Aug 13, 2015

நபீகளார் தேடிய வஸீலா

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:... قَالَ: «اللهُ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، اغْفِرْ لِأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ، ولَقِّنْهَا حُجَّتَها، وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا، بِحَقِّ نَبِيِّكَ وَالْأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي فَإِنَّكَ أَرْحَمُ الرَّاحِمِينَ»

(المعجم الكبير للطبراني 871، وأبونعيم فى الحليّة والحيثمي فى مجمع الزوائد 9\257)

அலீறழியல்லாஹு அன்ஹுஅவர்களின் தாயார்பாதிமா பின்தி அஸத்அவர்கள் மரணித்த போது நபீ பெருமான்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் (யா அல்லாஹ்! ன்னுடைய நபீயின் பொருட்டு கொண்டும், எனக்கு முன்னுள்ள நபீமார் பொருட்டு கொண்டும் எனது தாய்க்கு பின் எனது தாயாரானவரின் பாவத்தை நீ மன்னித்து விடுவாயாக) என்று பிராத்தனை செய்தார்கள்.

(ஆதாரம்அல் முஃஜமுல் கபீர் லித்தபறானி – 871)
(அபூ நூஐம் பில் ஹில்யா பாகம் – 03 பக்கம் – 121)
(ஹைதமீ பீ மஜ்மயிஸ் ஸவாயித் பாகம் – 09 பக்கம் – 257)

Aug 12, 2015

உள்ளமை ஒன்று

மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) -

வஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று  அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்மை அற்றது என்பதை​ மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள்.

அல்லாஹ் தஆலாவின் தன்மைகள்திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை.
அவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ [الحديد: 4

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04)

என்று கூறுகின்றான்.

Aug 11, 2015

முகம் நேரே புகழ்தல் எப்படி?

மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ

ஒரு மனிதரை இன்னொரு மனிதர் அவர் இல்லாத நேரத்தில் புகழ்ந்து கூறுவது அனுமதிக்கப்பட்டிருப்பது போல் அவருடைய முகத்திற்கு நேரே புகழ்ந்து கூறுவதும் ஆகுமாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கு இரண்டு நிபந்தனைகள் இடப்படுகின்றன.

ஒன்று புகழ்பவர் புகழப்படுபவரிடம் இருந்து தன்லாபத்தை எதிர் பார்த்து புகழக் கூடாது.

இரண்டு புகழ்பவர் புகழும் காரணத்தினால் புகழப்படுபவருக்கு அல்லாஹ்வை மறந்த தன்மைகளோ, தலைக்கனமோ, பெருமையோ அல்லது இது போன்ற இகழப்பட்ட குணங்களோ, எண்ணங்களோ ஏற்பட்டு விடக் கூடாது.

இவ்விரண்டு நிபந்தனைகளிலும் உள்ள நிலைகள் இல்லையெனில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை முகம் நேரே புகழ்வதில் எவ்வித பிழையோ, பிரச்சினையோ கிடையாது. அது ஆகுமாக்கப்பட்டதேயாகும். ஷரீஅத்தின் ஆட்சியாளர்களான அல்லாஹுத்தஆலாவினதும், அவனுடைய ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினாலும் கூறப்பட்டதேயாகும்.

Aug 9, 2015

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா?

الفكرة المصباحية فى بيان الحكم الغزالية
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ காபிரா?

தொகுப்பு :
மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப்
மிஸ்பாஹீ,பஹ்ஜீ

نَوِّرْ إِلهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا     نَوَّرْتَ قَلْبَ  إِمَامِ النَّاسِ غَزَّالِيْ
يَارَبِّ أَعْطِ لَـنَا عِلْـمًا وَفَـهْمًا كَمَا    اَعْـطَيْتَ يَارَبَّـنَا لِلـشَّيْخِ غَـزَّالِيْ

மனிதர்களின் இமாம் கஸ்ஸாலீ அவர்களின் உள்ளத்தை ஒளிபெறச் செய்தது போல் இவ்வேழைகளின் உள்ளத்தையும் ஒளிபெறச் செய்வாயாக!

அஷ்ஷெய்கு கஸ்ஸாலீ அவர்களுக்கு அறிவையும், விளக்கத்தையும் கொடுத்தது போல் எங்களுக்கும் தருவாயாக!

அரசாங்க முஸ்லிம் பாடசாலைகள் தொடங்கு முன் ஆசிரியர்களும், மாணவர்களும் மிக பக்தியுடன் பாடி வந்த காலைக் கீதமே மேற்கண்ட பாடல்.

Aug 3, 2015

38வது வருட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரியின் தொகுப்பு

அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் (பெரிய ஆலிம்) வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 38வது வருட அருள் மிகு மாகந்தூரி 02.08.2015 ஞாயிற்றுக் கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வாக அன்னார் பேரிலான திருக்கொடியேற்ற நிகழ்வு பெரும் திரளான மக்கள் ஒன்று கூடலுடன் முறாதிய்யஹ் முழக்கத்துடன் ஏற்றி வைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் நிகழ்வு நடைபெற்று மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது.

மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து அன்னார் பேரிலான மௌலித் மஜ்லிஸ் மஜ்லிஸ் மண்டபத்தை அலங்கரித்தது.

இஷாத் தொழுகையின் பின் சங்கைக்ககுரிய மௌலவீ  HMM. இப்றாஹீம் நத்வீ அன்னவர்களால் சன்மார்க்க உபந்நியாசம் நடைபெற்று இறுதியாக துஆப்பிராத்தனையும், தபர்றுக் விநியோகத்துடன் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகள்  இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்

Aug 2, 2015

மர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக


இஃது அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் (பெரிய ஆலிம்) அவர்கள் நினைவாக 13-10-1978 வெள்ளி பி.ப காத்தான்குடி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் மத்றஸஹ்வில் நடைபெற்ற நினைவு கூறல் கூட்டத்தின் போது பாவலர் சாந்தி முஹ்யித்தீன் JP 
அவர்கள் வாசித்த இரங்கற்பா.


விரிந்த மனம் மலர்ந்த முகம்
அடர்ந்த தாடி -
வித்தகத்தைக் காட்டுகின்ற
ஞானப் பார்வை
பரந்துயர்ந்த நுதலுடனே
பழுதில்லாத - ஒரு
பனம் பழத்தை கவிழ்தாற் போல்
தலையின் தோற்றம்!
மெல்லியநல் மடற்காது
உயர்ந்த மூக்கு
மேலான செவிப் பறைகள்
வெள்ளைத் தொப்பி
நல்லதொரு நீள்சட்டை
உள்ளே பெனியன்
நலமான இடுப்புக்கு
பச்சை பெல்ட்டு
சொல்லரிய வலக்கரத்தில்
குடையிருக்கும்!
தோலுக்கு மேலாலோர்
ஹாஜிச் சால்வை!
நல்ல அறைச் சாரத்தை
உயர்த்திக் கட்டி- ஜவாதப்பா!
நடக்கின்ற நடையழகு
தனியழகு!
நடக்கையிலும் முகம் சற்றுக்
கவிழ்ந்திருக்கும்!
நலமான கல்பதனை
முகக் கண் நோக்கும்!
அடக்கமுள்ள ஜவாதப்பா
நிமிர்ந்து பார்த்தால்
அஞ்சாத இளைஞருக்கும்
நெஞ்சிடிக்கும்!
தற்பனை யெப்பொழுதும்
மறந்திடாதார்!
தற்பெருமை பேசுதற்கு
துணிந்திடாதார்!
மற்றவரின் ஐபுகளைக்
கெண்டிப்பார்க்க -
மனத்தாலும் நினையாதார்
எங்களப்பா!
பேசுதற்குப் பெரியாலிம்
எழுந்து விட்டால்
பெருவானின் இடி முழக்கம்
இங்கே கேட்கும்!
ஓசை மிகும் வெண்கலத்தின்
ஒலியும் கேட்கும்!
ஓங்காரச் சிங்கத்தின்
ஓசை கேட்கும்.
கடல் மடைகள் திறந்தாற் போல்
“ஹகாயிக்” கென்னும்
கடல் நடுவில் பெரியாலிம்
சென்று நின்று
மடமடனத் தான் சொரியும்
இறையின்பத்தில்
மாய்ந்திடுவர் மக்களெல்லாம்
மதிமறப்பர்.
பெரியாலிம் பேசையிலே
புல்லரிக்கும்!
பெரியதொரு சப்தம்வர
நெஞ்சிடிக்கும்!
அரிதான உரை கேட்க
கண்ணீர் மல்கும்!
அறிவாளர் திருமுகத்தை
என்று காண்போம்.!
எல்லைக்கு மேலால்தான்
சென்று விட்டால்
இடையினிலே தான் பேச்சை
நிறுத்திக் கொண்டு
கைவிசிறியால் அடித்து
மேசை மீது- நிலை
கடந்து விட்டோம் இனி விடுவோம்
என்பார் ஆலிம்.!
சரிகையிலும், கிரிகையிலும்
யோக ஞான
சக்தியிலும் தான் திழைத்த
காரணத்தால்
உரியவர்க்கு உடையதையே
கூறிவந்த - அந்த
உத்தமரை இனியெங்கே
காண்போம்!
குறைகுடங்கள் ஒரு நூறு
இணைந்து கொண்டு
குதித்தாலும் நிறை குடமாய்
ஆகுமா? சொல்
இறையுணர்வில் திழைத்த
பெரியாலிமுக்கு
இவ்வூரில் ஒருத்தருமே
சமனாகாரே!
ஆலிமாய் வெளியான
காலந் தொட்டு
அண்மையிலே மரணிக்கும்
நேரமட்டும்
தீனுக்காய் வாழ்ந்தார்கள்
நொடிப் பொழுதும்
வீணாகக் கழித்தறியார்
எங்கள் ஆலிம்.!
தங்களது உஸ்தாதுனா
அவர்கள்
தமக்கழித்த இறுதியுரை
சென்னியேற்று
இறுதிவரை மத்ரஸா
தமக்காய் வாழ்ந்த
இனியதொரு பெருமகனார்
பெரிய ஆலிம்.
உயிருக்கு உயிராக
பதுரியாவை-
உயிரினிக்கும் மேலாக
மத்றஸாவை
பயிருக்கு நீர் போலப்
பேணிக்காத்த
பண்பாளர் கபுறுக்குள்
மறைந்து கொண்டார்.
மெய்ஞான வழிவந்த
ஞான தீபம்
மேலான ஹைதறாபாதின்
தூபம்
காத்தநகர் தனிலுதித்த
காமிலான
கருணை மிகு அஹ்மது மீரான்
ஸாஹிப் எனும்
ஷெய்ஹுனா வெள்ளியாலிம்
கரங்கள் பற்றி
சிறப்பான காதிரிய்யஹ்
தரீக்கில் சொக்கி
மெஞ்ஞான இர்பானில்
தோய்ந்து முங்கி-
மேலானார் ஜவாதப்பா
மறைந்து கொண்டார்.
காத்தநகர் கண்டெடுத்த
ஆணிமுத்து!
கதிபெறவே வந்த பெரு
மானின் சொத்து!
ஏற்றமுறு தௌஹீதில்
விளைந்த வித்து!
எங்களது உள்ளமெல்லாம்
நிறைந்த மஸ்த்து.!
அறிவுலகின் முழுவெள்ளி
அணைந்ததம்மா!
அழகுமிகு மலர்முல்லை
மடிந்ததம்மா!
பெரிதான அறிவுமலை
சரிந்ததம்மா!
பெரியாலிம் தனைநினைக்க
அழுகையம்மா!
இனைந்திருந்தோம் இறைவனவன்
எடுத்துக் கொண்டான்
என்செய்வோம் பொறுமையுடன்
ஏற்றுக் கொள்வோம்!
அணைந்திட்ட பெருமகனின்
சாந்திக்காக
அனுதினமும் இறைவனிடம்
இரந்து கேட்போம்.
தாறுல் பனாவென்னும்
உலகை விட்டு
தாறுல் பகா அளவில்
சேர்ந்து கொண்ட
பேரறிஞர் பெரியாலிம்
அன்னார் மீது
பெரியோனே உன்னருளைச்
சொரிவாய். ஆமீன்.!