Aug 23, 2014

அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி - (காணொளி இணைப்பு)

சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாழில் அபுல் இர்ஃபான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி கடந்த 11.08.2014 திங்கட்கிழமை அன்று சரியாக மாலை 05.00 மணிக்கு புனித திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியது. 

கொடியேற்றத்தைத் தொடர்ந்து அன்னவர்களது புனித அடக்கஸ்தலத்துக்கு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களாலும் ஏனைய உலமாஉகளாலும் போர்வை போர்த்தப்பட்டு; இறை நேசர் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது பறக்கத்தைக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரினதும் சமாதானம், சுபீட்சம், நிம்மதியான வாழ்வு வேண்டி துஆ ஓதப்பட்டது.

Aug 20, 2014

வஹ்ததுல் வுஜூத் ” ஞானம் தொடர்பான கேள்விகள்



பின்வரும் வசனங்களுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம்.





Aug 9, 2014

Aug 2, 2014

Aug 1, 2014

Jul 28, 2014

முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி.

(நிகழ்வுகள் தொடர்பான காணொளியும் புகைபடங்களும் உள்ளே.)
அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), ஆகிய முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி கடந்த 21/07/2014 திங்கள் பிற்பகல் செவ்வாய் இரவு புனித தறாவீஹ் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

Jul 20, 2014

முப்பெரு நாதாக்கள்

மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) (BBA)

இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் பஹ்றுல் ஹகாஇகி வத்தகாஇக் . அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள்
அஷ்ஷெய்க் அகமது மீரான்“வெள்ளி ஆலிம்” (வலீ)அவர்கள் 
ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள்.

இலங்கையில் இஸ்லாமியப் பணிபுரிந்த பெரியார்களில் காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள் தென்னிந்தியாவின் காயல்பட்டணத்தின் கம்பெனியார் குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ..கே. அகமது முஹ்யித்தீன், முகம்மது இப்றாஹீம் நாச்சி தம்பதியினருக்கு கடைசிக் குழந்தையாய் பிறந்தார்கள்.

Jul 17, 2014

பத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி - 2014

பத்ர் ஸஹாபாக்களின் அருள் மிகு கந்தூரி கடந்த 14.07.2014 திங்கட்கிழமை அன்று (புனித றமழான் 17ம் இரவு) காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித தறாவீஹ் தொழுகையின் பின் திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது.