Jul 7, 2015

நோன்பு மூன்று வகை

ஆக்கம் - ஷெய்குனா மிஸ்பாஹீ

நோன்பை ஆன்மீக வாதிகள் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.

ஒன்று – “ஸவ்முல் அவாம்பொது மக்களின் நோன்பு. இதுஸவ்முஷ் ஷரீஆஷரீஆவின் நோன்பு எனப்படும். இந்த வகை நோன்புநோன்பை முறிக்கும் காரியங்கள்என்ற மார்க்கத்தில் சொல்லப்பட்ட – “ஷரீஆவில் கூறப்பட்டகாரியங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடும். வீணாகி விடும். இந்த நோன்புகளாமீண்டும் நோற்கப்பட வேண்டும்.

Jul 6, 2015

தமிழ் நாடு ஜமாஅதுல் உலமாவுக்கான பாராட்டுக் கடிதம்

இந்தியா - தமிழ் நாடு ஜமாஅதுல் உலமா சபை வழங்கிய பத்வாவை ஆதரித்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக 05.07.2015 அன்று தமிழ் நாடு ஜமாஅதுல் உலம சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடிதத்தை உலமாஉகளின் பார்வைக்காக இங்கு தருகிறோம்.

الحمد لله الذي نوّر قلوب أنبيائه وأوليائه وعلمائه الربّانيّين بمصابيح العلوم الظاهرة والباطنة، وهدى بهم من ضلّ وزلّ عن العقائد السنّيّة الفاخرة، وطهّربهم قلوب المتنجّسين بالعقيدة الغيريّة، وأعلى بهم مراتب من اتصف بالعقيدة العينية، والصلاة والسلام على أوّل قابل للتجلّي من الحقيقة الكليّة، وعلى آله وأصحابه الذين حازوا الخيرات كلّها ببركات سيّد البريّة، وبعد

فإلى سعادات العلماء السنيّين الكرام! والأساتيذ الربّانيّين  العظام! المنتمين إلى جماعة العلماء بتامل ناد،

السلام عليكم ورحمة الله وبركاته 

أقدّم إلى سعاداتكم أجمل التّهاني وأفضل التحيّات، وأرفع يدي إلى الله الذي لاإله غيره ولا شيئ سواه، ليطيل أعماركم فى نشـر دينه، ولِيَحْفَظَكُم من شرور أعدائكم الذين لا نصيب لهم من العقيدة السنّة الأشعريّة، ولا حظّ لهم من العقيدة الصوفيّة الصافية،

ولمّا عرفت فتواكم بردّة رين العابدين بالراء المهملة، غرقت فى بحر الفرح والسـرور، وأخبرتُ الخبر لجميع الأصدقاء الذين يعملون فى البلاد الخارجيّة من الدّول العربية وغيرها،

إنّ فتواكم هذه قدّت عنقه وأعناق المبتدعين الوهّابيّين الذين يتعلّقون بأذياله ويعيشون بإحسانه، وقلعت أسنانهم بعرقها، وألقتِ الرُّعب فى قلوبهم ودمّرت مخاخَهم،

وأمّا الوهّابيّون بهذه الدّولة فهم منتشـرون فى كلّ ناحية من نواحيها، وفي كلّ قرية من قراها، فقد عمّت الوهّابيّة العباد والبلاد، ودخلت كلّ بيت من بيوت المسلمين، كما تدخل الدِّيدانُ فى أيّام المطر والوحل والبرد الشديد، فكان الأب سنّيا والإبن وهّابيّا فى بيت واحد،

وأمّا العلماء بهذه الدّولة فطائفتان فى العقيدة، طائفة سنّيّون، وطائفة وهّابيّون، والسنّيون أكثر عددا من الوهّابيّين فى نفس الأمر، والوهّابيّون أقلّ منهم، ولكنّهم - الوهّابيّين - أقوياء منهم، والعلماء السنّيّون يخافون من الوهّابيّين خوفا شديدا لقلّة البضاعة فى سفينتهم، فلا يطلعون فى المحافل والمجالس ولا ينكرون شيأ ممّا يقول الوهابيّون، ولايردّون على عقائدهم الفاسدة، واحد منهم يصبح سنّيا ويمسـي وهّابيّا، بسَبَبِ ماينال من الأغنياء الوهّابيّين من الأموال والمساعدات، وأمّا الوهّابيّون فهم أشدّ عداوة على العلماء السنّيّين، لا سِيَّمَا على هذا الفقير الحقير، الذي شغله وكسبه إنكارهم وإقامةُ علمِ التصوف - التوحيد الحقيقي-، 

وشكرا لكم على سعيكم

أحقر العباد وأخوكم فى الله
عبد الرؤوف عبد الجواد


والسلام الأسنى والتحية الحسنى عليكم جميعا
وعلى الشيخ أبى الدلائل عبد الله جمالي
وعلى دائم الوضوء خاجا محي الدين الباقوي


Jul 5, 2015

ஜாக்கிரதை இது வஹ்ஹாபிகளின் ஊடுருவல்

இலங்கைத் திருநாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்

             நமது உயிரினும் மேலான நற்குணத்தின் தாயகம், “ஷரீஆ”வின் மூலவர், நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா? என்ற தலைப்பில் ஆதாரங்களோடு நான் பேசிய கருத்துக்களில் வஹ்ஹாபிகள் ஊடுருவல் செய்தும் திரிவுபடுத்தியும் மக்கள் மத்தியில் தவறான - பொய்யான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

                    நான் இவர்களை எதிர்த்துப் பேசியும், எழுதியும் வருவதால் என்னை அடக்கியும், ஒடுக்கியும் வைக்கும் நோக்கத்துடனும், என்னை பொதுமக்களுக்கு இஸ்லாமிய விரோதி என்று காட்டும் நோக்கத்துடனும் தவறான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

பத்ர் ஸஹாபாக்கள் நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு

இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நடைபெற்ற பத்ர் போரில் கலந்து கொண்ட உத்தம ஸஹாபா பெருமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் நடைபெற்று வரும் நினைவு மஜ்லிஸ் இவ்வருடம் 04.07.2015 (சனிக்கிழமை) றமழான் பிறை 17ல் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தறாவீஹ் தொழுகையின் பின் திருக் கொடியேற்றி வைக்கப்பட்டு மௌலிது ஸுஹதாயில் பத்ரிய்யீனும், ஸஹாபாக்களின் திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடும் நிகழ்வும் மஜ்லிஸ் நிகழ்வுகளில் நடைபெற்றது. அதன் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து துஆப் பிரார்த்தனையுடன் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.

வீரத்தியாகிகள் பத்ர் ஸஹாபாக்களின் அருள் வேண்டி சமுகமளித்த முஹிப்பீன்களுக்காக அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Jul 4, 2015

பத்ர் போர்.

-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)-

இஸ்லாமிய வரலாற்றில்நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது.

சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும்.

மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது.

அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

தமிழ் நாடு “ஜமாஅதுல் உலமா” - உலமா சபை - பீ.ஜே என்பவருக்கு எதிராக வழங்கியுள்ள “பத்வா” மார்க்கத் தீர்ப்பை காத்தான்குடியில் இயங்கிவரும் “அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா” முழுமையாகச் சரிகண்டு செயல்படுத்துகிறது.

இதேபோல் “அல்ஜாமிஉல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தை தனது இதயமாகக் கொண்ட மிஸ்ர் - கெய்ரோ - நாட்டின் மத விவகார அமைச்சு, வஹ்ஹாபிகளின் தலைவர்களான இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு பாஸ் ஆகியோர் எழுதிய அறபு மொழியிலான நூல்களையும், அவர்களின் பேச்சுள்ள CD இறுவெட்டுக்களையும் தடை செய்து அங்குள்ள பள்ளிவாயல்கள், நூலகங்களிலிருந்து அவற்றை அகற்றியதையும் எமது “ஸூபிஸ உலமா சபை”  வரவேற்கிறது. 

Jul 2, 2015

கதிரையில் அமர்ந்து தொழுவது கூடுமா?

ஆக்கம் - மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
+++++++++++++++++++++++++++++++++

கதிரையில் அமர்ந்து கொண்டு தொழும் தொழுகை கூடுமா? அல்லது கூடாதா? என்று அதிகமான கேள்விகள் மக்கள் மத்தியிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணத்தினால் இது சம்பந்தமான விபரங்களை எல்லோரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாக்கத்தை நாம் இங்கு பதிவு செய்கிறோம்.

சுருக்கமான பதில் -  
அதிகமான கால்மூட்டு வலி காரணமாகவோ அல்லது இடுப்பு வலி காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு போன்ற வேறு சில குறிப்பான நோய்களின் காரணமாகவோ அறவே எழும்பி நிற்க இயலாதவர்களும், நிற்பதினாலோ அல்லது காலை ஊன்றி ருகூஃ சுஜூத் செய்வதினாலோ நோயோ வலியோ அதிகரிக்கும் அதனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் எனப் பயந்தோருமே பர்ழான தொழுகைகளை கதிரையில் அமர்ந்தோ அல்லது தரையில் அமர்ந்தோ தொழுவதற்கு ஷரீஅத் அனுமதிக்கின்றது. அவர்கள் அமர்ந்து தொழும் தொழுகையை மீட்டித் தொழ வேண்டும். என்று அவர்களுக்கு அவசியம் கிடையாது என்றும் கூறுகின்றது.

Jul 1, 2015

மூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)

தொடர் -02


றமழான் மாதம்  அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு  ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களை, தான் விரும்பினால் தன்  குத்றத்பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ  அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.

றமழான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் அருள்கொண்டு அடியார்களுக்கு றஹ்மத்வழங்குதல் , பிழை பொறுத்தல், நரகத்தில் இருந்து விடுதலை  அளித்து  சுவனத்தை பரிசாக வழங்குதல்  ஆகியவற்றை  அல்லாஹ் செய்கின்றான். இங்கு ஒரு விடயத்தை நாம் கவனிக்கலாம். நோன்பு  எனும் வணக்கத்தை புனித மிக்க இந்த றமழான் மாதத்தில் உள்ளடக்கி அடியார்களுக்கு மூன்று அன்பளிப்புக்களை வழங்குகின்றான்.  இம்மூன்றும் மனிதனை புனிதனாக்குவதில் முக்கியமானவை ஆகும்.