Jan 26, 2014

பெரியார் வருகை


குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்தவரும், உலகறிந்த பிரசித்தி பெற்ற மார்க்க மேதையுமான அஷ்ஷெய்ஹ் அஸ்ஸெய்யிது அபீபுத்தீன் அப்துல் காதிர் மன்ஸுறுத்தீன் அல் ஜெய்லானிய்யில் பஃதாதீ அன்னவர்கள் 24.01.2014ம் திகதி அன்று காலை 07.00 மணியளவில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு வருகை தந்தபோது அன்னாரை மாலை அணிவித்து வர வேற்பு கீதத்துடன் வரவேற்கும் காட்சியின் சில துளிகள்.......

Jan 21, 2014

புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014


மானுடர்களுக்கு மகிபராய் வந்துதித்த கரையில்லா அருட் கடல் எம் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் பிறந்த தினத்தையும், பிறந்த நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக வருடா வருடம் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் பெருந்திரளான மக்கள் கூட்டத்துடனும், ஸலாவத் முழக்கத்துடனும் 14.01.2014ம் திகதி அன்று நடுநிசி 03.00 மணிக்கு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக......

Jan 17, 2014

Jan 14, 2014

மௌலித் ஓதுவோம் வாருங்கள்

ஸஆதத் வழங்கும் ஸலவாத் சொல்வோம்

Jan 13, 2014

வெள்ளிக்கிழமை


Jan 12, 2014

மௌலித் ஓதுவோம் வாருங்கள்

ஆக்கியோன் மர்ஹூம் சங்கைக்குரிய 
மௌலவீ MSM பாறூக் காதிரீஅவர்கள்

الحمد لله رب العالمين اتم علي اهل الإيمان نعمته بنعمته, وارسل لهم رحمته برحمته وبعث لهم نوره بنوره..سبحانه من إله عظيم رافع ذكرالنبي ومجله. وقاهر شائعه ومذله. اختار نبيه من صفوة صفوة الخلق فكأنّ الكل قد خلقوا من اجله هوالذي ارسل رسوله بالهدى ودين الحق ليِظهره على الدين كله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى عترته الطاهر وسائر اهله ومن دعا بدعوته واستن بسنته وجعل طاعةالله وحب رسوله غايته شغله.

அகிலத்தின் அருட்கொடையாக விளங்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றியும் அல்லாஹ்வின் அன்பர்களான அவ்லியாக்கள் பற்றியும் புகழ்மாலைகள் பாடுதல் மௌலிது ஓதுதல் ஷிர்க் என்றும் பித்அத் என்றும் விவாதங்களும் சர்சைகளும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் புனித மௌலிதுஷரீப் ஓதுதல் இஸ்லாத்தில் வரவேற்க்கப்பட வேண்டியது என்பதை அல்குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ,கியாஸ் என்ற இஸ்லாத்தின் நான்கு மூலாதாரங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு இக்கட்டுரையின் மூலம் நிரூபிக்க விரும்புகிறேன்.