Oct 18, 2014
Oct 17, 2014
Oct 16, 2014
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், அறபு நூலக திறப்பு வைபவமும்.
1:48 PM
அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா அன்னவர்களாலும் ஏனைய "உலமாஉ"களாலும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அறபு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
Oct 13, 2014
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு 2014ற்கான -ஊடகவியலாளர் சந்திப்பு-
9:44 PM
காத்தான்குடியில்
நடைபெறவுள்ள ஸுன்னத் வல் ஜமா அத் உலமாக்களுக்கான மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு
விளக்க மளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடி அல் ஜாமிஅதுர் றப்பானியா
மண்டபத்தில் 10-10-2014 அன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டின்
ஏற்பாட்டுக்குழுத்தலைவர் மௌலவீ எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ கருத்து
தெரிவிக்கையில் இந்த மாநாட்டில் ஆரம்ப வைபவம் 18.10.2014 சனிக்கிழமை காலை நடைபெறும். இதில்
அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து
கொள்ளவுள்ளனர். இந்த மாநாடு எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின்
பொதுக்குறிக்கோள்கள் தொடர்பாக கூறப்படுள்ளதன் அடிப்படையிலயே நாங்கள் ஏற்பாடுசெய்துள்ளோம்.
Oct 5, 2014
Oct 2, 2014
சோதனைகளை சகிப்புத் தன்மையுடன் பொருந்தி வாழ்வதே தியாகத் திருநாளின் அடிப்படையாகும்!
2:14 PM
மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் எம் முன்னே தோன்றி விட்டது. இத்திருநாளில் இப்றாஹீம் நபியவர்கள் செய்த தியாகங்கள் படிப்பினைகளையும் சகிப்புத் தன்மையையும் தந்து அனைத்தும் இறை செயல் என்றே பொருந்திக் கொள்வதையே தியாகத் திருநாள் எமக்கு உணர்த்துகிறது.
அவர்கள் செய்த முக்கிய தியாகங்கள் –
- தன் மைந்தன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்கு கனவில் கண்டு அதை நிறைவேற்றுவதற்குத் துணிந்தமை.
- நும்றூத் அரசனால் நெருப்புக் கிடங்கில் எறியப்பட்டமை.
- இறை கட்டளையின் படி தன் மனைவியை மனித சஞ்சாரமற்ற பாலைவனத்தில் கொணர்ந்து விட்டமை.
- தன் கோடிக்கணக்கான சொத்துக்களை அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்ததற்காக ஒப்படைத்தமை

































