّاه ذلك إلى ارتكاب الحرام، ومن تساهل فى الحرام أدّاه ذلك إلى ارتكاب الكبائرعلى أنّ الصّوفيّة رضي الله عنهم قد يطلقون لفظ السيّئة والفسق والكفر على غير معناه الشرعيّ مبالغة فى التّنفير كقولهم "حسنات الأبرار سيّآت المقرّبين، وقول سيّدي عمربن الفارض رضي الله عنه

               وإن خطرت لي فى سواك ارادة   *****  على خاطري سهوا قضيت بردّتي

فهذا ليس بردّة حقيقه،
(الفتاوى الحديثية ص – 217

Aug 31, 2015

குருந்தையடியப்பா வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வு


கல்முனை வீரத்திடல் (கொளனி) யில் ஆட்சி செய்யும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் புறாகுத்தீன் குருந்தையடி அப்பா நாயகம் அன்னவர்களின் நினைவாக கடந்த 30.08.2015ம் திகதியன்று அன்னார் பேரிலான 14 வருட அருள்மிகு கந்தூரி நிகழ்வு குருந்தையடியப்பா தர்கா ஷரீபில் நடைபெற்றது.

Aug 30, 2015

அல்லாஹ்வில் “பனா” ஆதல்

தஸவ்வுப்என்ற ஸூபிஸ ஞானம் பேசும் இறை ஞானிகள்பனா” – “பனாஉ” – என்ற சொல்லை தமது கலைச் சொல்லாக பயன் படுத்தி வருகின்றார்கள். எழுதுகின்றார்கள். பேசுகின்றார்கள்.

பைஅத்வழங்கும் ஒருஷெய்குஞானகுரு தனதுமுரீதீன்சிஷ்யர்களிடம் பேசும் போது இச்சொல்லை பயன் படுத்துகின்றார்கள். சிஷ்யர்களோ இச்சொல்லைப் பற்றியும், இது தருகின்ற கருத்துக்கள் பற்றியும் மண்ணளவேனும் அறியாதவர்கள். இத்தகைய சிஷ்யர்களிடம் ஆயிரம் தரம் சொன்னாலுங் கூட அவர்கள் அச்சொல்லின் சுருக்கத்தைவிளக்கத்தைஅறிந்து கொள்கிறார்களில்லை. அதன் சாரத்தை சொல்லிக் கொடுக்காமல் எத்தனை மணிநேரம் குரு பேசினாலும் சிஷ்யர்கள் புரிந்து கொள்கிறார்களில்லை.

Aug 25, 2015

وحدة الوجود نعمة من الله الودود

أيّها العلماء المنكرون لوحدة الوجود! والقائلون بكفرها! ما تقولون عن الشّيخ الأكبر محي الدّين بن عربي رضي الله عنه الذي صرّح بوحدة الوجود فى كتبه كلّها؟ وما تقولون عن الحكمة الّتي قالها فى كتبه، وحدة الوجود؟

"سُبْحَانَ مَنْ أَظْهَرَ الْأَشْيَاءَ وَهُوَ عَيْنُهَا" والمراد بِمَن هنا الله تعالى، والضّمير من أظهر يعود إلى من، والواو مِن وَهُوَ حاليّة، والضمير يعود إلى من، والهاء من عينها يعود إلى الأشياء،

Aug 24, 2015

ஓய்வெடுக்கும் இருப்பு

لماذا سمّى الفقهاء بجلسة الإستراحة للجلسة الّتي بعد السّجودين من الركعة الأولى وقبل القيام للّركعة الثاّنية. وهي جلسة يسيرة خفيفة لا يسنّ فيها أيّ قراءة، من الأوراد والاذكار، وأمّا ترك هذه الجلسة فلا يضر الصلاة،

والإستراحة لازمة لمن تعب بالأعمال الشّاقّة، كالأجراء العاملين من الفجر إلى المغرب، وأمّا المصلّي فلا تلزمه الإستراحة. لأنّه لم يتعب فى صلاته ولم يعمل عملا شاقّا فيها فما الحكمة فى تسمية هذه الجلسة بجلسة الإستراحة؟ والمسئول بهذا السؤال وهّابيّ ينكر أسرار الصّلاة وأسرار التّصوّف،

Aug 23, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 08











ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர், இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் காணப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள்

ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர் அல் அல்லாமஹ் இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மூன்று திருமுடிகள் காணப்பட்டன.

தான் மரணித்த பின் அருள் நிறைந்த அந்தத் திருமுடிகளை தனது கபனுடன் வைத்து அடக்கும் படியும், அவற்றில் ஒன்றை தனது ஒரு கண்ணிலும், மற்றதை தனது மற்றக் கண்ணிலும், மற்றதை தனது வாயிலும் வைக்கும் படியும் வஸிய்யத் செய்தார்கள். அவர்கள் மரணித்த போது அவ்வாறே செய்யப்பட்டது.

Aug 22, 2015

ஞான கீதம்



حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ       مَا فِي قَلْبِيْ غَيْرُ اللهْ

نُوْرُ مُحَمَّدْ صَلَّى اللهْ      لَاإِلــــــــــــــهَ إِلاَّ اللهْ

இந்தப் பாடல் இலங்கை, இந்தியாவிலும், மற்றும் பல நாடுகளிலும் பாடப்பட்டு வருகிறது. இது யாரால் இயற்றப்பட்டதென்பதற்கு தெளிவான, நம்பத் தகுந்த ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை.

இது யாரால் இயற்றப்பட்டதாயினும்ஸுன்னத் வல் ஜமாஅத்கொள்கை வாதிகள் மட்டுமே இதைப்பாடுவார்கள்.