Feb 12, 2015

அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்

மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர் - 
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்

தொடர் – 01


அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் போன்ற ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றவுமில்லைதோன்றப் போவதுமில்லை.

சிருஷ்டிகளை வெளிப்படுத்த நாடிய அல்லாஹு தஆலா தனது புனிதமிகு தாத்திலிருந்து முதன் முதலில் வெளிப்படுத்தியது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒளியைத் தான் என்பது ஸுபீகளான இறைஞானிகளின் ஏகோபித்த முடிவாகும்வழிகேடர்கள் இதை மறுத்தாலும் எதார்த்தம் இதுவேயாகும்மறுப்பவன் நிச்சயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் எதார்த்தம் புரியாதவனாகவே இருப்பான்.

Feb 9, 2015

திரு முடிகள் தரிசன நிகழ்வு

அகிலத்தின் அருள் வெளிப்பாடு அருள் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், வலீகட்கரசர் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களினதும் அருள் நிறைந்த திரு முடிகளைப் பார்வைியிடும் நிகழ்வு 06.02.2015ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Feb 8, 2015

ஷம்ஸுல் உலமா தந்த ஷம்ஸே!

உலகில் ஆயிரம் இணையம்- அதில்
உன் பெயர் உரக்கச் சொல்கிறோம் ஷம்ஸ்.!

காத்த நகர் மண்ணில் பூத்த மா வலீ - அபுல் இர்பான்
காதிமுல் கவ்மி தந்த அறிவுப் பெட்டகம் ஷம்ஸ்!

ஆலமுல் அர்வாஹ் ஆன்ம உலகு முதல்   

ஆலமுல் அஜ்ஸாம்  சூக்கும உலகுத்தவராஜர் வரை-                             
நபிமார், வலீமார், நல்லடியார்களைச்  சுமக்கும் பேழை ஷம்ஸ்!                   

என்ன கோடி தவம் செய்தோம் நாம் ???                                       

பொய்யான உலகினில் மெய்யான மெஞ்ஞானம் மோதிடும்
அஞ்ஞான ஐயம் அறுத்திடும் அகமியப்போதினி ஷம்ஸ்!

வீடியோ ஓடியோ உலமாக்கல் குரல் கணீரென -  தொடர் 
ஆட்டிகல், பத்ரிய்யா வாசலில் மனந்து வரும் மஜ்லிஸ் நிகழ்வுகள்,                        

எழுதுகரம் கொண்டு எட்டிப்பிடிக்க முடியாத இதய வாசலை  இவைகொண்டு தட்டித்திறக்கிறாய்  ஷம்ஸ்!

நீ பெற்ற பெயர் குரு நாதரின் இரவல் அன்றோ?

முற்றத்து மல்லிகை மனப்பது போல் “ஷம்ஸுல் உலமா” வின்
கடைக்கண் பார்வை பட்டவன் நீயல்லோ ஷம்ஸ்!

உன் பிறப்பை நானறியேன்  - ஆயினும் இம்மாதம்        
என் குரு நாதர் பிறந்த நாள் நான் அறிவேன்.

தனிக்கொடி கொண்டு பறக்கிறாய் ! அது அபுல் இர்பான் ஆசியினால்                     தத்துவம் கூறி சிறகடிக்கிறாய்! அது ஷம்ஸுல் உலமா மிஸ்பாஹியினால்!


                                           புஸ்தானுல் ஆஷிகீன்

Feb 7, 2015

ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அனனவர்களின் 71வது பிறந்த தின நிகழ்வு

அல்ஆலிமுல் பாழில், ஈலத்தின் சொற்கொண்டல், ஷம்ஸுல் உலமா அஷ்ஷெய்ஹ், அல்லாமா, மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ நாயகம் அன்னவர்களின் 71வது வயது பூர்த்தி செய்வதை முன்னிட்டு காதிரிய்யஹ் திருச்சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு”ம் காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும் கடந்த 05.02.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

Feb 5, 2015

பிறந்த நாள் வாழ்த்து

இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடும் அல்ஆலிமுல்பாழில் ஞானத் திங்கள் அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ அன்னவர்கள் சரீர சுகத்துடன் நீண்ட நாள் நலமாய் வாழ்ந்து ஆன்மீகப்  பணிகளிலும் தொடர்ந்தும் நிலைத்திருக்க வல்லோன் இறைவனை இருகரம் ஏந்துகிறோம்.

ஷம்ஸ் மீடியா யுனிட்

Feb 4, 2015

திருமுடிகள் தரிசனம்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

பெருமானாரின் புனித திரு முடியையும்
குத்பு நாயகத்தின் புனித திரு முடியையும்
பார்வையிட்டு அருள் கோடிபெறும் இனிய நிகழ்வு

பெருமானார் “மழ்ஹறுல் அதம்” முஹம்மது நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மிகு திரு முடியையும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்றுஹு)அவர்களின் திரு முடியையும் பார்வையிட்டு அருள் பெறும் புனித நிகழ்வு இன்ஷா அல்லாஹ் பின்வரும் விபரப்படி நடைபெற இருக்கி்ன்றது.

இடம் : 
சுன்னத் வல் ஜமாஅதின் ஸூபிஸ தளம் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
காத்தான்குடி-05

காலம் : 
06.02.2015 வெள்ளிக்கிழமை

ஆண்கள் தரிசனம் : காலை 05:30 - காலை 07:00 வரை
                           பி.ப 01:00 - பி.ப 04.30 வரை

பெண்கள் தரிசனம் : காலை 07:00 - மு.ப 11:30 வரை

திருமுடிகளைப் பார்வையிட வருவோர் கடைப்பிடிக்க வேண்டியவை :

  • . வுழூவுடன் சமுகமளித்தல்
  • . மண்டபத்தில் நுழைகையில் அதிகமாக ஸலவாத் ஓதுதல்
  • . தலை மறைத்து நுழைதல்
  • . அனைவரும் அமைதியைப் பேணி நடத்தல்
  • . பணிகளில் ஈடுபடுவோர் சைக்கினை மூலம் செயற்படல்
  • . இந்நிகழ்வு ஜும்அஹ் தினத்தில் நிகழ்வதால் குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்திற்கு முடிவடையும்.

“சுப்ஹ்” தொழுகைக்கே இங்கு சமுகமளித்து வாழ்வில் காண்பதற்கரிய இச்சந்தர்ப்பத்தை தவறாது பயன்படுத்தி பேரருள் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வஸ்ஸலாம்
அனைவரும் அணி திரள்க!
அருள் கோடி பெறுக!

Feb 2, 2015

முக்கிய அறிவித்தல்

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காண்பிக்கப்பட இருந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடி இன்று காண்பிக்கப்படாது.
பிரிதொரு தினத்தில் காண்பிக்கப்படும். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

30வது வருட குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

வலீகட்கரசர், கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 30.01.2015 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 01.02.2015 அன்று மாகந்தூரியுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.