Feb 23, 2013

குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 28வது வருட கந்தூரி நிகழ்வுகள்...


அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் இணைநிறுவனமான புனித குத்பிய்யஹ் சங்கம் நடாத்தும் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றஹ்) அவர்களின் 28வது வருட கந்தூரி எமது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 23.02.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு மஃரிப் தொழுகையின்பின் புனித முஹ்யித்தீன் மௌலித் ஓதப்பட்டது. இஷாத்தொழுகையின்பின் பயான்நிகழ்வு இடம்பெற்று தபர்றுக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 
அல்ஹம்துலில்லாஹ்
நிகழ்வுகள் உள்ளே...!

Feb 7, 2013

சிறப்பு காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும்,ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகளும்



காதிரிய்யஹ், நக்‌ஷபந்திய்யஹ் தரீகஹ்களின் ஷெய்க் நாயகம் கலாநிதி ஷம்ஸுல் உலமா மௌலவீ அல்ஹாஜ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களின் 69வது பிறந்த தின நிகழ்வுகள் 05.20.2013 செவ்வாய் மாலை புதன் இரவு இஷாத் தொழுகையின்பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வகள் அனைத்தும் மிஸ்பாஹீ நாயகமர்களின் முரீதீன்களின் சபையான காதிரிய்யஹ் திருச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Jan 29, 2013

பூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2013

காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் பூமான் நபீ பெயரிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 25.01.2013 வௌ்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து சுப்ஹ் தொழுகை வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய இருநூற்கள் இம்மஜ்லிஸில் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாக அலுவலகமும் அன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளே...

புனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள்

 அல்ஹாஜ் அப்துல் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், இப்றாஹீமிய்யஹ் குர்ஆன் மத்ரஸா, றஹ்மானிய்யஹ் குர்ஆன் மத்ரஸா ஆகியவற்றில் புனித றபீஉனில் அவ்வல் மாத்தத்தினைச் சிறப்பிக்குமுகமாக பூமான் நபீ புகழ்கூறும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் 12 தினங்கள் நடைபெற்று 24.01.2013 அன்று தபர்றுக் விநியோகத்துடன் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்!
புகைப்படங்கள் உள்ளே...

Jan 26, 2013

மனித உயிர்களைக் காக்க உதவும் இரத்ததான நிகழ்வு - 2013


கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் தினத்தை முன்னிட்டும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா அவர்களின் நீடிய வாழ்நாள் வேண்டியும் வருடாவருடம் அஷ்ஷூப்பான் நலன்புரிச் சங்கமும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்தும் சகோதர உறவுகளின் உயிர் காக்க உதவும் இரத்த தான நிகழ்வு இவ்வருடமும் 26-01-2013 சனிக்கிழமை காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க பணிப்பாளர் சட்டத்தரணி M.I.அஜ்மீர் தலைமையில் காலை 8.00 மணி தொடக்கம் நடைபெற்றது.

Jan 25, 2013

கத்தார் நாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழா.


முழு உலகிற்கும் அருளாக வந்துதித்த எம்பெருமானார் முஹம்மதுர் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்துவம் நிறைந்த பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக கத்தார் - ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மீலாதுன் நபிப் பெருவிழா கடந்த 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. 

இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்து கத்தாரில் தொழில்புரியும் சுமார்150 ற்கும் அதிகமான சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டனர். 

Jan 4, 2013

வாழ்த்துகிறோம்....



மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள் நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகிறோம்.

ஸம்ஸ் மீடியா யுனிட்
ஸம் இணைத்தளம்

Jan 2, 2013

அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் - இலவச பாட நூல் விநியோகம் 2012

இடம் – காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். 

திகதி – 26.12.2012 

வழங்கப்பட்டோர் தொகை – 1000 மாணவர்கள். 

பிரதேசம் – காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம்.