Mar 6, 2014
Feb 27, 2014
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (குத்திஸ ஸிர்ருஹூ) நினைவு தின சிறப்புக்கட்டுரை..
6:43 PM
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்.
அஷ்ஷெய்ஹுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ (குத்திஸ ஸிர்ருஹூ)
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
தலைவர் – காதிரிய்யஹ் திருச்சபை,
விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்.
றபீஉனில் ஆகிர் மாதம் நினைவு கூறப்படக்கூடிய மகான்களில் அஷ்ஷெய்ஹுல் அக்பர், அல் கிப்ரீதுல் அஹ்மர், அல் மிஸ்குல் அத்பர், அந் நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ் அன்னவர்கள் மிக விஷேடமானவர்கள். Feb 19, 2014
மீண்டும் ஆரம்பமானது ஜும்அஹ் தொழுகை
11:43 PM
சுன்னத்வல்ஜமாஅத்தின் தளமான காத்தான்குடி -05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 9 வருடங்கள், 3 மாதங்கள், 8 நாட்களாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குத்பஹ் – ஜும்அஹ் தொழுகை 14.02.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சங்கைக்குரிய மௌலவீ. HMM. இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் குத்பஹ் பிரசங்கம் நிகழ்த்த சங்கைக்குரிய மௌலவீ. ALM. இஸ்மாயீல் (பலாஹீ) அவர்கள் தொழுகை நடாத்தியதோடு தொழுகையின் பின்னர் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் ஆத்மீகப் பேருரை நிகழ்த்தினார்கள்.
பித்அத்எல்லாம் வழிகேடாகுமா ?
6:31 PM
தொடர்-04
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA-Hon
وعن سيدنا رفاعة بن رافع رضي الله عنه قال: كنا نصلي وراء النبي صلى الله عليه وآله وسلم
فلما رفع راسه من الركعة قال ( سمع الله لمن حمده) قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال (من المتكلم؟) قال: أنا قال: «رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها»([1][66]).
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
புஹாரீ-799,நஸாஈ-614,அபூதவூத்-770
அறிவிப்பு- ரிபாஆ இப்னு ராபிஉ(றழி)
Feb 13, 2014
Feb 11, 2014
இரத்த தான நிகழ்வு 2014
9:03 PM
அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம், றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும், அன்னாரின் நீண்ட வாழ்நாளுக்காகவும், எமது சகோதர உறவுகளின் உயிர்களைக் காக்கவும் 03வது இரத்தன தான நிகழ்வு 06.02.2014 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 03.00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் இரத்த தானம் செய்வதற்காக சுமார் 150க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.










.jpg)

