Jun 18, 2012

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம்

26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்கான அலுவலகம் 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை புனித புர்தஹ் ஷரீப் மஜ்லிஸ் நிகழ்வின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் நிகழ்வுகளும் நடைபெற்றது.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 11.07.2012 அன்று 26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் நடைபெறும். 15.07.2012 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும்.

Jun 9, 2012

அற்புத வரலாறு

-மௌலவீ MTM. நஸ்றுத்தீன் றப்பானீ-

முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன். என்று கூறினான்.

Jun 7, 2012

கல்முனைக்குடி கந்தூரி நிகழ்வு....

கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், மற்றும் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகத்தினர் இணைந்து கரீபே நவாஸ், அதாயே றஸுல்,குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அன்னவர்கள் பெயரிலான பாரிய கந்தூரி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

11தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் தினம் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மஃரிப் தொழுகையின் பின் முஹிப்பீன்களால் மவ்லிது அதாஇர் றஸுல் ஓதப்பட்டது. இஷாத் தொழுகையின் பின் உலமாஉகளினால் பயான் நிகழ்த்தப்பட்டு, தபர்றுக் வழங்கப்பட்டது.

Jun 4, 2012

கவிதை....

அவ்லியாக்கள் என்றால் ........
-அபூ பஜ்ரி ஜலா-
வெற்றுக் கூட்டம்
ஒன்று
போடுது
பெரும் கோஷம்
அல்லாஹ்வின்
வலியென்றால்
யாரென்று
தெரியாமல்
அவர்களின்
அகமிய - நிலைதான்
புரியாமல்
* * * * * * *
அல்லாஹ்வை
அறிந்து
இறை நேசம் கொண்டு
பயம்
கவலை
அற்று
வாழும்
கலங்கரைவிளக்கங்கள்
அல்லாஹ்வின்
வலிமார்கள்

May 31, 2012

இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

மௌலவீKRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA(​Hons)

நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர்ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் உம்முபர்வா . அவர்கள் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸிமின் மகளாவார். காஸிம் என்பவர் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் மற்றொருமகன் அப்துர்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே உம்முபர்வாவை பெற்றெடுத்தார்கள். தமது குழந்தைக்கு பெயர்சூட்டுமாறு தம்தந்தை இமாம் ஜைனுல்ஆபிதீன் அவர்களை வேண்டினார்கள் இமாம் முஹம்மது பாகர் அவர்கள். அக்குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத்திருப் பெயரை சூட்டி மகிழ்ந்தனர். பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப்பெயரோடு சாதிக் என்னும் (உண்மையாளர்) என்றபெயரும் ஒருங்கிணைந்து உலகம்முழுவதும் பெயர்பெற்றது.

May 22, 2012

அல்-குர்ஆனின் நற்போதனைகள்

அபூ ஸுப்தீ
நல்லுபதேசம் செய்யுங்கள்
நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும் (51:55)


உண்மை பேசுங்கள்

அல்லாஹ்தலா சொன்னான், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழேசதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில்அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119)

அழகானதைப் பேசுங்கள்
பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். (2:83)

May 20, 2012

35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்புனித ஸஹீஹுல் புஹாரீ ஷரீப் 18.05.2012 வௌ்ளிக்கிழமைஅஸ்ர் தொழு​​கையின் பின் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

May 16, 2012

கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின்
64வது வருட மா கந்தூரி


காத்தான்குடி - 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது.
3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை ஒதிமுடித்த 9 மாணவ மாணவிகக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.