Oct 16, 2014

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், அறபு நூலக திறப்பு வைபவமும்.

கடந்த 06.10.2014 திங்கட் கிழமை அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், அதி சங்கைக்கும் மரியாதைக்கும் உரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து பயன் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா அன்னவர்களாலும் ஏனைய "உலமாஉ"களாலும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  அறபு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

Oct 13, 2014

ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு 2014ற்கான -ஊடகவியலாளர் சந்திப்பு-


காத்தான்குடியில் நடைபெறவுள்ள ஸுன்னத் வல் ஜமா அத் உலமாக்களுக்கான மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடி அல் ஜாமிஅதுர் றப்பானியா மண்டபத்தில் 10-10-2014 அன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத்தலைவர் மௌலவீ எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ கருத்து தெரிவிக்கையில் இந்த மாநாட்டில் ஆரம்ப வைபவம் 18.10.2014 சனிக்கிழமை காலை நடைபெறும். இதில் அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாடு எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் பொதுக்குறிக்கோள்கள் தொடர்பாக கூறப்படுள்ளதன் அடிப்படையிலயே நாங்கள் ஏற்பாடுசெய்துள்ளோம்.

Oct 5, 2014

தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

எமது வாசகர்கள், அபிமானிகள் அனைவருக்கும் எங்கள் இதயம் மலர்ந்த  ஈகைத்  திருநாள் நல் வாழ்த்துக்கள்.


Oct 2, 2014

சோதனைகளை சகிப்புத் தன்மையுடன் பொருந்தி வாழ்வதே தியாகத் திருநாளின் அடிப்படையாகும்!

மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் எம் முன்னே தோன்றி விட்டது. இத்திருநாளில் இப்றாஹீம் நபியவர்கள் செய்த தியாகங்கள் படிப்பினைகளையும் சகிப்புத் தன்மையையும் தந்து அனைத்தும் இறை செயல் என்றே பொருந்திக் கொள்வதையே தியாகத் திருநாள் எமக்கு உணர்த்துகிறது.

அவர்கள் செய்த முக்கிய தியாகங்கள்
  1. தன் மைந்தன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்கு கனவில் கண்டு அதை நிறைவேற்றுவதற்குத் துணிந்தமை.
  2. நும்றூத் அரசனால் நெருப்புக் கிடங்கில் எறியப்பட்டமை.
  3. இறை கட்டளையின் படி தன் மனைவியை மனித சஞ்சாரமற்ற பாலைவனத்தில் கொணர்ந்து விட்டமை.
  4. தன் கோடிக்கணக்கான சொத்துக்களை அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்ததற்காக ஒப்படைத்தமை 

Sep 24, 2014

முஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்றும் சர்ச்சைக்குரிய ஆலோசனை உலக முஸ்லிம்களால் நிராகரிக்கப்பவேண்டியதே! பகிரங்கப்படுத்திய தினகரனுக்கு நன்றிகள்.



மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05

2014 செப்டம்பர் 4ம் திகதி வெளிவந்த தினகரனின் 5ஆம் பக்கத்தில் முஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்ற சர்ச்சைக்குரிய ஆலோசனைஎன்ற கட்டுரையை படித்தபோது அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன், கியாமத் நாள்தோன்றி விட்டதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.

        
        மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாயலின் அருகே அதைச் சேர்ந்தாற்போல் நபிகள் திலகம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது அவர்களும் அவர்களின் மனைவி ஆயிஷஹ் அன்னையும் வாழ்ந்த இடமாகும்.

        நபிகள் (ஸல்) அவர்கள் இவ் உலகை விட்டும் பிரிந்தபோது  அவர்ளை எங்கே அடக்கம்செய்வது என்று சஹாபாக்களும் குடும்பத்தினரும் ஆலோசனை செய்தனர்.

        சிலர் ஜன்னதுல் பகீயில் அடக்கப்படவேண்டுமென்றும் சிலர் மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் அடக்கப்பவேண்டுமென்றும் சிலர் இப்றாஹீம் நபீ அடக்கப்பட்ட இடத்தில் அடக்கப்பவேண்டுமென்றும் கருத்துக்ளை பகிர்ந்தனர். ஆனால் அபூபக்ர் சித்தீக் (றழி) அவர்கள் எந்த 

Sep 11, 2014