Oct 21, 2015

புனித ஆஷூறாவின் தத்துவங்களை அறிந்து செயற்படுவோம்.

மௌலவி H.M.M. இப்றாஹீம் நத்வீ 

சங்கையாக்கப்பட்ட மாதங்களில் முஹர்றம் மாதமும் ஒன்றாகும். இம்மாதத்தின் மாண்பு அளப்பெரியதும் அதிசயமிக்கதுமாகும். இம் மாதத்தைக் கொண்டு இஸ்லாமிய புதுவருடம் கணிக்கப்படுகிறது.

தற்போதைய ஹிஜ்ரீ ஆண்டு 1437 ஆகும். இம்மாதத்தின் பத்தாம் நாள் ஆஷூறா தினம் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் “தாஷூஆ”ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. 

Oct 14, 2015

இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்! புரிந்து செயற்படுவோம்.

-மௌலவீ,சாமசிரீ,தேசகீர்த்தி. 
HMM.இப்றாஹீம்(நத்வீ)(JP)- 

சர்வ உலகங்களையும் படைத்த அல்லாஹ் தஆலா மனிதர்களுக்கு ஏகத்துவ ஞானத்தை ஊட்டி நேர்வழி காட்டுவதற்காக றஸூல்மர்களையும், நபிமார்களையும் படைத்து அவர்களில் சிலரைவிட சிலரை சிறப்பாக்கி வைத்தான். 

முகம்மது நபி (ஸல்)அவர்கள் 

அனைத்து றஸூல்மார்களிலும் நபிமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை உயர்படைப்பாகப் படைத்தான். அவர்களின் அந்தஸ்த்தை உலகறியச் செய்தான். 

மலக்குகள் 

இதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரைச் சிறப்பாக்கி வைத்தான். 

Oct 12, 2015

காத்த நகரில் ஜொலிக்கும் இறையில்லம்

இது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி-05ல் அமைந்துள்ளது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். வஹ்ததுல் வுஜூதின் கோட்டை, சுன்னத் வல் ஜமாஅத்தின் கிரீடம், தவ்ஹீதின தளமாக விளங்கும் இப்பள்ளிவாயலின் நிர்மாணப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இவ்விறையில்லத்தின் கட்டட அமைப்பின் பெரும் பகுதிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது.

மூன்று டோம்களின் பணிகள் நிறைவுற்ற நிலையில் பிரம்மாண்டமான மனாராவுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது இலங்கிக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் அலகொளிரும் காட்சிகள்...

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 10

அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெறுதல்.

அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் உமிழ் நீர் கொண்டு அருள் பெற்ற, நோய் நிவாரணம் பெற்ற ஸஹாபஹ்தோழர்களில் மிக முக்கியமானவர்கள் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் (கர்றமல்லாஹு வஜ்ஹஹு) அன்னவர்கள்.

அமீறுல் முஃமினீன் ஸெய்யிதுனா அலீ இப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹஹு அன்னவர்கள்.

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் கலீபாக்கலில் ஒருவர். அண்ணெலம் பெருமானின் சாச்சாவின் மகன். சிறுவர்களில் இஸ்லாத்தை முதன் முதலாக ஏற்றவர்கள். அண்ணலின் அருள் நிறைந்த மடியில் வளர்ந்தவர்கள். மக்காவில் இருந்து ஹிஜ்றத் செல்லும் வரை அவர்களின் பாதுகாப்பிலும், அவர்களின் வீட்டிலும் அவர்களுடனிருந்தவர்கள். தபூக் யுத்தம் தவிர அனைத்து யுத்தங்களிலும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடன் கலந்து கொண்டு, அவற்றின் தளபதியாக செயற்பட்டவர்கள். யுத்தங்கள் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணியாக அமைந்தவர்கள். வீரம் நிறைந்தவர்கள். அதிக யுத்தங்களில் இவர்களின் கைகளிலேயே அண்ணலவர்கள் தங்களின் கொடியை வழங்கினார்கள்.

இவர்களின் தாய் பாத்திமா பிந்து அஸத் றழியல்லாஹு தஆலாஅன்ஹா அன்னவர்கள். இவர்கள் சிறந்த ஓர் பெண்மணியாகத் திகழ்ந்தவர்கள். அண்ணலெம் பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவர்களின் வீட்டுக்குச் சென்று இவர்களைச் சந்திப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் கைலூலா தூக்கத்தை இவர்களின் வீட்டில் தூங்குவார்கள். இவர்கள் மரணித்த போது தங்களின் சேட்டைக் கொடுத்து அதில் அவர்களைக் கபனிடும்படி பணித்தார்கள். மாத்திரமன்றி அவர்களின் கப்றினுள் இறங்கி சற்று சாய்ந்தார்கள்.

Oct 10, 2015

றூஹுல் பயான் தப்ஸீர் சொல்லும் வஹ்ததுல் வுஜூத் ஞானம்

(تفسير روح البيان ينطق بوحدة الوجود)

قال الشّيخ اسماعيل حقي النّازلي مولّف تفسير روح البيان رحمه الله رحمة واسعة فى تفسير روح البيان عند قوله تعالى فى سورة فُصِّلَتْ (الا إنّهم فى مرية من لقاء ربّهم ألا إنّه بكلّ شيئ محيط) ومعنى إحاطة الله تعالى با لأشياء عند العارفين ظهوره تعالى بصور المخلوقات.

ولله درّ إسماعيل حقّي حيث اظهر الحقّ حقّا، لم يمنعه الخوف وفوات المنافع الدّنيويّة ومناصبها من إظهار الحقّ والصّواب. بخلاف بعض العلماء والأساتيذ والفقهاء بهذا الزّمان، وبخلاف بعض المشائخ الذين يأتون من الدّول الخارجيّة لمبايعة أبناء هذه الدّولة، ولإرشادهم إلى طريق الحقّ، وهولاء المشائخ قصدهم جمع حطام الدّنيا وملأ بطونهم بالأطعمة الفاخرة وجيوبهم بالدّراهم والدّنانير، يأتون إلى سريلنكا وينزلون منازل الأغنياء وقصورهم وينامون على أسرّة غالية عالية فاخرة، ثمّ يسافرون إلى دولهم ويتنعمّون، فإن جاء لزيارتهم فقير أو عالم دينيّ فلا يفتح لهم باب القصور. ويقال لهم إنّ الشّيخ نائم أو مصلّ أوقارئ، فيقعد الفقير أمام باب القصور ويقوم العالم الدّينيّ بجوار جدار القصور حتّى تتورّم قدماه وتبتلّ ملابس الفقير بدموع تسيل من عينيه،

Oct 5, 2015

அல்லாஹ்வின் வுஜூத் ஒன்றே ஒன்றுதான்

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

قال الشّيخ محمّد بن فضل الله فى كتابه "التفحة المرسلة"
وإنّ ذلك الوجود – وجود الله تعالى  - واحد، لا تعدّد فيه قطعا، والألباس هي صورالّتي إحتجب بها ذلك الوجود عن نظر الأغيار، وظهر فيها لأهل الأسرار، مختلفة لإختلاف أجناسها وأنواعها وهيآتها وأشكالها، ومتعدّدة لموجب إختلاف اللازم منه التعدّد، فاتعدّد فى الوجود حينئذ إنّما هو من حيث المظاهر لامن حيث الظاهر كقول الشاعر.

 وماالوجه إلّا واحد غير أنّه      إذا انت أعددت المرايا تعدّدا

يعني أنّ اَلباس المخلوقات أي صورها الّتي ظهر بها ذلك الوجود علما لصور الأعيان الثّابثة، وعينا لصور الأعيان الخارجة الرّوحيّة والمثاليّة والجسميّة والإنسانيّة مختلفة ومتعدّدة، وإنّ ذلك الوجود حقيقة جميع الموجودات الكونيّة الّتي حقائقها وبواطنها التّعيّنات العلميّة فى المرتبة الواحديّة إلى آخر ما قال.

Oct 4, 2015

மெய்ப்பொருள் ஒன்றே ஒன்றுதான் அது பலதல்ல.

وما الوجه إلّا واحد غير أنّه - إذا انت أعددت المرايا تعدّدا

முகம் ஒன்றே ஒன்றுதான். ஆயினும் நீ முகத்துக்கு எதிராக கண்ணாடிகளை அதிகமாக்கினால் அவற்றின் எண்ணிக்கைப்படி முகம் அதிகமாகி விடும்.

ஸூபிஸ ஞானிகள் மேற்கண்ட இப்பாடலை தமது ஞான நூல்களில் குறிப்பிடத் தவறுவதில்லை.

Oct 1, 2015

இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நூல்களை வாசிப்பது ஆகுமா?

سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله ماحكم مطالعة كتب الشّيخ محي الدّين ابن عربي؟ فأجاب بقوله أنّ الشّيخ محي الدّين ابن عربي من أولياء الله تعالى العارفين، ومن العلماء العاملين، وقد اتّفقُوا على أنّه كان أعلمَ أهل زمانه، بحيث أنّه كان فى كلّ فنّ متبوعا لا تابعا، وأنّه فى التحقيق والكشف والكلام على الفَرق والجمع بحر لا يجاري، وإمام لايغالط ولا يماري، وأنّه أورع أهل زمانه، وألزمهم للسّنّة وأعظمهم مجاهدة حتّى أنّه مكث ثلاثة أشهر على وضوء واحد.

(الفتاوى الحديثيّة صفحة – 215)

கேள்விஇமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமீறஹிமஹுல்லாஹ்அவர்களிடம், அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீறழியல்லாஹு அன்ஹுஅவர்களின் நூல்களை வாசிப்பது தொடர்பான சட்டம் என்ன? என்று கேட்கப்பட்டது.