Jul 1, 2015

மூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)

தொடர் -02


றமழான் மாதம்  அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு  ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களை, தான் விரும்பினால் தன்  குத்றத்பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ  அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.

றமழான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் அருள்கொண்டு அடியார்களுக்கு றஹ்மத்வழங்குதல் , பிழை பொறுத்தல், நரகத்தில் இருந்து விடுதலை  அளித்து  சுவனத்தை பரிசாக வழங்குதல்  ஆகியவற்றை  அல்லாஹ் செய்கின்றான். இங்கு ஒரு விடயத்தை நாம் கவனிக்கலாம். நோன்பு  எனும் வணக்கத்தை புனித மிக்க இந்த றமழான் மாதத்தில் உள்ளடக்கி அடியார்களுக்கு மூன்று அன்பளிப்புக்களை வழங்குகின்றான்.  இம்மூன்றும் மனிதனை புனிதனாக்குவதில் முக்கியமானவை ஆகும்.

Jun 28, 2015

மச்சான், மச்சினன் உரையாடல்

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ


மச்சான் என்னடா மச்சினன்! நீ முதலில்ஸுன்னத் வல் ஜமாஅத்” வாதியாகத்தானே இருந்தாய். அவர்களின் பள்ளிவாயலில்நீ தொழுததையும், அங்கு மௌலித் மஜ்லிஸில் நீ ஓதியதையும் நான் பலதரம் கண்டிருக்கிறேன். நீ எப்போதுகர்னீகளுடன் சேர்ந்தாய்? ஏன் சேர்ந்தாய்.

மச்சினன் என்ன மச்சான் இவ்வாறு கேட்டு விட்டாய்! நான் அவர்களுடன் இணைந்து நாலு மாதம் மட்டும்தான். எனக்கு எது சரி? எது பிழை? என்பது தெரியாது. ஆய்வு செய்து சரி பிழை கண்டறிய என்னிடம் திறமையும் இல்லை. நான் படிக்காதவன், அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்பவன் என்பது உனக்குத் தெரியும். எனக்குகர்னீகளின் வழிபோக்குதான் இலகுவானதாகஇலேசானதாகத் தெரிந்தது. அவர்களின் வழியில் கடினமோ, கஷ்டமோ இல்லை. இதனால்தான் அவர்களுடன் இணைந்தேன்.

Jun 27, 2015

நோன்பின் பர்ளுகள் எத்தனை?

நோன்பு நிறைவேற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இவ்விரு நிபந்தனைகள் இருந்தால் மட்டும்தான் நோன்பு நிறைவேறும். இரண்டும் இல்லையானாலும் அல்லது இரண்டில் ஒன்று மட்டும் இல்லையானாலும் நோன்பு நிறைவேறாது. இதுஷாபிஈ மத்ஹப்சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள சட்டமாகும்.

ஒன்று تبييت النّيّة இரவில்நிய்யத்வைக்க வேண்டும். இதுநிய்யத்சரி வருவதற்கான நிபந்தனையாகும். ஒருவன் பகலில் ஆயிரம் தரம்நிய்யத்வைத்தாலும் அது நிறைவேறாது.

Jun 25, 2015

ஷாதுலிய்யஹ் தரீக்கஹ்வும் வஹ்ததுல்வுஜுத் கோட்பாடும்.

- மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons) -
வஹ்ததுல் வுஜூத் என்றால் உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும். அதாவது அல்லாஹ் ஒருவன், அவன்தான் உள்ளமை (வாஜிபுல்வுஜூத்). படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் (மும்கினுல் வுஜூத்). படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்குவேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமையே அவ்வாறு தோன்றுகின்றது. படைப்புகள் மாயதோற்றத்தில் தென்படுகின்றவே தவிர யதார்த்தத்தில் படைப்புகள் என்பது இல்லை.

Jun 24, 2015

ஸம்ஹான், ஸக்றான் உரையாடல்

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

ஸம்ஹான் தம்பி ஸக்றான் நீ எங்கே செல்கிறாய்?

ஸக்றான் கொழும்பு சென்று தரமான மார்க்க அறிஞர் ஒருவரிடம் மார்க்க விளக்கம் கேட்டுவரச் செல்கிறேன்.

ஸம்ஹான்எது பற்றிய விளக்கம் என்று சொல்ல முடியுமா?

ஸக்றான்ஆம். சொல்லலாம். தற்போது றமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது. “தறாவீஹ்தொழ வேண்டும். சில பள்ளிவாயல்களில் இருபதுறக்அத்தொழுகின்றார்கள். இன்னும் சில இடங்களில் எட்டுறக்அத்தொழுகின்றார்கள். எது சரி என்பதை அறிந்து அதன் படி செயல் படுவதற்காகச் செல்கிறேன்.

Jun 23, 2015

ஷாதுலிய்யஹ் தரீக்காவின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

 رحمه الله(موسّس الطّريقة الشّاذليّة الشّيخ السيّد أبو الحسن عليّ الشاذلي )

قال الشّيح أبو الحسن علي الشّاذليّ رحمه الله ونقله الإمام عبد الوهّاب الشّعراني رحمه الله فى الصفحة الخامسة والسّتّين من اليواقيت والجواهر( قد محق الحقّ تعالى جميع الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلق؟ فقال موجودون، ولكن حُكمُهم مع الحقّ تعالى كالأنابيب الّتي فى كوّة الشّمس تراها صاعدة هابطة فاذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودة فى الوجود)

ஷாதுலிய்யாஹ் தரீகாவின் மூலவர் அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹ்மதுல்லாஹ்  அவர்கள் பின்வருமாறு சொன்னதை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஅறானீ றஹ்மதுல்லாஹ் அவர்கள் தங்களின்அல் யவாகீத் வல் ஜவாஹிர்என்ற ஞான நூல் 65ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Jun 21, 2015

பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்

றமழான் மாத இரவுகளில்ஸுன்னத் வல் ஜமாஅத்கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில்தறாவீஹ்தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்குநோன்பின் நிய்யத்சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள்.

Jun 20, 2015

நின்று வணங்குதல் என்றால் என்ன?


قال النّبيّ صلّى الله عليه وسلّم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدّم من ذنبه.

றமழான் மாதம் பூரணஈமான்விசுவாசத்தோடும், நன்மையை நாடியும் ஒருவன் நின்று வணங்கினால் அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

இந்த நபீ மொழி பலமானதும், பலஹதீதுநூல்களில் இடம் பெற்றதுமாகும்.

இந்த நபீ மொழியில்றமழான்என்று மாதத்தின் பெயர் மட்டும்தான் கூறப்பட்டுள்ளதேயல்லாமல்ليالي رمضان  றமழான் மாத இரவுகள் என்றோ,  نهار رمضان  பகல் என்றோ கூறப்படவில்லை. பொதுவாக றமழான் என்று வந்துள்ளதால் இரவு பகல் இரண்டையும் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும். குறித்த மாதத்தில் இரவில் மட்டும்தான் வணங்க வேண்டும். பகலில் வணக்கம் தேவையில்லை என்று கருதக் கூடாது.

எனினும் பகல் நேரம் வணக்கம் செய்வதை விட இரவில் அதிகமாகச் செய்ய வேண்டும்.