Oct 29, 2014
இணையத்தள முகவரி மாற்றம்
3:01 AM
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்) வாசகர்களே!
- அல்ஹம்துலில்லாஹ் -
சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தியக் குரலாக இயங்கி வந்த www.shumsme.com எனும் எமது இணையத்தளம் மீள்வடிவமைப்புக்காக மூன்று தினங்கள் தடைப்பட்டிருந்தது. மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உதவியால் (29.10.2014 இன்றிலிருந்து) தற்போது புதுப்பொலிவுடன் www.shumsmedia.com எனும் புதிய முகவரியில் வாசகர்கள் பார்வையிடலாம்.
- அல்ஹம்துலில்லாஹ் -
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் நூலகத் திறப்பு விழா
2:40 AM
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காகவும், உலமாஉகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காகவும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் கட்டிடத்தில் றப்பானிய்யஹ் வாசிகசாலை எனும் பெயரில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உலமாகஉகளும், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
- அல்ஹம்துலில்லாஹ் -
Oct 25, 2014
இமாம் ஹுஸைன் (றழி) அவர்களின் மஜ்லிஸ் ஆரம்பம்.
11:41 PM
ஷம்ஸ் மீடியா இணைய அபிமானிகள் அனவருக்கும் மலர்ந்திருக்கும் முஹர்ரம் 1436 நல் வாழ்த்துக்கள்.
முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்வாக ஷஹீதே கர்பலா ஸிப்துர் றஸூல் அல் இமாம் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரிலான புனித திருக் கொடி ஏற்ற நிகழ்வு இன்று இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இடம்பெற்றது. அதனை அடுத்து அவர்கள் பெயரிலான புனித மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது தொடர்ந்து 10 தினங்கள் இம்மஜ்லிஸ் நடைபெற இருப்பதால் முஹிப்பீன்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறவும்.
Oct 20, 2014
NTJவின் விவாத அழைப்பை ஏற்று சவால் விட்ட அஷ் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ.
10:52 PM
ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய விசேட அதிதி அபுத்தலாயில் அஷ் ஷெய்கு எம். அப்துல்லாஹ் ஜமாலீ எம்.ஏ.அவர்கள் நிகழ்வில் சிறப்புரையாற்றினார்கள்.
மேற்படி தொடர்புகளுக்கு : 0779688999 என்ற தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டது.














